MARATHAS -TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL
இரண்டாம் சிவாஜி (1700–1714)
- மராட்டியப் பேரரசர் சத்திரபதி இராஜாராம் - தாராபாய் இணையருக்குப் பிறந்தவர்.
- இரண்டாம் சிவாஜி கைக்குழந்தையாக இருக்கையில், 1700-இல் மன்னர் சத்திரபதி இராஜாராம் இறந்து விடவே, இராணி தாராபாய் அரசப் பிரதிநிதியாக, மாரத்தியப் பேரரசை நிர்வகித்து வந்தார்.
- இந்நிலையில் சத்திரபதி சிவாஜியின் பேரனும், சம்பாஜியின் மகனுமான சாகுஜி 1707ல் முகலாயர்களின் சிறைக்கூடத்திலிருந்து சாத்தாராவிற்கு தப்பி வந்தார்.
- அங்கு தனக்கு பதிலாக மராட்டிய அரசராக வீற்றிருந்த இரண்டாம் சிவாஜியையும், அவரது அன்னை இராணி தாரபாயையும் அரியணையிலிருந்து அகற்றி, தான் மராத்தியப் பேரரசின் சத்திரபதியாக முடிசூட்டிக் கொண்டார்.
- இந்நிலையில் இராணி தாராபாய், கோலாப்பூரை தலைமையிடமாகக் கொண்டு கோல்ஹாப்பூர் இராச்சியத்தை நிறுவி இரண்டாம் சிவாஜியை மன்னராக்கினார்.
- இரண்டாம் சிவாஜி கோல்ஹாப்பூர் இராச்சியத்தை 1710 முதல் 1714 முடிய ஆண்டார். இரண்டாம் சிவாஜியின் சிற்றன்னையும், தாராபாயின் சக்களத்தியுமான இராஜேஸ்பாய், இரண்டாம் சிவாஜியை அரியணையிலிருந்து அகற்றி, தமது மகன் இரண்டாம் சம்பாஜியை கோல்ஹாப்பூர் இராச்சியத்தின் மன்னராக்கினார்.
- பின்னர் இரண்டாம் சிவாஜி 14 மார்ச் 1726-இல் அம்மை நோய் தாக்கி இறந்தார்.
- இரண்டாம் சம்பாஜியின் இறப்பிற்குப் பின் இருமாதங்கள் கழித்து, அவரது மனைவிக்கு இரண்டாம் இராஜாராம் எனும் குழந்தை பிறந்தது.
- சத்தாராவின் சத்திரபதி சாகுஜிக்கு ஆண் குழந்தை இல்லாததால், 1740-இல், இராணி தாராபாயின் பேரனும், இரண்டாம் சிவாஜியின் மகனுமான இரண்டாம் இராஜாராமை தத்து எடுத்து வளர்த்தார்.
- சாகுஜியின் இறப்பிற்குப்பின் இரண்டாம் இராஜாராம் சதாரா அரசின் மன்னரானார்.