SITRU ILAKKIYAMGAL -TNPSC TAMIL ILLAKKIYAM NOTES:
பகுதி – (ஆ) – இலக்கியம்
சிற்றிலக்கியங்கள்:
திருவேங்கடத்தந்தாதி :
திருவேங்கடத்தில் கோயில் கொண்டிருக்கும் திருமாலின் அருளை வேண்டிப் பாடப்பெற்ற அந்தாதி நூல்.
ஆதலால் இதனைத் திருவேங்கடத்து அந்தாதி என்று கூறுவர்.
அந்தாதி:
- சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று அந்தாதியாகும்.
- அந்தம் என்ற சொல்லுக்கு இறுதி என்றும்
- ஆதி என்ற சொல்லுக்கு முதல் என்றும் பொருள்.
- ஒவ்வொரு பாடலிலும் உள்ள இறுதி எழுத்தோ, அசையோ, சீரோ அடியோ அதற்கு அடுத்து வரும் பாடலின் முதலாக வரும்படி அமைத்துப் பாடுவது அந்தாதி எனப்படும்.
- அந்தாதியை சொற்றொடர்நிலை என்று வழங்குவதும் உண்டு.
ஆசிரியர் குறிப்பு
- திருவேங்கடத்து அந்தாதி நூலின் ஆசிரியர் = பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்.
- 17 ஆம் நூற்றாண்டில் தோன்றிய இவர் அழகிய மணவாளதாசர் எனவும் அழைக்கப்பட்டார்.
- தெய்வக்கவிஞர் என்று பொருள்படும் ‘திவ்வியகவி’ என்ற பெயராலும் இவரை அழைத்தனர்.
- இவர் இயற்றிய எட்டு நூல்களின் தொகுதியை அஷ்டபிரபந்தம் எனக் கூறுவர்.
- “அஷ்டபிரபந்தம் கற்றவன் அரைப் பண்டிதன்” என்னும் பழமொழி இந்நூல்களின் உயர்வைப் புலப்படுத்தும்.
- இவர்தம் பாடல்கள் சொல்நோக்கும் பொருள்நோக்கும் தொடை நோக்கும் நடைநோக்கும் கொண்டு ஒளிர்கின்றன.
- கி.பி. 1623 முதல் 1659 வரை மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னரின் அவையில் ஓர் அலுவலராய் அமர்ந்து வாழ்க்கை நடத்தி வந்த இவர் பின்னர் இறைத்தொண்டில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.
- ஊர் திருமங்கை
- இராமானுசரின் சீீடரான திருவரங்கத்து அமுதனாரின் பேரன்
- கூரத்தாழ்வாரின் மகனான பராச்சரப்பட்டரின் சீடர் என்பர்.
- ஆராய்ச்சியாளர்கள் 17ஆம் நூற்றாண்டு என்பர்
- “திவ்வியகவி”, “அழகிய மணவாளதாசன்” என்ற சிறப்புப் பெயர்கள் உண்டு.
- திருமலைநாயக்கரின் அரண்மனையில் எழுத்தராகப் (ராயசம்) பணிபுரிந்தவர்)
- இவர்பாடிய அட்டப்பிரபந்தத்துள் ஒன்று திருவேங்கடத்தந்தாதி
நூற்குறிப்பு
- ஆசிரியர் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
- 96 சிற்றிலக்கியங்களுள் ஒன்று அந்தாதி
- திருறையூர் நம்பிமேகவிடு தூது, எதிராசர் அந்தாதி, பரப்பிரம்ம விவேகம் ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.
- வைணவ நூல்களில் முதலில் நாலாயிரத்திவ்யப் பிரபந்தமும் அடுத்து வேதாந்த தேசிகரின் “தேசிகப் பிரபந்தமும்” பிறகு பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் அட்டப் பிரபந்தமும்” புகழ் பெற்ற நூல்களாகும்.
- திருவேங்கடத்தந்தாதியில் மொத்தம் 100 பாடல்கள் உள்ளன
- வேங்கடத்தின் பெருமை கூறும் நூல்
- நாயகி பாவம் நிறைந்த அந்தாதி
அட்டபிரபந்தங்கள்:
- திருவரங்கக் கலம்பகம்
- திருவரங்கத்து மாலை
- திருவரங்கத்து திருவந்தாதி
- சீரங்கநாயகர் ஊசல்
- திருவேங்கட மாலை
- திருவேங்கடத்தந்தாதி
- அழகர் அந்தாதி
- நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி.
மேற்கோள்
பொருதரங்கததும் வடத்தம் அனந்தபுரத்தும் அன்பர்
கருவரங்கத்தும் துயில்வேங்கடவா! கண்பார்த்து
அருள்வாய் நிருதர்அங்கத்த நிறம்போல் வரும்
அந்திநேரத்து அன்றில் ஒரதரம் கத்தும் பொழுதும்
பெறாள் என்ஒருவல்லியே”.
“ஒருமாது அவனி ஒருமாதுசெல்வி உடன் உறைய
வரும் ஆதவனின் மகுடம்வில்வீச வடமலைமேல்
கருமாதவன் கண்ணன் நின்பால் திருநெடுங்கண்
வளர்வதற்கு அரமாதவம் என்னசெய்தாய்ப் பணி
எனக்கு அன்புதியே”.