TODAY CURRENT AFFAIRS IN TAMIL 09.11.2023:
நகர்ப்புற உள்ளாட்சியில் பெண்களுக்கு மூன்றில் ஒருபங்கு இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா:
நகர்ப்புற உள்ளாட்சியில் பெண்களுக்கு மூன்றில் ஒருபங்கு இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நாகாலாந்து சட்டப்பேரவையில் இன்று (நவம்.9) ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
நாகாலாந்தில் கடந்த இரு தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைத் தொடர்ந்து தற்போதைய நாகாலாந்து நகர்ப்புற உள்ளாட்சி மசோதா - 2023 உருவாக்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் டி.ஆர்.செலியாங் தலைமையிலான ஏழு உறுப்பினர்களைக் கொண்ட தேர்வுக் குழு இந்த மசோதாவினை ஆய்வு செய்து, மேலும் சில ஷரத்துகளை இணைக்கப் பரிந்துரை செய்தது
நற்றமிழ் பாவலர் விருது 2022
தமிழக வளர்ச்சி துறையால் வழங்கப்படும் நற்றமிழ் பாவலர் விருதானது (Natramil Pavalar Award) எழில்வாணன், சுடர்த்தமிழ்ச்சோழன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் வெளியீடு:பிரபல கியூ.எஸ். உலக பல்கலைக்கழக தரவிரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. அதிகமான உயா்கல்வி நிறுவனங்களுடன் இந்தியா முதன்முறையாக சீனாவை பின்னக்குத் தள்ளி முன்னிலை பெற்றுள்ளது. உலக பல்கலைக்கழக தரவரிசையில் முதல் 100 தரவரிசையில் மொத்தம் ஏழு இந்திய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
KEY POINTS : உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியல்
பிகாரில் இட ஒதுக்கீட்டு வரம்பை 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக உயர்த்தும் மசோதா:
பிகார் சட்டப்பேரவையில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. பிகாரில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளை வெளியிட்டுப் பேசிய முதல்வர் நிதீஷ்குமார், மாநிலத்தில் இட ஒதுக்கீட்டு வரம்பை 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார். உயர்சாதி வகுப்புகளுக்கு வழங்கப்படும் 10 சதவீத இட ஒதுக்கீடு சேர்த்து 75% ஆக உயர்த்தும் முடிவை முன்வைத்தார்.
பிகாரில் இட ஒதுக்கீட்டு வரம்பை 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக உயர்த்தும் மசோதா சட்டப்பேரவையில் 09.11.2023 தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து பிகார் மாநிலத்தில் உயர்சாதியினருக்கான இட ஒதுக்கீடு 10% சேர்த்து தற்போது இட ஒதுக்கீடு 75% ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்ப்பேசி
தமிழக அரசானது தமிழ் மொழியை மேம்படுத்தும் வகையில் தமிழ்ப்பேசி (Tamilpesi) செயலியை தொடங்கியுள்ளது.
2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான பானை ஓடுகள் கண்டறியப்பட்டன:
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே எனதிரிமங்கலம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் குறியீடுகளுடன் கூடிய சுமாா் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான பானை ஓடுகள் கண்டறியப்பட்டன.
விழுப்புரம் அறிஞா் அண்ணா கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியா் ரமேஷ், முனைவா் பட்ட ஆய்வாளா் இம்மானுவேல், உளுந்தாம்பட்டு பள்ளி மாணவா்கள் பிரதாப், வெற்றி, கோபி ஆகியோா் கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் மேற்புற களஆய்வு மேற்கொண்டனா். இதில் கீறல் குறியீடுகளுடன் கூடிய கருப்பு-சிவப்பு பானை ஓடுகள், வட்ட சில்லுகள் கிடைத்தன. இதுகுறித்து ரமேஷ், இம்மானுவேல் ஆகியோா் கூறியதாவது: தமிழ்நாட்டில் குறியீடுகளுக்கு அடுத்து காணக் கிடைக்கும் வரிவடிவம் தமிழ்-பிராமி எழுத்து வடிவமாகும். இதை பண்டைத் தமிழ் எழுத்துகள் என்றும், ‘தமிழி’ என்றும் ஆய்வாளா்கள் குறிப்பிடுகின்றனா். இந்தியாவில் கிடைக்கப்பெற்ற வரி வடிவங்களில் காலத்தால் தொன்மையானது சுமாா் 4,500 ஆண்டுகள் பழமையான சிந்துவெளி நாகரீக வரி வடிவங்களாகும். சிந்துவெளி பண்பாடு மறைந்த காலத்துக்கும் ‘தமிழி’ எழுத்துகள் தோன்றியதற்கும் இடைப்பட்ட காலத்தில் இருந்த வரி வடிவத்தை குறியீடுகள், கீறல்கள் என்று ஆய்வாளா்கள் அழைக்கின்றனா்
உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதலிடம்
உலகளவில் தமிழ்நாடானது உடல் உறுப்பு தானத்தில் முதலிடம் பிடித்துள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உயிரிழப்பு ஏற்படும்போது உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களின் இறுதிச் சடங்கின்போது அரசு மரியாதை அளிக்கப்படும் என்று அறிவிப்பிற்கு பிறகு உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை 2,700-ன உயர்ந்துள்ளது.
உடல் உறுப்புதான திட்டமானது 2007-2008-ல் தொடங்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்க கிடங்குகள் (Cooperative Warehouse)
இந்தியாவில் அதிக கூட்டுறவு சங்க கிடங்குகள் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு செயல்படுகிறது.
தமிழக அரசு சார்பில் தூத்துக்குடியில் மீனவர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் வகையில் மீனவ கூட்டுறவு கடன் வங்கி (Fishermen’s Cooperative Credit Bank) துவங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீனவர்களுக்காக தொடங்கப்பட்ட முதல் கூட்டுறவு கடன் வங்கி ஆகும்
2023-ம் ஆண்டுக்கான ஆப்பிள் மியூசிக் விருது :
2023-ம் ஆண்டுக்கான ஆப்பிள் மியூசிக் விருது அமெரிக்காவைச் சேர்ந்த இசை கலைஞர் டெய்லர் ஸ்விஃப்ட்டுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் ஆப்பிள் மியூசிக்கில் நாள்தோறும் அதிகமாக கேட்கப்பட்ட 100 பாடல்கள் பட்டியலில் டெய்லர் ஸ்விஃப்ட்டின் 65 பாடல்கள் இடம்பெற்றிருந்தன.
சமீபத்தில் டெய்லர் ஸ்விஃப்டின் ‘தி எராஸ் டூர்’ என்கிற கான்செர்ட் படம் வெளியாகி உலகளவில் வசூலில் சாதனை புரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பாரத் ஆர்கானிக்ஸ்
பாரத் ஆர்கானிக்ஸ் (Bharat Organics’ brand) என்ற பெயரில் இயற்கை வேளாண்மை விளைபொருட்களின் விற்பனையை மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித்ஷா துவங்கி துவங்கி வைத்தார்.
மூன்று பேர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம்:
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான கொலீஜியத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மூன்று பேர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
- தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சந்திர ஷர்மா,
- ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ்
- குவாஹாட்டி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சந்தீப் மேத்தா
ஆகிய முவரும் தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிரளய் ஏவுகணை
350 கி.மீ முதல் 500 கிமீ தொலைவில் தரையில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் பிரளய் ஏவுகணையை (Pralay Missile) வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
இந்த ஏவுகணையானது 500 கிலோ முதல் 1000 கிலோ எடை வரை எடையுள்ள குண்டுகளை சுமந்து செல்லும் தன்மை உடையது.
பி.பாலசுப்பிரமணியன் மேனன்-கின்னஸ் சாதனை
கேரளா, பாலக்கோட்டிலுள்ள பி.பாலசுப்பிரமணியன் மேனன் 73 ஆண்டுகள், 60 நாட்களாக வழக்கறிராக பணியாற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
1950-முதல் தன் பணியை தொடங்கியுள்ளார்
பெயர் மாற்றம்
உத்திர பிரதேசத்திலுள்ள அலிகர் மாவட்டத்தின் பெயரை ஹரிகர் என மாற்ற செய்ய நகரசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறியுள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் சிறை என்ற வார்த்தையானது சீர்த்திருத்த இல்லங்கள் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயரை பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என மத்திய அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது.
மங்களுர் விமான நிலையமானது மங்களூரு சர்வதேச விமான நிலையமாகவும், சண்டிகர் விமான நிலையமானது சாகித் பகத்சிங் சர்வதேச விமான நிலையமாகவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அகமது நகர் பெயரானது அகில்யா பாய் நகராகவும், ஒளரங்கபாத் நகரின் பெயரானது சத்திரபதி சாம்பாஜி நகர் எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சர்ச் கேட் இரயில் நிலையத்தின் பெயரானது சி.டி. தேஷ்முக் ரயில் நிலையமென மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வானவில் வாக்குச் சாவடி மையம்
சத்திஸ்கர், கங்கர் மாவட்டம், பங்கஞ்சூரில் மாற்றுப்பாலினத்தவரின் சமூக அங்கீகாரம், தேர்தல் பங்களிப்பு ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் வானவில் வாக்குச் சாவடி மையம் ((Rainbow Polling Centre) உருவாக்கப்பட்டுள்ளது.
கலாகர் புரஸ்கர் விருது:
மங்களூருவில் நடைபெற்ற 19வது கலாகர் புரஸ்கார் விழாவில் கொங்கணி பாடகரும், பாடலாசரியரும், இசையமைப்பாளரான அபோலினரிஸ் டிசோவிற்கு கலாகர் புரஸ்கர் விருது (Kalakar Puraskar Award) வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச சோலார் கூட்டணி (International Solar Alliance)
06.12.2017-ல் உருவாக்கப்பட்ட சர்வதேச சோலார் கூட்டணியில் 95வது உறுப்பினராக (ISA) சிலி நாடானது இணைந்துள்ளது.
LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :
- LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL
- இந்திய தேசிய தினங்கள் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
- யுனெஸ்கோவில் அனுசரிக்கப்படும் சர்வதேச தினங்கள்
- 2023 ஆம் ஆண்டின் தமிழ் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
- SUMMITS AND CONFERENCES JUNE 2023 IN TAMIL
- SUMMITS AND CONFERENCES JULY 2023 IN TAMIL
- SUMMITSAND CONFERENCES AUGUST 2023 IN TAMIL
- SUMMITSAND CONFERENCES SEPTEMBER 2023 IN TAMIL
- SUMMITS AND CONFERENCES - OCTOBER 2023 IN TAMIL