SITRU ILAKKIYAMGAL -TNPSC TAMIL ILLAKKIYAM NOTES:
பகுதி – (ஆ) – இலக்கியம்
சிற்றிலக்கியங்கள்:
காவடிச் சிந்து
தமிழ்நாட்டில் பண்டைக்காலம் முதல் நாட்டார் வழக்கிலுள்ள இசைமரபே காவடிச் சிந்து எனலாம். முருகப் பெருமாலின் வழிபாட்டிற்காகப் பால் முதலான வழிபாட்டுப் பொருட்களைக் கொண்டு செல்வோர், ஆடல் பாடல்களுடன் ஆலயங்களை நோக்கிச் செல்வர். அவர்களின் வழிநடைப்பாடல் வகைகளிலிருந்து காவடிச் சிந்து எனும் பாவடிவம் தோன்றியது.
காவடிச்சிந்து இசைப் பாவகைளில் ஒன்றாகிய சிந்துப் பாவகை வடிவங்களில் ஒன்று. கலம்பக உறுப்பாக வரும் சிந்து வேறு.
சிந்து என்பது இசைத்தமிழ் பாகுபாடுகளில் ஒன்றாகும். அஃது ஐந்து இசை உறுப்புகளால் ஆன யாப்பு.
எடுப்பு (பல்லவி) - 1
தொடுப்பு (அநுபல்லவி) - 1
உறுப்பு (சரணம்) - 3
என்று 5 உறுப்புகளைக் கொண்டது ‘சிந்து’ பாடல். (அது பல்லவி, அநுபல்லவி, மூன்று கண்ணிகள் அடங்கிய சரணம் ஆகும்.)
காவடிச் சிந்து பல்லவியும் அநுபல்லவியும் இன்றிச் சரணங்களுக்குரிய கண்ணிகளை மாத்திரம் பெற்று வரும். அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து என்னும் சிற்றிலக்கியத்தில் பலராலும் போற்றப்படும் நூலாகும்.
இது காவடி ஆட்டத்திற்குப் பாடப்படும் இசைப் பாவகையாகும். தமிழ் நாட்டிலே பண்டைக்காலம் தொடக்கம் பேணப்பட்டு வரும் ஒரு நாட்டார் வழக்கிலுள்ள இசை மரபே காவடிச் சிந்து எனலாம். முற்காலத்திலே முருகப் பெருமானின் வழிபாட்டிற்காகப் பால் எடுத்து வருபவர்கள் ஆடல் பாடல்களுடன் ஆலயங்களை நோக்கிச் செல்வது வழக்கம். அப்படிச் செல்லும் பொழுது அவர்களின் ஆட்டத்திற்குப் பாடப்படும் பாடல் வகைகளிலிருந்து இக்காவடிச் சிந்து என்ற பாவடிவம் தோன்றி உருவாகியது.
சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தினார்.
- பெயர் = அண்ணாமலையார்
- திருநெல்வேலி மாவட்டம் சென்னிகுளம்
- ஊர் = பெற்றோர் = சென்னவர் - ஓவுஅம்மாள்
- காலம் 1861 – 1890
- காவடிச் சிந்தின் தந்தை எனப்படுபவர் - அண்ணாமலையார் நினைத்த மாத்திரத்தில் எந்தப் பொருளைப்பற்றியும் சிறப்பாக உடனேயே பாடக்கூடிய வல்லமை பெற்றவர்.
- தமிழில் மிகச் சிக்கலான பாடல்களையும்கூட பாடி சாதனை புரிந்தவர்.
- தமிழில் முதன்முதலில் வண்ணச்சிந்து பாடியதால் காவடிச் சிந்தின் தந்தை அழைக்கப்படுகிறார்.
- நூல்கள் = காவடிச்சிந்து, வீரை அந்தாதி, கோமதி அந்தாதி, வீரைப்பிள்ளைத்தமிழ். வீரை தலபுராணம், சங்கரன்கோவில் திரிபந்தாதி, கருவை மும்மணிக்கோவை
நூற்குறிப்பு
- சிந்து என்பது பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற மூன்று உறுப்புகளைக் கொண்ட இசைப்பாடு
- சரணத்தில் பல கண்ணிகள் இடம் பெறும்
- கண்ணிகள் மட்டுமே “சிந்து” என்று கூறப்படும்
- காவடிச்சிந்து நூல் கண்ணிகளால் அமைந்த “சிந்து” என்ற சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது ஆகும்.
- பெரும்பாலும் காவடி எடுத்தக்கொண்டு போகும்போது பாடல் பாடுவதால் காவடிச்சிந்து எனப் பெயர் பெற்றது
- காவடிச்சிந்து என்ற இலக்கிய வகையை முதன் முதலில் பாடியவர் சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார்.
- தமிழில் முதன் முதலில் வண்ணச்சிந்து பாடியதால் “காவடிசிந்தின் தந்தை” எனப் போற்றப் பெற்றார்.
- திருநெல்வேலிக்கு அருகே உள்ள கழுகுமலையில் எழுந்தருளியிருக்கும் முருகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட நூல்.
- ஊற்றுமலைச் ஜமீன்தார் இருதாலய மருதப்பதேவர் கழுகுமலை முருகனுக்கு காவடியெடுத்த போது வழியில் பாடும் பொருட்டு இயற்றப்பட்ட நூல்
- இந்நூலில் 24 பாடல்கள் உள்ளன.
- பாரதி, பாரதியார், கண்ணதாசன் போன்றோர் காவடிச்சிந்து மெட்டில் பாடல்கள் புனைந்துள்ளனர்.
- இராமாயணத் திருப்புகழ்க் காவடிச்சிந்து, அரிசந்திரன் திருப்புகழ்க் காவடிச்சிந்து, தேவடிச்சிந்து, பூவடிச்சிந்து போன்ற பிற நூல்களும் உள்ளன.
- பூவடிச்சிந்து என்பது அசன்அலிப்புலவர் இயற்றிய இஸ்லாமிய நூல்
- அண்ணாமலை ரெட்டியார் வீரை அந்தாதி, கோமதி அந்தாதி, வீரைப் பிள்ளைத்தமிழ் ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.
மேற்கோள்:
புள்ளிக் கலாபமயிற் பாகன் – சக்தி
புதல்வனான கன யோகன் – மலை
போலத்தான் திரண்ட
கோலப் பன்னிரண்டு வாகன்
நல்விவேகன்
வள்ளிக்கிசைந்த முருகேசன் – அண்ணா
மலைக்கவிராசன் மகிழ் நேசன் – என்றும்
வாழும் கழுகுமலை
வாவி வளம் சொல்லுவேன் மாதே
கேள் இப்போதே