எல்லை பாதுகாப்பு பணியில் தேனீக்கள்

TNPSC PAYILAGAM
By -
0



எல்லை பாதுகாப்பு பணியில் தேனீக்கள்:

இந்திய எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்), மேற்கு வங்காளத்தில் உள்ள எல்லைப்புற பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டு தேனிக்கூடுகளை அமைக்கவுள்ளனர். 

இந்தப் புதிய முயற்சியின் மூலமாக எல்லையைத் தாண்டி கால்நடை மற்றும் மற்ற பொருட்கள் கடத்தி வரப்படுவதைத் தடுக்க முடியும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் எல்லை பாதுகாப்பு படையினர். 

எல்லை பாதுகாப்பு படையினர் முன்மாதிரி இல்லாத இந்தத் திட்டம் சமீபத்தில் 32-வது பிஎஸ்எஃப் படையணி சார்பில் நாடியா மாவட்டத்தின் எல்லைப்புற பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்யவும் அந்தப் பகுதி மக்களுக்கு தொழில் வாய்ப்பு ஏற்படுத்தி தரும் நோக்கிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. 

இந்தியா, வங்கதேசத்துடன் 4096 கிமீ நீளத்திற்கு எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இதில் 2,217 கிமீ மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளது. இந்தத் திட்டத்தில் ஆயுஷ் அமைச்சகமும் பங்கெடுக்கவுள்ளது. 

மருத்துவ தாவரங்களை தேனிக்கூடுகளைச் சுற்றி அமைக்கும் போது தாவரங்களின் பெருக்கத்திற்கான மகரந்தச் சேர்க்கையாளர்களாகவும் தேனீக்கள் பணியாற்றும். மத்திய அரசின் துடிப்புமிகு கிராமத் திட்டத்தின் ஒரு பகுதியாக இது முன்னெடுக்கவுள்ளது.

இந்தப் பகுதியில் கால்நடை, தங்கம், வெள்ளி மற்றும் போதை மருந்துகள் கடத்தும் செயல்கள் அதிகமாக நடைபெறுவதாகவும் கடத்தல்காரர்கள் வேலியை உடைப்பதும் உடைக்க முயற்சிப்பதுமான நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் பிஎஸ்எஃப் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். 

எல்லை வேலிகளில் குறிப்பிட்ட இடைவெளியில் தேனீக்கூடுகள், மரச் சட்டகத்தோடு அமைக்கப்படும். எத்தனை எண்ணிக்கையில் என்பது குறித்து தெளிவான அறிவிப்பில்லை. இந்திய எல்லை பாதுகாப்பு படையின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

SOURCE: DINAMANI

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)