TNPSC GK குறிப்புகள் தமிழ் டிசம்பர்– 2023

TNPSC PAYILAGAM
By -
0


 TNPSC GK குறிப்புகள் தமிழ் டிசம்பர்– 2023

மிக்ஜம் புயல் (Mikjam) :

டிசம்பர் 3-ல் உருவாகும் மிக்ஜம் புயலானது வடதமிழகம், தென் ஆந்திரா இடையே கரையை கடக்க புயலுக்கு மிக்ஜம் என பெயரிடப்பட்டுள்ளது.

மியானமர் மிக்ஜம் என்ற பெயரை தந்துள்ளது.

தமிழக வட கடலோர மாவட்டங்களைப் புரட்டிப்போட்ட மிக்ஜம் புயல், ஆந்திரத்தின் பாபட்லா என்ற பகுதியில் 05/12/2023 பிற்பகல் 12.30-2.30 மணிக்கு இடைப்பட்ட காலத்தில் தீவிர புயலாக கரையைக் கடந்தது. அப்போது பாபட்லாவை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 100 கி.மீ. வேகத்தில் காற்றுடன் மழை கொட்டியது.

விமான நிலைய மீட்பு மற்றும் தீயணைப்பு பிரிவு:

கோவாவில் விமான நிலைய மீட்பு மற்றும் தீயணைப்பு பிரிவில் திஷா நாயர் பணியமர்த்தப்பட்டுள்ளார்.இப்பிரிவில் பணியமர்த்தப்பட்ட முதல் பெண் என்ற பெருமையை திஷா நாயக் பெற்றுள்ளார்

மின்சார உற்பத்தி:

உலக அளவிலான மின்சாரம் உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடம் பிடித்துள்ளது.

மின்சாரச் சட்டம் 2023, பிரிவு 135-ஆனது மின்சாரத் திருட்டான குற்றத்திற்குரிய தண்டனையாகும்.

மக்கள் மருந்தகம் / Makkal Marunthagam– 10,000வது கிளை: 

2015-ல் கொண்டு வரப்பட்ட மக்கள் மருந்தகம் திட்டத்தின் 10,000வது கிளையை ஜார்க்கண்ட் மாநிலத்தின் தியோகர் எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் திறந்து வைத்துள்ளார்.மேலும் மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கையை 25,000-ஆக உயர்த்துகின்ற  திட்டத்தினையும் துவங்கி வைத்துள்ளார்.02.11.2016-ல் தமிழ்நாட்டில் முதல் மக்கள் மருந்தக கிளையானது கோயம்புத்தூரில்  தொடங்கப்பட்டுள்ளது.

ஜி-20 பிரேசில் தலைமை:

ஜி-20 கூட்டமைப்பிற்கான இந்தியாவின் ஓராண்டு தலைமை பொறுப்பானது 30.11.2023-உடன் முடிவடைந்துள்ளது
ஜி-20 கூட்டமைப்பிற்கான தலைமை பொறுப்பினை பிரேசில் நாடானது ஏற்றுக் கொண்டுள்ளது.

பாஸ்போரின், சிஸ்டைன் மற்றும் தங்கம் (Ph-Cys-Au):

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் மேம்பட்ட ஆய்வு நிறுவனத்தின் (IASST) விஞ்ஞானிகள் Ph osphorene, Cys tine மற்றும் Gold- Au (Ph-Cys-Au) ஆகியவற்றைப் பயன்படுத்தி அதிக ஒளிரும் பொருளை உருவாக்கியுள்ளனர் . நுரையீரல், வயிறு மற்றும் இதயத்தில் நச்சு விளைவை ஏற்படுத்தும் புற்றுநோய் எதிர்ப்பு மருந்தான மெத்தோட்ரெக்ஸேட் (எம்டிஎக்ஸ்) மருந்தின் அளவைக் கண்டறிய இது பயன்படுத்தப்படலாம் .

கடுமையான வெப்பமண்டல சூறாவளிகள், 2023

மாவார் மற்றும் போலவன் - மேற்கு பசிபிக் பெருங்கடல்

ஜோவா மற்றும் ஓடிஸ் சூறாவளி - கிழக்கு பசிபிக் பெருங்கடல்.

லீ சூறாவளி - அட்லாண்டிக் பெருங்கடல்.

மோக்கா சூறாவளி - வட இந்தியப் பெருங்கடல்.

புயல் ஃப்ரெடி - தெற்கு இந்தியப் பெருங்கடல்.

India’s Moment: Changing Power Equations around the World:

பேராசிரியர் மோகன் குமார் எழுதிய India’s Moment: Changing Power Equations around the World என்ற புத்தகத்தை பிரிட்டனுக்கான இந்திய தூதர் விக்ரம் கே.துரைசாமி வெளியிட்டார்.. காலப்போக்கில் சர்வதேசப் பேச்சுவார்த்தைகளில் இந்தியாவின் நிலைப்பாடுகள் எவ்வாறு பரிணமித்துள்ளன என்பதை இந்த புத்தகம் விளக்குகிறது.

நேபாளத்தில் ஓரினச்சேர்க்கை திருமணம்:

நேபாளத்தின் உச்ச நீதிமன்றத்தால் ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கிய பிறகு முறைப்படி பதிவு செய்த 1 வது தென்கிழக்கு ஆசிய நாடாக நேபாளம் வரலாறு படைத்தது .

ஸ்பர்ஷ் பாரதி:

V. ஸ்ரீனிவாச சக்ரவர்த்தி என்ற பாரதி எழுத்தை அறிமுகப்படுத்திய பிறகு , ஐஐடி மெட்ராஸில் உள்ள பேராசிரியர் ஒருவர் பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்காக ஸ்பர்ஷ் பாரதி என்ற ஸ்கிரிப்டை உருவாக்கியுள்ளார்.இந்த 'இந்திய பிரெய்லி'யை இந்திய மொழிகளில் பயன்படுத்தலாம்.

பாரதி என்பது ஒரு எளிய மற்றும் ஒருங்கிணைந்த ஸ்கிரிப்ட் ஆகும், இது பெரும்பாலான முக்கிய இந்திய மொழிகளை எழுதப் பயன்படுகிறது.இது எளிமையான வடிவங்களைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது, பெரும்பாலும் பல்வேறு இந்திய மொழிகள்/ஸ்கிரிப்டுகள் மற்றும் ஆங்கிலத்தில் இருந்து எளிய எழுத்துக்களைக் கடன் வாங்குகிறது.

5 வது உலகளாவிய ஆயுர்வேத விழா, 2023:

குளோபல் ஆயுர்வேத விழா என்பது கேரளாவின் காரியவட்டம் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் சர்வதேச அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தியாவின் குணப்படுத்தும் ஞானத்தைக் கொண்டாடும் ஒரு தளமாகும்.

மையக் கருப்பொருள் : உடல்நலம் மற்றும் மறுமலர்ச்சி ஆயுர்வேதத்தில் வளர்ந்து வரும் சவால்கள்

உலகின் முதல் சகோதர - சகோதரி கிராண்ட் மாஸ்டர்கள் :

உலகின் முதல் சகோதர - சகோதரி கிராண்ட்மாஸ்டர்களாக பிரக்ஞானந்தா மற்றும் வைஷாலி உருவாகியுள்ளனர். கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் மூத்த சகோதரி வைஷாலி தற்போது செஸ் கிராண்ட் மாஸ்டராக மாறியுள்ளார். ஸ்பெயினில் நடைபெற்ற செஸ் போட்டியில் இந்த சாதனையை அவர் படைத்தார். தன்னை எதிர்த்து விளையாடிய துருக்கியைச் சேர்ந்த வீரரை வென்று அவர் இந்த சாதனையைப் படைத்தார். இந்தியாவிலிருந்து கிராண்ட் மாஸ்டர் பட்டத்தைப் பெறும் மூன்றாவது வீராங்கனை வைஷாலி என்பது குறிப்பிடத்தக்கது. வைஷாலிக்கு முன்னதாக கொனேரு ஹம்பி மற்றும் ஹரிகா ஆகியோர் இந்தியாவிலிந்து கிராண்ட் மாஸ்டர் பட்டங்களை வென்றுள்ளனர். 

வைஷாலியின் சகோதரரான பிரக்ஞானந்தா கடந்த 2018 ஆம் ஆண்டு அவரது 12 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார். தற்போது அவரது சகோதரி கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றுள்ள நிலையில், இவர்கள் உலகின் முதல் சகோதர - சகோதரி கிராண்ட் மாஸ்டர்கள் என்ற பெருமையைப் பெற்றுள்ளனர்.

ஆதித்யா விண்கலத்தின் ஆய்வுத் தகவல்கள் வெளியீடு:

இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பு: ஆதித்யா விண்கலத்தில் மொத்தம் 7 ஆய்வுக் கருவிகள் உள்ளன. இதில் ‘ஹெல்1ஒஎஸ்’ எனும் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டா் கருவி கடந்த அக்டோபரில் ஆய்வுப் பணிகளைத் தொடங்கியது. இது பதிவு செய்த சூரிய கதிா்வீச்சின் ஒளி அலை தரவுகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டன. தொடா்ந்து ஏபெக்ஸ் எனும் 2-ஆவது ஆய்வுக் கருவி செப்டம்பா் மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. இந்தக் கருவியானது சூரிய புயல்கள் மற்றும் அதிலுள்ள ஆற்றல் அயனிகள் குறித்து ஆராய்ந்து வருகிறது. அது வழங்கிய தரவுகளின் அடிப்படையில் சூரியக் காற்றில் உள்ள புரோட்டான் மற்றும் ஆல்பா துகள்களில் உள்ள எண்ணிக்கை மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது. மேலும், விண்கலம் தற்போது நல்ல செயல்பாட்டில் இருக்கிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

ர்வதேச கடல்சார் அமைப்பு (IMO) கவுன்சிலுக்கு 2024-25 இரு வருடத்திற்கான அதிக எண்ணிக்கையுடன் இந்தியா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது:

2024-25 ஆம் ஆண்டிற்கான கடல்சார் அமைப்பின் நிர்வாகக் கூட்டம்  நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின்போது நடைபெற்ற தேர்தலில், இந்தியா அதிக எண்ணிக்கையிலான வாக்குகளுடன் சர்வதேச கடல்சார் அமைப்பின் (ஐ.எம்.ஓ) கவுன்சிலுக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது. "சர்வதேச கடல்வழி வர்த்தகத்தில் அதிக ஆர்வம் கொண்ட நாடுகள்" என்ற குழுவில் 10 நாடுகளின் பிரிவில் இந்தியா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடன் ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, ஸ்பெயின், ஸ்வீடன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) ஆகிய நாடுகளும் இந்த கவுன்சிலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

FITEXPO INDIA 2023

ஆசியாவின் முதன்மையான விளையாட்டு, உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய வர்த்தக கண்காட்சிகளில் ஒன்றான FITEXPO INDIA 2023 டிசம்பர் 1 அன்று கொல்கத்தாவில் உள்ள பிஸ்வா பங்களா மேளா பிரங்கனில் தொடங்கியது இமாமியின் தலைவரான ஸ்ரீ ராதே ஷ்யாம் கோயங்கா , மற்றும் உடற்பயிற்சி, விளையாட்டு மற்றும் ஆரோக்கியத் துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இந்த மாபெரும் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.

SPORTEXPO என்பது FITEXPO INDIA 2023 இல் விளையாட்டுத் துறைக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட சிறப்பு தளமாகும்.

காஞ்சன் தேவி ICFRE இன் முதல் பெண் இயக்குநர் ஜெனரல் ஆனார்

காஞ்சன் தேவி , 1991-பேட்ச் இந்திய வன சேவை அதிகாரி, மத்தியப் பிரதேச கேடரில் இருந்து, இந்திய வனவியல் ஆராய்ச்சிக் கல்வி கவுன்சிலின் (ICFRE) முதல் பெண் இயக்குநர் ஜெனரலாக (DG) நியமிக்கப்பட்டுள்ளார் .

டிஎன்பிஎஸ்சி புதிய செயலாளர்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய செயலாளராக குடிமைப் பணி அலுவலர் ச.கோபால சுந்தரராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையில் 11.75% பெண்கள்: மக்களவையில் மத்திய அரசு தகவல்:

இந்தியாவில் காவல் துறையில் பெண்கள் பலத்தை 33 சதவீதம் அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருவதாக தற்போது 11.75 சதவீத பெண்கள் மட்டுமே இருப்பதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு, நாடு முழுவதும் காவல் துறையில் பெண்கள் 11.75 சதவீதம் மட்டுமே பணியாற்றுகின்றனா். இந்த எண்ணிக்கை முந்தைய 2020-ஆம் ஆண்டில் 10.30 சதவீதமாகவும் 2021-ஆம் ஆண்டில் 10.49-சதவீதமாகவும் இருந்தது. அனைத்து பெண்கள் காவல் நிலையங்களின் எண்ணிக்கை கடந்த 2014-ஆம் ஆண்டு 518-ஆக இருந்த நிலையில், கடந்த ஆண்டு 745-ஆக அதிகரித்துள்ளது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம்

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வெளியிட்டுள்ள 2022-ஆம் ஆண்டில் அதிக கற்பழிப்பு வழக்குகள் பதிவு அறிக்கையில் ராஜஸ்தான் முதலிடம் பிடித்துள்ளது.

மை பாதர்: எடாட்டர் ரிமம்பர்ஸ்:

இந்தியாவின் 13வது குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகளான ஷர்மிஸ்தா முகர்ஜி பிரணாப், மை பாதர்: எடாட்டர் ரிமம்பர்ஸ் (Pranab, My Father: A Daughter Remembers) என்ற நூலினை எழுதியுள்ளார்.இந்நூல் பிராணாப் முகர்ஜியின் வாழ்க்கை வரலாற்றை பற்றிய எழுதப்பட்ட நூல் ஆகும்.

சியாச்சின் ராணுவப் பள்ளியில் முதல் மருத்துவ அதிகாரி:

இமயமலைத் தொடரில் உள்ள சியாச்சின் ராணுவப் பள்ளியில் முதல் மருத்துவ அதிகாரியாக கீதிகா கெளல் நியமனம் செய்யமிக்கப்பட்டுள்ளார்.

ராணுவ தளவாடங்களை உற்பத்தி 2022-ஆம் ஆண்டிற்கான பட்டியிலில்:

ஸ்டாக்ஹோம் நிறுவனம் வெளியிட்டுள்ள ராணுவ தளவாடங்களை உற்பத்தி 2022-ஆம் ஆண்டிற்கான பட்டியிலில் இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனம் 41வது இடத்தினை பிடித்துள்ளது.

மேலும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் 63வது இடமும் மசகான் டாக்ஸ் நிறுவனம் 81வது இடமும் பிடித்துள்ளன.

இந்திய அரசு ராணுவத்திற்கான செலவீன பட்டியலில் 4வது இடம் பிடித்துள்ளது.

NCRB என்னும் National Crime Records Bureau அமைப்பானது 1986-ல் புதுடெல்லியை தலைமையிடமாக கொண்டு உருவாக்கப்பட்டது.

காடு வளர்ப்பு முயற்சிகளுக்கு COP-28:

பீகாரின் காடு வளர்ப்பு முயற்சிகள், குறிப்பாக ஜல்-ஜீவன்-ஹரியாலி அபியான் மூலம், ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டின் போது துபாயில் நடந்த COP-28 இல் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றது .

2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த வார்த்தையாக ரிஸ் (Rizz) என்ற வார்த்தையை தேர்வு :

ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியை வெளியிடும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகம், 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த வார்த்தையாக ரிஸ் (Rizz) என்ற வார்த்தையை தேர்வு செய்துள்ளது.

ரிஸ் என்ற வார்த்தைக்கு ஆக்ஸ்போர்டு அகராதி விளக்கம்: ஸ்டைல், வசீகரம் அல்லது கவர்ச்சி; காதல் அல்லது பாலியல் துணையை ஈர்க்கும் திறன். சுருக்கமாக, இது 'கரிஸ்மா' (charisma) என்ற வார்த்தையின் மையப்பகுதி. ரிஸ் என்பதை ஒரு வினைச்சொல்லாகவும் (Verb) பயன்படுத்தலாம். அதாவது யாரையாவது கவர்ந்திழுப்பது, மயக்குவது அல்லது ஜாலியாக அரட்டையடிப்பதற்கான வாக்கியத்தில் "to rizz up" போன்ற சொற்களை பயன்படுத்தலாம்.

ஐஎன்எஸ் சந்தயாக் என்ற ஆய்வுக் கப்பல் இந்திய கடற்படைக்கு வழங்கப்பட்டது:

கொல்கத்தாவை தளமாகக் கொண்ட கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் & இன்ஜினியர்ஸ் (GRSE) இல் கட்டப்பட்ட நான்கு பெரிய ஆய்வுக் கப்பல்களில் முதலாவது, சந்தயாக், திங்களன்று இந்திய கடற்படைக்கு வழங்கப்பட்டது , இது பாதுகாப்பு மற்றும் சிவில் பயன்பாடுகளுக்கான கடல்சார் மற்றும் புவி இயற்பியல் தரவுகளை சேகரிக்கும் திறனைச் சேர்த்தது

“கிராம் மஞ்சித்ரா”/Gram Manchitra:

கிராம பஞ்சாயத்து மூலம் இடஞ்சார்ந்த திட்டமிடலை ஊக்குவிப்பதற்காக, பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் புவியியல் தகவல் அமைப்பு (ஜிஐஎஸ்) பயன்பாட்டை “கிராம் மஞ்சித்ரா” (https://grammanchitra.gov.in) அறிமுகப்படுத்தியது. புவி-இடஞ்சார்ந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கிராம பஞ்சாயத்து மட்டத்தில் திட்டமிடலைச் செய்ய இந்த பயன்பாடு கிராம பஞ்சாயத்துகளை எளிதாக்குகிறது மற்றும் ஆதரிக்கிறது. பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை சிறப்பாகக் காட்சிப்படுத்தவும், கிராம பஞ்சாயத்து மேம்பாட்டுத் திட்டத்திற்கான (GPDP) முடிவு ஆதரவு அமைப்பை வழங்கவும் இது ஒரு ஒற்றை/ஒருங்கிணைந்த ஜியோ ஸ்பேஷியல் தளத்தை வழங்குகிறது.

மேலும், அமைச்சு mActionSoft என்ற மொபைல் அடிப்படையிலான தீர்வை அறிமுகப்படுத்தியுள்ளது, இது புவி-குறிச்சொற்கள் (அதாவது GPS ஒருங்கிணைப்புகள்) மூலம் சொத்துக்களை வெளியீடாகக் கொண்டுள்ள பணிகளுக்குப் படமெடுக்க உதவுகிறது.

இந்தியாவின் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக கொல்கத்தா முதலிடம்:

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வெளியிட்ட அறிக்கையின்படி, 3 ஆவது ஆண்டாக இந்தியாவின் பாதுகாப்பான நகரமாக கொல்கத்தா அறிவிக்கப்பட்டுள்ளது.பெருநகரங்களில் தலா 1 லட்சம் மக்கள் தொகைக்கு பதிவு செய்யப்படும் குற்றங்களில் கொல்கத்தாவில் தான் குறைந்த எண்ணிக்கையிலான குற்றங்கள் பதிவாகியுள்ளன.

கொல்கத்தாவில் 2022-ஆம் ஆண்டில் ஒரு லட்சம் பேருக்கு 86.5 புலனாய்வு குற்றங்கள் அதாவது பிடியாணையின்றி கைது செய்யக்கூடிய குற்றங்கள் பதிவாகியுள்ளன.அதேசமயம் இந்த எண்ணிக்கை புனேவில் 280.7 ஆகவும், ஹைதராபாத்தில் 299.2 ஆகவும் உள்ளது.20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்ட 19 நகரங்களை ஒப்பிட்டுப் பார்த்து இந்த தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.

ஜெய்ப்பூர் இந்தியாவில் மிகவும் பாதுகாப்பற்ற நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 239.3. ராஜஸ்தான் தலைநகரில் பெண்களுக்கு எதிரான 3,479 குற்றங்கள் பதிவாகியுள்ளன.

கூகுள் அதிகாரப்பூர்வமாக அதன் சமீபத்திய AI அமைப்பை ஜெமினி என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது:

செய்யறிவு தொழில்நுட்பங்கள் கடந்த ஆண்டில் மட்டும் அதிக வளர்ச்சியைக் கண்டுள்ளது. பல வகையான செய்யறிவு தொழில்நுட்பங்கள் இப்போது இணையத்தில் பயன்பாட்டில் உள்ளன. அந்த வரிசையில் தனது 'ஜெமினி' (Gemini) எனும் புதிய செய்யறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம். சாட் ஜிபிடி-க்கு(ChatGPT) போட்டியாக தனது 'பார்ட்' (Bard) செய்யறிவு தொழில்நுட்பத்தை கூகுள் அறிமுகம் செய்திருந்தது. பல போட்டிகளுக்கு நடுவில் 'பார்ட்' தொழில்நுட்பம் பெரிய வரவேற்பினைப் பெறவில்லை. ஆனால் கூகுள் தற்போது வெளியிட்டுள்ள 'ஜெமினி' அனைத்து செய்யறிவு தொழில்நுட்பங்களையும் விஞ்சும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது. ஜெமினி நானோ (Gemini Nano), ஜெமினி ப்ரோ (Gemini Pro), ஜெமினி அல்ட்ரா (Gemini Ultra) என மூன்று வடிவங்களில் இந்த செய்யறிவு தொழில்நுட்பம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனர் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

போர்ப்ஸ் இதழ் – பட்டியில் வெளியீடு World's Most Powerful Women :

போர்ப்ஸ் இதழானது வெளியிட்டுள்ள 2023-ஆம் ஆண்டுக்கான உலகின் சக்திமிக்க பெண்கள் பட்டியிலினை வெளியிட்டுள்ளது.

1வது இடம் – உசுலா வாண்டர் லியன் (ஜெர்மெனி)

2வது இடம் – கிறிஸ்டின் லிகார்டியன் (பிரான்ஸ்)

3வது இடம் – கமலா ஹாரிஸ் (அமெரிக்கா)

இந்திய பெண்கள்:

32வது இடம் – நிர்மலா சீதாராமன் (நிதியமைச்சர்)

60வது இடம் – ரோஷினி நாடார் (ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவன தலைவர்)

70வது இடம் – சோமமண்டல் (ஸ்டீல் அதாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத் தலைவர்)

76வது இடம் – கிரண் மஜும்தார் ஷா (பயோகான் நிறுவனத் தலைவர்)

உலகின் மிகப்பெரிய சோலார் தாயரிப்பு நிறுவனங்களின் பட்டியல்:

மெர்கம் கேபிடல் நிறுவனம் வெளியிட்டுள்ள உலகின் மிகப்பெரிய சோலார் தாயரிப்பு நிறுவனங்களின் பட்டியலில் அதானி கீரின் எனர்ஜி நிறுவனம் (18 ஜிகாவாட்ஸ்) இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த போட்டல் எனர்ஜிஸ் நிறுவனம் (41.3 ஜிகாவாட்ஸ்) முதலிடம் பிடித்துள்ளது.

முதல் மருந்துப் பூங்கா

உத்தரபிரதேசத்தில் உள்ள யோகி அரசு, லலித்பூரில் உள்ள உத்தேச மொத்த மருந்து பூங்காவை தொழில்நுட்பத்துடன் இணைப்பதில் கவனம் செலுத்தி, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுடன் உயர்தர மற்றும் மலிவு விலையில் மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களை வழங்குகிறது. உத்தரப்பிரதேச அரசு மாநிலத்தின் முதல் மருந்துப் பூங்காவை லலித்பூர் மாவட்டத்தில் நிறுவுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது , இது பந்தல்கண்டில் அமைந்துள்ளது . லலித்பூர் பார்மா பூங்காவில் முதலீட்டாளர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்தவும் மற்றும் வழங்கவும் ரூ.1560 கோடியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது .

செவ்வாய் கிரகத்தில் ரோவரை இயக்கிய முதல் பெண்:

இந்தியாவை சேர்ந்த அக்சத்தா கிருஷ்ணமூர்த்தி நாசாவுடன் இணைந்து செவ்வாய் கிரகத்தில் ரோவரை இயக்கியுள்ளார்

இதனால் செவ்வாய் கிரகத்தில் ரோவரை இயக்கிய முதல் பெண் என்ற பெருமையை அடைந்துள்ளார்

JT60SA அணுக்கரு இணைவு உலை

ஜப்பானில் தொடங்கப்பட்ட உலகின் மிகப்பெரிய சோதனை அணுக்கரு இணைவு உலைக்கு JT60SA எனப் பெயரிட்டப்பட்டுள்ளது.

பந்தை தடுத்தற்காக ஆட்டமிழந்த முதல் வங்கதேச கிரிக்கெட் வீரர்:

நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் முஷ்ஃபிகுர் ரஹிம் பந்தை தடுத்தற்காக ஆட்டமிழந்த முதல் வங்கதேச கிரிக்கெட் வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.

எத்தனால் தயாரிப்பு தடை

மத்திய அரசானது இந்தியாவில் சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் எத்தனால் தயாரிப்புக்கு கரும்புச் சாற்றையோ, கூழையோ பயன்டுத்த தடை விதித்துள்ளது.

Build for Bharat

டிஜிட்டல் வர்த்தகத்தில் உள்ள சவால்களை எதிர்கொள்ளும் வகையில் ஓபன் நெட்வொர்க் (ONDC), Google Cloud India, Antler in India. Paytm, Protean, Startup India ஆகியவற்றுடன் இணைந்து  Build for Bharat என்ற முயற்சியை தொடங்கப்பட்டுள்ளது.

ஐ.நாவின் சட்டப் பிரிவு-99:

ஐ.நாவின் சட்டப் பிரிவு-99 என்பது ஐக்கிய நாடுகள் சாசனத்தின் அடிப்படையில் பொது செயலருக்கு அளிக்கப்பட்டுள்ள விசேஷ உரிமைகளில் ஒன்றாகும். உலகின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் எதுவொன்றைக் குறித்தும் அவர், ஐ.நா உறுப்பினர்களின் கவனத்துக்குக் கொண்டுவர இதனைப் பயன்படுத்தலாம். ஐ.நாவின் உண்மையான அதிகாரம் 193 உறுப்பு நாடுகளிடம் குறிப்பாகச் சொல்லப் போனால் பாதுகாப்பு அவையில் உள்ள 15 நாடுகளிடம்தான் உள்ளது என்றபோதும் கூடுதலான அதிகாரத்தை இந்தப் பிரிவு பொதுச் செயலருக்கு அளிக்கிறது

1971-ல் அப்போதைய பொதுச் செயலர் யு தான்ட், இந்தச் சட்டப் பிரிவைப் பயன்படுத்தினார். இந்தியா பாகிஸ்தான் போர் விவகாரத்தை உறுப்பு நாடுகளின் கவனத்துக்குக் கொண்டுவர இந்தப் பிரிவு பயன்படுத்தப்பட்டது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு இஸ்ரேல்-ஹமாஸ் விவகாரத்தில்தான் இந்தப் பிரிவு பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

BBC -முன்னணி 100 பெண்கள் பட்டியல் – 2023

BBC நிறுவனமானது 2023-ஆம் ஆண்டுக்கான முன்னணி 100 பெண்கள் பட்டியலினை வெளியிட்டள்ளது

இதில் இந்தியாவின் நடிகை தியா மிர்சா (ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு நல்லெண்ண தூதர்), கிரிக்கெட் வீராங்கனையான ஹர்மன்ப்ரீத் கெளர் (விஸ்டன் சிறந்த 5 வீரர் பட்டியல்) புகைப்பட கலைஞர் ஆரத்தி குமார் ராவ் (தெற்காசிய பருவ நிலை மாற்றம்) ஆகியோர் இடம் பெற்றுள்ளன.

‘கா்பா’ நடனம் யுனெஸ்கோவின் மனிதாபிமான கலாசார பாரம்பரிய பட்டியலில் சோ்க்கப்பட்டது:

குஜராத் மாநிலத்தின் பாரம்பரிய நடனமான கா்பா நடனம் நவராத்திரி பண்டிகையின்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்படுகிறது. இதையடுத்து யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரிய பட்டியலில் கா்பா நடனத்தை சோ்க்க இந்தியா சாா்பில் பரிந்துரைக்கப்பட்டது. இந்தப் பரிந்துரை ஏற்கப்பட்டு, ‘கா்பா’ நடனம் யுனெஸ்கோவின் மனிதாபிமான கலாசார பாரம்பரிய பட்டியலில் சோ்க்கப்பட்டதாக அந்த அமைப்பு அறிவித்தது.

5வது நாகாலாந்து தேனீ தினம்:

5வது நாகாலாந்து தேனீ தினம் கிசாமாவில் உள்ள நாகா பாரம்பரிய கிராமத்தில் 'தேனீ மற்றும் தேன் சோதனைகள்' என்ற கருப்பொருளின் கீழ் (டிசம்பர் 05, 2023 )கொண்டாடப்பட்டது.

நாகாலாந்து தேனீ வளர்ப்பு மற்றும் தேன் இயக்கத்தின் (NBHM) வழிகாட்டுதலின் கீழ், பாரம்பரிய தேனீ வளர்ப்பு மாநிலத்தில் பலருக்கு நிலையான வருமான ஆதாரமாக மாறி, பொருளாதார நிலைத்தன்மைக்கு பங்களிக்கிறது.

நாகாலாந்தில் தற்போது ஒரு லட்சம் தேனீ வளர்ப்பவர்கள் உள்ளனர். NBHM ஆனது சுமார் 500 கிராமங்களை உள்ளடக்கிய தேனீ வளர்ப்பிற்கான சரியான வழிகாட்டுதலுடன் மேலும் 25,000 பேரை சேர்த்துள்ளது. மாநிலத்தில் மொத்த தேன் உற்பத்தி ஆண்டுக்கு 440 மெட்ரிக் டன்களாக உள்ளது.

புவிசார் குறியீடு :

மேகாலயாவின் லடாங் மஞ்சள், பாரம்பரிய உடையான கடரோடக்மண்டா, மதுபானமான கரே சுபிட்சி, லர்னாய் மண்பாண்டங்கள் ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடானது வழங்கப்பட்டுள்ளது.

சம்மக்கா சரக்கா :

தெலுங்கானா மாநிலத்தில் சம்மக்கா சரக்கா மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகமானது நிறுவப்பட உள்ளது.

வெங்காய ஏற்றுமதி – தடை

இந்தியாவில் மத்திய அரசானது வரும் 2024 மார்ச் வரை வெங்காய ஏற்றுமதிக்கு தடையை வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தம் விதமாக தடையை விதித்துள்ளது

கரியமில வாயு இலக்கை

குஜராத் மாநிலம் காந்தி நகரின் கிஃப்ட் சிட்டியில் 2வது சர்வதேச நிதிச் சேவை மையங்களின் ஆணைய அமைப்பு மாநாட்டில் (இன்ஃபினிட்டி ஃபோரம்) 2070க்கு பூஜ்ஜிய கரியமில வாயு எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

செல்வாக்குமிக்க பிரபலமான உலகத் தலைவர்களின் பட்டியல் 2023

செல்வாக்குமிக்க பிரபலமான உலகத் தலைவர்களின் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து முதலிடத்தில் பிடித்து சாதனை படைத்துள்ளார். மார்னிங் கன்சல்ட் நடத்திய ஆய்வில் பங்கேற்றவர்களில் 76 சதவிதம் பேர் பிரதமர் நரேந்திர மோடி தலைமைப் பண்பு சிறப்பாக இருப்பதாக கருத்துத் தெரிவித்துள்ளனர். 

சட்டப்பிரிவு 370 நீக்கம் செல்லும்: உச்சநீதிமன்றம்:

ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், சட்டப்பிரிவு 370 நீக்கியது செல்லும் என்று தலைமை நீதிபதி உள்பட 3 நீதிபதிகள் கூறியுள்ளனர்.

அதிசய கிரகணம் 

2௦23, இன்று (டிசம்பர் 11) ஓர் அதிசய, அற்புதமான ஒரு கிரகணம் உருவாக இருக்கிறது. இது ஒரு வானவியல் அற்புதமாகும். சூரியக் குடும்பத்தில் உள்ள அஸ்டிராய்டு வளையத்தின் சிறு கோள் ஒன்று, இரவு வானில் வலம் வரும் விண்மீன் தொகுதியில் அதன் தோளில் உள்ள, இப்போது வெடித்துக்கொண்டிருக்கும் விண்மீனான திருவாதிரை(Betelgeuse) விண்மீனை 15 நொடிகள் மறைத்து ஒரு கிரகண நிகழ்வை ஏற்படுத்தப்போகிறது என்பதுதான் அது. ஒரு சிறுகோள்- 319 லியோனா, டிசம்பர் 11 அன்று சிவப்பு விண்மீனான திருவாதிரையை கிரகணம் செய்யும் நிகழ்வு.

ஓரியன் விண்மீன் படலத்தில், அதன் தோள்பட்டை பகுதியில் உள்ள சிவப்பு ராட்சத விண்மீன் திருவாதிரைக்கு (Betelgeuse) எதிரில், அஸ்டிராய்டு வளையத்தின் சிறு கோள் வந்து முன்னால் கடந்து செல்லும். இது பூமியில் உள்ள நமது பார்வையில் இருந்து பார்ப்பதால் கிரகணம் மற்றும் மறைவு எனப்படும். இந்த நிகழ்வில் சுமார் 15 வினாடிகள் வரை, திருவாதிரை விண்மீனை நமது பார்வையில் இருந்து தடுக்கும். இந்த சிறுகோளின் பெயர் "319 லியோனா"(319 leona) என்று அழைக்கப்படுகிறது. சிறுகோள், 319 லியோனா, செவ்வாய் மற்றும் வியாழன் இடையே உள்ள முக்கிய சிறுகோள் பெல்ட்டில் மெதுவாக சுழலும் விண்வெளி பாறை ஆகும். தோராயமாக முட்டை வடிவில், 319 லியோனா, 80 x 55 கிலோமீட்டர் அளவைக் கொண்டுள்ளது.

பிரான்சில் திருவள்ளுவர் சிலை :

ஜூலை மாதம் பிரான்ஸ் பயணம் மேற்கொணடிருந்த பிரதமர் நரேந்திர மோடி, பாரீஸ் நகரில் இந்திய வம்சாவளியினரிடையே பேசுகையில், பிரான்சில் இந்தியா சார்பில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும் என தெரிவித்தார். இந்த நிலையில், பிரான்சின் செர்ஜி நகரில், பார்க் பிரான்ஸ்வா மித்தேரான் என்ற இடத்தில் திருவள்ளுவரின் முழுதிருவுருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை புதுச்சேரி பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் திறந்து வைத்தார். திறப்பு விழாவில் பிரான்ஸ் நாட்டுக்கான இந்திய தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பாரத் - ஜிபிடி (Bharath - GPT) :

கோரோவர்.ஏஐ (CoRover) நிறுவனம் கூகுள் கிளவுடுடன் (Google cloud) இணைந்து பாரத் - ஜிபிடி (Bharath - GPT) எனும் செய்யறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவுள்ளனர். உள்நாட்டிலேயே உருவாக்கப்படும் இந்த தொழில்நுட்பம் இந்தியர்களுக்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 14 இந்திய மொழிகளில் உரையாடல்களை மேற்கொள்ளக்கூடிய இந்த செய்யறிவு தொழில்நுட்பத்தில் கூகுள் கிளவுட் மிக முக்கிய பங்காற்றுகிறது. இதில் எழுத்து (text), ஒலி (voice) மற்றும் காணொளி (Video) மூலம் உரையாடல்களை மேற்கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

9 ஆண்டுகளில் 82% மருத்துவக் கல்லூரிகள் அதிகரிப்பு:

இந்தியாவில் கடந்த 9 ஆண்டுகளில் 82 சதவிகித மருத்துவக் கல்லூரிகள் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார்.

நாட்டில் 2014ஆம் ஆண்டுக்கு முன்பாக 387 மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. தற்போது 82% அதிகரித்து 706 கல்லூரிகள் உள்ளன. 51,348-ஆக இருந்த எம்பிபிஎஸ் சீட்டுகள் தற்போது 1,08,940-ஆக அதிகரித்துள்ளன.அதேபோல், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சீட்டுகள் 127% அதிகரித்து 70,674-ஆக உள்ளன.”

விரைவு நீதி மன்றம்

2023 ஜனவரி 31-வரை 2.43 லட்சம் போக்ஸோ வழக்குகள் விரைவு நீதி மன்றங்களில் நிலுவையில் இருக்கிறதென அறிக்கை வெளியாகியுள்ளது.கடந்த 2022ஆம் ஆண்டில் போக்ஸோ வழக்குகளில் 3% மட்டுமே தண்டனை  பெற்றுள்ளனர்

போக்ஸோ வழக்குகள் நிலுவையில் முதலிடத்தை அருணாச்சல பிரதேசமும், இரண்டாவது இடத்தை தில்லியும், மூன்றாவது இடத்தை பீகாரும் பிடித்துள்ளன.

4-வது லோக் அதாலத்

டிசம்பர் 9-ல் 34 மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்களில் நடைபெற்ற 4-வது லோக் அதாலத்தில் 1.17 கோடி வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தேசிய சட்ட பணிகள் ஆணையம் அறிவித்துள்ளது.

லோக் அதாலத் என்து ஒரு மக்கள் நீதி மன்றம் ஆகும்.இதில் லோக் என்பது மக்களையும், அதாலத் என்பது நீநிதிமன்றத்தையும் குறிக்கிறது.1987ஆம் ஆண்டு லோக் அதாலத் உருவாக்கப்பட்டது.

காலநிலை மாற்ற செயல்திறன் குறியீடு (CCPI):

காலநிலை மாற்ற செயல்திறன் குறியீட்டில் (CCPI) இந்தியா 7 வது இடத்தில் உள்ளது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் குறைந்த பசுமை வாயு குடில் உமிழ்வுகளில் அதன் சிறந்த செயல்திறன் காரணமாகும். கடந்த ஆண்டு இந்தியா 8-வது இடத்தில் இருந்தது. காலநிலை மாற்ற செயல்திறன் குறியீடு 63 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் காலநிலை தணிப்பு முன்னேற்றத்தை கண்காணிக்கிறது. இந்த நாடுகள் உலகளாவிய உமிழ்வுகளில் 90% க்கும் அதிகமானவற்றிற்கு பொறுப்பாகும்.இந்த குறியீட்டில் டென்மார்க் முதலிடத்தில் உள்ளது.

ஒடிசா – கலிங்கா மைதானம்

ஒடிசாவிலுள்ள கலிங்கா மைதானத்தில் இந்தியாவின் மிகப்பெரிய அதி நவீன விளையாட்டு அறிவியல் மையத்தினை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் திறந்து வைத்துள்ளார்.

யுனிவர்சல் டைனமிக் கிராஸ்லிங்கர் (Universal Dynamic Crosslinker (UDC)):

ஐஐடி மெட்ராஸ், கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் கொலராடோ ஸ்டேட் யுனிவர்சிட்டி ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் பலதரப்பட்ட பிளாஸ்டிக்குகளை வலிமையான மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களாக இணைக்கும் யுனிவர்சல் டைனமிக் கிராஸ்லிங்கர் நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.

'அம்ரிட்' (இந்திய தொழில்நுட்பத்தால் ஆர்சனிக் மற்றும் உலோக நீக்கம்)

இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) - மெட்ராஸ், நீரிலிருந்து ஆர்சனிக் மற்றும் உலோக அயனிகளை அகற்றுவதற்காக 'AMRIT' (Arsenic and Metal Removal by Indian Technology) என்ற தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.

தொழில்நுட்பம் நானோ அளவிலான இரும்பு ஆக்சி-ஹைட்ராக்சைடைப் பயன்படுத்துகிறது, இது நீர் வழியாக செல்லும் போது ஆர்சனிக்கைத் தேர்ந்தெடுத்து நீக்குகிறது.

மாங்கனீசு, யுரேனியம், குரோமியம், பாதரசம், புளோரைடு போன்ற நிலத்தடி நீரில் உள்ள மற்ற அசுத்தங்களையும் இந்த தொழில்நுட்பம் அகற்றும்.

தேசிய மருத்துவ ஆணையம்:

புதிய தேசிய மருத்துவ ஆணைய லோகோவில் தன்வந்திரி கடவுளின் உருவம் உள்ளது, மேலும் சமீபத்தில் 'இந்தியா' என்ற வார்த்தைக்கு பதிலாக 'பாரத்' என்று மாற்றப்பட்டது.

தேசிய மருத்துவ ஆணையம் (NMC) என்பது மருத்துவக் கல்வி மற்றும் பயிற்சிக்கான இந்தியாவின் உயர்மட்ட ஒழுங்குமுறை அமைப்பாகும்.

இது 2020 ஆம் ஆண்டில் தேசிய மருத்துவ ஆணையச் சட்டம், 2019 மூலம் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு (எம்சிஐ) பதிலாக நிறுவப்பட்டது.

NMC 33 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது .

முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் ஒட்டுமொத்த உற்பத்தி 12.1 சதவீத வளா்ச்சியைப் பதிவு:

நிலக்கரி, உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகிய துறைகளின் சிறப்பான செயல்பாடு காரணமாக கடந்த அக்டோபரில் முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் ஒட்டுமொத்த உற்பத்தி 12.1 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 

இது குறித்து அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: தொழிலக உற்பத்தி குறியீட்டு எண்ணான ஐஐபி-யில் 40.27 சதவீதம் பங்கு வகிக்கும் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருள்கள், உரம், உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகிய எட்டு முக்கிய உள்கட்டமைப்பு துறைகளின் உற்பத்தி கடந்த அக்டோபரில் 12.1 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்தது.

  • மதிப்பீட்டு மாதத்தில் நிலக்கரி உற்பத்தி 18.4 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.
  • எஃகு உற்பத்தி வளா்ச்சி இந்த அக்டோபரில் 11 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.
  • கடந்த அக்டோபரில் சிமென்ட் உற்பத்தி 17.1 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.
  • கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் 1.2 சதவீதம் வளா்ச்சி கண்ட மின்சார உற்பத்தி இந்த அக்டோபரில் 20.3 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி கடந்த அக்டோபரில் முறையே 1.3 சதவீதம் மற்றும் 9.9 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.
  • சுத்திகரிப்பு பொருள்கள் உற்பத்தி இந்த அக்டோபரில் 4.2 சதவீத நோ்மறை வளா்ச்சியாக மாறியுள்ளது.
  • மதிப்பீட்டு மாதத்தில் உர உற்பத்தி வளா்ச்சி 5.4 சதவீதத்திலிருந்து 5.3 சதவீதமாகக் குறைந்தது என்று அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

நடப்பு நிதியாண்டில் ரூ.58,378 கோடி கூடுதல் செலவினத்துக்கு மக்களவை  ஒப்புதல் :

நடப்பு நிதியாண்டில் ரூ.58,378 கோடி கூடுதல் செலவினத்துக்கு மக்களவை  ஒப்புதல் அளித்தது. இதில் பெரும் தொகை தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் மற்றும் உர மானியத்துக்கு செலவிடப்படவுள்ளது. நடப்பு நிதியாண்டில் மொத்த கூடுதல் செலவினம் ரூ.1.29 லட்சம் கோடி என்று மத்திய அரசால் கணக்கிடப்பட்ட நிலையில், மீதமுள்ள ரூ.70,968 கோடி சேமிப்பு மற்றும் இதர வருவாய்கள் மூலம் ஈடுசெய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் நிகர கூடுதல் செலவினம் ரூ.58,378 கோடியாகும். இதில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்காக மத்திய ஊரக மேம்பாட்டுத் துறைக்கு ரூ.14,524 கோடி, உர மானியத்துக்கான ரூ.13,351 கோடி, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்துக்கான ரூ.9,200 கோடி, உணவு மற்றும் பொது விநியோகத் துறைக்கான ரூ.7,000 கோடி,அடங்கும்’ .

2023-24 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டில், அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.17.86 லட்சம் கோடி, அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 5.9 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது

புதுச்சேரி, ஜம்மு-காஷ்மீரிலும் 33% மகளிா் இடஒதுக்கீடு:

கடந்த செப்டம்பரில் நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில், மக்களவை மற்றும் மாநிலப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிப்பதற்கான அரசமைப்புச் சட்டத்தின் 106-ஆவது திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலைத் தொடா்ந்து, இந்த மசோதா சட்டமானது. 

இந்நிலையில், புதுச்சேரி மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசங்களுக்கும் மகளிா் இடஒதுக்கீடு சட்டத்தை நீட்டிக்கும் மசோதாக்கள் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அரசமைப்புச் சட்டத்தின் 106-ஆவது திருத்தத்தின்படி, நாட்டில் அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு நடைபெறும் மக்களவை மற்றும் பேரவைத் தொகுதி மறுவரையறைக்குப் பிறகே மகளிா் இடஒதுக்கீடு அமலாகும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் 834 பேருக்கு ஒரு மருத்துவா்: நாடாளுமன்றத்தில் அரசு தகவல்:

இந்தியாவில் 834 பேருக்கு ஒரு மருத்துவா் என்ற அளவில் மக்கள்தொகை - மருத்துவா்கள் விகிதம் உள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் நாடாளுமன்றத்தில் தெரிவித்தாா். மாநிலங்களவையில் இது தொடா்பான கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் அவா் மேலும் கூறியுள்ளதாவது: செவிலியா்-மக்கள்தொகை விகிதம் 1:476 ஆக உள்ளது.தேசிய மருத்துவ ஆணையத்தின் தகவல்படி 2022 ஜூன் மாத நிலவரப்படி 13,08,009 ஆங்கில முறை மருத்துவா்கள் மாநில மருத்துவ கவுன்சில் மற்றும் தேசிய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்துள்ளனா். 5.65 லட்சம் ஆயுஷ் மருத்துவா்கள் உள்ளனா். அந்த வகையில், நாட்டில் மருத்துவா்கள்-மக்கள்தொகை விகிதம் 1: 834 ஆக உள்ளது.

இந்தியா அளவிலான மருத்துவம் தொடர்பாக சில தகவல்:

  • மக்கள்தொகை – மருத்துவர் விகிதம் = 834:1
  • மக்கள்தொகை – செவிலியர்  விகிதம் = 476:1
  • செவிலியர்கள் எண்ணக்கை – 36.14 லட்சம்
  • மருத்துவக்கல்லூரிகள் எண்ணிக்கை – 706
  • மருத்துவ மேற்படிப்புக்கான இடங்களின் எண்ணிக்கை  – 51,348

அபின் உற்பத்தியில் உலகில் மிகப்பெரிய நாடு:

மியான்மர் நாடானது அபின் உற்பத்தியில் உலகில் மிகப்பெரிய நாடாக மாறியுள்ளது.

இந்தியாவில் மத்தியபிரதேசம், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது.

திரிபுரா மாநில சுற்றுலாத்துறை விளம்பர தூதராக:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி திரிபுரா மாநில சுற்றுலாத்துறை விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

21-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா:

21-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா 14.12.2023 தொடங்குகிறது. இம்முறை இந்தத் திரைப்பட விழாவில் 57 நாடுகளை சேர்ந்த 126 படங்கள் திரையிடப்பட உள்ளன. டிசம்பர் 21-ஆம் தேதி வரை இவ்விழா நடைபெறவுள்ளது.இந்த விழாவில் அநீதி, அயோத்தி, கருமேகங்கள் கலைகின்றன, மாமன்னன், போர் தொழில், இராவண கோட்டம், சாயாவனம், செம்பி, ஸ்டார்ட் கேமரா ஆக்சன், உடன்பால், விடுதலை - 1, விந்தியா விக்டிம் வெர்டிக்ட் வி3 ஆகிய தமிழ்ப் படங்கள் திரையிடப்பட உள்ளன.

சென்னை ஐஐடி :

சென்னை ஐஐடி மற்றும் தேஜஸ் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று ரூ.12 கோடி அளவில் கையெழுத்தானது.

தேஜஸ் நிறுவனமானது சென்னை ஐஐடி கண்டுபிடித்த 5ஜி தொழில் நுட்பத்தை பயன்படுத்த மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தமாகும்

தெரு நாய்க்கடி :

தெருநாய்கடியால் இந்தியாவில்  நிகழாண்டில் 27.59 லட்சம் நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தமிழகத்தில் 4.04 லட்சம் பேர் தெருநாய்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகல்கள் தெரிவிக்கின்றன.

தெரு நாய்க்கடி பாதிப்பில் மகாராஷ்டிரா முதலிடமும், தமிழ்நாடு இரண்டாமிடமும் பிடித்துள்ளன.

டெஸ்லா நிறுவனம் தனது புதிய மனித ரோபோவை (Humanoid robot) அறிமுகம்:

டெஸ்லா நிறுவனம் தனது புதிய மனித ரோபோவை (Humanoid robot) அறிமுகம் செய்யும் காணொளி ஒன்றினைப் பகிர்ந்துள்ளது. ஆப்டிமஸ் ஜென் 2 (Optimus Gen 2) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ இதற்கு முன் டெஸ்லா அறிமுகம் செய்த ரோபோக்களை விட அதிக திறன்களைக் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாதுகாப்பு மீறல் விசாரணைக்குழு :

CRPF தலைவரான அனிஷ் தயாள் சிங் தலைமையில் லோக்சபாவில் நடந்த பாதுகாப்பு மீறல் குறித்து விசாரிக்க குழுவானது அமைக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் தரக் குறியீடு 2023

மெர்சர் நிறுவனமானது வாழ்க்கைத் தரக் குறியீடு 2023-ஐ வெளியிட்டுள்ளது

இந்தியாவில் வாழ சிறந்த நகரங்கள் பட்டியல்

  1. ஹைதராபாத் - இந்திய அளவில் 1வது இடம்- உலக அளவில் 153வது இடம்
  2. புனே -இந்திய அளவில் 2வது இடம்- உலக அளவில் 154வது இடம்
  3. பெங்களூரு -இந்திய அளவில் 3வது இடம் -உலக அளவில் 156வது இடம்
  4. சென்னை -இந்திய அளவில் 4வது இடம்- உலக அளவில் 161வது இடம்

உலக அளவில் ஆஸ்திரியா வியன்னா முதலிடமும், சுவிட்சர்லாந்தின் சுரிஷ் இரண்டாம் இடமும் பிடித்துள்ளன.

அந்நிய நேரடி முதலீட்டு:

மத்திய அரசால் வெளியிடப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டு தரவுகளின்படி. மகாராஷ்டிர மாநிலம் அதிக முதலீட்டைப் பெற்று மீண்டும் முதலிடத்தைப் பெற்றுள்ளது. சட்ட பேரவைக் கூட்டத்தில் இதனைத் தெரிவித்த மகாராஷ்டிர தொழில் துறை அமைச்சர் உதய் சமந்த், கடந்த மூன்று மாதங்களில் ரூ.28,868 கோடி அந்நிய முதலீடு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் தரவுகளில், மகாராஷ்டிர மாநிலம் அதிக அந்நிய முதலீட்டைப் பெற்ற மாநிலமாக இடம்பெற்றிருப்பதையும் அவர் பகிர்ந்துள்ளார்.

புற்றுநோய் மாத்திரை

இந்தியாவில் புற்றுநோய்க்காக ஆக்டோசைட் என்ற மாத்திரை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியா – ஆரோக்கிய உணவு

கடந்த 2021-ல் இந்தியாவில் வாழும் மக்களில் 74.1% ஆரோக்கிய உணவைப் பெற முடியவில்லையென்று FAO அறிக்கையானது தெரிவித்துள்ளது.

சீனா :

சீனா திரவ ஆக்சிஜன் மீத்தேன் மூலம் இயங்கும் ஏவுகணை வாகனம் மூலமாக செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளது.

அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீராங்கனை

நிகழாண்டில் அமெரிக்காவின் 19 வயது டென்னிஸ் வீராங்கனையான கோகோ காஃப் (ரூ.189 கோடி) அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீராங்கனையாக  திகழ்கிறார்.

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வளா்ச்சி 6.7%: ஆசிய வளா்ச்சி வங்கி கணிப்பு:

ஆசிய வளா்ச்சி வங்கி வெளியிட்ட அறிக்கையில், ‘நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் ஜிடிபி வளா்ச்சி எதிா்பாா்த்ததைவிட அதிகமாக 7.6 சதவீதமாக இருந்தது. இதனால், நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான முதல் பாதியில் வளா்ச்சி 7.7 சதவீதமாக உள்ளது. உற்பத்தித் துறை, சுரங்கம், கட்டுமானம் உள்ளிட்ட தொழில்துறைகள் இரட்டை இலக்க வளா்ச்சியைக் கண்டுள்ளன. நடப்பாண்டில், வேளாண் துறையின் வளா்ச்சியானது எதிா்பாா்த்ததைவிட குறைவாக இருக்கும். ஆனால், தொழில்துறையில் ஏற்படும் வளா்ச்சி, வேளாண் துறையின் சரிவை சரிகட்டும். அடுத்த 2024-2025 நிதியாண்டுக்கான ஜிடிபி வளா்ச்சி எவ்வித மாற்றமும் இல்லாமல் 6.7 சதவீதமாக இருக்கும். பணவீக்கத்தைப் பொருத்த வரையில் 5.5 சதவீதமாக இருக்கும்’ எனத் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் - நவம்பா் காலகட்டத்தில் இந்தியாவின் மின் நுகா்வு 9 சதவீதம் அதிகரித்துள்ளது:

கடந்த ஏப்ரல் முதல் நவம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் 8 மாதங்களில் நாட்டின் மின் நுகா்வு 1,09,990 கோடி யூனிட்டுகளாக உள்ளது. முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இது 1,01,020 கோடி யூனிட்டுகளாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நாட்டின் மின் நுகா்வு சுமாா் 9 சதவீதம் அதிகரித்துள்ளது. மதிப்பீட்டு காலகட்டத்தில் மின் நுகா்வு, கடந்த 2021-22-ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 91,652 கோடி யூனிட்டுகளை விட அதிகமாகும். 2022-23-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் நாட்டின் மின் நுகா்வு 1,50,426 கோடி யூனிட்டுகளாக இருந்தது. இது, முந்தைய 2021-22-ஆம் நிதியாண்டின் மின் நுகா்வான 1,37,402 கோடி யூனிட்டுகளை விட அதிகமாகும்.

சர்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில்-முதல் இந்திய வீரர்கள்

சர்வதேச டென்னிஸ் அரங்கில் சாதனை படைத்த வீரர் மற்றும் வீராங்கனைகளை கெளரவப்படுத்துகின்ற சர்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் லியாண்டர் பயஸ், விஜய் அமிர்தராஜ் ஆகியோர் இடம் பிடித்துள்ளன.

இப்பட்டியலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் இந்திய வீரர்கள் என்ற பெருமையை பெற்றுள்ளனர்.

மிகவும் பாதுகாப்பான மாநகரம்:

நாட்டில் உள்ள ஆறு மெட்ரோ நகரங்களில், சென்னைதான் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநகரமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசிய குற்றப் பதிவு அமைப்பானது வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 2022ஆம் ஆண்டு சென்னை மாநகரில் பெண்களுக்கு எதிராக 736 வழக்குகள் மட்டுமே காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு 874 வழக்குகளைக் காட்டிலும் குறைவு. இதில் தாக்குதல், பாலியல் தொல்லை, கடத்தல், வரதட்சிணை, பலாத்காரம், அடித்தல் உள்ளிட்ட புகார்களும் உள்ளடக்கம்.

பறக்குடா (Barracuda):

கேரளா, ஆலப்புழாவில் இந்தியாவின் அதிவேக சோலார் மின்சாரப்படகு சேவையானது பறக்குடா (Barracuda) என்னும் பெயரில் துவங்கப்பட்டுள்ளது.

இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி சபையின் முதல் பெண் தலைமை இயக்குநர்:

இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி சபையின் முதல் பெண் தலைமை இயக்குநராக காஞ்சன் தேவி நியமிக்கப்பட்டுள்ளார்.

குழந்தைகள் வளர்ப்பு பட்டியல் 2023:

குழந்தைகள் வளர்ப்பு பட்டியலில் இந்தியா 79வது இடத்தினை பிடித்துள்ளது

  1. முதலிடம் – ஸ்வீடன்
  2. இரண்டாவது இடம் – நார்வே
  3. மூன்றாவது இடம் – பின்லாந்து

உலகளவில் அதிகம் தேடப்பட்ட செய்திகளின் பட்டியல் 2023:

இஸ்ரேல் – காசா போர் (War in Israel and Gaza) 2023ஆம் ஆண்டில் கூகுளில் உலகளவில் அதிகம் தேடப்பட்ட செய்திகள் பட்டியலில் முதலிடத்தினை பிடித்துள்ளது.

Titanic Submarine, Turkey Earthquake, Hurricane Hilary ஆகியன அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய நிலத்தடி இயற்பியல் ஆய்வகம்:

உலகின் மிகப்பெரிய நிலத்தடி இயற்பியல் ஆய்வகமானது தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் ஜின்பிங் மலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிக ஆழத்தில் (2400மீ) அமைந்த மிகப்பெரிய நிலத்தடி இயற்பியல் ஆய்வகமாகும்

கண்ணுக்குத் தெரியாத கரும்பொருள் ஆய்வு செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்திய மகளிரணி வரலாற்று வெற்றி

நவி மும்பையில் தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா, முதல் இன்னிங்ஸ் 428 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

2வது இன்னிங்ஸில் இந்தியா 186/6க்கு டிக்ளேர் செய்ய இங்கிலாந்து 131 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தீப்தி சர்மா 4, பூஜா வஸ்த்ரகா் 3, ராஜேஷ்வரி கெய்க்வாட் 2 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தினார்கள். இதன் மூலம் 347 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிரணி வரலாற்று வெற்றியினை பதிவு செய்துள்ளார்கள்.

ஜெர்சி எண்-7ஐ ரிட்டையர்டு செய்வதாக பிசிசிஐ (BCCI) அறிவித்துள்ளது:

இந்திய முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி பயன்டுத்திய ஜெர்சி எண்-7ஐ ரிட்டையர்டு செய்வதாக பிசிசிஐ (BCCI) அறிவித்துள்ளது.

எம்.எஸ்.தோனியை கெளரவிக்க அவர் பயன்டுத்திய ஜெர்சியானது ரிட்டையர்டு செய்யப்பட்டுள்ளது.

வரும்காலத்தில் தோனியின் ஜெர்சி எண் யாருக்கும் வழங்கப்படாது.

சச்சின் டெண்டுல்கருக்கு (ஜெர்சி எண் 10) பிறகு இந்த கெளரவம் அளிக்கப்படும் நபராக தோனி திகழ்கிறார்

இந்திய அணியானது தோனி தலைமையில் டி20 உலகக்கோப்பை (2007), ஒருநாள் உலகக்கோப்பை (2011), சாம்பியன்ஸ் கோப்பை (2013) ஆகியவற்றை வென்றது குறிப்பிடத்தக்கது.

2004-ல் அறிமுகமான தோனி 2019-ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

உற்பத்தி துறை முதலீட்டிற்ககான சாதகமான இந்திய மாநிலங்களின் தரவரிசை பட்டியல் 2023:

தமிழகமானது உற்பத்தி துறை முதலீட்டிற்ககான சாதகமான இந்திய மாநிலங்களின் தரவரிசை பட்டியலில் மூன்றாம் இடத்தினை பிடித்துள்ளது.

இப்பட்டியலில் முதல் இடத்தினை குஜாரத்தும்இரண்டாம் இடத்தினை மகாராஷ்டிராவும் பிடித்துள்ளன

    கேரிங்க்ஸ் (CARINGS) :

    குழந்தைகளை தத்தெடுக்கும் நடைமுறைகளை எளிதாக்க கேரிங்க்ஸ் (CARINGS) என்ற இணையதத்தினை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

    உலகின் மிகப்பெரிய வைர வர்த்தக மையம் (Surat Diamond Bourse) :

    குஜராத்தின் சூரத்தில் பென்டகன் கட்டத்தை விட பெரிய அளவில் ரூ.3,200 கோடி மதிப்பில் உலகின் மிகப்பெரிய வைர வர்த்தக மையம் (Surat Diamond Bourse) தொடங்கப்பட்டுள்ளது.

    32 ஏக்கர் பரப்பளவில் 15 மாடிகளுடன் 9 செவ்வக வடிக கட்டங்களாக கட்டப்பட்டுள்ளது.

    LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :

    SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL:

    1. SUMMITS AND CONFERENCES JUNE 2023 IN TAMIL
    2. SUMMITS AND CONFERENCES JULY 2023 IN TAMIL
    3. SUMMITSAND CONFERENCES AUGUST 2023 IN TAMIL
    4. SUMMITSAND CONFERENCES SEPTEMBER 2023 IN TAMIL
    5. SUMMITS AND CONFERENCES - OCTOBER 2023 IN TAMIL
    6. SUMMITS AND CONFERENCES - NOVEMBER 2023 IN TAMIL

    Tags:

    Post a Comment

    0Comments

    Post a Comment (0)