முக்கூடற்பள்ளு-TNPSC TAMIL ILLAKKIYAM NOTES:

TNPSC PAYILAGAM
By -
0



SITRU ILAKKIYAMGAL -TNPSC TAMIL ILLAKKIYAM NOTES:

பகுதி – (ஆ) – இலக்கியம்

சிற்றிலக்கியங்கள்:

முக்கூடற்பள்ளு

பள்ளு என்ற சிற்றிலக்கிய வகையில் சிறந்த நூல் முக்கூடற்பள்ளு.நெல்லை மாவட்டத்தில் உள்ள பொருநை ஆற்றங்கரையில் முக்கூடல் என்ற நகரம் உள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள அழகர் பெருமானை இந்த நூல் போற்றி எழுதப்பட்டுள்ளது. இந்த நூலின் காலம் கி.பி. 1680 ஆண்டு நாயக்க மன்னர்கள் ஆட்சி காலம் எனக் குறிப்பிடப்படுகின்றது.இதனை சொல் நயத்தோடும், ஓசை நயத்தோடும், சிலேடை நயத்தோடும் எழுதிய புலவன் யார் என்றே தெரியவில்லை.

திருநெல்வேலிக்குச் சிறிது வடகிழக்கில் தண்பொருநை, சிற்றாறு, கோதண்டராம ஆறு ஆகிய மூன்று ஆறுகளும் கலக்கும் இடத்திற்கு வடக்கே உள்ள சிற்றூர் முக்கூடல்.

அங்குள்ள இறைவனாகிய அழகர் மீது பாடப்பட்டது முக்கூடற்பள்ளு ஆகும்.

சைவ வைணவங்களை ஒருங்கிணைக்கும் இலட்சிய நூல்

சைவ வைணவங்களை ஒருங்கிணைக்கும் இலட்சியங் கொண்ட நூலாக முக்கூடற் பள்ளு தெரிகிறது.

பள்ளு இலக்கியம்

உழவர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைச் சுவை பெறச் சொல்லும் சிற்றிலக்கியம் பள்ளு.

மூத்தபள்ளி, இளையபள்ளி குடும்பன் வரவோடு அவன் பெருமை கூறல், நாட்டுவளன், குறிகேட்டல், மழை வேண்டி வழிபடல், மழைக்குறியோர்தல், ஆற்றில் நீர் வரவு முதலான பல உறுப்புகளைப் பெற்றது பள்ளு இலக்கியமாகும்.

சிந்தும் விருத்தமும் பரவிவர இது பாடப் பெறும்.

இந்நூலை இயற்றியவர் இன்னார் என அறியப்படவில்லை.

இந்நூல் தோன்றிய காலத்தைப் பதினேழாம் நூற்றாண்டு என்பர்.

நூற்குறிப்பு

  • பள்ளமான நிலத்தில் (மருதம்) உழவுத் தொழில் செய்து வரும் பள்ளர் பற்றிய நூல்
  • இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை
  • சிலர் என்னயினாப்புலவர் என்பர்
  • இந்நூலின் காலம் 17ஆம் நூற்றாண்டு என்பர்
  • பாத்திரங்கள் நாடகத் தன்மையுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
  • ஆசிரியர் கூற்றாகத் தரவு கொச்சகக் கலிப்பா நூலின் இடையிடையே அமைந்துள்ளன.
  • உழவர் வாழ்வைச் சித்தரிக்கும் இலக்கியம் பள்ள
  • சேரிமொழியும் – செந்தமிழ் வழக்கும் கலந்த நூல் (குறவஞ்சி போன்று)
  • ஏசல் இடம் பெறும் இலக்கியம்
  • சமயங்களைத் தாக்கவது போன்ற சமயக் கருத்துகளையும், கதைகளையும் சுவையாகக் கூறுவது.
  • உழத்திப்பட்ட என்றவேறு பெயரும் உண்டு
  • சந்த இசை மிகுந்த நூல் பள்ளு
  • கோலாட்டமாகப் பாடப்பட்டது பள்ளு என்பார் டி.கே.சி
  • முதற் பள்ளு நூல் முக்கூடற்பள்ளு, கமலை ஞான பிரகாசர் எழுதிய திருவாரூர் பள்ளு முதற்பள்ளு என்பார் ந.வீ.செயராமன்
  • தொல்காப்பியர் குறிப்பிடம் 8வகை பிரிவுகளில் ஒன்றான புலன் என்னும் இலக்கிய “வகை பள்ளு வகை” இலக்கியத்திற்கு பொருந்தும்.
  • முக்கூடற்பள்ளுவின் பள்ளன் பெயர் அழகர் குடும்பன்
  • மூத்தப்பள்ளி வைணவம், இவள்  முக்கூடற்பள்ளி
  • இளையபள்ளி சைவம், இவள் மருதூர்ப்பள்ளி
  • தாமிரபரணி, சிற்றாறு, கயத்தாறு மூன்றும் கூடும் இடம் முக்கூடல். இன்று சீவலபேரி என்ற பெயர் வழங்கிறது
  • பொருநை ஆற்றங்கரையில் அமைந்தது முக்கூடல் என்றும் சிலர் கூறுவர்.
  • நெடுமூக்கன் முத்துச்சம்பா, குதிரை வாலி போன்ற 150 வகையான நெல் வகைகளைப் பள்ளு நூல்கள் கூறுகின்றன.
  • முக்கூடற்பள்ளு என்ற நூலை “முக்கூடல் நாடகம்” என்ற பெயரில் நாடகமாக்கியவர் சின்னத்தம்பி வேளாளர்
  • பேதுருப் புலவர் இயற்றிய ஞானப்பள்ளு கிறித்துவச் சமயம் சார்ந்தது.
  • இஸ்லாமியர் பாடாத இலக்கியம் பள்ளு

மேற்கோள்:

காயக் கண்டது சூரய காந்தி;

கலங்கக் கண்டது வெண்தயிர்க் கண்டம்

மாயக் கண்டது நாழிகை வாரம்;

மறுகக் கண்டது வான்சுழி வெள்ளம்

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)