பிற்காலப் பல்லவர்கள்-TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL

TNPSC PAYILAGAM
By -
0

பிற்காலப் பல்லவர்கள்-TNPSC HISTORY

 
TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL 

பிற்காலப் பல்லவர்கள் கி.பி. 350 முதல் கி.பி. 550


  • பிற்காலப் பல்லவர்கள் கி.பி. 350 முதல் கி.பி. 550 வரை ஆட்சி புரிந்தனர். இம்மரபில் விஷ்ணுகோபன் குறிப்பிடத்தக்கவராவார். இவர்கள் வடமொழியில் வெளியிட்டனர். பட்டயங்களை
  • பிற்காலப் பல்லவர்கள் கி.பி. 575 ஒன்பதாம் நூற்றாண்டில் அவர்கள் வீழ்ச்சியடையும் வரை ஆட்சி புரிந்தனர்.
  • இவர்கள் வடமொழி, தமிழ்மொழி ஆகிய இரண்டு மொழிகளிலும் பட்டயங்களை வெளியிட்டனர்.


பிற்காலப் பல்லவர்களில் சிம்மவிஷ்ணுவின் மரபில் வந்த 

  1. சிம்மவர்மன். கிபி 550
  2. சிம்மவிஷ்ணு. கிபி 555 - 590
  3. மகேந்திரவர்மன் I. கிபி 590 - 630
  4. நரசிம்மவர்மன் I(மாமல்லன்). கிபி 630 - 668
  5. மகேந்திரவர்மன் II. கிபி 668 - 672
  6. பரமேஸ்வரவர்மன். கிபி 672 - 700
  7. நரசிம்மவர்மன் II(ராஜசிம்மன்). கிபி 700 - 728
  8. பரமேஸ்வரவர்மன் II. கிபி 705 - 710
  9. நந்திவர்மன் II(பல்லவமல்லன்). கிபி 732 - 796
  10. தந்திவர்மன். கிபி 775 - 825
  11. நந்திவர்மன் III. கிபி 825 - 850
  12. நிருபதுங்கவர்மன். கிபி 850 - 882
  13. அபராஜிதவர்மன். கிபி 882 - 901
  14. கம்பவர்மன். கிபி 902 - 912

சிம்மவிஷ்ணு அல்லது அவனிசிம்மன்:

  • சிம்மவிஷ்ணு அல்லது அவனிசிம்மன் ஓரு பல்லவ அரசன் ஆவான். மூன்றாம் சிம்மவர்மனின் மகனான சிம்மவிஷ்ணு களப்பிரரின் ஆட்சியை வீழ்த்தி மீண்டும் பல்லவர் ஆட்சியை தொண்டை மண்டலத்தில் நிறுவினான். காஞ்சிக்கு தெற்கிலும் தன் இராச்சியத்தை விரிவு படுத்திய முதல் பல்லவ ஆரசன் சிம்மவிஷ்ணு ஆவான். 
  • சிம்மவிஷ்ணுவின் ஆட்சி காலத்திற்குட்பட்ட கல்வெட்டுகளோ செப்பேடு சாசனங்களோ கிடைக்கப்பெறாத நிலையில், அவனுக்குபின் ஆண்ட பல்லவர்களின் கல்வெட்டுகள் மற்றும் செப்பேடு சாசனங்கள் மூலமே இம்மன்னனை பற்றி அறிய முடிகின்றது. 
  • சிம்மவிஷ்ணுவின் மகனான மகேந்திரவர்மன் இயற்றிய மட்டவிலாசப் பிரஹசனம் என்னும் சமஸ்கிருத நாடகத்தில் சிம்மவிஷ்ணு பல நாடுகளை வெற்றிக்கொண்ட பேரரசனாய் சித்தரிக்கப்பட்டுள்ளான். 
  • சிம்ம விஷ்ணுவின் தலைமையில் பல்லவர்கள், களப்பிரர்களை தோற் கடித்து வடதமிழ்நாடாகிய தொண்டை மண்டலத்தில் தமது ஆட்சியை நிறுவினர். பல்லவர்களின் தலைநகரம் காஞ்சிபுரம் ஆகும். 
  • சிம்ம விஷ்ணு காலம் முதல் பிற்கால பல்லவர்களின் வரலாறு துவங்குகிறது. 
  • சிம்ம விஷ்ணு களப்பிரர்களை வென்று தொண்டை மண்டலத்தில் பல்லவர் ஆட்சியை நிறுவினர். 
  • பல்லவ அரசை ஒரு பேரரசாக மாற்றிய பெருமை சிம்ம விஷ்ணுவையேச் சாரும். 
  • சிம்ம விஷ்ணுவைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர்களில் முதலாம் மகேந்திரவர்மன், முதலாம் நரசிம்ம வர்மன், இரண்டாம் நரசிம்மவர்மன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவராவர். 


 முதலாம் சிம்மவர்மன்:கிபி 550

  • முதலாம் சிம்மவர்மன் என்பவன் காஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆண்ட பல்லவர் மன்னர்களுள் ஒருவன்.
  • காலம்: இவனது ஆட்சிக்காலத்தை அறிய போதிய சான்றுகள் இல்லை எனினும் பல்லவ வம்ச வரலாற்று ஆவணமான பிரசஸ்டி ஒன்றின் மூலம் அவனின் ஆட்சிக்காலம் தொடங்கியதை அறியலாம்.


முதலாம் மகேந்திரவர்மன் (600-630)

  • இவர் சிம்மவிஷ்ணுவின் மகன் ஆவார். இவரது காலத்தில் சாளுக்கியர்களோடு பகைமை ஏற்பட்டது.
  • சாளுக்கிய அரசர் இரண்டாம் புலிகேசி. பல்லவ நாட்டின் மீது போர் தொடுத்தார். மகேந்திரவர்மனைத் தோற்கடித்து பல்லவ நாட்டிலுள்ள வடபகுதிகளை கைப்பற்றினார்.
  • மத்தவிலாச பிரஹசனம் என்னும் சமஸ்கிருத நாடகத்தையும் இவன் இயற்றியுள்ளான். இது சைவ மற்றும் பௌத்த துறவிகளை மையமாய்க் கொண்ட ஒரு நகைச்சுவை நாடகமாகும்.
  • மகேந்திரவர்மர் இடையில் சமண மதத்தைத் தழுவியிருந்தார், பின்னர் சைவ நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசரால் தன்நோய்த் தீர்க்கப்பெற்று மீண்டும் சைவ சமயத்திற்கு மாறினார்னென்று அறிகின்றோம்
  • இவரது காலத்தைச் சேர்ந்த சமண சமய ஓவியங்கள் சித்தன்ன வாசலில் காணப்படுகிறது.
  • மகேந்திரவர்மனின் இசை ஆர்வத்தை குடுமியான்மலை இசைக் கல்வெட்டு மூலம் அறியலாம்.
  • பரிவதினி (Parivadhini) வீணை வாசிப்பில் இவர் வல்லவராக விளங்கினார்.
  • இவரே குடைவரைக் கோயில்களை அறிமுகப்படுத்தியவராவார்.
  • மண்டகப்பட்டு, மாமண்டூர், மகேந்திர வாடி, வல்லம், பல்லாவரம் தளவானூர், திருச்சி. திருக்கழுகுன்றம் ஆகிய இடங்களில் இவரது குடைவரைக் கோயில்களைக் காணலாம்.
  • இவர் மகேந்திரமங்கலம்,மகேந்திரவாடி என்ற இரண்டு நகரங்களை நிறுவினார்
  • பட்டப்பெயர்கள்: சித்திரகாரப்புலி (ஓவியர்க்கு புலி). விசித்தரசித்தன், மத்தவிலாசன் (இன்பம் விரும்புபவன்), சத்ரு மல்லன், கலகப் பிரியன், சங்கீரண ஜதி, குணபரன், ய வெதயசந்தன், சேத்தகாரி (கோயில்களை கட்டுபவன்), போத்தரையன்.


முதலாம் நரசிம்மவர்மன் (630-668)
  • இவர் முதலாம் மகேந்திரவர்மனின் மகன் ஆவார்.
  • இவரது காலத்தில் சீனப்பயணி யுவான் சுவாங் (கி.பி.640) காஞ்சிபுரத்திற்கு வருகை தந்தார்.
  • மாமல்லபுரம் என்ற புதிய நகரை உருவாக்கி அங்கு ஒற்றைக்கல் ரதங்கள் மற்றும் குடைவரைக் கோயில் மண்டபங்களை அமைத்தார்.
  • இரண்டாம் புலிகேசியை கொன்று வாதாபியை வென்றதால் வாதாபி கொண்டான் என புகழப்பட்டார்.
  • பட்டப்பெயர்கள்: மாமல்லன், வாதாபி கொண்டான், ஸ்ரீபரன், ஸ்ரீமேகன், ஸ்ரீநிதி, வாத்ய வித்யாதரன்.
  • சாளுக்கியர்களுடன் போர்:பல்லவர்களின் எதிரிகளாக விளங்கிய சாளுக்கியரை வெற்றிகொண்டு அவர்கள் வீழ்ச்சிக்குக் காரணமாக விளங்கியவன் இவன். மகேந்திரவர்மனின் ஆட்சி காலத்தில் சாளுக்கிய அரசனான இரண்டாம் புலிகேசி காஞ்சி மீது படையெடுத்து, காஞ்சி நகரை முற்றுகையிட்டான். இப்போரில் மகேந்திரவர்மன் இறக்க நேரிட்டது. இதற்கு பழி வாங்கும் முகமாக அவரது மகன் நரசிம்மவர்மன் பொ.ஊ. 642ல் வாதாபி நகர் மீது படையெடுத்தான் நரசிம்மவர்மனின் படை படைத்தளபதி பரஞ்சோதி தலைமையில் வாதாபி மீது படையெடுத்தது. இப்படையில் ஒரு லட்சம் காலாட்வீரர்களும், ஐம்பதாயிரம் குதிரை வீரர்களும், பன்னிரெண்டாயிரம் யானைகளும் இருந்ததாக கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் கூறப்படுகின்றன. சாளுக்கியரின் தலைநகரமான வாதாபி நகரம் தீ வைத்து கொளுத்தப்பட்டது. சாளுக்கிய அரசர் இரண்டாம் புலிகேசியைத் தோற்கடித்து அவரது தந்தையின் தோல்விக்கு நரசிம்மவர்மன் பழிவாங்கினார். மேலும் போர்க்களத்திலேயே இரண்டாம் புலிகேசி கொல்லப்பட்டார். பல்லவப்படைகள் காஞ்சிபுரத்துக்கு வெற்றிகரமாக திரும்பினர். இதனால் நரசிம்மவர்மன் வாதாபிகொண்டான் என்று அழைக்கப்பட்டார். இந்த வெற்றிக்குப் பிறகு படைத்தளபதி பரஞ்சோதி 63 நாயன்மார்களில் ஒருவராக மாறி சைவசமயத்திற்கு அரும்பணி புரிந்தார்.
  • இலக்கியத்தில் நரசிம்மவர்மன்:கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய சிவகாமியின் சபதம், மகேந்திரவர்மன் மற்றும் நரசிம்மவர்மன் ஆகியோரின் ஆரம்ப காலத்தையும் சாளுக்கியர்களுடன் அவரது போரையும் அடிப்படையாகக் கொண்டது. மேலும் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய பார்த்திபன் கனவு, நரசிம்மவர்மனின் ஆட்சியின் பின்னணியை அடிப்படையாகக் கொண்டது .

முதலாம் பரமேஸ்வரன் (கி.பி.670-680)
  • சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தனுடன் ஏற்பட்ட போரில் காஞ்சியை பற்றி சாளுக்கியர்கள் உறையூரை முற்றுகையிட்டனர் (கி.பி.674)
  • பின்வாங்கிய பரமேஸ்வரன் படையுடன் வந்து விளிந்தைபோரில் சாளுக்கியரை தோற்கடித்தான்.
  • பின்னர் சங்க நாட்டின் மீது படையெடுத்து சென்று பல்லவர்கள் தோல்வியுற்று திரும்பினர்.
  • 'நெல்மண்' என்ற இடத்தில் பாண்டிய மன்னன்பராந்தக நெடுஞ்செழியனிடம் தோல்வியுற்றார்.
  • இவர் சைவ சமயத்தை தழுவி சிறந்த சிவ பக்தராக திகழ்ந்தார். சிவபெருமானுக்கு பல ஆலயங்கள் எழுப்புவித்தார். அதில் முக்கியமாது காஞ்சிபுரம் கூரம் வித்ய வீனித பல்லவ பரமேஸ்வரம் கோயில்

இரண்டாம் நரசிம்மவர்மன் (கி.பி.691-728)
  • இரண்டாம் நரசிம்மவர்மன் இராஜ சிம்மன் என்று அழைக்கப் பட்டார்.
  • இவர் மாமல்லபுரத்தில் கடற்கரைக் கோயில் மற்றும் காஞ்சிபுரத்தில் கைலாசநாதர் கோயில் ஆகிய வற்றைக் கட்டினார். 
  • இவை இரண்டும் மணற்பாறைக் கற்களைக் கொண்டு கட்டப்பட்டதாகும்.
  • புகழ்மிக்க வடமொழி அறிஞர் தண்டி இவரது அவையில் இருந்தார். 
  • அவர் "தண்டியலங்காரம்" என்ற சமஸ்கிருத இலக்கண நூலை இயற்றினார்.
  • இவரது ஆட்சியில் கடல் வாணிபம் செழிந்திருந்தது.
  • பட்டப்பெயர்கள்:ஆகமப்பிரியன், சங்கரபக்தன், இராஜ சிம்மன்.

இரண்டாம் பரமேஸ்வரவர்மன் (கி.பி.728-731)
  • இரண்டாம் நரசிம்மவர்னின் மகனான இரண்டாம் பரமேஸ்வரவர்மன் கி.பி. 728-ல் ஆட்சியில் அமர்ந்தார்.
  • சாளுக்கிய மன்னர் இரண்டாம் விக்கிர மாதித்தனால் போரில் தோற்கடிக்கப் பட்டார்.
  • கங்கர்களோடு நடைபெற்ற போரில் பரமேஸ்வரவர்மன் கொல்லப்பட்டார்.
  • இவரது மரணத்திற்கு பிறகு இவரின் மகன் ஆட்சிக்கு வராத காரணத்தினால், சிம்மவிஷ்ணுவால் தொடங்கப்பட்ட பிற்கால பல்லவ மரபு முடிவடைந்தது.

இரண்டாம் நந்திவர்மன் (கி.பி.731-796)
  • இரண்டாம் பரமேஸ்வரனின் இறப்பிற்குப் பிறகு சிம்மவிஷ்ணுவின் தம்பியும் இரண்யவர்மனின் மகனுமான இரண்டாம் நந்திவர்மன் பல்லவ அரசராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • இரண்டாம் நந்திவர்மன் விஷ்ணுபக்தர் ஆவார்.
  • இவர் காஞ்சியில் வைகுண்ட பெருமாள் கோயிலை கட்டினார். திருமங்கை ஆழ்வார் இவரின் காலத்தவராவார்.

மூன்றாம் நந்திவர்மன் (கி.பி.847-870)
  • பல்லவ மன்னர்களில் குறிப்பிடத்தக்க மற்றொரு மன்னர் மூன்றாம் நந்தி வர்மன் ஆவார்.
  • இவர் தெள்ளாறு என்னுமிடத்தில் நடைபெற்ற பெரும் போரில் பாண்டிய மன்னர் "ஸ்ரீவல்லபனை" வென்றார். எனவே இவரை தெள்ளாறு எறிந்த நந்திவர்மன் என நந்திக் கலம்பகம் புகழ்கிறது.
  • பட்டப் பெயர்கள்: காவிரிநாடன், கழல் நந்தி, தெள்ளாறு எறிந்த நந்திவர்மன், கடற்படை அவனி நாராயணன்.

பல்லவ அரசின் முடிவு
  • இராஜசிம்மனுக்கு பிறகு வீமவர்மனின் வழித்தோன்றல்களான நந்திவர்மன், நிருபதுங்கன், “அபராஜிதன்" போன்ற பல்லவ மன்னர்கள் தொண்டை மண்டலத்தை ஆண்டனர்.
  • சோழர்களின் எழுச்சியினால் பல்லவ அரசு தனது செல்வாக்கை இழந்தது.
  • கி.பி.895-ல் திருப்புறம்பியம் போரில் பல்லவர்கள் வெற்றி பெற்றனர். பின்னர் விஜயாலய சோழனின் மகனான ஆதித்த சோழன் கடைசி பல்லவ மன்னன் அபராஜிதனை வென்று காஞ்சிப்பகுதியைக் கைப்பற்றினான். அத்துடன் பல்லவப் பேரரசு முடிவுக்கு வந்தது.


PALLAVAS-TNPSC EXAM NOTES-IN TAMIL -COMPLETE FREE GUIDE



Post a Comment

0Comments

Post a Comment (0)