TODAY CURRENT AFFAIRS IN TAMIL 03.12.2023
உலக புதுப்பிக்கத்தக்க மற்றும் ஆற்றல் திறன் உறுதிமொழி :
உலக புதுப்பிக்கத்தக்க மற்றும் ஆற்றல் திறன் உறுதிமொழியை 116 நாடுகள் ஏற்றுள்ள நிலையில் இந்தியா, சீனா கையொப்பமிடவில்லை. இந்த உறுதிமொழியின் படி உலக நாடுகள் தங்களின் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தியை குறைந்தபட்சம் 11,000 கிகாவாட்ஸ் அளவுக்கு உயர்த்த வேண்டும், மற்றும் உலகளாவிய ஆற்றல்திறன் மேம்பாட்டுக்கான ஆண்டு விகிதத்தை இரட்டிப்பாக்க வேண்டும். இது உலகில் பசுமையற்ற வாயுக்கள் வெளியீட்டைக் குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு முயற்சியாகும். பருவநிலை பாதுகாப்பு நாடுகள் கூட்டமைப்பின் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியின் மூலம் புதுப்பிக்கத்தக்க எரிபொருள் பயன்பாட்டை அதிகரிக்க அனைத்து நாடுகளுக்கும் வலுயுறுத்தப்படுகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்திறனை மூன்று மடங்கு உயர்த்தும் இந்தியாவின் நோக்கத்தினை காப் 28-ல் பிரதமர் மோடி வெளிப்படுத்தியிருந்த போதிலும் உறுதிமொழியில் இந்தியா இதுவரை கையொப்பமிடவில்லை.
மிக்ஜாம் புயல் ரெட் அலர்ட்:
மிக்ஜாம் புயல் தீவிர புயலாக கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 20 செமீ-க்கு அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதால் அதி கனமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகி உள்ள புயலுக்கு மியான்மர் பரிந்துரைத்த மிஷாங் (Michaung) என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.இருப்பினும், இதை மிக்ஜாம் என்றே உச்சரிக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளது மியான்மர்.\
ஆதித்யா விண்கலத்தின் ஆய்வுத் தகவல்கள் வெளியீடு:
இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பு: ஆதித்யா விண்கலத்தில் மொத்தம் 7 ஆய்வுக் கருவிகள் உள்ளன. இதில் ‘ஹெல்1ஒஎஸ்’ எனும் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டா் கருவி கடந்த அக்டோபரில் ஆய்வுப் பணிகளைத் தொடங்கியது. இது பதிவு செய்த சூரிய கதிா்வீச்சின் ஒளி அலை தரவுகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டன. தொடா்ந்து ஏபெக்ஸ் எனும் 2-ஆவது ஆய்வுக் கருவி செப்டம்பா் மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. இந்தக் கருவியானது சூரிய புயல்கள் மற்றும் அதிலுள்ள ஆற்றல் அயனிகள் குறித்து ஆராய்ந்து வருகிறது. அது வழங்கிய தரவுகளின் அடிப்படையில் சூரியக் காற்றில் உள்ள புரோட்டான் மற்றும் ஆல்பா துகள்களில் உள்ள எண்ணிக்கை மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது. மேலும், விண்கலம் தற்போது நல்ல செயல்பாட்டில் இருக்கிறது என அதில் கூறப்பட்டுள்ளது.
விண்வெளிக்கு மனிதா்களை அனுப்பும் ககன்யான் திட்டம்:
விண்வெளிக்கு மனிதா்களை அனுப்பும் ககன்யான் திட்டத்துக்காக தோ்ந்தெடுக்கப்பட்ட விண்வெளி வீரா்கள் அனைவரும் பயிற்சி முடித்து தயாா் நிலையில் உள்ளதாக இஸ்ரோ தலைவா் எஸ். சோமநாத் தெரிவித்தாா். மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் 2025-இல் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்திற்காக 4 விண்வெளி வீரா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். 3 நாள்கள் விண்ணில் பயணம் மேற்கொள்ளும் வீரா்களை பத்திரமாக மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா:
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா கடந்த செப்டம்பா் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து, அது சட்டமானது. இந்நிலையில், புதுச்சேரி மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவைகளிலும் மகளிருக்கு இடஒதுக்கீடு அளிக்க வழிவகை செய்யும் மசோதாக்களை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது.
இமய மலையில் அபாய அளவில் உருகும் பனிப்பாறைகள்
துபையில் ஐ.நா. பருவநிலை பாதுகாப்பு மாநாட்டையொட்டி, அங்கு மலைப் பகுதி நாடுகளுடனான கூட்டத்தில் குட்டெரெஸ் பங்கேற்றாா். அப்போது, அவா் பேசியதாவது:
நேபாளத்தில் உள்ள பனி மூடிய மலைகள் கடந்த 30 ஆண்டுகளில் மூன்றில் ஒரு பங்கு பனியை இழந்துள்ளன. பசுமை இல்ல வாயுக்களால் ஏற்படும் மாசுபட்டால், புவி வெப்பமடைந்து வருவதன் நேரடி தாக்கத்தால் இது நிகழ்ந்துள்ளது.
பனிப்பாறைகள் முழுமையாக மறைந்துவிட்டால், சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா உள்ளிட்ட முக்கிய நதிகளில் நீரோட்டம் வெகுவாக குறைந்துவிடும். இது சம்பந்தப்பட்ட பகுதி மக்களுக்கு பெரும் இடா்ப்பாட்டை ஏற்படுத்தும் என்றாா் குட்டெரெஸ்.
புவி வெப்பமயமாதலின் தாக்கத்தால், இமய மலையில் பனிப்பாறைகள் அபாய அளவில் உருகி வருகின்றன; இதனால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு உடனடி உதவி அவசியம் என்று ஐ.நா. பொதுச் செயலாளா் அன்டோனியோ குட்டெரெஸ் குறிப்பிட்டாா்
துபையில் நடைபெற்று வரும் 28-ஆவது ஐ.நா. பருவநிலை பாதுகாப்பு மாநாட்டில், 198 நாடுகளைச் சோ்ந்த 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனா். டிசம்பா் 12-ஆம் தேதி வரை இம்மாநாடு நடைபெறவுள்ளது.
உலகின் முதல் சகோதர - சகோதரி கிராண்ட் மாஸ்டர்கள் :
உலகின் முதல் சகோதர - சகோதரி கிராண்ட்மாஸ்டர்களாக பிரக்ஞானந்தா மற்றும் வைஷாலி உருவாகியுள்ளனர். கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் மூத்த சகோதரி வைஷாலி தற்போது செஸ் கிராண்ட் மாஸ்டராக மாறியுள்ளார். ஸ்பெயினில் நடைபெற்ற செஸ் போட்டியில் இந்த சாதனையை அவர் படைத்தார். தன்னை எதிர்த்து விளையாடிய துருக்கியைச் சேர்ந்த வீரரை வென்று அவர் இந்த சாதனையைப் படைத்தார். இந்தியாவிலிருந்து கிராண்ட் மாஸ்டர் பட்டத்தைப் பெறும் மூன்றாவது வீராங்கனை வைஷாலி என்பது குறிப்பிடத்தக்கது. வைஷாலிக்கு முன்னதாக கொனேரு ஹம்பி மற்றும் ஹரிகா ஆகியோர் இந்தியாவிலிந்து கிராண்ட் மாஸ்டர் பட்டங்களை வென்றுள்ளனர்.
வைஷாலியின் சகோதரரான பிரக்ஞானந்தா கடந்த 2018 ஆம் ஆண்டு அவரது 12 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார். தற்போது அவரது சகோதரி கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றுள்ள நிலையில், இவர்கள் உலகின் முதல் சகோதர - சகோதரி கிராண்ட் மாஸ்டர்கள் என்ற பெருமையைப் பெற்றுள்ளனர்.
டிசம்பர் 2023 இன் முக்கியமான நாட்கள் மற்றும் தேதிகளின் பட்டியல்:டிசம்பர் 3 - சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் 2023 / INTERNATIONAL DAY OF PERSONS WITH DISABILITIES 2023மாற்றுத்திறனாளிகளின் உலக தினம் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் (IDPD) என்றும் அழைக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளைப் புரிந்துகொள்வது மற்றும் ஏற்றுக்கொள்வது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த டிசம்பர் 3 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் 2023 (IDPD) தீம்: "ஊனமுற்ற நபர்களுடன் மற்றும் அவர்களால் SDG களை மீட்பதற்கும் அடைவதற்கும் ஒன்றுபட்ட செயலாகும்".
ஊனமுற்ற நபர்களின் கண்ணியம், உரிமைகள் மற்றும் நல்வாழ்வுக்கான ஆதரவைத் திரட்டுதல் மற்றும் ஊனமுற்றோர் பிரச்சினைகளைப் பற்றிய புரிதலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :
- இந்திய தேசிய தினங்கள் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
- யுனெஸ்கோவில் அனுசரிக்கப்படும் சர்வதேச தினங்கள்
- 2023 ஆம் ஆண்டின் தமிழ் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL: