SITRU ILAKKIYAMGAL -TNPSC TAMIL ILLAKKIYAM NOTES:
பகுதி – (ஆ) – இலக்கியம்
சிற்றிலக்கியங்கள்:
சிற்றிலக்கிய வரையறை
பேரிலக்கியங்கள் அறம், பொருள். இன்பம், வீடு ஆகிய நான்கனையும் உணர்த்துவதற்காக எழுந்தன. இவற்றுள் ஒன்றோ பலவோ குறைந்து வரும் தன்மையில் அமைந்த இலக்கியங்கள் சிற்றிலக்கியங்கள்.
சிற்றிலக்கியங்கள் தொல்காப்பியம் கூறும் 'விருந்து' என்னும் வனப்பினுள் அடங்கும். சிற்றிலக்கியம் 96 வகையின என்பர். தூது . உலா, பரணி, குறவஞ்சி, பள்ளு, அந்தாதி, கோவை, கலம்பகம் பிள்ளைத்தமிழ், சதகம் போன்றன சிற்றிலக்கிய வகைகளுள் சில.
சிற்றிலக்கியங்களின் காலத்தைக் குறிப்பிட்ட வரையறைக்குள் அடக்கிவிட இயலாது. சங்கம்முதல் இன்றுவரை பெரிதும் சிறிதுமாக இவ்வகை இலக்கியம் தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது. இவை வட்டாரச் சார்புடையவை. பல்லவர்கள் காலத்தில் பக்தி இலக்கியங்கள் செழித்தோங்கியதைப் போல, நாயக்கர் காலத்தில் சிற்றிலக்கியங்கள் செழித்தன.
வகையும் தொகையும்
சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தையும் எண்ணிக்கையையும் பாட்டியல் நூல்கள் கூறுகின்றன. ஒவ்வொரு பாட்டியல் நூலும் சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கையைக் கூறுமிடத்து வேறுபடுகின்றன. இருப்பினும் பிரபந்த மரபியல், பிரபந்தத் தீபிகை, சதுரகராதி, தொன்னூல் விளக்கம் ஆகியன 96 எனக் குறிப்பிடுகின்றன.
சிற்றிலக்கியங்கள்: TNPSC EXAM KEY POINTS NOTES
- திருக்குற்றாலக்குறவஞ்சி
- கலிங்கத்துப்பரணி
- முத்தொள்ளாயிரம்
- தமிழ்விடு தூது
- நந்திக்கலம்பகம்
- விக்கிரமசோழன் உலா
- முக்கூடற்பள்ளு
- காவடிச்சிந்து
- திருவேங்கடத்தந்தாதி
- இலக்கியம்- பிள்ளைத் தமிழ்
- முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ்
- இராஜராஜன் சோழன் உலா
TNPSC EXAM KEY POINTS :SITRU ILAKKIYAMGAL01 . நாயக்கர் காலம் என்ன ? கி.பி. 1350 முதல் 1750 வரை02. மதுரையில் நாயக்கர் ஆட்சிக்கு அடிகோலியவர் யார் ? குமாரகம்பண்ணன்03 . சிற்றிலக்கியங்கள் எத்தனை வகைப்படும் ? 9604 . தமிழில் முதன்முதலாகத் தோன்றிய உலா நூல் எது ? திருக்கயிலாய ஞான உலா05 . திருக்கயிலாய ஞான உலாவின் ஆசிரியர் யார் ? சேரமான் பெருமாள் நாயனார்06 . ஆளுடையபிள்ளையார் திரு உலா மாலையின் ஆசிரியர் யார் ? நம்பியாண்டார் நம்பி07 . திருக்குற்றாலநாதர் உலாவின் ஆசிரியர் யார் ? திரிகூட இராசப்பகவிராயர்08 . அந்தக்கவி வீரராகவமுதலியார் இயற்றிய உலா நூல்கள் யாவை ? திருவாரூர் உலா ,திருக்கழுக்குன்றத்து உலா09 . ஏகாம்பரநாதர் உலாவின் ஆசிரியர் யார்? இரட்டைப்புலவர்கள்10 . தூது இலக்கியம் எவ்வகைப் பாவால் பாடப்பெறும் ? கவிவெண்பாவால்11 . தூது இலக்கியங்களில் தலைச்சிறந்ததாகக் கருதப்படுவது எது ? தமிழ்விடுதூது12 .காக்கை விடு தூதின் ஆசிரியர் யார் ? வெள்ளைவாரணனார்13 . மீனாட்சி சுந்தரம்பிள்ளை எழுதிய தூதுநூல் எது ? தசவிடுதூது14 . தூதின் வகைகளைக் கூறுக ? அகத்தூது , புறத்தூது15 . தமிழ்விடு தூதின் ஆசிரியர் யார் ? பெயர் கிடைக்கப்பெறவில்லை16 . நெஞ்சுவிடுதூதின் ஆசிரியர் யார் ? கொற்றவன்குடி உமாபதி17 . சிவாச்சாரியார் அழகர் கிள்ளைவிடுதூதின் ஆசிரியர் யார் ? பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்18 . வண்டுவிடு தூதின் ஆசிரியர் யார் ? கச்சியப்ப முதலியார்19 . சுப்ரதீபக்கவிராயர் இயற்றிய தூதின் பெயர் என்ன ? கூளப்பநாயக்கன் விறலிவிடுதூது20 . பிள்ளைத்தமிழின் வேறுபெயர்கள் யாவை ? பிள்ளைக்கவி , பிள்ளைப்பாட்டு21 . பிள்ளைத்தமிழின் இருவகைகள் யாவை ? ஆண்பால் பிள்ளைத்தமிழ் ,பெண்பால் பிள்ளைத்தமிழ்22 . பிள்ளைத்தமிழின் பருவங்கள் எத்தனை ? 1023 . ஆண்பால் பிள்ளைத்தமிழின் பருவங்கள் யாவை ?காப்பு , செங்கீரை , தால் , சப்பாணி , முத்தம் , வருகை , அம்புலி , சிற்றில் , சிறுபறை , சிறுதேர்24 . பெண்பால் பிள்ளைத்தமிழின் பருவங்கள் யாவை ?காப்பு , செங்கீரை , தால் , சப்பாணி , முத்தம் , வருகை , அம்புலி , கழங்கு( அம்மானை ) , நீராடல் , ஊசல்.25 . பிள்ளைத்தமிழ் இலக்கியத்தின் முன்னோடி யார் ? பெரியாழ்வார்26 . பிள்ளைத்தமிழ் எந்தச் சந்தத்தால் ஆனவை ? கழிநெடிலாசிரியச் சந்தவிருத்தத்தால்27 . அம்புலிப் பருவம் எவ்வெவ் வகைகளால் பாடப்படும் ? சாம , தான , பேத , தண்டம் எனும் நான்கு வகைகளில்28 , குமரகுருபரர் இயற்றிய பிள்ளைத்தமிழ் நூல்கள் யாவை ? மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்29. திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழின் ஆசிரியர் யார் ? பகழிக் கூத்தர்30 . காந்திமதியம்மை பிள்ளைத்தமிழின் ஆசிரியர் யார் ? அழகியப் பலபட்டடைச் சொக்கநாதர்31 . மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை பாடிய பிள்ளைத்தமிழ் நூல்கள் யாவை ? சேக்கிழர் பிள்ளைத்தமிழ் . முகைதீன் ஆண்டவர் பிள்ளைத்தமிழ்32 . கலம்பகத்தின் உறுப்புகள் எத்தனை ? 1833 . கலம்பக இலக்கியம் பாடுவதில் வல்லவர்கள் யார் ? இரட்டையர்கள்34 . கலம்பக இலக்கியங்களுள் தலைசிறந்தது எது ? நந்திக்கலம்பகம்35. நந்திக்கலம்பகத்தின் பாட்டுடைத்தலைவன் யாவர் ? மூன்றாம் நந்திவர்மன்36 . கலம்பகத்தின் செய்யுள் தொகை என்ன ? கடவுளார்க்கு - 100 , முனிவர்க்கு - 95 , அரசர்க்கு - 90 , அமைச்சர்க்கு - 70 , வணிகர்க்கு - 50 , வேளாளர்க்கு - 3037 . ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகத்தின் ஆசிரியர் யார் ? நம்பியாண்டார் நம்பி38 . திருவரங்கக் கலம்பகம் பாடியவர் யார் ? பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்39 . மதுரைக் கலம்பகம் பாடியவர் யார் ? குமரகுருபரர்40 . இரட்டையர் பாடிய கலம்பக நூல்கள் யாவை ? திருவாமாத்தூர்க் கலம்பகம் , தில்லைக் கலம்பகம்41 . வீரமாமுனிவர் பாடிய கலம்பக நூல் எது ? திருக்காவலூர்க் கலம்பகம்42. நந்திக் கலம்பகத்தில் காணப்படும் பாடல்கள் எத்தனை ? 14443. குறவஞ்சி இலக்கியங்களுள் தலைசிறந்ததாகக் கருதப்படுவது எது ? குறவஞ்சி நாடகம் , குறவஞ்சி நாட்டியம்44. குறவஞ்சி இலக்கியங்களுள் தலைசிறந்ததாகக் கருதப்படுவது எது ? திருக்குற்றாலக் குறவஞ்சி45. திருக்குற்றாலக் குறவஞ்சியன் ஆசிரியர் யார் ? திரிகூட இராசப்பக் கவிராயர்46 . வரத நஞ்சையப்ப பிள்ளை இயற்றிய குறவஞ்சிய நூல் எது ? தமிழரசி குறவஞ்சி47. சரபேந்திர பூபாலக் குறவஞ்சியின் ஆசிரியர் யார் ? கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர்48. பெத்தலேகம் குறவஞ்சியின் ஆசிரியர் யார் ? வேதநாயக சாஸ்திரியார்49 . பள்ளு - எந்த நில மக்களுக்கு உரிய நூல் ? மருத நில மக்களுக்கு50 . பள்ளு இலக்கியம் எந்த வனப்பு வகையைச் சார்ந்தது ? புலன் பள்ளு.