சோழர் காலம்-இலக்கியும் -கலையும் -SOUTH INDIAN HISTORY-TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL

TNPSC PAYILAGAM
By -
0

சோழர் காலம்-இலக்கியும் -கலையும் -SOUTH INDIAN HISTORY



TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL
 SOUTH INDIAN HISTORY

சோழர் காலம்-இலக்கியும் -கலையும்  


இலக்கியம்:

  • சோழர் காலம் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு புத்துணர்வு தந்தது.
  • சேக்கிழாரால் பெரியபுராணமும் (திருத்தொண்டர் புராணம்) திருத்தக்க தேவரால் சீவகசிந்தாமணியும் எழுதப்பட்டன.
  • உரையாசிரியர்களான இளம்பூரணர், நச்சினார்க்கினியர், பரிமேலழகர் ஆகியோர் சோழர் காலத்தவரே ஆவார்.


கலையும் கட்டிடக்கலையும்:

  • திராவிட பாணியிலான கலைகளும், கட்டிடக்கலையும் சோழர்கள் காலத்தில் முழு வடிவத்தைப் பெற்றன.
  • திருச்சிராப்பள்ளி, திருவரங்கம், தஞ்சாவூர், கும்பகோணம், சிதம்பரம் திருவண்ணாமலை, சுசீந்திரம், திருவனந்தபுரம், உடுப்பி போன்ற இடங்களில் கட்டப்பட்ட ஆலயங்கள் சிறப்பு மிக்கவை.
  • நார்தா மலையின் விஜயாலய சோழீஸ்வரம் கொடும்பாளுரில் ஐவர் கோயில் ஆகியன முற்கால சோழர்காலத்தை சேர்ந்தவை.
  • பிரகதீஸ்வரர் ஆலயம் உலகத் தொன்மையான சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதன் விமானத்தின் உயரம் 216 அடி ஆகும்.
  • தஞ்சாவூர் சுப்பிரமணியர் ஆலயம், தாராசுரம், அறிவட்டேஸ்வரர் கோவில் கும்பகோணம் அருகே திருபுவனம் என்னும் இடத்தில் உள்ள கம்பஹரேஸ்வரர் அல்லது திருபுவனேஸ்வரர் கோவில் ஆகியன பிற்கால சோழர்களால் கட்டப்பட்டவை.


சிற்பங்கள்:

  • முதலாம் இராஜராஜனின் சிற்பம் கலைநயம் கொண்டது.
  • எண்கரங்களுடன் காட்சி தரும் துர்க்கை சிற்பம் மிகவும் அழகு வாய்ந்தது.
  • கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலில் உள்ள நடராசர், அர்த்தநாரீஸ்வரர் ஆகிய உலோக சிலைகள் சோழர் கலையம்சத்திற்கு சிறந்த உதாரணங்கள் ஆகும்.


ஓவியங்கள்:

  • சோழர்களது சுவர் ஓவியங்கள் தஞ்சாவூர், திருமையம், காஞ்சி கைலாசநாதர் கோயில், நார்தாமலை விஷ்ணு கோயில் ஆகிய இடங்களில் காணலாம்.


இசை

  • நுண்கலை எனப்படும் இசைக்கலை வ வளர்ச்சிபெற்றது.
  • கர்நாடக இசைக்கு சோழர்காலத்தில்தான் அடித்தளம் இடப்பட்டது.
  • பரதநாட்டியம் என்னும் அழகு மிளிரும் ஆடற்கலையும் தோன்றியது.

TNPSC HISTORY -CHOLA EMPIRE- STUDY MATERIALS IN TAMIL NOTES- COMPLETE FREE GUIDE PDF:


Post a Comment

0Comments

Post a Comment (0)