பாண்டியப் பேரரசு நிர்வாகம்-TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL

TNPSC PAYILAGAM
By -
0

பாண்டியப் பேரரசு நிர்வாகம்-TNPSC HISTORY



TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL

SOUTH INDIAN HISTORY

பாண்டியப் பேரரசு நிர்வாகம்


 1.அரசு

  • பாண்டிய அரசர்கள் தொடர்ந்து மதுரையையே தங்கள் தலைநகராகக் கொண்டார்கள்.

 அரண்மனையும் அரியணையும்

  • பாண்டியர் அரண்மனை திருமாளிகை, மனபரணன் திருமாளிகை என்று அழைக்கப்பட்டன. 
  • அரசர்கள் நீளமான, ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் அமரும் இட வசதி கொண்ட அரியணையில் அமர்ந்தபடி நிர்வாகம் செய்தனர். 
  • குறுநில மன்னர்கள் மீது அரசர்களின் சட்டபூர்வ மேலாளுமையைக் காட்டும் விதத்திலும் அரியணைகளுக்குப் பெயரிடும் வழக்கம் இருந்தது. அத்தகைய அரியணைகளின் பெயர்கள் முன்னைய தரையன், பாண்டியத்தரையன், கலிங்கத்தரையன் ஆகும். 
  • அரசர்கள் அரியணைகளில் இருந்தபடிதான் அரசக்கட்டளைகளை வாய்மொழியாகப் பிறப்பித்தார்கள். அவை 'திருமந்திர ஓலை' என்று அழைக்கப்பட்டன.

அரச அதிகாரிகள்

  • அதிகாரிகள் குழு அரச கட்டளைகளை நிறைவேற்றியது. முதன்மை அமைச்சர் உத்தர மந்திரி எனப்பட்டார். 
  • மாணிக்கவாசகர், குலச்சிறையார், மாறன்கரி போன்ற ஆளுமைகள் பாண்டிய அமைச்சர்களாக இருந்துள்ளனர். 
  • அரச தலைமைச் செயலகம் எழுத்துமண்டபம் எனப்பட்டது. 
  • அக பரிவார முதலிகள் என்பவர்கள் அரசரின் தனிப்பட்ட உதவியாளர்களாக இருந்தனர். 
  • மாறன் எயினன், சதன் கணபதி, ஏனாதி சதன், திரதிரன், மூர்த்தி எயினன் போன்றவை உயர்ந்த மதிப்புக்குரிய அரச பதவிகளாக இருந்தன. 
  • படைத்தளபதிகளுக்குப் பள்ளி வேலன், பராந்தகன் பள்ளி வேலன், மாறன் ஆதித்தன், தென்னவன் தமிழவேள் ஆகிய பட்டங்கள் சூட்டப்பட்டன.

அரசியல் பிரிவுகள்

  • பாண்டிய மண்டலம் என்பது பல வளநாடுகளைக் கொண்டது. ஒரு வளநாடு பல நாடுகளாகவும் கூற்றங்களாகவும் பிரிக்கப்பட்டது. நாடு, கூற்றம் ஆகியன மங்கலம், நகரம், ஊர், குடி ஆகிய குடியிருப்புகளைக் கொண்டவையாக இருந்தன. 
  • பாண்டிய மண்டலத்தில் குளக்கீழ் என்ற ஒரு தனிச்சிறப்பான அரசியல் பிரிவு இருந்தது. பாசன ஏரிக்குக் கீழேயிருக்கும் பகுதி என்று இதற்குப் பொருளாகும். எடுத்துக்காட்டாக, மதுரை நகரம் ‘மடக்குளக்கீழ் மதுரை’ என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • வேளாண் நிலங்களின் தன்மைகளை மதிப்பிட்டு, வரிகளை விதிப்பது நாட்டாரின் வேலையாகும். நில அளவீடுகளின்போது 14 மற்றும் 24 அடி நீளமுள்ள கழிகளைப் பயன்படுத்தினர். பின்னர் அவற்றைக் கொடையாக வழங்கினர். 
  • சாலபோகம் நிலம் பிராமணர்களுக்கு ஒதுக்கப்பட்டது. 
  • இரும்பு உலோக வேலை செய்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலம் ‘தட்டார் காணி’ எனப்பட்டது. 
  • மரவேலை செய்பவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலம் ‘தச்சர் மானியம்’ எனப்பட்டது. 
  • கல்வி கற்பிக்கும் பிராமணக் குழுவிற்கு வழங்கப்பட்ட நிலம் பட்ட விருத்தி எனப்பட்டது.

நிர்வாகமும் சமயமும் : 7 முதல் 9 ஆம் நூற்றாண்டு வரை

  • 800-ஐச் சேர்ந்த மானூர் (திருநெல்வேலி மாவட்டம்) கல்வெட்டு கிராம நிர்வாகத்தைப் பற்றிய செய்திகளைக் கூறுகிறது. அதன்படி, பாண்டியர் கிராம நிர்வாகமும் கிராமசபைகள், குழுக்கள் எனச் சோழர் ஆட்சியின் உள்ளாட்சி முறை போன்றே அமைந்திருந்தது. குடிமை அதிகாரங்கள், இராணுவ அதிகாரங்கள் ஒரே நபரிடமே இருந்துள்ளன. இக்காலகட்ட பாண்டிய அரசர்கள் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளையும் ஆதரித்தனர். 
  • சைவ, வைணவ அடியார்கள் (நாயன்மார்களும் ஆழ்வார்களும்) தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் தங்கள் பங்களிப்பை அளித்தனர். இக்காலகட்டம் கடுமையான மத மோதல்கள் நிகழ்ந்த காலகட்டமாகக் குறிக்கப்படுகிறது. பக்தி இயக்கத்தின் எழுச்சி வேற்று மத அறிஞர்களை விவாதங்களுக்கு அழைத்தது. இத்தகைய விவாதங்களில் புத்த, சமண மதங்கள் தோல்வி அடைந்ததாக பக்தி இலக்கியங்கள் கூறுகின்றன.

2.பொருளாதாரம்:

சமூகம்

  • அரசர்களும் குறுநில மன்னர்களும் பாசன வசதிகளுடன் கூடிய குடியிருப்புகளை உருவாக்கி மங்கலம், சதுர்வேதிமங்கலம் என்ற பெயரிட்டு பிராமணர்களுக்கு வழங்கினர். இக்குடியிருப்புகளுக்கு அரசனின் பெயர்களும் கடவுளரின் பெயர்களும் சூட்டப்பட்டன. 

வணிகம்

  • இசுலாமியர்களைத் தமிழ்நாட்டுக்குள் முதன் முதலாக வரவழைத்தது மாலிக் காபூரின் படையெடுப்பு அல்ல. ஏழாம் நூற்றாண்டிலேயே தென்னிந்தியாவின் மேற்குக் கடற்கரையில் அரபுக்குடியிருப்புகள் தோன்றிவிட்டன. இதன்மூலம் தங்கள் வணிகத்தை கிழக்குக் கடற்கரையிலிருந்த தமிழர்களுடன் விரிவுப்படுத்திக் கொண்டனர். இதன் காரணமாக கிழக்குக் கரையில் இருந்த அரசுகள் இந்த அரபு வணிகர்கள் மீது மிகவும் தாராளமாக கொள்கைகளைத் தளர்த்தி ஆதரவு அளித்துள்ளனர். இதனால் அவ்வணிகர்களுக்குத் துறைமுகக் கட்டணங்கள், சுங்க வரி ஆகியவற்றிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டன. 
  • காயல் துறைமுக நகரில், அரபுத்தலைவன் மாலிக்கு இஸ்லாம் ஜமாலுதின் என்பவரால் ஒரு முகவர் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் பாண்டியருக்குக் குதிரைகளை இறக்குமதி செய்யும் பணிகளை மேற்கொண்டுள்ளது.
  • நிகமத்தோர், நானாதேசி, திசை ஆயிரத்து ஐநூற்றுவர், ஐநூற்றுவர், மணிக்கிராமத்தார், பதினென் விஷயத்தார் என்று வணிகர்கள் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறார்கள். அவர்களது வணிக குழுக்கள் கொடும்பாளூர், பெரியகுளம் ஆகிய இடங்களில் நிறுவப்பட்டன. மிளகு, முத்து, விலையுயர்ந்த கற்கள், குதிரைகள், யானைகள், பறவைகள் ஆகியன வணிகத்தில் ஈடுபடுத்தப்பட்டன. 
  • பதிமூன்று - பதினான்காம் நூற்றாண்டுகளில் குதிரை வணிகம் விறுவிறுப்பாக நடைபெற்றது. விழாக்கள், போர்களில் பயன்படுத்த குதிரைகள் அதிக அளவில் தேவைப்பட்டதால் பாண்டிய அரசர்கள் குதிரைகளில் அதிக முதலீடு செய்தனர் என்று மார்க்கோ போலோ, வாசாஃப் ஆகியோர் குறிப்பிடுகிறார்கள். குதிரை வணிகம் செய்வோர் குதிரைச்செட்டி எனப்பட்டனர். இவர்கள் கடல்வழி வணிகத்திலும் ஈடுபட்டனர்.
  • பாண்டியர் காலத்தில் முழு வீச்சில் இயங்கிய துறைமுக நகரம் காயல்பட்டினம் (தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது) ஆகும். 
  • வணிகத்தில் பரிமாற்றத்துக்கான ஊடகமாக தங்கம் விளங்கியதால், தங்க நாணயங்கள் அதிகமாகப் புழக்கத்தில் இருந்தன. அவை காசு, பழங்காசு, அன்றாட நற்பழங்காசு, கனம், கழஞ்சு, பொன் எனப் பல்வேறு பெயர்களில் குறிப்பிடப்பட்டன. 
  • வணிகர்களின் கடவுளர் அவர்களுக்கான பட்டப்பெயர்களுடன் கூடிய பெயர்களுடன் அமைந்திருந்தன. எடுத்துக்காட்டாக, ஆயிரத்து ஐநூற்றுவார் உடையார், சொக்கநாயகி அம்மன் போன்ற பெயர்களைக் கூறலாம். 
  • சீரான கால இடைவெளியில் நடத்தப்பட்ட பொருட்காட்சிகள் தவளம் எனப்பட்டன. வணிகர்களின் குடியிருப்புப் பகுதி ‘தெரு’ எனப்பட்டது.
  • பாண்டியர் கால குதிரை வணிகம் குறித்து வாசாஃப் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்: “காயல் மற்றும் இந்தியாவின் பிற துறைமுகங்களில் ஏறத்தாழ 10,000 குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டன. அவற்றில் 1,400 குதிரைகள் ஜமாலுதீனுக்குச் சொந்தமானவை. குதிரையின் சராசரி விலை 220 செம்பொன் தினார்களாகும்."

பாசனம்

  • பாண்டிய அரசர்கள் பெரும் எண்ணிக்கையிலான பாசன வளங்களை உருவாக்கினர். அவை அரசக் குடும்ப உறுப்பினர்கள் பெயர்களில் அறியப்படுகின்றன. வாசுதேவப்பேரேரி, வீரபாண்டியப்பேரேரி, ஸ்ரீ வல்லபப் பேரேரி, பராக்கிரமப்பாண்டியப்பேரேரி போன்றவை ஆகும். ஏரிகள் திருமால் ஏரி, மாறன் ஏரி, கலியன் ஏரி, காடன் ஏரி என்று பெயரிடப்பட்டன. 
  • வைகை, தாமிரபரணி ஆகிய ஆறுகளின் இரு கரைகளிலும் அவற்றின் நீரைப் பாசனக் குளங்களுக்குக் கொண்டுசெல்லும் கால்வாய்கள் வெட்டப்பட்டன. சேந்தன் மாறன் காலகட்டத்தைச் சேர்ந்த வைகை ஆற்றுப்படுகைக் கல்வெட்டுகளில் அவரால் நிறுவப்பட்ட ஆற்று மதகு குறிப்பிடப்படுகிறது. 
  • ஸ்ரீமாறன் ஸ்ரீ வல்லபன் வெட்டிய ஒரு பெரிய ஏரி இன்றும் பயன்பாட்டில் உள்ளது. வட மாவட்டங்களில் பல்லவர்கள் மேற்கொண்டதைப் போன்றே தென் மாவட்டங்களிலும் பாண்டியர் பாசனத் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்தனர். ஏரிகளின் கரைகளை அமைக்கும் போது பண்டைய கட்டுமானக் கலைஞர்கள் கரை மட்டத்தைச் சமமாகப் பராமரிக்க நூல் பயன்படுத்தினர். கரைகளின் உட்பகுதியை வலுவூட்ட கல் அடுக்குளைப் பயன்படுத்தியது பாண்டிய பாசனத் தொழில்நுட்பங்களில் ஒன்றாகும். 
  • பிற்காலப் பாண்டியர் காலத்தில் (ஏறத்தாழ 1212) திருவண்ணாமலை கோவில் நிலங்கள் பாசன வசதி பெற, பெண்ணை ஆற்றிலிருந்து வாய்க்கால் அமைத்துத் தந்துள்ளார். வறட்சிப்பகுதியான இராமநாதபுரத்தில் பல ஏரிகள் வெட்டப்பட்டன. இத்தகைய பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகள், உள்ளூர் தலைவர்கள், அதிகாரிகள் ஆகியோர் மேற்பார்வையில் பாசன வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. பாசன நீர்நிலைகளின் பராமரிப்பு பணிகள் பெரும்பாலும் உள்ளாட்சி அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டன. சில சமயங்களில் வணிகர்களும் பாசன ஏரிகளை வெட்டினார்கள்.
  • இருப்பைக்குடி கிழவன் என்ற உள்ளூர்த்தலைவர் பல ஏரிகளை வெட்டியதுடன், அவற்றைப் பழுதுபார்க்கும் வேலையிலும் ஈடுபட்டார். 
  • நில உடமையாளர்கள் பூமிபுத்திரர் எனப்பட்டனர். வரலாற்று நோக்கில் இவர்கள் உள்ளூர் குடிகளாக இருந்ததால், நாட்டு மக்கள் என்றும் அழைக்கப்பட்டனர். இவர்களின் சமுதாயக் குழு சித்திர மேழி பெரிய நாட்டார் எனப்பட்டது.
எழுத்தறிவு

  • பாண்டியர் ஆட்சியில் எழுத்தறிவைப் பரப்பும் பணிகள் பல்வேறு வழிகளில் மேற்கொள்ளப்பட்டன. கோவில்களில் பக்திப்பாடல்கள் பாடப் பாடகர்கள் நியமிக்கப்பட்ட செயல்பாடுகளை, எழுத்தறிவை ஊக்குவிக்கும் செயல்பாடுகளாகக் காணமுடியும். அரங்குகளில் நாடகங்கள் இதே நோக்கில் அரங்கேற்றப்பட்டன. சமஸ்கிருதக் கல்வியை ஊக்குவிக்கப் பட்ட விருத்தி', 'சாலபோகம்' ஆகிய பெயர்களில் அறக்கொடைகள் வழங்கப்பட்டன. கடிகை, சாலை, வித்யா ஸ்தானம் ஆகிய நிலையங்களில் பிராமணர்கள் சமஸ்கிருதம் பயின்றனர். 
  • பன்னிரண்டாம் நூற்றாண்டில் மடங்கள் உருவாகி மத ஆர்வத்தில் கல்வி கற்பிக்கும் நோக்கத்துடன் கோவில்களுடன் இணைக்கப்பட்டன. தமிழை வளர்க்கவும் மகாபாரதத்தை மொழிபெயர்க்கவும் ஒரு கலைக்கழகம் அமைக்கப்பட்டதாக ஒரு செப்பேடு கூறுகிறது. 
  • பாண்டியர் ஆட்சிக்காலத்தில் இயற்றப்பட்ட முக்கியமான இலக்கிய நூல்கள் திருப்பாவை, திருவெம்பாவை, திருவாசகம், திருக்கோவை மற்றும் திருமந்திரம் முதலியன ஆகும்.

4. மதம்

  • பாண்டியர் தொடக்கத்தில் சமணர்களாக இருந்து, சைவ மதத்துக்கு மாறியவர்கள் என்று கூறப்படுகிறது. கோவில் கல்வெட்டுகளும் சிற்பங்களும் அதற்குச் சான்று பகர்வதாக உள்ளன. 
  • குடைவரை - குகை கோவில்கள் இக்காலகட்டத்தில் மதம் - கட்டடக்கலை ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றங்களின் வெளிப்பாடுகளாகக் காணப்படுகின்றன. 
  • இடைக்காலப் பாண்டியரும் பிற்காலப் பாண்டியரும் பல கோவில்களைப் பழுது பார்த்து, அவற்றுக்குத் தங்கம், நிலம் ஆகியவற்றை நன்கொடையாக வழங்கியுள்ளனர். திருவரங்கம், சிதம்பரம் ஆகிய கோவில்களின் கருவறை மீதுள்ள விமானங்கள் தங்கத் தகடுகளால் வேயப்பட்டன. 
  • சடையவர்மன் சுந்தர பாண்டியன் திருவரங்கம் கோவிலில் பட்டம் சூட்டினார். அதன் நினைவாக அக்கோவிலுக்கு ஒரு விஷ்ணு சிலையை நன்கொடையாகக் கொடுத்தார். இக்கோவிலின் உட்சுவர்களும் பிற மூன்று விமானங்களும் தங்கத்தகடுகள் பொருத்தப்பட்டவை ஆகும்.
  • பாண்டியர் வேத நடைமுறைகளுக்கும் தங்கள் ஆதரவை விரிவுப்படுத்தினார்கள். பல வேதச் சடங்குகளைச் செய்த பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதி சங்க காலத்தைச் சேர்ந்த பாண்டிய அரசர் ஆவார். 
  • ஒவ்வொரு பெரிய பாண்டிய அரசரும் அசுவமேத யாகம், ஹிரண்ய கர்பா, வாஜபேய யக்னா ஆகிய சடங்குகளை மேற்கொண்டதாக வேள்விக்குடி செப்பேடும் பிற கல்வெட்டுகளும் கூறுகின்றன. 
  • அரசர்கள் சைவத்தையும் வைணவத்தையும் சமமாக நடத்தியதைக் கல்வெட்டுக் குறிப்புகளில் காணப்படும் கடவுள் வாழ்த்துப்பகுதிகள் தெரிவிக்கின்றன. சில அரசர்கள் தீவிர சைவச் சமயத்தவராகவும் சில அரசர்கள் தீவிர வைணவச் சமயத்தவராகவும் இருந்துள்ளனர். எனினும் இரு பிரிவைச் சேர்ந்த கோவில்களும் ஆதரிக்கப்பட்டன. 
  • நிலக்கொடைகள், வரி விலக்கு, புதுப்பிக்கும் பணி, கூடுதலாகக் கோபுரம் கட்டுவது, அதிக இட வசதி உள்ள மண்டபங்களைக் கட்டுவது போன்ற அறக்கொடைகள் மூலம் கோவில்கள் சிறப்பாக ஆதரிக்கப்பட்டன.

கோவில்கள்

  • பாண்டியர் பல்வேறு மாதிரிகளில் கோவில்கள் கட்டினார்கள். அவை கல்லறைக் கோவில்கள் (சுந்தரபாண்டிசுவரம்), குடைவரைக் கோவில்கள், கட்டமைப்புக் கோவில்கள் ஆகும்.
 

Post a Comment

0Comments

Post a Comment (0)