பாண்டியப் பேரரசு நிர்வாகம் (6th to 12th புதிய சமச்சீர் புத்தகம்) GUIDE-TNPSC HISTORY NOTES

TNPSC PAYILAGAM
By -
0

பாண்டியப் பேரரசு-வினா விடைகள்



TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL

SOUTH INDIAN HISTORY

பாண்டியப் பேரரசு


பாண்டியப் பேரரசு நிர்வாகம் (6th to 12th புதிய சமச்சீர் புத்தகம்) வினா விடைகள் GUIDE

  1. பிற்கால பாண்டியர்களின் தலை நகரம் மற்றும் துறைமுகம் - மதுரை மற்றும் காயல்.
  2. வெனிஸ் நாட்டைச் சேர்ந்த பயணி மார்க்கோ போலோ காயலுக்கு வருகை தந்த ஆண்டு- 1288,1293.
  3. பாண்டிய அரசு "செல்வச் செழிப்புமிக்க, உலகிலேயே மிக அற்புதமான பகுதி என்று புகழாரம் சூட்டியவர் – மார்க்கோ போலோ.
  4. காயல் துறைமுக நகர் அரேபிய, சீனக் கப்பல்கள் நிரம்பியிருந்தது. சதி உடன்கட்டையேறுதல் - வழக்கம் இருந்தது தனது பயண குறிப்புகளில் பதிவு செய்தவர் -  மார்க்கோ போலோ.
  5. இலங்கையோடு சேர்ந்து உலகத்தில் காணப்படும் பெரும்பாலான மாணிக்க கற்களையும் முத்துக்களையும் உற்பத்தி செய்வது - காயல் துறைமுகம்.
  6. ஒட்டுமொத்த தமிழகத்தையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த பாண்டிய அரசர் - சடைய வர்மன் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன்.
  7. இரண்டாம் பாண்டியப் பேரரசின் புகழ்பெற்ற அரசர்- சடையவர்மன் சுந்தரபாண்டியன்.
  8. சடைய வர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சி -ஆந்திர மாநிலம் நெல்லூர் வரை பரவி இருந்தது,
  9. சுந்தரபாண்டியனின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டு அவருக்கு கப்பம் கட்ட சம்மதித்தவர்- சேர அரசர்,
  10. கண்ணனூர் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் சுந்தரபாண்டியன் - வீர சோமேசுவரரை. தோற்கடித்தார்.
  11. சுந்தரபாண்டியனின் ஆட்சியின்போது அவருடன் இரண்டு பேர் கூட்டு அரசர்களாக ஆட்சி செய்தவர்கள் - விக்கிரம பாண்டியன் , வீரபாண்டியன்.
  12. மாறவர்மன் குலசேகரன் ஆட்சி புரிந்த ஆண்டுகள் - 40 ஆண்டுகள்.
  13. மாறவர்மன் குலசேகர பாண்டியனின் மகன்கள்- விக்கிரம பாண்டியன், சுந்தரபாண்டியன்.
  14. மாறவர்மன் குலசேகரன் யாரை கூட்டு அரசனாக நியமித்தார் – வீரபாண்டியன்.
  15. சுந்தர பாண்டியனுக்கு அடைக்கலம் கொடுத்த டெல்லி சுல்தான் - அலாவுதீன் கில்ஜி.
  16. யாருடைய படையெடுப்புக்குப் பின்னர் மதுரை, டெல்லி சுல்தானுக்கு கட்டுப்பட்ட ஒரு முஸ்லிம் அரசு உருவாக்கப்பட்டது – மாலிக்கபூர்.
  17. மதுரை பொதுமக்களால் எவ்வாறு அழைக்கப்பட்டது- கூடல்.
  18. பாண்டிய மன்னர்கள் பாரம்பரியமாக எவ்வாறு மதிக்கப்பட்டனர்­- கூடல்கோன், கூடல் காவலன்.
  19. பாண்டியர்கள் குதிரைகளை எங்கிருந்து இறக்குமதி செய்தனர்- அரேபியா.
  20. பாண்டிய மன்னர்கள் - மனு சாஸ்திரத்தின் படி ஆட்சி செய்தனர்.
  21. பாண்டிய மன்னர்கள் உருவாக்கிய பிராமணர் குடியிருப்புககள் - மங்களம் (அ) சதுர்வேதிமங்கலம்.
  22. நிலத்தின் உண்மையான உடைமையாளர்கள் - பூமி புத்திரர் (அ) வேளாளர்.
  23. சமூக மக்கள் ஒன்றிணைந்த மன்றம் - சித்திர மேழி பெரிய நாட்டார் .
  24. பாண்டியர்கள் ஆட்சியில் அரசு செயலகம் - எழுத்து மண்டபம்.
  25. பாண்டிய நாட்டின் நிர்வாகம் வரிசை- மண்டலம் - வளநாடு - நாடு – கூற்றம்.
  26. நாடுகளை நிர்வகித்தவர்கள்- நாட்டார்.
  27. 800 ஆம் ஆண்டை சேர்ந்த மானூர் கல்வெட்டு எதன் தொடர்பான செய்திகளைக் கொண்டுள்ளது - கிராம நிர்வாகம்.
  28. மானூர் கல்வெட்டு - திருநெல்வேலி மாவட்டம்.
  29. பாண்டிய அரசர்கள் - வேத நடைமுறைகளுக்கு ஆதரவு நல்கினர்.
  30. பாண்டிய அரசர்கள் செய்த அஸ்வமேதயாகம்: ஹிரண்ய கர்ப்பம், வாஜ்பேய வேள்வி .
  31. பாண்டிய மன்னர்கள் சைவம், வைணவம் இரண்டையும் சமமாகவே கருதினர்.
  32. பாண்டியர்கள் தமிழ், சமஸ்கிருதம் ஆகியவற்றை ஆதரித்து வளர்த்தனர்.
  33. அசோகர் தன் கல்வெட்டுகளில் யாரை தென்னிந்தியாவின் ஆட்சியாளர்களாக குறிப்பிடுகிறார் - சோழர் , சேரர் ,பாண்டியர் ,சத்திய புத்திர்.
  34. பாண்டியர்களின் தொடக்ககால தலைநகரமாகவும் துறைமுகமாகவும் இருந்தது- கொற்கை.
  35. பாண்டியர்களின் தொடக்க கால கல்வெட்டுக்களில் மதுரை- மடிரை .
  36.  தமிழ் செவ்விலக்கியங்கள் மதுரையை  - கூடல்.
  37. பாண்டி நாட்டை சேர்ந்த புலிமான் கோம்பை என்ற கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் குறிப்பிடப் பெற்றுள்ள சொல் - கூடல்.
  38. கூடல்  பாண்டியரின் தலைநகரமாக குறிப்பிடும் நூல்கள் - பத்துப்பாட்டு, பட்டினப்பாலை,மதுரைக்காஞ்சி.
  39. கூடல் - எட்டுத்தொகை நூல்களிலும் இச்சொல் காணப்படுகிறது
  40. பொ.ஆ.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் பொ.ஆ. 3 நூற்றாண்டு வரை - சங்ககாலப் பாண்டியர் வரலாறு.
  41. பிற்கால பாண்டியர் குறித்த செய்திகளை வழங்கும் இலக்கியங்கள்- மதுரை தல வரலாறு, பாண்டிய கோவை, மதுரை திருப்பணி மாலை.
  42. நெடுஞ்சடையான் - வேள்விக்குடி மானியம்.
  43. எந்த பயணிகள் எழுதியுள்ள வரலாற்றுக்குறிப்புகள் அக்காலகட்ட அரசியல் , சமூக , பண்பாட்டு வளர்ச்சியை குறித்து உதவுகின்றன-மார்கோபோலோ, வாசஃப், இபன்பதூதா.
  44. மணிமேகலையை இயற்றிய சீத்தலை சாத்தனார் – மதுரை.
  45. பாண்டியரின் ஆட்சி பகுதி -பாண்டி மண்டலம், தென் மண்டலம் ,பாண்டியநாடு.
46.பாண்டியர்களின் ஆட்சி எல்லைகள்:
           1.     வட எல்லை - புதுக்கோட்டை வழியாக ஓடும் வெள்ளாறு.
           2.     தென் எல்லை -இந்தியப் பெருங்கடல்.
           3.     மேற்கு எல்லை -மேற்கு தொடர்ச்சி மலைகள்.
           4.     கிழக்கு எல்லை -வங்காள விரிகுடா.
47.படைத்தளபதிகளின் பட்டங்கள்:
           1.     பள்ளி- வேலன்
           2.     பராந்தகன் பள்ளி வேலன்
           3.     பராந்தகன் ஆதித்தன்
           4.     தென்னவன் தமிழ்வேள்
48.எந்த நூலில் சங்கம் என்ற சொல் கலைக்கழகம் என்ற பொருளில் இடம் பெற்றுள்ளது:
           1.     இறையனார் அகப்பொருள்
           2.     திருவிளையாடல் புராணம்
           3.     பெரியபுராணம்

Post a Comment

0Comments

Post a Comment (0)