டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வுக்கான காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

TNPSC PAYILAGAM
By -
0



குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் ஜனவரி 12, 2024 அன்று வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.பி. கட்டுப்பாட்டு அலுவலர் சார்பில் அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வுக்கான காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

அதாவது ஏற்கனவே இருந்த காலிப்பணியிடங்களுடன் புதிதாக 620 காலி பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் குரூப்-2 தேர்வுக்கான காலி பணியிடங்கள் 5,240 லிருந்து 5,860 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Post a Comment

0Comments

Post a Comment (0)