SITRU ILAKKIYAMGAL -TNPSC TAMIL ILLAKKIYAM NOTES:
பகுதி – (ஆ) – இலக்கியம்
சிற்றிலக்கியங்கள்:
முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்
முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் என்னும் நூல் பிள்ளைத்தமிழ் வகையைச் சேர்ந்த சிற்றிலக்கியம். அதன் ஆசிரியர் குமர குருபரர். நூலின் பாட்டுடைத்தலைவன் முருகன்; பாடப்பட்டுள்ள அவனது பருவங்கள் பத்து. 17 ஆம் நுற்றாண்டைச் சேர்ந்த இந்நூலில் உள்ள மொத்தப் பாடல்கள் 101. இந்த நூலைப் பாடுதற்கு முருகப் பெருமான் 'பொன்பூத்த குடுமி' என்று அடியெடுத்துக் கொடுத்ததாக இந்தப் பாடலில் சொல்லப்பட்டுள்ளது.
புள்ளிருக்கு வேளூர் வைத்தீசுவரன் கோயிலில் இருக்கும் முருகன் பெயர் முத்துக்குமாரசாமி.
குமரகுருபரர் இயற்றிய முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழில் செங்கீரைப் பருவத்தின் எட்டாம் பாடல் பாடப்பகுதியாக இடம்பெற் றுள்ளது.
ஆசிரியர் குறிப்பு:
இவர் தமிழ்நாட்டுத் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருவைகுண்டம் என்னும் ஊரில் சைவ வெள்ளாளர் குலத்திலே சண்முக சிகாமணிக் கவிராயருக்கும், சிவகாம சுந்தரிக்கும் மகனாகப் பிறந்தார். ஐந்து வயது வரை பேசும் திறன் அற்று இருந்தார் பின்பு இவரின் பெற்றோர் திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்று வழிபடப் பேசும் திறன் வாய்க்கப் பெற்றார். அந்த வயதிலேயே கந்தர் கலி வெண்பா என்னும் பாடலைத் திருச்செந்தூர் முருகக் கடவுளைப் போற்றிப் பாடியுள்ளார்.சில வருடங்களுக்குப் பிறகு . பின்னர்த் தருமபுரம் ஆதீனத்தில், மாசிலாமணி தேசிகர் என்பவரிடம் சீடராக இருந்தார். அங்குச் சைவ சித்தாந்தம் பயின்றார்.
குமரகுருபரர் தனது இளம் வயதிலேயே கடவுளை அறியும் பொருட்டு தன் குருவைத் தேடி வீட்டை விட்டு வெளியேறினார். திருச்செந்தூரில் அவர் இருந்தபோது, தன் குருவைக் காணும்போது தன்னால் சரியாகப் பேச இயலாத நிலை ஏற்படும் என்கிற அசரீரி ஒலியினைக் கேட்டார். அதனால் தன் குருவைக் காணும் நோக்கத்தில் மதுரை நகருக்கு வந்தார். அச்சமயத்தில் மதுரையைத் திருமலை நாயக்கர் ஆண்டு வந்தார். அவர் குமரகுருபரரை நன்கு கௌரவித்தார். அவரின் வேண்டுகோளுக்கிணங்க மதுரை மீனாட்சி அம்மனைப் போற்றி மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்னும் நூலை இயற்றினார்.
- பெயர் – குமரகுருபரர்
- பெற்றோர் – சண்முகசிகாமணிக் கவிராயர், சிவகாமி சுந்தரியம்மை
- ஊர் – திருவைகுண்டம்
- இயற்றிய நூல்கள் – கந்தர்கலிவெண்பா, மதுரை மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, நீதிநெறி விளக்கம் முதலியன.
- சிறப்பு – தமிழ், வடமொழி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர். திருப்பணந்தாளிலும், காசியிலும் தம்பெயரால் மேடம் நிறுவி உள்ளார்.
- இறப்பு – காசியில் இறைவனடி சேர்ந்தார்.
- காலம் – பதினேழாம் நூற்றாண்டு.
நூற்குறிப்பு
- சிற்றிலக்கிய வகையான பிள்ளைத்தமிழ் நூல்களுள் ஒன்று
- ஆசிரியர் குமரகுருபரர்
- 17-ம் நூற்றாண்டில் ஸ்ரீவைகுண்டத்தில் சண்முக சிகாமணி கவிராயருக்கும் சிவகாமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தவர்
- ஐந்து வயது வரை ஊமையாக இருந்து, திருச்செந்தூர் முருகன் அருளால் பேசுந்திறம் பெற்றவர்
- முருகன் அருள் பெற்றவுடன் பாடிய நூல் கந்தர் கலிவெண்பா.
- முருகப் பெருமானால் “குருபரன்” என்று அழைக்கப் பெற்றவர்
- தமிழ், வடமொழி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளை கற்றவர்.
- தமிழையும், தெய்வத்தையும் இரு கண்களாக கருதியவர் குமரகுருபரர்
- காசியில் இறைவனடி சேர்ந்தார்
- புள்ளிருக்கு வேளூரில் உள்ள முருகனின் பெயர் முத்துக்குமாரன். அவர் மீது பாடப்பட்டது. ஆதலால் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் எனப்பெயர் பெற்றது.
- மாசிலாமணி தேசிகரிம் மெய்ப்பொருள் பெறவந்த குமரகுருபரர் தில்லை செல்லும் வழியில் புள்ளிருக்கு வேளூரில் தங்கியபோது, முருகன் தன்னைப் பாடப்பணித்த போது பாடியது.
- இதற்கு முத்தையன் பிள்ளைத்தமிழ், புள்ளிருக்கு வேளூர் சேனாதிபதி பெருமான் பிள்ளைத்தமிழ், புள்ளிருக்கு வேளூர் குமாரதேவர் பிள்ளைத்தமிழ் என்ற பெயர்களும் வழங்கின
- பருவத்திற்குப் பத்துப் பாடல்களாக நூறு பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
- இருபாலருக்கும் பாெதுவான பருவங்கள் : காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி.
- ஆண்பாற் பிள்ளைத்தமிழ் (கடைசி மூன்று பருவம்) : சிற்றில், சிறுபறை, சிறுதேர்
- பெண்பாற் பிள்ளைத்தமிழ் (கடைசி மூன்று பருவம்) : கழங்கு, அம்மானை, ஊசல்
மேற்கோள்
செங்கீரைப் பருவம்
திருக்கோல முடன்ஒரு மணக்கோலம் ஆனவன் செங்கீரை ஆடி யருளே
செத்துப் பிறக்கின்ற தெய்வங்கள் மணவாள செங்கீரை ஆடி யருளே.
குறப்பெண் ...
தேனூறு கிளவிக்கு வாயூறி நின்றவன் செங்கீரை ஆடி யருளே
ஆதி வைத்திய நாத புரிக் குகன் ஆடுக செங்கீரை
உலகு குளிர எமது மதியில் ஒழுகும் “அந்த கிரணமே”
உருகும் அடியார் இதயம் நெகிழ உணர்வில் எழுநூல்
உதயமே