TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL
இடைக்கால பல்லவர்கள் கி.பி. 350 முதல் கி.பி. 550 வரை
இடைக்கால பல்லவர்கள் கி.பி. 350 முதல் கி.பி. 550 வரை ஆட்சி புரிந்தனர். இம்மரபில் விஷ்ணுகோபன் குறிப்பிடத்தக்கவராவார். இவர்கள் வடமொழியில் பட்டயங்களை வெளி யிட்டனர்.
விஷ்ணுகுண்டர் :
- கோதாவரிக்கு வடபாற்பட்ட நிலப்பகுதியை ஆண்டவர் விஷ்ணுகுண்டர் ஆவர். இவர்கள் வாகாடகருடன் பெண்வழித் தொடர்புடையவராக இருந்தனர். இவர்கள் நிலப்பகுதி பையப் பையச் சாளுக்கியர் கைப்பட்டது.
சாலங்காயனர் :
- கோதாவரி, கிருஷ்னை யாறுகளுக்கு இடையில் இருந்து ஆண்டவர் சாலங்காயனர் எனப்பட்டனர். இவர்கள் தலை நகரம் வேங்கி என்பது. இவர்கள் நந்தி வழிபாட்டினர் (சாலங்காயன-நந்தி).
- இம் மரபரசருள் இரண்டாம் மன்னனான அத்திவர்மனே (கி.பி.345-370) சமுத்திர குப்தனை எதிர்த்த அரசருள் ஒருவன்.
- இந்நாடு கிருஷ்ணைக்குத் தெற்கே பரவியிருந்தது. அந்தப் பகுதி பல்லவர் கைப்பட்டது. மற்றப் பகுதி சாளுக்கியர் கைப்பட்டு அழிவுற்றது.
ஆனந்தர் :
- இக்குவாகர் ஆட்சியில் இருந்த குண்டூர்-கிஷ்ணைக் கோட்டங்களைச் சேர்ந்த நிலப்பகுதி பல்லவர் கைக்குமாறியது. பின் அப்பகுதி இடைக்காலப் பல்லவர் 5] கி.பி. 350-450 வரை ஆனந்தம் என்ற அரச மரபினர் ஆட்சிக்கு உட்பட்டது. பின்னர் அப் பகுதி பல்லவர் ஆட்சிக்கே திரும்பி விட்டது.
- இக்காலப் பல்லவர் வடக்கிலும் வடமேற்கிலும் தெற்கிலும் ஓயாத போர்கள் செய்தன்ர் ஆதலின், முற்காலப் பல்லவர் நாடே இவர் காலத்தும் இருந்ததென்னலாம்
சூட்டு நாகர் :
- இவர் ஆந்திர சாதவாகனர்க்கு உறவினர்; இக்குவாகர்க்குப் பெண் கொடுத்தவர் கி.பி. 220இல் தனியாட்சி உண்டாக்கி ஆண்டவர். இவர் நாடு பம்பாய் மாகாணத்தின் தென்கோடிக் கோட்டங்களும் மைசூரின் வடபகுதியும் கடப்பை-அனந்தப்பூர்க் கோட்டங்களும் கொண்ட நிலப்பரப்பாகும்.
- இது கிழக்கே திருப்பருப்பதத்தை எல்லையாகக் கொண்டது. ஏறக்குறைய கி.பி. 350 இல் சமுத்திர குப்தன் படையெடுத்துச் சென்றபின், வீரகூர்ச்சவர்மன் என்னும் பல்லவன் இவர்தம் பெண்ணை மணந்து குந்தள நாட்டையும் பெற்றான் என்று பொருள்படும் முறையில் பல்லவர் பட்டயம் எழுதப்பட்டுள்ளது. இதன் தலைநகரம் வைசயந்தி எனப்படும் வனவாசி ஆகும்.
கதம்பர் :
ஏறத்தாழக் கி.பி. 350 இல் மயூரசன்மன் என்னும் வீரமறையவன் திருப்பருப்பதத்தைச் சேர்ந்த நாடுகளைக் கைப்பற்றிப் பின் சித்தூர், வடஆர்க்காட்டுக் கோட்டங்களை ஆண்ட பாண அரசரை அடிமைப்படுத்திப் பல்லவர் நாட்டு எல்லைப் புறத்தில் குழப்பம் உண்டாக்கிக் கொண்டு இருந்தான். அப்பொழுது அரசனாக இருந்த பல்லவன் மயூரசன்மனுடன் சந்து செய்து கொண்டு, அவனைத் தன் படைத் தலைவனாகவும் சிற்றரசனாகவும் ஏற்றுக் கொண்டான்; பின் மயூரசன்மன் நாளடைவில் குந்தள நாட்டிற்கே தனி அரசன் ஆனான். இவன் தன் நாட்டைப் பல வழிகளிலும் விரிவாக்கினான். இவன் மரபினர் கீழ்க்கண்டவராவர்.
- மயூரசன்மன் (கி.பி. 350-375)
- கங்க வர்மன் (கி.பி. 375-400)
- பகீரதன் (கி.பி. 400-425)
- இரகு காகுத்த வர்மன் (கி.பி. 425-450)
- சாந்தி வர்மன் (கி.பி. 450-475)
- மிருகேச வர்மன்(கி.பி. 475-500)
- இரவிவர்மன் சிவரதன் பானுவர்மன் (கி.பி.500-525)
- அரிவர்மன்.86 (கி. பி. 535-570)
- அரிவர்மன்[4] (கி.பி. 535-570)
கதம்பர் சிங்க இலச்சினை, குரங்குக் கொடி, ‘பெர்மத்தி’ என்னும் வாச்சியம் முதலியவற்றை உடையவர். அவர் அனைவரும் தம்மைத் ‘தர்ம மகாராசாதிராசர்’ என்றே கூறிக்கொண்டனர். அவர் குல தெய்வம் வனவாசியில் உள்ள ‘மதுகேசா’ ஆவர். கதம்ப அரசர் பெரும்பாலும் சமணர்க்கே மிகுதியாகத் தானம் அளித்துள்ளனர்.
கங்கர்:
- காவிரிக்குத் தெற்கே குடகு நாட்டையும் மைசூரின் ஒரு பகுதியையும் ஆண்டவர் கங்கர் என்பவர். இவர் தலைநகரம் தழைக்காடு என்பது. இவர்கள் சேர நாட்டிற்கு வடக்கே இருந்தனர். பல்லவர் பேரரசின் போது அதற்கு அடங்கி இருந்தனர்; கதம்பர் படை யெடுத்த போதெல்லாம் பல்லவர் துணையைப் பெற்று வாழ்ந்தனர். இவர்களில் முதல்வனான மாதவன் காலம் கி.பி. 350 என்னலாம்.
- கங்க அரசர் நாக மரபினர்; நாகமரபைச் சேர்ந்த பெண்களை மணந்தனர். அரவக் கொடியையே கொடியாகப் பெற்றவர்.
தமிழகத்தரசர்:
- இந்த இடைக்காலத்தில் பல்லவ நாட்டிற்குத் தெற்கே வன்மை மிகுந்து இருந்தவர் களப்பிரர் ஆவர். அம் மரபினரே சோணாட்டின் பெரும் பகுதியையும் பாண்டிய நாட்டையும் ஏறக்குறையக் கி.பி. 250-550 வரை ஆண்டு வந்தனர்.
- இக் காலத்தில் சோழரும் பாண்டியரும் சிற்றரசராக இருந்து காலம் கழித்தனர்; எனினும், பல்லவரை எதிர்த்த பொழுதெல்லாம் களப்பிரரோடு சேர்ந்தே போரிட்டனர்
PALLAVAS-TNPSC EXAM NOTES-IN TAMIL -COMPLETE FREE GUIDE