MARATHAS -TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL

TNPSC PAYILAGAM
By -
0

 

மராத்தியர்கள் :
மராத்தியர்கள் :

MARATHAS -TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL


மராத்தியர்கள் :

  • முகலாயரின் வீழ்ச்சியில் மராத்தியர் முக்கியப் பங்கு வகித்தனர். 18ஆம் நூற்றாண்டின் மத்தியில் இந்தியாவின் மையப்பகுதியில் மராத்திய மாமன்னர் சிவாஜியின் தலைமையில் முகலாய ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதில் வெற்றி பெற்றனர். 
  • தஞ்சாவூரில் நாயக்க மன்னரின் ஆட்சி முடிவடைந்த உடன் மராத்தியத் தளபதி வெங்கோஜி (சிவாஜியின் ஒன்றுவிட்ட சகோதரர்) தமிழகத்தில் மராத்திய ஆட்சியை ஏற்படுத்துவதில் வெற்றி கண்டார். 
  • தஞ்சாவூரில் 1674ஆம் ஆண்டு தொடங்கிய மராத்தியரின் ஆட்சி 1832ஆம் ஆண்டு இரண்டாவது சரபோஜி மன்னர் மரணம் வரை நீடித்தது.

விதிக்கப்பட்ட வரிகள்

சௌத் வரி

  • சிவாஜி தனது இராஜ்யத்திற்கு அந்நியமாக இருந்த பகுதிகளுக்கு விதிக்கப்பட்ட வரி. 
  • இது மக்களால் தக்கானாம் அல்லது முகலாய பேரரசு வழங்கப்பட்ட வரியின் நான்கில் ஒரு பங்கு ஆகும். 
  • மராத்திய அரசுக்கு சௌத் வரி செலுத்துபவர்களின் பகுதிகளை மராட்டிய வீரர்கள் கைப்பற்ற மாட்டார்கள் என்ற உறுதியின் பேரில் வசூலிக்கும் வரியாகும்.

சர்தேஷ்முகி வரி

  • சர்தேஷ்முகி வரி என்றால் மராட்டிய மன்னரை தங்களது சர்தேஷ்முக் என அங்கீகரித்தற்கு அடையாளமாக கிராமங்கள் அல்லது நகரத்தின் மொத்த மக்கள் தொகைக்கு விதிக்கப்பட்ட நிலையான நில வருவாயில் பத்தில் ஒரு பங்கு ஆகும்.

 சிவாஜியின் போன்சலே அரச குலத்தினர்

 பேஷ்வா ஆட்சி (1713-1818):

 

மராத்தியரின் எழுச்சிக்கான காரணங்கள்:

(அ)  மக்களின் இயல்பும், புவியியல் கூறுகளும்

  • மராத்தியர் வாழ்ந்த குறுகலான நிலப்பகுதி கொங்கணம் என்று அழைக்கப்பட்டது. செங்குத்தான மலைகளும், எளிதில் அணுகமுடியாத பள்ளத்தாக்குகளும், பாதுகாப்பு அரண்களாகத் திகழ்ந்த மலைகோட்டைகளும் இராணுவப் பாதுகாப்புக்கு உகந்தவையாக இருந்தன.
  • போர்ச் செயல்பாடுகளில் நீண்ட மரபைக் கொண்ட மராத்தியர் விசுவாசம், வீரம், ஒழுக்கம், தந்திரம், எதிரிகளை தாக்கும் ஆற்றல் ஆகியவற்றில் சிறந்து விளங்கினார்கள். முன்னதாக பாமினி சுல்தான்களின் கீழ் செயல்பட்ட மராத்தியர், சிவாஜி காலத்தில் எழுச்சிப் பெற்றனர். சிவாஜி மறைவுக்குப் பிறகு அகமதுநகர், பீஜப்பூர், கோல்கொண்டா, பீடார், பீரார் ஆகிய சுல்தான்களின் கீழ் செயல்பட்டனர்.
  • வலிமை மிகுந்த காலாட்படையும் ஆபத்தான ஆயுதங்களையும் கொண்டிருந்த முகலாய இராணுவத்துடன் நேரடியாக மோதுவதை மராத்தியர் தவிர்த்தனர். கொரில்லா தாக்குதல் முறை அவர்களின் வலிமையாகத் திகழ்ந்தது. இரவு நேரங்களில் திடீரென மின்னல் வேகத்தில் தாக்குதல்களைத் திட்டமிடுவதிலும் நடத்துவதிலும் திறமை கொண்டிருந்தனர். மேலும் மேலதிகாரியின் உத்தரவுக்குக் காத்திருக்காமல் போர்ச்சூழலைக் கருத்தில் கொண்டு வழிமுறைகளை மாற்றிச் செயல்படுத்தும் திறனையும் அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.

(ஆ) பக்தி இயக்கமும் அதன் தாக்கமும்

  • பக்தி இயக்கம் பரவியதன் மூலமாக மராத்தியரிடம் ஒற்றுமை உணர்வு மேலோங்கியது. துக்காராம், ராம்தாஸ், ஏகநாதர், ஆகியோர் பக்தி இயக்கத்தின் முன்னோடிகளாகத் திகழ்ந்தனர். மராத்தி மொழியில் பாடப்பட்ட பக்திப் பாடல்கள் சமூகத்தில் வாழ்ந்த மக்களிடையே பிணைப்பை ஏற்படுத்தின.
  • “(மராத்திய நாட்டில்) மத எழுச்சி என்பது பிராமணச் சமயம் சார்ந்ததாக இல்லை . அமைப்புகள், சடங்குகள், வகுப்பு வேறுபாடுகள், ஆகியவற்றுக்கு எதிரான தனது போராட்டத்தைப் பொறுத்த அளவில் வழக்கத்தில் உள்ள கொள்கைக்கு மாறானதாக அது அமைந்தது. துறவிகள் பெரும்பாலும் பிராமண வகுப்பைச் சாராமல் சமூகத்தின் அடிநிலையைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்"- நீதிபதி ரானடே

(இ) பிற காரணங்கள்:

  • பீஜப்பூர், கோல்கொண்டா அரசுகள் கலைந்த சூழலில் மராத்தியர் ஒன்றிணைந்து தங்களுடைய வாழ்க்கைக்காகப் போராட வேண்டிய உந்துதலைப் பெற்றனர். 
  • பீஜப்பூர், கோல்கொண்டா, அகமதுநகர் ஆகிய சுல்தான்களுக்கு எதிராக நடந்த தக்காணப் போர்களின் காரணமாக முகலாயர்களின் கருவூலம் காலியானது. 
  • தக்காணப் பகுதியில் சிதறிக் கிடந்த மராத்தியரைத் தனது தலைமையின் கீழ் ஒன்று திரட்டி சிவாஜி ஒரு வலுவான அரசை நிறுவினார். அந்த அரசுக்கு ராய்கர் தலைநகராக விளங்கியது.

முக்கிய மராத்தியக் குடும்பங்கள்:

  • கெய்க்வாட் - பரோடா 
  • பான்ஸ்லே - நாக்பூர் 
  • ஹோல்கார் - இந்தூர் 
  • சிந்தி அல்லது சிந்தியா - குவாலியர் 
  • பேஷ்வா - புனே

மாளவத்திற்கும், குஜராத்திற்கும் எதிராகப் போர்ப் பிரகடனம் செய்த பாஜிராவ் அவற்றை முகலாயரின் மேலாதிக்கத்திலிருந்து விடுவித்தார். முகலாயர் சார்பாக இதில் தலையிட்ட முகலாயப்படைகளும்ஹைதராபாத் நிஜாமின் படைகளும் தோற்கடிக்கப்பட்டன. தம்மை மகாராஷ்டிரத்தின் அரசன் எனவும் ஏனைய தக்காணப் பகுதிகளுக்குத் தலைவன் எனவும் பேரரசர் ஷாகுவை அங்கீகரிக்க வைப்பதில் பாஜிராவ் வெற்றி பெற்றார். அதன் மூலம் அப்பகுதிகளிலிருந்து சௌத், சர்தேஷ்முகி ஆகிய கப்பத்தொகைகளை மராத்திய அதிகாரிகள் சட்டபூர்வமாக வசூலிக்க முடிந்தது. நிதி நிர்வாகச் செயல்பாடுகளைப் பாஜிராவ் பூனேவில் மையப்படுத்தினார். இதனால் தக்காணப் பகுதிகளிலிருந்து அனுப்பி வைக்கப்படும் கப்பங்களை உரிய நேரத்தில் பெற்றுக் கொள்ள முடிந்தது.

மராத்தியர்களின் படை 5000 க்கும் குறைவான குதிரை வீரர்களைக் கொண்டிருந்தது. பீரங்கிப் படைப்பிரிவைக் கொண்டிருக்கவில்லை. இவ்வெண்ணிக்கை 1720இல் இருமடங்கானது. இருந்தபோதிலும் இப்படைகள் முகலாய, நிஜாம் படைகளுக்கு நிகரானதல்ல. முகலாயருக்கு எதிரான மராத்தியரின் வெற்றிக்கு முகலாயப் படைகளின் திறமையின்மையே காரணமாகும். தக்காணத்தின் மீதான மராத்தியரின் மேலாதிக்கத்திற்கு ஷாகு, பேஷ்வாக்கள் ஆகியோரின் கீழ்வளர்ந்த மராத்திய அதிகாரிகள், படைத்தளபதிகள் ஆகியோரின் குண இயல்புகளும் காரணமெனக் கூறலாம்.

மராத்தியர்களின் வீழ்ச்சி:

  • மராத்தியர்களின் குறுகிய காலப் பேரரசு 1761இல் டெல்லிக்கு அருகேயுள்ள பானிப்பட்டில் முடிந்தது. பஞ்சாபைக் கடந்து தங்கள் ஆட்சிப் பரப்பை விரிவடையச் செய்ய மராத்தியர்கள் மேற்கொண்ட முயற்சி ஆப்கானியர்களின் அரசர் அகமதுஷா அப்தாலியால் தடுக்கப் பெற்றது. 
  • அப்தாலி இறுதியாக டெல்லியின் மீது படையெடுத்து வருவதற்கு முன்னர், எட்டுமுறை படையெடுத்துள்ளார். 
  • தளபதிகள் பலரின் கீழ் பிரிந்திருந்த மராத்தியப் படையினர் பலவகையான தந்திரங்களுடன் போரை அணுகினர். 
  • 1761இல் நடைபெற்ற மூன்றாம் பானிப்பட்போரைப் பீரங்கிப் படைகள் தீர்மானித்தன. ஆப்கானியர்களின் இடம்விட்டு இடம் நகர்ந்து செல்லக் கூடிய பீரங்கிப் படைகள் மராத்திய காலாட்படையினரையும் குதிரைப்படையினரையும் கொன்று குவித்தன. 
  • தகர்த்தெறியப்பட்டன. தப்பிப்பிழைத்த மராத்திய வீரர்கள் பானிப்பட்டிலிருந்து மகாராஷ்டிரா திரும்பி நடந்ததைக்கூற ஆறுமாத காலமானது. 
  • இந்நேரத்தில் துணைக் கண்டத்தின் மீதான மராத்தியர்களின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.

Post a Comment

0Comments

Post a Comment (0)