TODAY CURRENT AFFAIRS IN TAMIL 12.12.2023

TNPSC PAYILAGAM
By -
0



 TODAY CURRENT AFFAIRS IN TAMIL 12.12.2023


பாரத் - ஜிபிடி (Bharath - GPT) :

கோரோவர்.ஏஐ (CoRover) நிறுவனம் கூகுள் கிளவுடுடன் (Google cloud) இணைந்து பாரத் - ஜிபிடி (Bharath - GPT) எனும் செய்யறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவுள்ளனர். உள்நாட்டிலேயே உருவாக்கப்படும் இந்த தொழில்நுட்பம் இந்தியர்களுக்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 14 இந்திய மொழிகளில் உரையாடல்களை மேற்கொள்ளக்கூடிய இந்த செய்யறிவு தொழில்நுட்பத்தில் கூகுள் கிளவுட் மிக முக்கிய பங்காற்றுகிறது. இதில் எழுத்து (text), ஒலி (voice) மற்றும் காணொளி (Video) மூலம் உரையாடல்களை மேற்கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய முதல்வராக பஜன்லால் சர்மா  தேர்வு :

ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய முதல்வராக பஜன்லால் சர்மா ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தானில் 199 பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த மாதம் நடைபெற்ற தோ்தலில் 115 இடங்களைக் கைப்பற்றி, பாஜக வெற்றி பெற்றது. காங்கிரஸுக்கு 69 இடங்களே கிடைத்தன.

9 ஆண்டுகளில் 82% மருத்துவக் கல்லூரிகள் அதிகரிப்பு:

இந்தியாவில் கடந்த 9 ஆண்டுகளில் 82 சதவிகித மருத்துவக் கல்லூரிகள் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார்.

நாட்டில் 2014ஆம் ஆண்டுக்கு முன்பாக 387 மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. தற்போது 82% அதிகரித்து 706 கல்லூரிகள் உள்ளன. 51,348-ஆக இருந்த எம்பிபிஎஸ் சீட்டுகள் தற்போது 1,08,940-ஆக அதிகரித்துள்ளன.அதேபோல், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சீட்டுகள் 127% அதிகரித்து 70,674-ஆக உள்ளன.”

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை:

நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி அளித்துள்ள எழுத்துபூா்வ பதிலில், ‘ஓய்வூதியம், ஓய்வூதியதாரா்கள் நலத்துறை, பாதுகாப்புத் துறை தலைமைக் கணக்காளா், தொலைத்தொடா்பு மற்றும் அஞ்சல் துறை உள்ளிட்டவற்றில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 67,95,449 போ் மத்திய அரசில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வூதியம் பெற்று வருகின்றனா். இதில் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வூதியம் பெறுபவா்களும் அடங்குவா். ராணுவ ஓய்வூதியதாரா்களின் எண்ணிக்கை 33.87 லட்சத்துக்கு மேல் உள்ளது. ரயில்வே துறையில் 15.25 லட்சம் ஓய்வூதியதாரா்கள் உள்ளனா். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை. அதே நேரத்தில் ராஜஸ்தான், சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட், பஞ்சாப், ஹிமாசல பிரதேச அரசுகள் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு செல்ல இருப்பதாக மத்திய அரசிடம் தகவல் தெரிவித்துள்ளன என்று கூறியுள்ளாா்.

இந்தியாவில் 53 சீன நிறுவனங்கள்:

இந்தியாவில் 53 சீன நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. செயலிகள் மூலம் கடன் வழங்கும் நடவடிக்கைகளில் இந்நிறுவனங்கள் ஈடுபட்டு வருவது குறித்த தரவுகள் இல்லை எனறு மத்திய பெருநிறுவனங்கள் விவகாரங்கள் துறை அமைச்சகம் மக்களவையில் தெரிவித்தது.

விரைவு நீதி மன்றம்

2023 ஜனவரி 31-வரை 2.43 லட்சம் போக்ஸோ வழக்குகள் விரைவு நீதி மன்றங்களில் நிலுவையில் இருக்கிறதென அறிக்கை வெளியாகியுள்ளது.கடந்த 2022ஆம் ஆண்டில் போக்ஸோ வழக்குகளில் 3% மட்டுமே தண்டனை  பெற்றுள்ளனர்

போக்ஸோ வழக்குகள் நிலுவையில் முதலிடத்தை அருணாச்சல பிரதேசமும், இரண்டாவது இடத்தை தில்லியும், மூன்றாவது இடத்தை பீகாரும் பிடித்துள்ளன.

4-வது லோக் அதாலத்

டிசம்பர் 9-ல் 34 மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்களில் நடைபெற்ற 4-வது லோக் அதாலத்தில் 1.17 கோடி வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தேசிய சட்ட பணிகள் ஆணையம் அறிவித்துள்ளது.

லோக் அதாலத் என்து ஒரு மக்கள் நீதி மன்றம் ஆகும்.இதில் லோக் என்பது மக்களையும், அதாலத் என்பது நீநிதிமன்றத்தையும் குறிக்கிறது.1987ஆம் ஆண்டு லோக் அதாலத் உருவாக்கப்பட்டது.

VINBAX-2023:

VINBAX-2023 நான்காவது கூட்டு ராணுவப் பயிற்சியின் இந்தியாவும் வியட்நாமும் பங்கேற்கின்றன. வியட்நாமின் ஹனோய் நகரில் இந்தப் பயிற்சி நடைபெற உள்ளது. ராணுவ பயிற்சி VINBAX-2023 2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது மற்றும் முதல் ராணுவ பயிற்சி  மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் நடத்தப்பட்டது. இது இந்தியா மற்றும் வியட்நாமில் மாறி மாறி நடத்தப்படும் வருடாந்திர பயிற்சி நிகழ்வாகும். கடைசியாக 2022 ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் சந்திமந்திர் ராணுவ நிலையத்தில் நடத்தப்பட்டது. இந்த கூட்டுப் பயிற்சி இரு படைப்பிரிவுகளுக்கும் இடையிலான புரிதல் மற்றும் பரஸ்பர செயல்பாட்டை மேம்படுத்தவும், நட்பு இராணுவங்களுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும் உதவும்.

காலநிலை மாற்ற செயல்திறன் குறியீடு (CCPI):

காலநிலை மாற்ற செயல்திறன் குறியீட்டில் (CCPI) இந்தியா 7 வது இடத்தில் உள்ளது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் குறைந்த பசுமை வாயு குடில் உமிழ்வுகளில் அதன் சிறந்த செயல்திறன் காரணமாகும். கடந்த ஆண்டு இந்தியா 8-வது இடத்தில் இருந்தது. காலநிலை மாற்ற செயல்திறன் குறியீடு 63 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் காலநிலை தணிப்பு முன்னேற்றத்தை கண்காணிக்கிறது. இந்த நாடுகள் உலகளாவிய உமிழ்வுகளில் 90% க்கும் அதிகமானவற்றிற்கு பொறுப்பாகும்.இந்த குறியீட்டில் டென்மார்க் முதலிடத்தில் உள்ளது.

பகவந்த் மான் அரசு திட்டம்:

பஞ்சாப் மாநிலத்தில் வீட்டில் இருந்தபடியே அரசு சேவைகள் பெறும் உங்கள் வீட்டில் பகவந்த் மான் அரசு திட்டம் தொடங்கப்பட்டது .இந்த திட்டத்தின் கீழ் பஞ்சாபில் உள்ள மக்கள் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு பதிவு சான்றிதழ்களை வழங்குவது உட்பட 43 அரசு சேவைகளை தங்கள் வீடுகளில் இருந்தபடியே உதவி எண் 1076 ஐ அழைப்பதன் மூலம் பெற முடியும்.

ஒடிசா – கலிங்கா மைதானம்

ஒடிசாவிலுள்ள கலிங்கா மைதானத்தில் இந்தியாவின் மிகப்பெரிய அதி நவீன விளையாட்டு அறிவியல் மையத்தினை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் திறந்து வைத்துள்ளார்.

யுனிவர்சல் டைனமிக் கிராஸ்லிங்கர் (Universal Dynamic Crosslinker (UDC)):

ஐஐடி மெட்ராஸ், கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் கொலராடோ ஸ்டேட் யுனிவர்சிட்டி ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் பலதரப்பட்ட பிளாஸ்டிக்குகளை வலிமையான மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களாக இணைக்கும் யுனிவர்சல் டைனமிக் கிராஸ்லிங்கர் நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.

'அம்ரிட்' (இந்திய தொழில்நுட்பத்தால் ஆர்சனிக் மற்றும் உலோக நீக்கம்)

இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) - மெட்ராஸ், நீரிலிருந்து ஆர்சனிக் மற்றும் உலோக அயனிகளை அகற்றுவதற்காக 'AMRIT' (Arsenic and Metal Removal by Indian Technology) என்ற தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.

தொழில்நுட்பம் நானோ அளவிலான இரும்பு ஆக்சி-ஹைட்ராக்சைடைப் பயன்படுத்துகிறது, இது நீர் வழியாக செல்லும் போது ஆர்சனிக்கைத் தேர்ந்தெடுத்து நீக்குகிறது.

மாங்கனீசு, யுரேனியம், குரோமியம், பாதரசம், புளோரைடு போன்ற நிலத்தடி நீரில் உள்ள மற்ற அசுத்தங்களையும் இந்த தொழில்நுட்பம் அகற்றும்.

தேசிய மருத்துவ ஆணையம்:

புதிய தேசிய மருத்துவ ஆணைய லோகோவில் தன்வந்திரி கடவுளின் உருவம் உள்ளது, மேலும் சமீபத்தில் 'இந்தியா' என்ற வார்த்தைக்கு பதிலாக 'பாரத்' என்று மாற்றப்பட்டது.

தேசிய மருத்துவ ஆணையம் (NMC) என்பது மருத்துவக் கல்வி மற்றும் பயிற்சிக்கான இந்தியாவின் உயர்மட்ட ஒழுங்குமுறை அமைப்பாகும்.

இது 2020 ஆம் ஆண்டில் தேசிய மருத்துவ ஆணையச் சட்டம், 2019 மூலம் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு (எம்சிஐ) பதிலாக நிறுவப்பட்டது.

NMC 33 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது .

முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் ஒட்டுமொத்த உற்பத்தி 12.1 சதவீத வளா்ச்சியைப் பதிவு:

நிலக்கரி, உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகிய துறைகளின் சிறப்பான செயல்பாடு காரணமாக கடந்த அக்டோபரில் முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் ஒட்டுமொத்த உற்பத்தி 12.1 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 

இது குறித்து அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: தொழிலக உற்பத்தி குறியீட்டு எண்ணான ஐஐபி-யில் 40.27 சதவீதம் பங்கு வகிக்கும் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருள்கள், உரம், உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகிய எட்டு முக்கிய உள்கட்டமைப்பு துறைகளின் உற்பத்தி கடந்த அக்டோபரில் 12.1 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்தது.

  • மதிப்பீட்டு மாதத்தில் நிலக்கரி உற்பத்தி 18.4 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.
  • எஃகு உற்பத்தி வளா்ச்சி இந்த அக்டோபரில் 11 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.
  • கடந்த அக்டோபரில் சிமென்ட் உற்பத்தி 17.1 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.
  • கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் 1.2 சதவீதம் வளா்ச்சி கண்ட மின்சார உற்பத்தி இந்த அக்டோபரில் 20.3 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி கடந்த அக்டோபரில் முறையே 1.3 சதவீதம் மற்றும் 9.9 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.
  • சுத்திகரிப்பு பொருள்கள் உற்பத்தி இந்த அக்டோபரில் 4.2 சதவீத நோ்மறை வளா்ச்சியாக மாறியுள்ளது.
  • மதிப்பீட்டு மாதத்தில் உர உற்பத்தி வளா்ச்சி 5.4 சதவீதத்திலிருந்து 5.3 சதவீதமாகக் குறைந்தது என்று அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

 நெதர்லாந்து – சாம்பியன் பட்டம்:

சிலியில் நடைபெற்ற 3வது ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின்(Junior Women's World Cup Hockey Tournament) இறுதி போட்டியில் ஆர்ஜென்டினா-வை நெதர்லாந்து வீழ்த்தி சாம்பியன் பட்டத்தினை தக்க வைத்துள்ளது.

1997, 2009, 2013, 2022 ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை வென்ற நெதர்லாந்து அணி 2023ஆம் ஆண்டு 5வது முறையாக பட்டத்தினை வென்றது.ஆர்ஜென்டினாவானது இரண்டாவது இடத்தினை பிடித்துள்ளது.பெல்ஜியமானது மூன்றாவது இடத்தினை பிடித்துள்ளது.

டிசம்பர் 12 - யுனிவர்சல் ஹெல்த் கவரேஜ் தினம் (உலகளாவிய சுகாதார பாதுகாப்பு தினம்)

ஐக்கிய நாடுகள் சபை டிசம்பர் 12, 2017 அன்று 72/138 தீர்மானத்தின் மூலம் டிசம்பர் 12 ஐ சர்வதேச சுகாதார கவரேஜ் தினமாக (UHC) பிரகடனப்படுத்தியது. 

இந்த நாளைக் கொண்டாடுவதன் பின்னணியில் வலுவான மற்றும் மீள்திறன் கொண்ட சுகாதார அமைப்புகள் மற்றும் உலகளாவிய சுகாதார பாதுகாப்பு ஆகியவற்றின் தேவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். பங்குதாரர் பங்காளிகள்.

கருப்பொருள்: “The UHC Day theme is Health for All: Time for Action”(“அனைவருக்கும் ஆரோக்கியம்: நடவடிக்கைக்கான நேரம்”)

நடப்பு விவகார வினாடிவினா - டிசம்பர், 2023/Current Affairs Quiz - December, 2023


விருதுகள் கௌரவங்கள் 2023 :
MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2023:

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :

Post a Comment

0Comments

Post a Comment (0)