TODAY CURRENT AFFAIRS IN TAMIL 10.11.2023

TNPSC PAYILAGAM
By -
0

  


TODAY CURRENT AFFAIRS IN TAMIL 10.11.2023 

தமிழ்நாடு அரசு பேருந்து – புகார் எண்

தமிழ்நாடு அரசு பேருந்துகளில் உள்ள குறைகளை தெரிவிக்க 149 என்ற இலவச எண்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அரசு போக்குவரத்துக்கழக பேருந்து இயக்கம் தொடா்பாக பொதுமக்கள் தங்களின் குறைகள், புகாா்களை தெரிவிக்க, கட்டணமில்லாத 1800 599 1500 எனும் 11 இலக்க தொலைபேசி எண் நடைமுறையில் இருந்து வந்தது. இந்த எண்ணை நினைவில் வைத்துக்கொள்ள இயலவில்லை என பொதுமக்கள், பயணிகள் தரப்பினா் கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து புதிதாக மூன்று இலக்கத்தில் 149 எனும் கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆதித்யா எல்-1

இஸ்ரோவால் அனுப்பப்பட்டய ஆதித்யா எல்-1 விண்கலமானது ஹெல்1 ஓஎஸ் எனும் எக்ஸ்ரேஸ்பெக்ட்ராே மீட்டர் கருவி மூலம் சூரிய கதிர்வீச்சின் அலையை பதிவு செய்து தரவுகள் அனுப்பியுள்ளது.

இக்கருவி பதிவு செய்த சூரிய கதிர்வீச்சின் ஒளி அலை அமெரிக்காவின் ஜிஓஇஎஸ் விண்கலம் வழங்கிய தரவுகளுடன் ஒத்து போகிறது.

பெங்களூர் யூ.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையம் இந்த கருவியை தயாரித்துள்ளது.

யுபிஐ பரிவர்த்தனை

இந்திய அரசு செயல்படுத்திவரும் யுபிஜ பரிவர்த்தனையை மலேசிய அரசு ஏற்றுள்ளது

நெல் ரகம் அறிமுகம்

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனமானது (IARI) அதிக மகசூல் தரும் குறுகிய கால நெல் ரகமான பூசா-2090 (PUSA-2090)-வை அறிமுகம் செய்துள்ளது.

01 ஏப்ரல் 1905-ல் IARI (Indian Agricultural Research Institute) உருவாக்கப்பட்டது.

உலகளாவிய காசநோய் பாதிப்பு அறிக்கை 2022:

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுளள உலகளாவிய காசநோய் பாதிப்பு அறிக்கையில் 2022-ல் உலக அளவில் 75லட்சம் பேர் காசநோயால் பாதிப்பு அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

காசநோய் பாதிப்பு குறைப்பு விகிதிதத்தில் முதல் மூன்று இடங்கள் முறையே இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் வகிக்கின்றன.

பிரிட்டனின் முதல் இந்திய வம்சாவளி பிரிட்டன் கட்டடப் பொறியாளளர் :

பிரிட்டனின் முதல் இந்திய வம்சாவளி பிரிட்டன் கட்டடப் பொறியாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனுஷா ஷா (Anusha Shah) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தேசிய விளையாட்டு போட்டி 2023 – கோவா

கோவிவாவில் நடைபெற்ற 37வது தேசிய விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு 77 பதக்கங்களுடன் 10வது இடத்தை பிடித்துள்ளது.

மகாராஷ்டிரா அணி 228 பதக்கங்கள் ஒட்டு மொத்த சாம்பியன் ஷிப்பையும், முதலிடத்தையும் பிடித்துள்ளது.

KEY POINTS : தேசிய விளையாட்டு போட்டி 2023 - கோவா -மாநில வாரியாக பதக்க எண்ணிக்கை:


LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :

SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL:

  1. SUMMITS AND CONFERENCES JUNE 2023 IN TAMIL
  2. SUMMITS AND CONFERENCES JULY 2023 IN TAMIL
  3. SUMMITSAND CONFERENCES AUGUST 2023 IN TAMIL
  4. SUMMITSAND CONFERENCES SEPTEMBER 2023 IN TAMIL
  5. SUMMITS AND CONFERENCES - OCTOBER 2023 IN TAMIL

Post a Comment

0Comments

Post a Comment (0)