JAN - SEPTEMBER-TNPSC CURRENT AFFAIRS AWARDS HONOURS 2023

TNPSC PAYILAGAM
By -
0


 JAN-SEPTEMBER-TNPSC CURRENT AFFAIRS AWARDS HONOURS 2023:

TNPSC UNIT II:  நடப்பு விவகாரங்கள் விருதுகள் கௌரவங்கள் 2023

UNIT - II: CURRENT EVENTSHistory – Latest diary of events – National symbols – Profile of States – Eminent personalities and places in news – Sports – Books and authors. Polity – Political parties and political system in India – Public awareness and General administration – Welfare oriented Government schemes and their utility, Problems in Public Delivery Systems. Geography – Geographical landmarks. Economics – Current socio – economic issues. Science – Latest inventions in Science and Technology.

நடப்பு நிகழ்வுகள் : அண்மை நிகழ்வுகளின் தொகுப்பு – தேசியச் சின்னங்கள் – மாநிலங்கள் குறித்த விவரங்கள் – செய்திகளில் இடம் பெற்ற சிறந்த ஆளுமைகளும் இடங்களும் – விளையாட்டு – நூல்களும் ஆசிரியர்களும்.நலன் சார் அரசுத் திட்டங்கள் – தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் அரசியல் கட்சிகளும் மற்றும் ஆட்சியல் முறரகளும்.அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் அண்மைக்கால கண்டுபிடிப்புகள் – புவியியல் அகடயாளங்கள் – தற்போதைய சமூக பொருளாதார பிரச்சிகனைகள்.

விருதுகள் கௌரவங்கள் 2023 :

ஜனவரி : 

தமிழகத்தைச் சேர்ந்த பாம்பு பிடி வல்லுநர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு "பத்ம ஸ்ரீ' விருது அறிவிக்கப்பட்டது. 

மார்ச் : 

எழுத்தாளர், சமூக ஆர்வலர் ஆர்.கமலம் சின்னசாமிக்கு "ஒளவையார் விருதை' முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

மின்தூக்கியில் (லிஃப்ட்) நிகழும் விபத்துகளைத் தடுக்கும் கருவியை உருவாக்கிய ப்ளஸ்-1 மாணவி இளந்திரைக்கு "சிறந்த மாணவர் விருது' வழங்கப்பட்டது. 

"ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தின் "நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது. 

கார்த்திகி கோன்சால்வஸ் இயக்கிய "தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படத்துக்கான பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றது. 

ஜூன் :

உயிர்க்கோள பாதுகாப்பு மேலாண்மையில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்தின் இயக்குநரும் ராமநாதபுரம் மாவட்ட வனஅதிகாரியுமான பகன் ஜகதீஷ் சுதாகருக்கு யுனெஸ்கோவின் "மைக்கேல் பாடிஸ்úஸ விருது' வழங்கப்பட்டது. 

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த செவிலியர் கே.சுகந்தி உள்பட 30 பேருக்கு தேசிய ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது 2023-ஐ குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.

ஜூலை :

பிரெஞ்சு மொழியைப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டதற்காக புதுச்சேரி பல்கலைக்கழகப் பேராசிரியை நளினி ஜெ.தம்பிக்கு "செவாலியர் விருதை' பிரெஞ்சு அரசு வழங்கியது. 



தேசிய சேவைத் திட்ட விருது 2021-2022ஆம் ஆண்டிற்கான தேசிய சேவைத் திட்ட விருதுகளைக் குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் நிறுவப்பட்ட தேசிய சேவைத் திட்ட விருதுகளை என்எஸ்எஸ் தன்னார்வலர்கள், திட்ட அலுவலர்கள், பல்கலைக்கழகங்கள்/+2 கவுன்சில்களுக்கு அவர்களின் தன்னார்வ சேவையை அங்கீகரித்து ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. அதன்படி இந்தாண்டு, டாக்டர் ராம்வீர் சிங் சௌகான், டாக்டர் மிதாலி கத்கடியா, டாக்டர் ரஞ்சனா ஷர்மா, டாக்டர் மல்கியத் சிங், டாக்டர் ராகவேந்திர ஆர், டாக்டர் எஸ் லெக்ஷ்மி, டாக்டர் இந்திரா பர்மன், டாக்டர் பவன் ரமேஷ் நாயக், டாக்டர் ரேணு பிஷ்ட், டாக்டர் ஜோசப் வன்லால்ஹ்ருயா சைலோ, பபிதா பிரசாத் உள்ளிட்டோருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டது.

அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான உலக தலைவர் விருது :ஆன்மீகவாதியும் சமூக சேவையாளருமான மாதா அமிர்தானந்தமயி தேவிக்கு அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான உலக தலைவர் விருதானது வழங்கப்பட்டுள்ளது. பாஸ்டன் குளோபல் ஃபோரம் மற்றும் மைக்கேல் டுகாகிஸ் இன்ஸ்டிடியூட் ஃபார் லீடர்ஷிப் அண்ட் இன்னோவேஷன் அமைப்பானது இவ்விருதினை மாதா அமிர்தானந்தமயி தேவிக்கு வழங்கியுள்ளது.

மொழிபெயர்ப்பு விருதுகள் :அருட்செல்வர் நா.மகாலிங்கம் நூற்றாண்டு விழாவில் அருட்செல்வர் நா.மகாலிங்கம்  அறக்கட்டளை சார்வில் மொழிபெயர்ப்பு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அசாதா தமிழில் மொழி பெயர்த்த நிலத்தின் விளிம்புக்கு நூலுக்கு முதல் பரிசானது கொடுக்கப்பட்டது 2வது பரிசினை கண்ணையன் தட்சிணா மூர்த்தி தமிழில் மொழிபெயர்த்த கருங்குன்றம் நூலுக்கும், கே.சதாசிவனின் ஆங்கில வரலாற்று ஆய்வு நூலினை தமிழகத்தில் தேவதாசிகள் என்ற பெயரில் மொழிபெயர்த்த கமலாயலயனுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த ஆசிய நடிகருக்கான செப்திமிஸ் விருது :கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை மையமாக வைத்து உருவான திரைப்படம் 2018. இதில், டோவினோ தாமஸ், குஞ்சக்கோ போபன், ஆசிக் அபு, வினீத் ஸ்ரீனிவாசன், நரேன், லால் உள்ளிட்ட மலையாள நடிகர்கள் பட்டாளமே நடித்திருந்தது. இடுக்கி அணை திறக்கப்பட்டபோது ஏற்பட்ட வெள்ளச்சேதத்தில் இளைஞர்கள், மீனவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்படியெல்லாம் உதவினார்கள் என்பதை தத்ரூபமாக காட்சிப்படுத்தியிருந்தார் இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப்.இந்நிலையில், இப்படத்திற்காக நடிகர் டோவினோ தாமஸுக்கு சிறந்த ஆசிய நடிகருக்கான செப்திமிஸ் விருது வழங்கப்பட்டுள்ளது.

தாதா சாகேப் பால்கே விருது :1955 ஆம் ஆண்டு ’ரோஜுலு மராயி’ என்கிற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வஹீதா ரஹ்மான். அதன்பின், ஹிந்தியில் ‘பைசா’, ‘கைடு’, ‘ககாஸ்ஹே போல்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து மிகச்சிறந்த கவனத்தைப் பெற்றார். குறிப்பாக, 1956-ல் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ திரைப்படத்திலும் நடித்திருந்தார்.இவருக்கு மத்திய அரசு, 1972-ல் பத்ம ஸ்ரீ விருதையும் 2011-ல் பத்ம பூஷண் விருதையும் வழங்கி கௌரவித்தது. இந்நிலையில், இன்று வாழ்நாள் சாதனையாளர்களுக்கான தாதா சாகேப் பால்கே விருது வஹீதா ரஹ்மானுக்கு(85) அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் விருதான செவாலியர் என்னும் நைட் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஆர்ட்ஸ் & டெஸ் லெட்டர்ஸ் (Knight of the Order of Arts & Des Letters)-ஆனது ஆடை வடிவமைப்பாளர் ராகுல் மிஸ்ராவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

ஐஜி நோபல் விருதுகள் 2023: ஐஜி நோபல் விருதுகள் என்பது 1991 முதல் ஆண்டுதோறும் வழங்கப்படும்  வழக்கத்திற்கு மாறான மற்றும் நகைச்சுவையான அறிவியல் சாதனைகளுக்காக வழங்கப்படும் நோபல் பரிசின் நையாண்டி ஆகும். இது மக்களை சிரிக்க வைப்பதையும், பின்னர் அறிவியலின் விசித்திரமான அம்சங்களைப் பற்றி சிந்திக்க வைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பிடத்தக்க அறிவார்ந்த சாதனைகளை கௌரவிக்கும் நோபல் பரிசைப் போலல்லாமல், இக் நோபல் பரிசு ஆராய்ச்சியின் வேடிக்கையான மற்றும் ஆஃப்பீட் பக்கத்தைக் கொண்டாடுகிறது. 2023-ம் ஆண்டுக்கான ஐஜி நோபல் பரிசு பெற்றவர்கள்

விஷ்ணுபுரம் இலக்கிய விருது:  கவிஞரும், எழுத்தாளருமான யுவன் சந்திர சேகருக்கு விஷ்ணுபுரம் இலக்கிய விருதினை கோவை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பானது வழங்கியுள்ளது. 2010 முதல் இவ்விருதானது கோவை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. யுவன் சந்திரசேகரால் கானல் நதி, பகடை ஆட்டம், ஒளிவிலகல், ஏமாறும் கலை, ஒற்றை உலகம் முதலிய நூல்கள் படைக்கப்பட்டுள்ளது

தேசிய குற்ற ஆவணக் காப்பக பதக்கம் : தமிழக காவல் துறையால் ரெளடிகளை கண்காணிக்க பயன்படுத்தப்படும் டிராக் கேடி செயலிக்கு (Track KD) தேசிய குற்ற ஆவணக் காப்பக பதக்கம் கிடைத்துள்ளது. டிராக் கேடி செயலி 25.12.2022 அன்று உருவாக்கப்பட்டது.

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு: இந்திய முழுவதும் 75 பேர் தேர்வானதில் தமிழகத்திலிருந்து 4 பேர் தேர்வாகியுள்ளன.1. டி. காட்வின் வேதநாயகம் ராஜ்குமார்,2. எஸ். மாலதி,3. முனைவர் எஸ்.பிருந்தா,4. எஸ். சித்திரகுமார்

அசாமினைச் சேர்ந்த புற்றுநோய் மருத்துவர் ரவி கண்ணனுக்கு பிலிப்பைன்ஸ் நாட்டின் உயரிய விருதான ரமோன் மகசேசே விருதான வழங்கப்பட்டுள்ளது. இவர் தமிழகத்தினை பூர்வீகமாக கொண்டவர்.

நோயாளிகள் பாதுகாப்பு சேவை: தமிழகத்துக்கு ‘சஃகுஷால்’ விருது 2023:நோயாளிகள் பாதுகாப்பு சேவையில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழகத்துக்கு மத்திய அரசு விருது வழங்கி கெளரவித்துள்ளது. சா்வதேச நோயாளி பாதுகாப்பு தினம் ஆண்டு தோறும் செப். 17-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் நார்மன் இ போர்லாக் விருது : உணவு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான ஆராய்ச்சிக்காக ஒடிசா மாநில விஞ்ஞானியான சுவாதி நாயக்கிற்கு (Swati Nayak) 2023ஆம் ஆண்டிற்கான அமெரிக்காவின் நார்மன் இ போர்லாக் விருது வழங்கப்பட உள்ளது.

‘ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான்’ விருது : நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ (டிஎன்ஐஇ) குழுமம் சாா்பில் புவனேசுவரத்தில் ஒடிஸா இலக்கியத் திருவிழா 2 நாள்கள் நடைபெற்றது. இந்த விழாவில், சுதந்திரப் போராட்ட வீரரும், இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை நிறுவனருமான ராம்நாத் கோயங்கா நினைவாக ‘ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான்’ விருது அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விருது தமிழ் இலக்கியத்துக்கான பெரும் பங்களிப்புக்காக எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு வழங்கப்பட்டது. மேலும் சிறந்த அபுனைவுக்காக எழுத்தாளர் அனிருத் கனிஷெட்டிக்கும் புனைவுக்காக தேவிகா ரெகேவுக்கும் விருது மற்றும் தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

இலக்கிய வீதி இனியவன் விருதுகள் : சென்னை கம்பன் விழாவில் ஆண்டுதோறும் இலக்கிய வீதி இனியவன் பெயரில் விருதுகள் வழங்கப்படும் என சென்னை கம்பன் கழகத் துணைத் தலைவரும், அரக்கோணம் தொகுதி மக்களவை உறுப்பினருமான எஸ்.ஜெகத்ரட்சகன் தெரிவித்தாா்.சென்னை கம்பன் கழகத்தின் 50-ஆம் ஆண்டு விழா அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.

சிறந்த ஆசிய நடிகருக்கான செப்திமிஸ் விருது : கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை மையமாக வைத்து உருவான திரைப்படம் 2018. இதில், டோவினோ தாமஸ், குஞ்சக்கோ போபன், ஆசிக் அபு, வினீத் ஸ்ரீனிவாசன், நரேன், லால் உள்ளிட்ட மலையாள நடிகர்கள் பட்டாளமே நடித்திருந்தது. இடுக்கி அணை திறக்கப்பட்டபோது ஏற்பட்ட வெள்ளச்சேதத்தில் இளைஞர்கள், மீனவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்படியெல்லாம் உதவினார்கள் என்பதை தத்ரூபமாக காட்சிப்படுத்தியிருந்தார் இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப்.இந்நிலையில், இப்படத்திற்காக நடிகர் டோவினோ தாமஸுக்கு சிறந்த ஆசிய நடிகருக்கான செப்திமிஸ் விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்திய பொலிவுறு நகரங்கள் விருதுகள்: மத்திய பிரதேசத்தின் இந்தூரில் நடைபெற்ற இந்திய பொலிவுறு நகரங்கள் மாநாடு-2023-ல் குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு பங்கேற்றுள்ளார். பொலிவுறு நகரங்கள் பட்டியிலில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள இந்தூர், சூரத்,  ஆக்ரா ஆகியவற்றிற்கு விருதுகள் வழங்கபட்டுள்ளன. பொலிவுறு மாநிலங்கள் பட்டியிலில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள மத்தியப்பிரதேசம், தமிழ்நாடு, ராஜஸ்தான் மற்றும் உத்திரபிரதேசம் ஆகியவற்றிற்கு விருதுகள் வழங்கபட்டுள்ளன.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் வறிய நிலையில் உள்ள 10 கலைமாமணி விருதாளர்களுக்கு ரூ.1 லட்சம் பொற்கிழி - தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற 500 கலைஞர்களுக்கு இசைக் கருவிகள், ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்கிட ரூ.50 லட்சம் நிதியுதவி - நலிந்த நிலையில் வாழும் 1000 மூத்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3,000 நிதியுதவியையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.



TNPSC CURRENT AFFAIRS AWARDS HONOURS 2023:

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)