சாளுக்கியர்கள் -TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL

TNPSC PAYILAGAM
By -
0

சாளுக்கியர்கள் TNPSC NOTES



TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL

தென்னிந்திய அரசுகள்:


சாளுக்கியர்கள் (கி.பி. 543 -755)

  • இரண்டு சாளுக்கிய அரச குடும்பங்கள் உள்ளன. ஒன்று வாதாபி சாளுக்கியர்; மற்றொன்று கல்யாணி சாளுக்கியர்
  • வாதாபி சாளுக்கிய அரசவம்சம் அதனை உருவாக்கிய முதலாம் புலிகேசி (சுமார் கி.பி. (பொ.ஆ) 543-566) வாதாபிக்கு அருகேயுள்ள ஒரு குன்றினைச் சுற்றி கோட்டையைக் கட்டியதோடு வலுவான சக்தியாக உதயமானது. 
  • கடம்பரின் மேலாதிக்கத்தின் கீழிருந்த அவர், தன்னை சுதந்திர அரசராக பிரகடனப்படுத்திக்கொண்டார். அவர் யக்ஞங்களை நடத்தியதாகவும் அஸ்வமேத யாகம் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. 
  • தலைநகர் வாதாபி கீர்த்திவர்மனால் (566-597) நிறுவப்பட்டது. 
  • முதலாம் புலிகேசியின் பேரன் இரண்டாம் புலிகேசி (609-642) அரசர் மங்களேசனைத் தோற்கடித்த பின்னர் தன்னை அரசராகப் பிரகடனப்படுத்திக் கொண்டார். இந்நிகழ்வு ஐஹோல் கல்வெட்டில் விவரிக்கப்பட்டுள்ளது. 
  • இரண்டாம் புலிகேசியின் போர் வெற்றிகளில் குறிப்பிடத்தக்கது நர்மதை நதிக்கரையில் ஹர்ஷரை வென்றதாகும். மாளவம், கலிங்கம் மற்றும் தக்காணத்தின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த அரசர்கள் இவரின் அரசியல் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டனர். பனவாசியின் கடம்பர்களையும் தலக்காடு (மைசூர்) கங்கர்களையும் இவர் வெற்றி கொண்டார். இவர் காஞ்சிபுரத்தின் மீது மேற்கொண்ட தாக்குதலைப் பல்லவ அரசன் முதலாம் மகேந்திரவர்மன் முறியடித்தார். இது சாளுக்கியருக்கும் பல்லவருக்கும் இடையே ஒரு நீண்ட காலப் போருக்கு இட்டுச்சென்றது. பல்லவ அரசன் முதலாம் நரசிம்மவர்மன் (630-668) வாதாபியைத் தாக்கிக் கைப்பற்றினார். இப்போரில் இரண்டாம் புலிகேசி உயிர் துறந்தார். 
  • இதனைத் தொடர்ந்து வாதாபி சாளுக்கியப் பேரரசின் கிழக்குப் பகுதிகளின் மீதான பல்லவர்களின் கட்டுப்பாடு பல ஆண்டுகள் நீடித்தது. எட்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் வாதாபி சாளுக்கியர்கள் ராஷ்டிரகூடர்களால் வெற்றிகொள்ளப்பட்டனர்.

சான்றுகள்:

  • கல்வெட்டுகள் - மங்களேசனின் வாதாபி குகைக் கல்வெட்டு, காஞ்சி கைலாசநாதர் கோவில் கல்வெட்டு, பட்டடக்கல் விருப்பாக்ஷா கோவில் கல்வெட்டு, இரண்டாம் புலிகேசியின் அய்கோல் கல்வெட்டு.
  • அயலவர் குறிப்புகள் -  யுவான் சுவாங்கின்  குறிப்புகள்
  • வடக்கே ஹர்ஷரின் பேரரசும், தெற்கே பல்லவ நாடும், கிழக்கே கலிங்கமும் (ஒடிசா) சாளுக்கியர்களின் எல்லைகளாக இருந்தன.

வாதாபிச் சாளுக்கியர்:

  • முதலாம் புலிகேசி, பீஜப்பூர் மாவட்டம் பட்டடக்கல்லில் ஒரு குறுநில மன்னராக இருந்தார். கி.பி. (பொ.ஆ) 543இல் வாதாபி மலைக்கோட்டையைக் கைப்பற்றி அதனைச் சுற்றி மதில் சுவர் எழுப்பினார். 
  • அய்கோல் கல்வெட்டு: இக்கல்வெட்டு அய்கோலிலுள்ள (பாகல்கோட் மாவட்டம், கர்நாடகா) மேகுதி கோவிலில் உள்ளது. இது சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசியின் அவைக்களப் புலவரான ரவிகீர்த்தி என்பவரால் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டது.  இக்கல்வெட்டு ஹர்ஷவர்த்தனர் இரண்டாம் புலிகேசியால் தோற்கடிக்கப்பட்டதைக் குறிப்பிடுகின்றது.
  • துங்கபத்ரா ஆகிய நதிகளுக்கு இடைப்பட்ட பகுதியையையும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளையும் கைப்பற்றினார். இவருடைய மகன் முதலாம் கீர்த்திவர்மன் (ஆட்சிக்காலம் கி.பி. (பொ.ஆ) 566-597) கொங்கணக் கடற்கரைப் பகுதியைச் சாளுக்கியரின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். 
  • இரண்டாம் புலிகேசி (ஆட்சிக்காலம் கி.பி. 610 - 642) இவ்வம்சத்தின் மிகவும் வலிமை பெற்ற அரசராவார். பாரசீக (ஈரான்) அரசர் இரண்டாம் குஸ்ரூ இரண்டாம் புலிகேசியின் அவைக்குத் தூதுக்குழு ஒன்றை அனுப்பிவைத்தார். குஜராத், மாளவம் ஆகியவற்றின் சில பகுதிகளைக் கைப்பற்றுவதிலும் புலிகேசி வெற்றி பெற்றார். இவர் வட இந்திய அரசர் ஹர்ஷருக்கு அடிபணிய மறுத்தார். இருவரும் ஒப்புக் கொண்டபுரிதலின்படி இருவருக்கும் இடையிலான எல்லையாக நர்மதை நதி வரையறை செய்யப்பட்டது. கி.பி. (பொ.ஆ) 624 காலப்பகுதியில் வெங்கி அரசைக் கைப்பற்றிய இரண்டாம் புலிகேசி அதைத் தன்னுடைய சகோதரர் விஷ்ணுவர்த்தனருக்கு வழங்கினார். விஷ்ணுவர்த்தனர் முதல் கீழைச் சாளுக்கிய அரசரானார்
  • கி.பி.(பொ.ஆ) 641 - 647 காலப்பகுதியில் பல்லவர்கள் தக்காணத்தைச் சூறையாடி வாதாபியைக் கைப்பற்றினர். ஆனால் கி.பி. 655 இல் சாளுக்கியர் அதனை மீட்டனர். 
  • முதலாம் விக்கிரமாதித்தனும் (ஆட்சிக்காலம் கி.பி. (பொ.ஆ) 655 -680) அவருக்குப் பின்வந்த இரண்டாம் விக்கிரமாதித்னும் காஞ்சிபுரத்தைக் கைப்பற்றினர். ஆனால் சேதப்படுத்தவில்லை. இவருக்குப் பின்னர் அரச பதவியேற்ற இரண்டாம் கீர்த்திவர்மனை ராஷ்டிரகூட வம்ச அரசை நிறுவிய தந்திதுர்க்கர் போரில் தோற்கடித்தார்.

பிற்கால மேலைச் சாளுக்கியர் (கி.பி.10-12 நூற்றாண்டுகள்)

  • கல்யாணியைத் தலைநகராக கொண்டு கி.பி. 10ஆம் நூற்றாண்டின் இறுதி பகுதியில் மேலை சாளுக்கியர்கள் ஆட்சியை அமைத்தனர். இவர்களது ஆட்சி கி.பி. 12ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது.
  • பிற்கால மேலைச் சாளுக்கிய மரபைத் தொடங்கி வைத்தவர் இரண்டாம் தைலப்பா. (கி.பி.973-997) ஆவார்.
  • பிற்கால மேலைச்சாளுக்கிய மரபின் சிறந்த மன்னர்களாக இரண்டாம் சோமமேஸ்வரன், இரண்டாம் ஜெயசிம்மன், ஆறாம் விக்கிரமாதித்யன், மூன்றாம் தைலப்பா.
  • கல்யாணியை ஆண்ட சாளுக்கியர்களில் இறுதி அரசர் மூன்றாம் தைலப்பா. (கி.பி. 1150-1163) ஆவார்.

கீழைச் சாளுக்கியர் (கி.பி.7-12 நூற்றாண்டுகள்)

  • இரண்டாம் புலிகேசியின் சகோதரான விஷ்ணுவர்த்தன், கீழைச்சாளுக்கிய மரபைத் தொடங்கி வைத்தவராவார்.
  • வெங்கி இவர்களின் தலைநகராமாகும்.
  • இவர்கள் ஆட்சியில் தெலுங்கு சமுதாயமும், தெலுங்கு இலக்கியமும் மற்ற கலைகளும் சிறப்பான வளர்ச்சியடைந்தன.
  • கீழைச்சாளுக்கியர்கள், சோழமரபுடன் திருமண உறவுகளைக் கொண்டிருந்தனர்.
  • திருமண உறவின் வழியாக தோன்றிய வாரிசே குலோத்துங்க சோழன் (கி.பி.1070-1122).கீழைச்சாளுக்கிய நாட்டினை சோழப்பேரரசுடன் இணைத்து சோழநாட்டு மன்னரானார். இவரே கீழைச்சாளுக்கிய மரபின் கடைசி மன்னரும் ஆவார்.

இரண்டாம் புலிகேசி (கி.பி. 608 - 642)

  • சாளுக்கிய மரபின் முக்கிய ஆட்சியாளர் இரண்டாம் புலிகேசி. 
  • ஜஹோலே கல்வெட்டு அவரது காலத்தைப் பற்றிய விவரங்களைக் கூறுகிறது.
  • பனவாசி கடம்பர்களையும் மைசூர் கங்கர்களையும் எதிர்த்துப் போரிட்டு தனது ஆதிக்கத்தை அவர் நிலைநிறுத்தினார். கங்க அரசர் துர்விநீதன் அவரது மேலாண்மையை ஏற்றுக்கொண்டு தனது மகளையும் இரண்டாம் புலிகேசிக்கு மணமுடித்துக் கொடுத்தார். 
  • நர்மதையாற்றங்கரையில் ஹர்ஷவர்த்தனரை முறியடித்தது இரண்டாம் புலிகேசியின் மற்றொரு மகத்தான சாதனையாகும். தென்னிந்தியாவைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஹர்ஷரின் எண்ணத்தை சிதைத்தவன் இரண்டாம் புலிகேசி. 
  • பல்லவர்களுக்கெதிரான தனது முதல் படையெடுப்பில் அவர் வெற்றிபெற்றார். ஆனால், காஞ்சிக்கருகில் முதலாம் நரசிம்மவர்மனிடம் படுதோல்வியைத் தழுவினார். பின்னர், சாளுக்கிய தலைநகரம் வாதாபி பல்லவர்களால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது
  • இரண்டாம் புலிகேசியின் ஆட்சிக் காலத்தில் சீனப்பயணி யுவான்சுவாங் அவனது நாட்டிற்கும் வருகை புரிந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • இரண்டாம் புலிகேசிக்குப்பின் ஆட்சிக்கு வந்தவர் விக்ரமாதித்தன். அவன் சாளுக்கிய நாட்டை மீண்டும் நிலைப்படுத்தி பல்லவர்களை முறியடித்ததோடு, காஞ்சியையும் கைப்பற்றினார். பல்வர்களிடம் தனது தந்தை அடைந்த தோல்விக்கு விக்ரமாதித்தன் பழிதீர்த்துக் கொண்டான். சாளுக்கிய மரபின் கடைசி அரசர் இரண்டாம் கீர்த்திவர்மன். அவனை முறியடித்து இராஷ்டிரகூட அரசை நிறுவியவன் தந்தி துர்க்கன்.


CHALUKYA DYNASTY KEY NOTES 


Post a Comment

0Comments

Post a Comment (0)