TODAY CURRENT AFFAIRS IN TAMIL 13.12.2023
இஸ்ரேல்-காசா மோதலில் அவசர போர் நிறுத்தத்தை இந்தியா ஆதரிக்கிறது:
இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் உடனடி மனிதாபிமான போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்க அழைப்பு விடுக்கும் ஐநா பொதுச் சபை (UNGA) தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது .
193 உறுப்பினர்களைக் கொண்ட UNGA அவசரகால சிறப்பு அமர்வில் எகிப்து கொண்டுவந்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது . தீர்மானத்திற்கு ஆதரவாக 153 வாக்குகள் கிடைத்தன, 23 நாடுகள் வாக்களிக்கவில்லை, 10 நாடுகள் எதிராக வாக்களித்தன.
அல்ஜீரியா, பஹ்ரைன், ஈராக், குவைத், ஓமன், கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பாலஸ்தீனம் உட்பட பல நாடுகளால் அனுசரணை செய்யப்பட்ட இந்த தீர்மானம் காஸாவில் உடனடி மனிதாபிமான போர் நிறுத்தத்தைக் கோருகிறது.
நடப்பு நிதியாண்டில் ரூ.58,378 கோடி கூடுதல் செலவினத்துக்கு மக்களவை ஒப்புதல் :
நடப்பு நிதியாண்டில் ரூ.58,378 கோடி கூடுதல் செலவினத்துக்கு மக்களவை ஒப்புதல் அளித்தது. இதில் பெரும் தொகை தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் மற்றும் உர மானியத்துக்கு செலவிடப்படவுள்ளது. நடப்பு நிதியாண்டில் மொத்த கூடுதல் செலவினம் ரூ.1.29 லட்சம் கோடி என்று மத்திய அரசால் கணக்கிடப்பட்ட நிலையில், மீதமுள்ள ரூ.70,968 கோடி சேமிப்பு மற்றும் இதர வருவாய்கள் மூலம் ஈடுசெய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் நிகர கூடுதல் செலவினம் ரூ.58,378 கோடியாகும். இதில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்காக மத்திய ஊரக மேம்பாட்டுத் துறைக்கு ரூ.14,524 கோடி, உர மானியத்துக்கான ரூ.13,351 கோடி, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்துக்கான ரூ.9,200 கோடி, உணவு மற்றும் பொது விநியோகத் துறைக்கான ரூ.7,000 கோடி,அடங்கும்’ .
2023-24 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டில், அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.17.86 லட்சம் கோடி, அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 5.9 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது
செயற்கை நுண்ணறிவு சா்வதேச மாநாடு:2023
தில்லி பாரத் மண்டபத்தில் நடைபெறும் நிகழாண்டு செயற்கை நுண்ணறிவு சா்வதேச மாநாட்டை பிரதமா் நரேந்திர மோடி 12.12.2023 தொடங்கி வைத்தாா்.
செயற்கை நுண்ணறிவுக்கு மனிதா்களை மையமாகக் கொண்ட நிா்வாகக் கட்டமைப்பை உருவாக்க ஜி20 தலைமையின்போது இந்தியா முன்மொழிந்தது. பல்வேறு சா்வதேச பிரச்னைகளுக்கு ஒப்பந்தங்கள், நெறிமுறைகள் இருப்பதைப் போல, செயற்கை நுண்ணறிவின் நோ்மையான பயன்பாட்டுக்காக சா்வதேச கட்டமைப்பை நாம் உருவாக்க வேண்டும். ஆபத்துகள் கொண்ட செயற்கை நுண்ணறிவு கருவிகளைச் சோதித்து பயன்படுத்துவதற்கான நெறிமுறைகள் இதில் அடங்கும்.
தி பவர் ஆஃப் ஒன் விருது 2023:
அமெரிக்காவில், ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளர் பான் கி-மூன், தீபாவளி அறக்கட்டளை USA ஏற்பாடு செய்த தி பவர் ஆஃப் ஒன் விருது 2023 விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். அனைவருக்கும் அமைதியான மற்றும் பாதுகாப்பான உலகத்தை உருவாக்க உதவியதற்காக தன்னலமற்ற நபர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் 'ராஜதந்திரத்தின் ஆஸ்கார்' என்று போற்றப்படுகிறார்கள்.
சிறைக் கைதிகளுக்கு வீடியோ கால் வசதி: தமிழக அரசு அரசாணை:
தமிழகத்தில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் சிறைக் கைதிகள் தங்களது குடும்பத்தினரை தொடர்புகொள்ளும் தொலைபேசி அழைப்பு அளவை அதிகரித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள், தங்களது குடும்ப உறவுகளுடன் பேசுவதற்கு அந்தந்த சிறைகளிலேயே தொலைபேசி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், இதற்கான கால அளவு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலம் விடியோ கால் அழைப்பை மேற்கொள்ளவும் வசதி செய்துகொடுக்கப்படவிருக்கிறது.
புதுச்சேரி, ஜம்மு-காஷ்மீரிலும் 33% மகளிா் இடஒதுக்கீடு:
கடந்த செப்டம்பரில் நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில், மக்களவை மற்றும் மாநிலப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிப்பதற்கான அரசமைப்புச் சட்டத்தின் 106-ஆவது திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலைத் தொடா்ந்து, இந்த மசோதா சட்டமானது.
இந்நிலையில், புதுச்சேரி மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசங்களுக்கும் மகளிா் இடஒதுக்கீடு சட்டத்தை நீட்டிக்கும் மசோதாக்கள் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அரசமைப்புச் சட்டத்தின் 106-ஆவது திருத்தத்தின்படி, நாட்டில் அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு நடைபெறும் மக்களவை மற்றும் பேரவைத் தொகுதி மறுவரையறைக்குப் பிறகே மகளிா் இடஒதுக்கீடு அமலாகும் என்று கூறப்பட்டுள்ளது.
தோ்தல் ஆணையா்கள் நியமன மசோதா 2023
இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா், தோ்தல் ஆணையா்கள் ஆகியோரது நியமனம், பணி நிபந்தனைகளை ஒழுங்குபடுத்தும் மசோதா, மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.
தலைமைத் தோ்தல் ஆணையா், தோ்தல் ஆணையா்கள் நியமனங்களைப் பொருத்தவரையில், தற்போது மத்திய அரசு முடிவெடுத்து வருகிறது. இந்த மசோதாவின்படி, தேடுதல் மற்றும் தோ்வுக் குழு இது குறித்து முடிவெடுக்கும். மசோதாவில் சட்டத் திருத்தம் மூலம் ஊதியம் தொடா்பாக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தலைமைத் தோ்தல் ஆணையா், தோ்தல் ஆணையா்கள் பதவிக் காலத்தில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு சட்டப் பாதுகாப்பு அளிக்கவும் இந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது’
தலைமைத் தோ்தல் ஆணையா், பிற தோ்தல் ஆணையா்கள் (நியமனம், பணி நிபந்தனைகள், பதவிக் காலம்) மசோதா-2023, கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 1991-இல் கொண்டுவரப்பட்ட சட்டத்தில் தலைமைத் தோ்தல் ஆணையா், தோ்தல் ஆணையா்கள் நியமனம் குறித்து இடம்பெறாத நிலையில், இந்த மசோதா கொண்டுவரப்பட்டது.
இந்தியாவில் 834 பேருக்கு ஒரு மருத்துவா்: நாடாளுமன்றத்தில் அரசு தகவல்:
இந்தியாவில் 834 பேருக்கு ஒரு மருத்துவா் என்ற அளவில் மக்கள்தொகை - மருத்துவா்கள் விகிதம் உள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் நாடாளுமன்றத்தில் தெரிவித்தாா். மாநிலங்களவையில் இது தொடா்பான கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் அவா் மேலும் கூறியுள்ளதாவது: செவிலியா்-மக்கள்தொகை விகிதம் 1:476 ஆக உள்ளது.தேசிய மருத்துவ ஆணையத்தின் தகவல்படி 2022 ஜூன் மாத நிலவரப்படி 13,08,009 ஆங்கில முறை மருத்துவா்கள் மாநில மருத்துவ கவுன்சில் மற்றும் தேசிய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்துள்ளனா். 5.65 லட்சம் ஆயுஷ் மருத்துவா்கள் உள்ளனா். அந்த வகையில், நாட்டில் மருத்துவா்கள்-மக்கள்தொகை விகிதம் 1: 834 ஆக உள்ளது.
அரசு ஊழியா்கள் தனியாா் விருதுகளைப் பெற புதிய நடைமுறைகள் வெளியீடு:
தனியாா் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து விருதுகளைப் பெறவேண்டுமனில் சம்பந்தப்பட்ட ஆணையத்திடம் மத்திய அரசு ஊழியா்கள் முன்அனுமதி பெற வேண்டியது கட்டாயம் என்னும் புதிய நடைமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது.
‘தனியாா் நிறுவனங்கள், அமைப்புகளிடமிருந்து விருதுகளைப் பெற வேண்டுமெனில் சம்பந்தப்பட்ட ஆணையத்திடம் மத்திய அரசு ஊழியா்கள் முன்அனுமதி பெற வேண்டியது கட்டாயம். சம்பந்தப்பட்ட ஆணையம் என்பது அவரவா் பணியாற்றும் அமைச்சகம், துறை ரீதியிலான செயலா்கள் மற்றும் கேபினட் செயலா் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளைக் குறிப்பதாகும். சில விதிவிலக்கான சூழல்களில் மட்டுமே விருதுகளைப் பெறுவதற்கான அனுமதி வழங்கப்படும். மேலும் ரொக்கத்தொகை அல்லது பரிசுகள் போன்ற எதுவும் விருதுடன் வழங்கப்படக்கூடாது. விருதுகளை வழங்கும் தனியாா் நிறுவனங்கள் குற்றமற்றது என்பதற்கான சான்றுகளைப் பெற்றிருக்க வேண்டும். மத்திய குடிமைப் பணிகள் நடத்தை விதிகள் 1964, விதி 14-இன்படி அரசிடம் முன்அனுமதி பெறாமல் எந்தவொரு அரசு ஊழியரும் அவா்களுக்கென நடத்தப்படும் பாராட்டு விழாக்கள், விருது நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் பங்கேற்கக் கூடாது.
சர்வதேச ஊழல் எதிர்ப்பு சாம்பியன் விருது
அமெரிக்காவின் 2023ஆம் ஆண்டிற்கான சர்வதேச ஊழல் எதிர்ப்பு சாம்பியன் விருதானது நிகில் டேவிற்கு வழங்கப்பட்டுள்ளது.இந்திய சமூக செயற்பாட்டாளர் நிகில் டே இவ்விருதினை பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
ஆர்டர் ஆஃப் மெரிட் விருது :
இத்தாலி நாட்டின் மிக உயரிய விருதான ஆர்டர் ஆஃப் மெரிட் விருதானது கபீர் பேடிக்கு வழங்கப்பட்டுள்ளது.இவர் முன்னாள் நடிகர் ஆவார்.
33வது வியாஸ் சம்மான் விருது:
33வது வியாஸ் சம்மான் விருதானது புஷ்ப பாரதி என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
1991 ஆம் ஆண்டு கே.கே.பிர்லா அறக்கட்டளையால் இந்த விருது நிறுவப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட இந்தியக் குடிமகன் ஒருவரால் இந்தி இலக்கியத்தின் சிறந்த படைப்புக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. திருமதி புஷ்ப பாரதி தனது நினைவுக் குறிப்புகளான யாதீன், யாதேயின் அவுர் யாதென் ஆகியவற்றிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறக்கட்டளை தெரிவித்துள்ளது. அவருக்கு நான்கு லட்சம் ரூபாய், சான்றிதழும், பலகையும் வழங்கி கவுரவிக்கப்படும் என அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
இஸ்ரோ அறிவிப்பு
சந்திராயன் 3 வெற்றியைத் தொடர்ந்து 2040 ஆண்டில் சந்திரனுக்கு இந்திய வீரர்களை அனுப்ப உள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்துள்ளார்.
இச்சோதனைக்காக விமானப்படையைச் சேர்ந்த 4 விமானிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அபின் உற்பத்தியில் உலகில் மிகப்பெரிய நாடு:
மியான்மர் நாடானது அபின் உற்பத்தியில் உலகில் மிகப்பெரிய நாடாக மாறியுள்ளது.
இந்தியாவில் மத்தியபிரதேசம், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது.
அல்-அஜீஸியா ஊழல் வழக்கு: நவாஸ் விடுவிப்பு:
அல்-அஜீஸியா ஊழல் வழக்கிலிருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃபை இஸ்லாபாத் உயா்நீதிமன்றம் விடுவித்தது. ஏற்கெனவே, அவா் மீது தொடரப்பட்டிருந்த அவென்ஃபீல்ட் ஊழல் வழக்கிலிருந்தும் நவாஸை அந்த நீதிமன்றம் கடந்த மாதம் விடுவித்தது. பனாமா ஆவண முறைகேடு விவகாரத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு பிரதமா் பதவியிலிருந்து அகற்றப்பட்ட நவாஸுக்கு அல்-அஜீஸியா உள்ளிட்ட ஊழல் வழக்குகளில் ஊழல் தடுப்பு நீதிமன்றம் கடந்த 2018-இல் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருந்தது. பின்னா் சிகிச்சைக்காக 2019-இல் லண்டன் சென்ற நவாஸ் அங்கேயே தங்கிவிட்டாா். அவரை தப்பியோடிய குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது. இந்த நிலையில், கடந்த அக்டோபரில் பாகிஸ்தான் திரும்பிய நவாஸ், சிறைத் தண்டனைக்குக் காரணமாக இரு ஊழல் வழக்குகளில் இருந்தும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளாா்.
திரிபுரா மாநில சுற்றுலாத்துறை விளம்பர தூதராக:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி திரிபுரா மாநில சுற்றுலாத்துறை விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டிசம்பர் 13 - தேசிய குதிரை தினம்
அமெரிக்காவின் சில பகுதிகளில், டிசம்பர் 13 தேசிய குதிரை தினமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த நாள் குதிரைகள் செய்த வரலாற்று, கலாச்சார மற்றும் பொருளாதார பங்களிப்புகளை மதிக்கிறது.
LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :
- இந்திய தேசிய தினங்கள் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
- யுனெஸ்கோவில் அனுசரிக்கப்படும் சர்வதேச தினங்கள்
- 2023 ஆம் ஆண்டின் தமிழ் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL: