SOUTH
INDIAN HISTORY
சோழப்பேரரசு
- சோழர்கள் காவிரி வடிநிலப் பகுதியையும், தமிழ்நாட்டின் வடபகுதியினையும் ஆண்டனர்.
- தலைநகரம் -உறையூர்
- துறைமுகம் - காவிரிப்பூம்பட்டினம் என்ற பூம்புகார்.
- சோழ மன்னர்களின் தலைசிறந்தவர் கரிகால் சோழன்
- சோழர்களின் இலச்சினை புலி.
- கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்ற சங்ககால புலவர் காவிரிப்பூம்பட்டினம் குறித்து பட்டினப்பாலை என்ற நெடிய பாடலை இயற்றியுள்ளார்.
- காவிரிப்பூம்பட்டினத்தில் நடந்த வணிகத்தை சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
- சோழர்கள் சதுர வடிவிலான செப்பு நாணயங்களை வெளியிட்டனர்.
- சோழர்களின் வரலாறு மிகவும் பழமையானது.
- மகாபாரதத்திலும், அசோகரின் கல்வெட்டுகளிலும் மெகஸ்தனிஸ், தாலமி ஆகியோரது குறிப்புகளிலும் சோழர்களைப் பற்றிய செய்திகளைக் காணமுடிகிறது.
- சங்க காலத்தில் சோழர்கள் திருச்சி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளை ஆட்சி செய்துள்ளனர்.
- காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணையைக் கட்டியவர் கரிகாற்சோழன்
- முற்காலச் சோழர்கள் தமது இறுதிக்காலத்தில் உறையூரை மட்டுமே ஆட்சி செய்யுமளவில் சிற்றரசர்களாயினர்.
சோழப் பரம்பரையின் தோற்றம்:
SOUTH INDIAN HISTORY
சோழப்பேரரசு
- சோழர்கள் காவிரி வடிநிலப் பகுதியையும், தமிழ்நாட்டின் வடபகுதியினையும் ஆண்டனர்.
- தலைநகரம் -உறையூர்
- துறைமுகம் - காவிரிப்பூம்பட்டினம் என்ற பூம்புகார்.
- சோழ மன்னர்களின் தலைசிறந்தவர் கரிகால் சோழன்
- சோழர்களின் இலச்சினை புலி.
- கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்ற சங்ககால புலவர் காவிரிப்பூம்பட்டினம் குறித்து பட்டினப்பாலை என்ற நெடிய பாடலை இயற்றியுள்ளார்.
- காவிரிப்பூம்பட்டினத்தில் நடந்த வணிகத்தை சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
- சோழர்கள் சதுர வடிவிலான செப்பு நாணயங்களை வெளியிட்டனர்.
- சோழர்களின் வரலாறு மிகவும் பழமையானது.
- மகாபாரதத்திலும், அசோகரின் கல்வெட்டுகளிலும் மெகஸ்தனிஸ், தாலமி ஆகியோரது குறிப்புகளிலும் சோழர்களைப் பற்றிய செய்திகளைக் காணமுடிகிறது.
- சங்க காலத்தில் சோழர்கள் திருச்சி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளை ஆட்சி செய்துள்ளனர்.
- காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணையைக் கட்டியவர் கரிகாற்சோழன்
- முற்காலச் சோழர்கள் தமது இறுதிக்காலத்தில் உறையூரை மட்டுமே ஆட்சி செய்யுமளவில் சிற்றரசர்களாயினர்.
சோழப் பரம்பரையின் தோற்றம்:
- சங்க காலத்துக்குப் பிறகு கிடைக்கும் ஆவணங்களின்படி, காவிரிப்பகுதியில் சோழர் பல்லவருக்குக் கீழ்நிலை ஆட்சியாளர்களாக இருந்துள்ளார்கள் எனத் தெரிகிறது. விஜயாலயன் (பொ.ஆ. 850-871) முத்தரையர்களிடமிருந்து காவிரி ஆற்றின் கழிமுகப்பகுதிகளை வென்றார். அவர் தஞ்சாவூர் நகரைக் கட்டமைத்து, 850இல் சோழ அரசை நிறுவினார். எனவே, வரலாற்றாய்வாளர்கள் இச்சோழர்களை பிற்காலச் சோழர் என்றும் பேரரசுச்சோழர் என்றும் குறிப்பிடுகிறார்கள்.
- விஜயாலயனுக்குப் பின் வந்த சோழ அரசர்கள் தாங்கள் சங்க காலத்தின் புகழ்பெற்ற சோழ அரசனான கரிகாலனின் மரபில் வந்தவர்கள் எனச் செப்பேடுகளில் குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் தமது மரபுவழிப்பட்டியலில் 'சோழ என்ற பெயருடைய அரசரைத் தமது மூதாதையராகக் குறிப்பிட்டுள்ளார்கள். கிள்ளி, கோச்செங்காணன், கரிகாலன் எனும் பெயர்களைக் கொண்ட சோழ அரசர்கள் தங்கள் கொடிவழியைச் சேர்ந்தவர்கள் என இச்செப்பேடுகளில் குறிப்பிட்டுள்ளார்கள்.
- விஜயாலயனுக்குப் பின்வந்தோரில் முதலாம் பராந்தகன் (907-955) முதல் மூன்றாம் குலோத்துங்கன் (1163-1216) வரையான அரசர்கள் சோழருக்குப் பெருமையும் புகழும் சேர்த்தனர். பராந்தகச் சோழன், நாட்டின் எல்லையை விரிவுபடுத்தினார். ஆட்சிமுறையின் அடித்தளத்தையும் விரிவாக்கினார். முதலாம் இராஜராஜனும் (985-1014) அவருடைய மகன் முதலாம் இராஜேந்திரனும் (1014-1044) தங்கள் முன்னோடிகள் மூலம் ஏற்பட்டிருந்த வளர்ச்சிகளை ஒருங்கிணைத்து, தீபகற்ப இந்தியாவில் சோழரின் மேலாதிக்கத்தை நிறுவினர்.
சான்றுகள்:
- சோழர் தங்களது பரந்து விரிந்த பேரரசை ஆள்வதற்கு வலுவான நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்கியதுடன், பிற்கால வரலாற்றாய்வாளர்களுக்கு உதவும் வண்ணம் பெரும் எண்ணிக்கையிலான வரலாற்றுச் சான்றுகளையும் விட்டுச் சென்றுள்ளனர்.
- செப்பேடுகளிலும் கல்லிலும் 10,000-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் சோழர் வரலாற்றுக்கான முதல் நிலைச் சான்றுகளாக உள்ளன. இந்த வரலாற்று ஆவணங்களில் பெரும்பான்மையானவை அரசர்களும் பிறரும் கோவில்களுக்கு வழங்கிய கொடை குறித்த தகவல்களாகவே உள்ளன. அவற்றின் உள்ளடக்கத்தில் நிலப் பரிமாற்றங்கள், வரிகள் (விதிக்கப்பட்ட வரிகள், விலக்கப்பட்ட வரிகள்) ஆகியன குறித்த தகவல்களே அதிகம்.
- ஆனால், பிற்காலக் கல்வெட்டுகள் சமூக வேறுபாடுகள் குறித்துக் குறிப்பிடுகின்றன. அவை சமூகத்தில் சாதிகள், துணைச்சாதிகள் இருந்ததைக் காட்டுகின்றன. இவற்றின் வாயிலாக அன்றைய சமூகக் கட்டமைப்பு குறித்த தகவல்களை அறிய முடிகிறது. இவற்றுடன் செப்பேடுகளிலும் அரசர் ஆணைகள் காணப்படுகின்றன. அவற்றிலும் குலவரலாறு, போர்கள், வெற்றிகள், நிர்வாகப் பிரிவுகள், உள்ளாட்சி அமைப்பு, நில உரிமைகள், பல்வேறு வரிகள் குறித்த செய்திகள் உள்ளன.
- சோழர் ஆட்சியில் இலக்கியங்களும் செழித்தன. சைவ, வைணவ நூல்கள் தொகுத்து முறைப்படுத்தப்பட்டன. இது சோழர் காலத்தில் நடந்த முக்கியமான சமய இலக்கியப் பணியாகும். பெருங்காவிய நூலான கம்ப இராமாயணம் இலக்கிய வடிவிலான வரலாற்று நூல்களான கலிங்கத்துப்பரணி, குலோத்துங்கச் சோழன் பிள்ளைத்தமிழ், மூவருலா ஆகியனவும் இக்காலத்தில் இயற்றப்பட்டன. நன்னூல், நேமிநாதம், வீரசோழியம் ஆகியவை இக்காலத்தில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க இலக்கண நூல்கள் ஆகும். பாண்டிக்கோவை, தக்கயாகப்பரணி ஆகியவை பிற முக்கிய இலக்கியப் படைப்புகளாகும்.
ஆட்சிப்பகுதி
- தமிழ்நாட்டில் சோழ அரச மரபின் கீழ் இருந்த ஆட்சிப் பகுதி சோனாடு அல்லது சோழ நாடு எனப்படுகிறது. சோழ மண்டலம் எனப்படும் காவிரி ஆற்றின் கழிமுகப்பகுதி சோழ அரசின் மையப்பகுதியாக விளங்கியது.
- சோழ மண்டலம் என்ற சொல் ஐரோப்பியர் நாவில் ‘கோரமண்டல்’ எனத் திரிபடைந்தது. தற்போது இச்சொல் தென்னிந்தியாவின் கிழக்குப் பகுதி முழுவதையும் குறிக்கின்றது.
- தமது படைவலிமையைப் பயன்படுத்தி, தற்போதைய புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்களையும் தற்போதைய மேற்குத் தமிழ்நாட்டின் கொங்குப் பகுதியையும் இணைத்துச் சோழப் பேரரசை விரிவுப்படுத்தினார்கள்.
- பதினொன்றாம் நூற்றாண்டு வாக்கில் படையெடுப்புகள் மூலம் தொண்டை நாடு, பாண்டிய நாடு, தெற்குக் கர்நாடகத்தைச் சேர்ந்த கங்கைவாடி, மலைமண்டலம் என்ற கேரளம் ஆகிய பகுதிகள் வரை விரிவுப்படுத்தினார்கள். கடல் கடந்த விரிவாக்கத்தின் போது, சோழர் இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளைக் கட்டுப்படுத்தியும், அப்பகுதிகளை ‘மும்முடிச் சோழ மண்டலம்’ என்றும் அழைத்தார்கள்.
பேரரசு உருவாக்கம்
- சோழ அரசர்களில் மிகவும் போற்றப்படுபவர் முதலாம் இராஜராஜன். அவரது கடல் கடந்த படையெடுப்புகள் மேற்குக்கடற்கரை, இலங்கை ஆகியவற்றில் வெற்றியைப் பெற்றுத்தந்தன.
- அவர் இந்தியப்பெருங்கடலில் மாலத் தீவுகளைக் கைப்பற்றியதும் இதில் சேரும். இலங்கையை வென்றதன் மூலம் அதன் வடக்கு கிழக்குப் பகுதிகள் சோழ அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் வந்தன.
- புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளை நிர்வகிப்பதற்கு ஒரு தமிழ் தளபதியை இராஜராஜன் நியமித்ததுடன், அங்கு ஒரு கோவில் கட்டவும் ஆணை பிறப்பித்தார். அக்கோவில் ‘சிவ-தேவாலே’ (சிவாலயம்) எனப்படுகிறது. இவரால் ‘மகாதிட்டா’ என்ற இடத்தில் கட்டப்பட்ட கோவில் ‘இராஜராஜேஸ்வரம்' என அழைக்கப்படுகிறது.
- இராஜராஜன் தன் மகன் முதலாம் இராஜேந்திரனை வாரிசாக அறிவித்தார். இருவரும் இரு ஆண்டு காலம் கூட்டாக ஆட்சி செய்தார்கள். முதலாம் இராஜேந்திரன் தன் தந்தையின் படையெடுப்புகளில் பங்கேற்று, மேலைச் சாளுக்கிரைத் தாக்கி, சோழ அரசின் எல்லையைத் துங்கபத்திரை ஆறு வரை விரிவுப்படுத்தினார். இராஜராஜன் மதுரை மீது தாக்குதல் தொடுத்த போது பாண்டியர் தங்கள் மணிமுடி மற்றும் அரச நகைகளுடன் தப்பி, இலங்கையில் அடைக்கலம் புகுந்தார்கள். எனவே முதலாம் இராஜேந்திரன் இலங்கையை வென்று, பாண்டியரின் மணிமுடியையும் பிற அரச உடைமைகளையும் கைப்பற்றினார்.
- முதலாம் இராஜேந்திரன் அரசராகப் பொறுப்பேற்ற பின் 1023இல் வட இந்தியாவின் மீது மிகத் தீவிரமான ஒரு படையெடுப்பை நிகழ்த்தினார். இதற்காகப் படைகளைக் கோதாவரி ஆறு வரை அவரே வழிநடத்திச்சென்றார். கோதாவரியைக் கடந்த பிறகு படைக்குத் தலைமையைத் தனது தளபதியிடம் ஒப்படைத்தார். அத்தளபதியின் தலைமையில் படையெடுப்பு தொடர்ந்தது. முதலாம் இராஜேந்திரனுக்கு வட இந்தியாவில் கிடைத்த வெற்றிகளின் நினைவாகக் கங்கை கொண்ட சோழபுரம் கட்டப்பட்டது.
- தமிழர்களின் கடல் வழிச் சாதனைகள் சோழர் காலத்தில் உச்சத்தை எட்டின. சோழர் சோழ மண்டலக் கடற்கரையோடு, மலபார் கடற்கரையையும் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர். வங்காள விரிகுடாப் பகுதியில் சோழரின் செல்வாக்குச் சில பத்தாண்டு காலத்திற்கு நீடித்தது. இராஜேந்திரனின் கடற்படை ஸ்ரீவிஜயா (தெற்கு சுமத்ரா) மீது தாக்குதல் தொடுத்தது. தென்கிழக்கு ஆசியாவில் 700க்கும் 1300க்கும் இடையே செழித்து வளர்ந்த நாடுகளுள் ஸ்ரீவிஜயாவும் ஒன்றாகும். இது வலிமையான கடற்படை கொண்டதாகவும் வணிகத்தில் சிறந்ததாகவும் இருந்தது. இதே போன்று குறுநில மன்னரின் ஆட்சியின் கீழ் இருந்த கெடாவும் (கடாரம்) இராஜேந்திரனால் தோற்கடிக்கப்பட்டது. எனவே, இராஜேந்திரனுக்கு ‘கடாரம் கொண்டான்’ என்ற பட்டம் சூட்டப்பட்டது.
- மேலைச் சாளுக்கிய அரசின் மீது 1003இல் முதலாம் இராஜராஜன் தொடுத்த போரும் 1009இல் முதலாம் இராஜேந்திரன் தொடுத்த போரும் அவர்களுக்கு வெற்றியைத் தந்தன. சாளுக்கியரின் தலைநகரான கல்யாணியைத் தகர்ப்பதற்கு இராஜேந்திரன் தன் மகனை அனுப்பினார். அங்கிருந்து கொண்டுவரப்பட்ட துவாரபாலகர் (வாயிற்காப்போன்) சிலையைக் கும்பகோணத்திலுள்ள தாராசுரம் கோவிலில் இன்றும் காணலாம். இராஜேந்திரன் முடிகொண்ட சோழன், கங்கை கொண்டான், கடாரம் கொண்டான், பண்டித சோழன் போன்ற பட்டங்கள் சூடிக்கொண்டார்.
TNPSC HISTORY -CHOLA EMPIRE- STUDY MATERIALS IN TAMIL NOTES- COMPLETE FREE GUIDE:
- முற்காலச் சோழர்கள் TNPSC KEY POINTS NOTES
- பிற்காலச் சோழர்கள் TNPSC KEY POINTS NOTES
- சோழர் நிர்வாகம் TNPSC KEY POINTS NOTES
- சோழர் காலம்-இலக்கியும் -கலையும் TNPSC KEY POINTS NOTES
- CHOLA EMPIRE-TNPSC HISTORY -வினா விடைகள் (6th to 12th புதிய சமச்சீர் புத்தகம்) GUIDE
சோழ ஆட்சியின் முடிவு:
- ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை சோழ அரச மரபு நிலையாக இருந்தது. 12ஆம் நூற்றாண்டின் இறுதியில் அங்குள்ள குடித்தலைமை ஆட்சியாளர்கள் எழுச்சி அடையத் தொடங்கினர். இது மைய அரசின் வலிமையைக் குறைத்தது.
- அடிக்கடி நிகழ்ந்த பாண்டியரின் தொடர் படையெடுப்புகளால் ஒரு காலத்தில் வலிமை பெற்று விளங்கிய சோழ அரசு, தன்னை விட வலிமையில் குறைந்த ஹொய்சால அரசைச் சார்ந்திருக்குமளவிற்கு வலுவிழந்தது.
- 1264இல் பாண்டிய மன்னன் முதலாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் சோழர் தலைநகரான கங்கைகொண்ட சோழபுரத்தைக் கைப்பற்றினார். அதற்கு முன்னரே காஞ்சிபுரத்தைத் தெலுங்குச் சோழர் கைப்பற்றியிருந்தனர். எஞ்சிய பகுதிகள் பாண்டியரின் ஆளுகைக்குச் சென்றன.
- 1279இல் முதலாம் மாறவர்மன் குலசேகரப்பாண்டியன் கடைசி சோழ அரசரான மூன்றாம் இராஜேந்திர சோழனைத் தோற்கடித்தார். இத்துடன் சோழரின் ஆட்சி முடிவுக்கு வந்து, பாண்டியரின் ஆட்சி தொடங்கியது.
சம்புவராயர்கள்:
- சம்புவராயர்கள் ராஜாதிராஜன், மூன்றாம் குலோத்துங்கன் ஆகிய சோழ அரசர்களின் ஆட்சிக்காலத்தில் வட ஆற்காடு, செங்கல்பட்டு பகுதிகளில் வலிமை படைத்த குறுநில மன்னர்களாக விளங்கினர்.
- தாங்கள் சார்ந்திருந்த பேரரசுகளுக்கு ஆதரவாக போர்களில் ஈடுபட்டனர். பல சமயங்களில் தங்களுக்குள்ளும் போரிட்டுக் கொண்டனர்.
- பதிமூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து பாண்டியர் ஆட்சியின் இறுதி வரை சம்புவராயர்கள் பாலாறு பகுதியில் அரசியல் செல்வாக்குடன் விளங்கினர்.
- அவர்களின் அரசு இராஜ கம்பீர ராஜ்யம் எனப்பட்டது. அதன் தலைநகரம் படைவீட்டில் அமைந்திருந்தது.
- வீர சோழ சம்புவராயனின் கல்வெட்டுகள் (1314-1315) பல கண்டெடுக்கப்பட்டுள்ளன.
- சம்புவராயர்கள் உயர்ந்த பட்டங்களைச் சூட்டிக்கொண்டனர். எடுத்துக்காட்டாக, சகலலோக சக்ரவர்த்தி(ன்) வென்று மண்கொண்ட சம்புவராயன் (1322-1323), சகலலோக சக்ரவர்த்தின்) இராஜநாராயணன் சம்புவராயன் (1337-1338) ஆகியோரைக் கூறலாம்.
- சகலலோக சக்ரவர்த்தின்) இராஜநாராயணன் சம்புவராயன் 20 ஆண்டுகள் ஆட்சி செய்து, பின்னாட்களில் விஜயநகரத்தின் குமார கம்பணரால் தோற்கடிக்கப்பட்டார்.
- இந்த முறியடிப்புக்குப் பிறகுதான் குமார கம்பணர் தெற்கு நோக்கி மதுரை வரை படையெடுத்துச் சென்றார்.
- குமார கம்பணர் மதுரை சுல்தானைத் தோற்கடித்து முழுவெற்றி பெற்றார்.