MARATHAS -TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL
பிரதாப் சிங் (1808 - 1839) :
பிரதாப் சிங் போன்சலே (Pratap Singh Bhonsle) (18 சனவரி 1793 – 14 அக்டோபர் 1847) மராத்தியப் பேரரசின் இறுதி மன்னர் ஆவார். இவர் மராத்திய பேரரசை கிபி 1808 முதல் 1819 முடிய 11 ஆண்டுகள் ஆட்சி செய்தார். பின்னர் பிரித்தானிய கிழக்கிந்திய ஆட்சியாளர்கள் இவரை பதவி நீக்கம் செய்யும் வரை சதரா இராச்சியத்தை 1839 முடிய ஆட்சி செய்தார்.
பேரரசர் சிவாஜியின் போன்சலே குல வழித்தோன்றலான இவர்,சதாரா இராச்சியத்தை ஆண்ட மன்னர் இரண்டாம் சாகுவின் மூத்த மகன் ஆவர். 1839-இல் பிரித்தானிய கிழக்கிந்திய ஆட்சியாளர்களால் மன்னர் பதவி நீக்கப்பட்ட பிரதாப் சிங், ஆங்கிலேயர்கள் வழங்கிய ஓய்வூதியத்தை கொண்டு, தன் இறுதிநாள் வரை வாரணாசியில் வாழ்ந்து முடித்தார். இவருக்குப் பின் இவரது சகோதரர் அப்பா சாகிப் என்பவர் இராஜா சாகாஜி எனும் பெயருடன் சதாரா இராச்சியத்தை ஆண்டார்