TODAY CURRENT AFFAIRS IN TAMIL 14.12.2023:

TNPSC PAYILAGAM
By -
0


 

 TODAY CURRENT AFFAIRS IN TAMIL 14.12.2023:


“மக்களுடன் முதல்வர்” திட்டம் :

அரசுத் துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி, அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் அவர்களைச் சென்றுசேரும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடவும், “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் 18-12-2023 அன்று கோயம்புத்தூரில் தொடங்கி வைக்கப்படவுள்ளது. 

இன்ஸ்டாகிராமில் புதிய செய்யறிவு தொழில்நுட்ப வசதி:

இன்ஸ்டாகிராமில் புதிய செய்யறிவு தொழில்நுட்ப வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது மெட்டா நிறுவனம். இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி (Story) வசதியில் தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இமேஜ் ஜெனரேசன் (Image generation AI) செய்யறிவு தொழில்நுட்பம் மூலம், ஒரு புகைப்படத்தில் உள்ள பின்புலத்தை மாற்றி புதிதாக புகைப்படங்களை உள்ளிட முடிகிறது.

21-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா:

21-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா 14.12.2023 தொடங்குகிறது. இம்முறை இந்தத் திரைப்பட விழாவில் 57 நாடுகளை சேர்ந்த 126 படங்கள் திரையிடப்பட உள்ளன. டிசம்பர் 21-ஆம் தேதி வரை இவ்விழா நடைபெறவுள்ளது.இந்த விழாவில் அநீதி, அயோத்தி, கருமேகங்கள் கலைகின்றன, மாமன்னன், போர் தொழில், இராவண கோட்டம், சாயாவனம், செம்பி, ஸ்டார்ட் கேமரா ஆக்சன், உடன்பால், விடுதலை - 1, விந்தியா விக்டிம் வெர்டிக்ட் வி3 ஆகிய தமிழ்ப் படங்கள் திரையிடப்பட உள்ளன.

15 எம்.பி.க்கள் ஒரேநாளில் இடைநீக்கம்

நாடாளுமன்ற பாதுகாப்பு விதிமீறல் சம்பவம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று இரு அவைகளிலும் இன்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அமளியில் ஈடுபட்ட  15 எம்.பி.க்கள் இன்று ஒரேநாளில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மக்களவையில் 14 எம்.பி.க்கள், மாநிலங்களவையில் ஒருவர் என 15 எம்.பி.க்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.இதில் 9 பேர் காங்கிரஸ், 2 பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், 2 பேர் திமுக, ஒருவர் இந்திய கம்யூனிஸ்ட், ஒருவர் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ், டி.என்.பிரதாபன், ஹிபி இடன், டீன் குரியகோஸ் ஆகிய 5 பேரை முதலில் இடைநீக்கம் செய்வதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி. அறிவித்தார். 

இதன் தொடர்ச்சியாக மேலும் 9 எம்.பி.க்கள் மக்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். தமிழக எம்.பி.க்கள் கனிமொழி, சு. வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், கே. சுப்பராயன் மற்றும் பென்னி பெஹனன், வி.கே. ஸ்ரீகந்தன், முகம்மது ஜாவத், பி.ஆர். நடராஜன், எஸ்.ஆர். பிரதீபன் என 9 எம்.பி.க்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

காலை மாநிலங்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்டதற்காக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் இடைநீக்கம் செய்யப்பட்டார். 

சிறந்த செயல்பாட்டுக்கான தேசிய விருது :

சிறந்த செயல்பாட்டுக்கான தேசிய விருதானது தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஐஐடி :

சென்னை ஐஐடி மற்றும் தேஜஸ் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று ரூ.12 கோடி அளவில் கையெழுத்தானது.

தேஜஸ் நிறுவனமானது சென்னை ஐஐடி கண்டுபிடித்த 5ஜி தொழில் நுட்பத்தை பயன்படுத்த மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தமாகும்

தெரு நாய்க்கடி :

தெருநாய்கடியால் இந்தியாவில்  நிகழாண்டில் 27.59 லட்சம் நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தமிழகத்தில் 4.04 லட்சம் பேர் தெருநாய்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகல்கள் தெரிவிக்கின்றன.

தெரு நாய்க்கடி பாதிப்பில் மகாராஷ்டிரா முதலிடமும், தமிழ்நாடு இரண்டாமிடமும் பிடித்துள்ளன.

இந்தியா அளவிலான மருத்துவம் தொடர்பாக சில தகவல்:

மத்திய அமைச்சர் பாரதி பிரவீண் பவார் இந்தியா அளவிலான மருத்துவம் தொடர்பாக சில தகவல்களை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்

மக்கள்தொகை – மருத்துவர் விகிதம் = 834:1

மக்கள்தொகை – செவிலியர்  விகிதம் = 476:1

செவிலியர்கள் எண்ணக்கை – 36.14 லட்சம்

மருத்துவக்கல்லூரிகள் எண்ணிக்கை – 706

மருத்துவ மேற்படிப்புக்கான இடங்களின் எண்ணிக்கை  – 51,348

டெஸ்லா நிறுவனம் தனது புதிய மனித ரோபோவை (Humanoid robot) அறிமுகம்:

டெஸ்லா நிறுவனம் தனது புதிய மனித ரோபோவை (Humanoid robot) அறிமுகம் செய்யும் காணொளி ஒன்றினைப் பகிர்ந்துள்ளது. ஆப்டிமஸ் ஜென் 2 (Optimus Gen 2) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ இதற்கு முன் டெஸ்லா அறிமுகம் செய்த ரோபோக்களை விட அதிக திறன்களைக் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மிகவும் மேம்படுத்தப்பட்ட தொழிநுட்பங்கள் மூலம் வடிவமைக்கப்பட்டு மனிதன் போலவே காட்சியளிக்கும் இந்த ரோபாவின், சமன் திறன் (Balance control) மேம்படுத்தப்பட்டுள்ளது. தயங்கி தயங்கி நடந்து வந்த ஆப்டிமஸ் இப்போது விறுவிறுவென நடக்கும் காணொளி பலரை பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது. முட்டை ஒன்றினை மிருதுவாகக் கையாளும் திறனையும் அந்தக் காணொளியில் காண முடிகிறது.

பாதுகாப்பு மீறல் விசாரணைக்குழு :

CRPF தலைவரான அனிஷ் தயாள் சிங் தலைமையில் லோக்சபாவில் நடந்த பாதுகாப்பு மீறல் குறித்து விசாரிக்க குழுவானது அமைக்கப்பட்டுள்ளது.

CRPF – Central Reserve Police Force

CRPFஆனது 1939ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

நினைவு தினம் அனுசரிப்பு :

டிசம்பர் 13-ல் நாடாளுமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் போது இறந்தவர்களுக்களுக்கான நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

நாடாளுமன்ற வளாகத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்ட நாள் – 13.12.2021

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தினால் மாநிலங்களுக்கு பெரும் நிதிச் சுமை: ஆா்பிஐ:

‘மாநில நிதிநிலை -2023-24-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் ஆய்வு’ என்ற தலைப்பில் ஆா்பிஐ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: சில மாநில அரசுகள் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாற இருப்பதாக கூறியுள்ளன. மேலும், சில மாநில அரசுகள் இதைப் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு மாறுவது மாநில அரசுகளுக்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தும். பிற மூலதனச் செலவுகளுக்குக் கூட அரசிடம் நிதி இல்லாத சூழல் ஏற்படும். தேசிய ஓய்வூதிய முறையில் இருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாறினால் நிதிச் சுமை நான்கரை மடங்கு வரை அதிகரிக்கும். ஏற்கெனவே சில மாநிலங்களின் நிதிப் பற்றாக்குறை மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் 4 சதவீதம் வரை உள்ளது. தேசிய அளவில் இதன் சராசரி 3.1 சதவீதமாகும். 

சில மாநிலங்களின் கடன் மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் 35 சதவீதத்தை தாண்டும் நிலையில் உள்ளது. மாநிலங்களின் கடனின் தேசிய சராசரி 27.6 சதவீதமாக உள்ளது. இந்தச் சூழ்நிலையில் மாநில அரசுகள் ஆக்கபூா்வமற்ற வகையில் சலுகைகள் அறிவிப்பது, மானியம் வழங்குவது உள்ளிட்ட நிதிசாா்ந்த செலவினங்களை அதிகரித்தால், அது நிதிநிலையை மேலும் சீா்குலைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் தரக் குறியீடு 2023

மெர்சர் நிறுவனமானது வாழ்க்கைத் தரக் குறியீடு 2023-ஐ வெளியிட்டுள்ளது

இந்தியாவில் வாழ சிறந்த நகரங்கள் பட்டியல்

  1. ஹைதராபாத் - இந்திய அளவில் 1வது இடம்- உலக அளவில் 153வது இடம்
  2. புனே -இந்திய அளவில் 2வது இடம்- உலக அளவில் 154வது இடம்
  3. பெங்களூரு -இந்திய அளவில் 3வது இடம் -உலக அளவில் 156வது இடம்
  4. சென்னை -இந்திய அளவில் 4வது இடம்- உலக அளவில் 161வது இடம்

உலக அளவில் ஆஸ்திரியா வியன்னா முதலிடமும், சுவிட்சர்லாந்தின் சுரிஷ் இரண்டாம் இடமும் பிடித்துள்ளன.

ஜப்பான், பிரிட்டன் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் ஒன்றாக இணைந்து புதிய ரக போர் விமானத்தை உருவாக்க ஒப்பந்தமிட்டுள்ளனர்:

ஜப்பான், பிரிட்டன் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் ஒன்றாக இணைந்து புதிய ரக போர் விமானத்தை உருவாக்க ஒப்பந்தமிட்டுள்ளனர். சீனா, ரஷியா, வடகொரியா போன்ற நாடுகளால் வலுத்துவரும் அச்சுறுத்தல்களிலிருந்து தங்கள் நாட்டினைப் பாதுகாக்க இந்தக் கூட்டு முயற்சியை மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர். ஜப்பான் மற்ற நாடுகளுடன் சேர்ந்து இராணுவ உபரகரணங்களை உற்பத்தி செய்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மிட்சுபிஷி எஃப் - எக்ஸ் (Mitsubishi F-X) என அழைக்கப்படும் இந்த ஜெட் விமானத்தின் தயாரிப்பு மூன்று நாடுகளில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களின் மேற்பார்வையில் நடைபெறும். இதற்கு ஜப்பான் தலைமையேற்றுள்ள நிலையில், தலைமைப் பொறுப்பு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றப்பட்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நிய நேரடி முதலீட்டு:

மத்திய அரசால் வெளியிடப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டு தரவுகளின்படி. மகாராஷ்டிர மாநிலம் அதிக முதலீட்டைப் பெற்று மீண்டும் முதலிடத்தைப் பெற்றுள்ளது. சட்ட பேரவைக் கூட்டத்தில் இதனைத் தெரிவித்த மகாராஷ்டிர தொழில் துறை அமைச்சர் உதய் சமந்த், கடந்த மூன்று மாதங்களில் ரூ.28,868 கோடி அந்நிய முதலீடு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் தரவுகளில், மகாராஷ்டிர மாநிலம் அதிக அந்நிய முதலீட்டைப் பெற்ற மாநிலமாக இடம்பெற்றிருப்பதையும் அவர் பகிர்ந்துள்ளார்.

புற்றுநோய் மாத்திரை

இந்தியாவில் புற்றுநோய்க்காக ஆக்டோசைட் என்ற மாத்திரை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியா – ஆரோக்கிய உணவு

கடந்த 2021-ல் இந்தியாவில் வாழும் மக்களில் 74.1% ஆரோக்கிய உணவைப் பெற முடியவில்லையென்று FAO அறிக்கையானது தெரிவித்துள்ளது.

சீனா :

சீனா திரவ ஆக்சிஜன் மீத்தேன் மூலம் இயங்கும் ஏவுகணை வாகனம் மூலமாக செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளது.

புதைபடிம எரிபொருள் பயன்பாடு குறைப்பு: பருவநிலை மாநாட்டில் 200 நாடுகள் ஒப்பந்தம் :

புதைபடிம எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்று துபை பருவநிலை பாதுகாப்பு மாநாட்டில் சுமாா் 200 நாடுகள் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தை மேற்கொண்டன. 

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபையில் ஐ.நா.வின் 28-ஆவது பருவநிலை பாதுகாப்பு மாநாடு கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வந்தது. இதன் முடிவில் எரிசக்திக்காக நிலக்கரி பயன்பாட்டைக் குறைக்க வலியுறுத்தும் சா்வதேச ஒப்பந்தம் முதல் முறையாக மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி புவி வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்ஷியஷுக்குள் கட்டுப்படுத்தும் வகையில் பசுமைஇல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும், இதற்காக புதைபடிம எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பது உள்பட 8 அம்ச திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீராங்கனை

நிகழாண்டில் அமெரிக்காவின் 19 வயது டென்னிஸ் வீராங்கனையான கோகோ காஃப் (ரூ.189 கோடி) அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீராங்கனையாக  திகழ்கிறார்.


டிசம்பர் 14 - தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினம்

தினசரி வாழ்வில் ஆற்றலின் அவசியம் மற்றும் அதன் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த டிசம்பர் 14 அன்று அனுசரிக்கப்படுகிறது. 1991 ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 14 ஆம் தேதி, மின்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள எரிசக்தி திறன் பணியகத்தால் (BEE) கொண்டாடப்படுகிறது.

 

நடப்பு விவகார வினாடிவினா - டிசம்பர், 2023/Current Affairs Quiz - December, 2023


விருதுகள் கௌரவங்கள் 2023 :
MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2023:

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :

Post a Comment

0Comments

Post a Comment (0)