PANDYAN EMPIRE-TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL

TNPSC PAYILAGAM
By -
0

PANDYAN EMPIRE-TNPSC HISTORY



 

TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL

SOUTH INDIAN HISTORY

பாண்டியப் பேரரசு


பாண்டியப் பேரரசு:

  • தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும் நவீன காலத்துக்கு முன்புவரை இந்தியாவின் தென்பகுதியைத் ஆட்சி செய்து வந்த மூவேந்தர் மரபினரில் பாண்டியரும் அடங்குவர். 
  • அசோகர் தன் கல்வெட்டுகளில் சோழர், சேரர், பாண்டியர் சத்தியபுத்திரர் ஆகியோரைத் தென் இந்தியாவின் ஆட்சியாளர்களாகக் குறிப்பிடுகிறார். 
  • முத்துக்குளித்தல் தொழிலோடு வரலாற்றுப்பூர்வமாக இணைந்த கொற்கை பாண்டியரின் தொடக்க காலத் தலைநகரமாகவும் துறைமுகமாகவும் இருந்தது. பிற்காலத்தில் அவர்கள் மதுரைக்கு இடம்பெயர்ந்தனர்.
  • மதுரையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாண்டியர்களின் தொடக்க காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றில் மடிரை என மதுரை குறிப்பிடப்பட்டுள்ளது
  • தமிழ் செவ்விலக்கியங்கள் மதுரையைக் கூடல் எனச் சுட்டுகின்றன. இச்சொல்லுக்குக் கூடுகை என்று பொருளாகும். பாண்டிய நாட்டைச் சேர்ந்த புலிமான் கோம்பை என்ற கிராமத்தில் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் கூடல் என்ற சொல் குறிப்பிடப்பெற்றுள்ளது. 
  • பத்துப்பாட்டு நூல்களிலான பட்டினப்பாலையிலும், மதுரைக்காஞ்சியிலும் கூடல் பாண்டியர் தலைநகரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.எட்டுத்தொகை நூல்களிலும் இச்சொல் காணப்படுகிறது. 
  • வரலாற்றுப் பூர்வமாகவே மதுரை, கூடல் ஆகிய சொல்லாடல்கள் ஒன்றுக்கொன்று மாற்றுச்சொல்லாகவே கையாளப்பட்டு வந்திருக்கின்றன.


சான்றுகள்:

  • சங்ககாலப் பாண்டியர் வரலாறு ஏறத்தாழ பொ.ஆ.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் பொ.ஆ. மூன்றாம் நூற்றாண்டு வரை எனக் குறிப்பிடப்படுகிறது. பெருங்கற்கால ஈமப் பொருள்கள் கண்டுபிடிப்பு, தமிழ் பிராமி கல்வெட்டுகள், சங்க இலக்கியப் பாடல்கள் போன்ற பல்வேறு வரலாற்றுச் சான்றுகள் மூலம் சங்க காலப் பாண்டியர் வரலாறு மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 
  • பொ.ஆ. ஆறாம் நூற்றாண்டின் இறுதி வாக்கில் தென் தமிழ்நாட்டில் பாண்டியர் தம் மேலாதிக்கத்தை நிலைநிறுத்தினர். ஏழாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்தது குறித்த தகவல்களைச் சில செப்பேடுகள் உறுதிப்படுத்துகின்றன. அவற்றுள் நெடுஞ்சடையானின் வேள்விக்குடி மானியம் முக்கியமானதாகும். 
  • அரசாணைகள், பாண்டிய அரசர்களின் மரபுவழி வரிசை, வெற்றிகள், அரசர்கள் எழுப்பிய கோவில்கள், உருவாக்கிய பிரம்மதேயங்கள் ஆகியவற்றுக்கு அரசர்கள் வழங்கிய மானியங்கள், அறக்கொடைகள் ஆகியன குறித்து செப்பேடுகள் தெரிவிக்கின்றன. 
  • குடைவரைக் கோவில்களை உருவாக்கியவர்கள், பாசன ஏரிகள், கால்வாய்கள் போன்றவற்றை உருவாக்கியவர்கள் குறித்த செய்திகளைக் கல்வெட்டுகள் அளிக்கின்றன. 
  • மார்க்கோ போலோ, வாசஃப், இபின் பதூதா போன்ற பயணிகள் எழுதியுள்ள வரலாற்றுக் குறிப்புகள் அக்காலகட்ட அரசியல், சமூக, பண்பாட்டு வளர்ச்சிகள் குறித்து அறிய உதவுகின்றன. 
  • மதுரைத் தல வரலாறு, பாண்டிக்கோவை, மதுரை திருப்பணி மாலை ஆகிய இலக்கியங்கள் மதுரையை ஆண்ட பிற்காலப் பாண்டியர் குறித்த செய்திகளை வழங்குகின்றன.
  • பொ.ஆ. ஏழாம்/எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த இறையனார் அகப்பொருளில் ‘சங்கம்’ என்ற சொல் கலைக்கழகம் என்ற பொருளில் இடம்பெற்றுள்ளது. ஆனால், பல்லவர்களுக்கு முந்தைய இலக்கியங்களில் சங்கம் என்ற சொல் இப்பொருளில் குறிப்பிடவில்லை. திருவிளையாடல் புராணம், பெரிய புராணம் ஆகிய பிந்தைய இடைக்கால நூல்களில் சங்கம் என்ற சொல் கலைக்கழகம் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • மணிமேகலையை இயற்றிய சீத்தலைச்சாத்தனார் மதுரையைச் சேர்ந்தவர் ஆவார்.


ஆட்சிப்பகுதி:

  • பாண்டியரின் ஆட்சிப்பகுதி பாண்டி மண்டலம், தென் மண்டலம், பாண்டி நாடு என்று அழைக்கப்படுகிறது. 
  • வைகை, தாமிரபரணி ஆகிய ஆறுகளால் வளம் பெறும் சில பகுதிகள் நீங்கலாகப் பெரும்பாலும் பாறைகளும் குன்றுகளும் மலைத்தொடர்களும் நிறைந்த பகுதியே பாண்டிய நாடு ஆகும். 
  • புதுக்கோட்டை வழியே ஓடும் வெள்ளாறு பாண்டிய நாட்டின் வட எல்லையாகும். இந்தியப் பெருங்கடல் தென் எல்லையாகும். மேற்குத்தொடர்ச்சி மலைகள் மேற்கு எல்லையாகவும் வங்காள விரிகுடா கிழக்கு எல்லையாகவும் அமைந்திருந்தன.


TNPSC KEY POINT NOTES IN TAMIL -PANDYAN EMPIRE COMPLETE FREE GUIDE

  1. முதலாம் பாண்டியப் பேரரசு NOTES 
  2. பிற்காலப் பாண்டியப் பேரரசு NOTES 
  3. பாண்டியப் பேரரசு நிர்வாகம்
  4. பாண்டியப் பேரரசு இலக்கியும் -கலையும்
  5. PANDYAN EMPIRE -TNPSC HISTORY -வினா விடைகள் (6th to 12th புதிய சமச்சீர் புத்தகம்) GUIDE

பாண்டிய பேரரசின் வீழ்ச்சி

  • முதலாம் மாறவர்மன் குலசேகரரின் மகன்களான சுந்தர பாண்டியனுக்கும் வீர பாண்டியனுக்கும் ஏற்பட்ட அரசுரிமைப் போரில் பாண்டிய நாடு பிளவுபட்டது.
  • சுந்தர பாண்டியன் டெல்லியை ஆண்ட அலாவுதீன் கில்ஜியின் உதவியை நாடினார். அலாவுதீன் தமது தளபதி மாலிக்காபூர் என்பாரை அனுப்பி சுந்தரப் பாண்டியனுக்கு ஆட்சியை மீட்டுத்தந்தார்.
  • மதுரை சுல்தான்களின் எழுச்சியினால் முழுமையாக பாண்டியப் பேரரசு வீழ்ச்சியடைந்தது.

Post a Comment

0Comments

Post a Comment (0)