தேசிய மக்கள் தொகை பதிவேடு (National Population Register (NPR)

TNPSC PAYILAGAM
By -
0



தேசிய மக்கள் தொகை பதிவேடு (National Population Register (NPR) என்பது இந்திய அரசின், உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கட்தொகை கணக்கிடும் தலைமை ஆணையாளர் (Registrar General and Census Commissioner of India), இந்தியாவில் குடியிருப்போர் தொடர்பான விவரங்களை பராமரிக்கும் பதிவேடாகும்

தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்படி, ஒரு "வழக்கமான குடியிருப்பாளர்" என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் குறைந்தது ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் வாழ்ந்த நபர், அல்லது அடுத்த ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழ விரும்பும் நபரை குறிக்கிறது. இந்தியாவின் ஒவ்வொரு "வழக்கமான குடியிருப்பாளரும்" இதில் பதிவு செய்வது கட்டாயமாகும். மக்கள்தொகை கணக்கெடுப்புடன் தொடர்புடைய இந்த தேசிய மக்கள் தொகை பதிவேடானது, தேசிய குடிமக்கள் பதிவேடு நாடு முழுவதும் செயல்படுத்துவதற்கான முதல் படியாகக் கருதப்படுகிறது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2003-ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டபோது, தேசிய மக்கள்தொகை பதிவேட்டை (என்பிஆர்) தயாரிக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்யப்பட்டது. 

மேலும், இந்திய குடிமக்களுக்கு கட்டாயம் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்றும் அந்த சட்டத்திருத்தம் பரிந்துரை செய்தது. அதன் பயனாக, கடந்த 2010-ஆம் ஆண்டில் முதன்முதலில் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட்டது. அதில், ஓரிடத்தில் தொடர்ந்து 6 மாதங்களாக வசிப்பவரும் அல்லது அடுத்த 6 மாதங்களுக்கு வசிப்பவரும் அந்தப் பகுதியின் குடியிருப்பு வாசியாக கணக்கில் கொள்ளப்பட்டு பதிவேடு தயாரிக்கப்பட்டது.

தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் (என்பிஆர்) ஒருவர் வசிக்கும் கிராமம், மாவட்டம், மாநிலம் போன்ற தகவல்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கும். ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்பில், மக்களின் வசிப்பிடம், அவர்களின் பொருளாதார நிலை, எழுத்தறிவு, வீட்டு வசதி போன்ற தகவல்கள் இடம்பெற்றிருக்கும். தேசிய குடிமக்கள் பதிவேடு கடந்த 2015-ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டு, ஆதாருடன் இணைக்கப்பட்டது.

மக்கள் தொகை பதிவேட்டை பராமரிக்கும் நோக்கம்

  • இந்திய அரசின் மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள் மற்றும் சலுகைகள் அனைத்து பகுதி மக்களை சென்றடையச் செய்வது.
  • இந்திய அரசின் திட்டமிடலை மேம்படுத்துவது.
  • இந்தியக் குடிமகன்களை கண்டறிவதுடன், இந்தியர் அல்லாவதவர்களையும் கண்டறிவது.
  • நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்தவது

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)