PALLAVAS-TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL

TNPSC PAYILAGAM
By -
0

PALLAVAS-TNPSC HISTORY


TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL 

பல்லவர்கள்-PALLAVAS


பல்லவ கடற்கரைப் பகுதியில் முக்கிய வணிக மையமாகத் திகழ்ந்த காஞ்சிபுரத்தையும், அதன் வளம் நிறைந்த வேளாண்பகுதிகளையும் ஆண்டனர். சீன, ரோமாபுரி வணிகர்கள் காஞ்சிபுரத்தை நன்கு அறிந்திருந்தனர். 


வளம் கொழித்த வணிக மையமான காஞ்சிபுரத்திலிருந்து பிற்காலப் பல்லவர்கள் தங்கள் அரசாட்சியை ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளில் தமிழகம் முழுவதும் விரிவடையச் செய்தனர். ஆனாலும் தொண்டை மண்டலமே பல்லவ அரசின் மையப்பகுதியாக இருந்தது. 


இப்பெரிய அரசியல் பிராந்தியம் (வட்டாரம்) தமிழ்நாட்டின் வட பகுதிகளையும், அருகே அமைந்திருந்த ஆந்திர மாவட்டங்களையும் கொண்டிருந்தது.


சான்றுகள்:

  • கல்வெட்டுகள் -  மண்டகப்பட்டு குகைக் கல்வெட்டு, இரண்டாம் புலிகேசியின் அய்கோல் கல்வெட்டு
  • செப்பேடுகள் - காசக்குடிச் செப்பேடுகள்
  • இலக்கியங்கள் - மத்தவிலாசப் பிரகசனம், அவந்தி சுந்தரி கதை, கலிங்கத்துப்பரணி, பெரியபுராணம், நந்திக் கலம்பகம்
  • அயலவர் குறிப்புகள் - யுவான் சுவாங்கின் குறிப்புகள்


பல்லவ வம்சாவளி (முக்கிய அரசர்கள்):

  • தொடக்ககாலப் பல்லவ அரசர்கள் சாதவாகனர்களின் கீழ் சிற்றசர்களாக இருந்தனர். இரண்டாம் சிம்மவர்மனின் மகனான சிம்மவிஷ்ணு (கி.பி. (பொ.ஆ.மு) 550 வாக்கில்) களப்பிரர்களை அழித்து ஒரு வலுவான பல்லவ அரசை உருவாக்கினார். சோழர்கள், பாண்டியர்கள் உள்ளிட்ட பல தென்னக அரசர்களை அவர் வெற்றி கொண்டார்.
  • அவருடைய மகன் முதலாம் மகேந்திரவர்மன் மிகத் திறமை வாய்ந்த அரசராக விளங்கினார். அவருக்குப் பின் அவருடைய மகன் முதலாம் நரசிம்மவர்மன் ஆட்சிப் பொறுப்பேற்றார். இரண்டாம் நரசிம்மவர்மன் அதாவது ராஜசிம்மன், இரண்டாம் நந்திவர்மன் ஆகியோர் ஏனைய முக்கிய அரசர்கள் ஆவர். கடைசிப் பல்லவ மன்னர் அபராஜிதன் ஆவார்.
  • முதலாம் நரசிம்மவர்மனின் படைத்தளபதி பரஞ்சோதி, சிறுத்தொண்டர் (63 நாயன்மார்களில் ஒருவர்) எனப் பிரபலமாக அறியப்பட்டார். பரஞ்சோதி வாதாபிப் படையெடுப்பில் பல்லவர் படைக்குத் தலைமை ஏற்று நடத்தினார். அதன் வெற்றிக்குப் பின்னர் மனமாற்றம் பெற்ற அவர் சிவ பக்தராகமாறினார். - பெரியபுராணம்
  • மகேந்திரவர்மன் (ஏறத்தாழ கி.பி. 600 630) பல்லவ ஆட்சியின் சிறப்புக்குப் பங்களிப்புச் செய்தார். தொடக்ககாலத்தில் அவர் சமண சமயத்தைப் பின்பற்றினார். பின்னர் சைவத் துறவி அப்பரால் (திருநாவுக்கரசர்) சைவத்தைத் தழுவினார். கலை மற்றும் கட்டடக்கலைக்கு அவர் பேராதரவு அளித்தார். கட்டடக்கலைக்கு ஒரு புதிய திராவிடக் பாணியை அறிமுகம் செய்தார். அது மகேந்திரபாணி' எனக் குறிப்பிடப்படுகின்றது. மத்தவிலாசப்பிரகசனம் (குடிகாரர்களின் மகிழ்ச்சி) உட்பட சில நாடகங்களைச் சமஸ்கிருத மொழியில் எழுதியுள்ளார். இந்நாடகம் பௌத்தத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது.
  • மகேந்திரவர்மனின் ஆட்சிக்காலத்தில் வாதாபியைச்தலைநகராகக் கொண்ட மேலைச் சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசியோடு தொடர்ந்து போர்கள் மேற்கொள்ளப்பட்டன. இப்போர்களுள் ஒன்றில் இரண்டாம் புலிகேசி மகேந்திரவர்மனை வெற்றி கொண்டு நாட்டின் வடக்கில் பெரும் பகுதியை (வெங்கி) கைப்பற்றியதாகத் தெரிகிறது. 
  • அவருடைய மகன் முதலாம் நரசிம்மவர்மன் (ஏறத்தாழ 630– 668) இத்தோல்விக்குப் பழிவாங்கும் வகையில் சாளுக்கியரின் தலைநகரான வாதாபியைக் கைப்பற்றினார். வாதாபி தீக்கிரையாக்கப்பட்டது. இரண்டாம் புலிகேசியும் கொல்லப்பட்டார்.
  • இரண்டாம் நரசிம்மவர்மன் (ஏறத்தாழ 895 - 722) ராஜசிம்மன் எனவும் அழைக்கப்பட்டார். அவர் மாபெரும் வீரர் ஆவார். சீன அரசுக்கு தூதுக்குழுக்களை அனுப்பினார். சீனநாட்டின் தூதுக் குழுக்களை வரவேற்றார். ஒப்பீட்டளவில் அவரது காலத்தில் அரசியல் பிரச்சனைகள் அதிகம் இல்லாததால் அவரால் கோவில்களைக் கட்டுவதில் கவனம் செலுத்த முடிந்தது. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலைக் கட்டியது அவரே.


PALLAVAS-TNPSC EXAM NOTES-IN TAMIL -COMPLETE FREE GUIDE


Post a Comment

0Comments

Post a Comment (0)