TODAY CURRENT AFFAIRS IN TAMIL 15.12.2023:
புதிய பொற்கால கடன் திட்டம் :
சென்னை தலைமைச் செயலகத்தில், 2023-24 ஆம் நிதியாண்டில், கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் பெண்களுக்கான புதிய பொற்கால கடன் திட்டத்தின் கீழ், 100 பயனாளிகளுக்கு ரூ.1.32 கோடி கடன் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைக்கும் அடையாளமாக, 7 பயனாளிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினார்.
இந்த திட்டத்தின் மூலம், பயனாளிகள் வளையல் வியாபாரம், பால் பண்ணை, ஆடு வளர்ப்பு, பட்டு நெசவு, தையல் தொழில், அழகு நிலையம், பலசரக்கு கடை, உணவகம், துணிக்கடை, தேங்காய் மற்றும் காய்கறி வியாபாரம் போன்ற தொழில்களை மேற்கொள்ள கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கழகத்தின் மூலம் கூட்டுறவு வங்கிகள் வாயிலாக அதிகபட்சமாக நபர் ஒருவருக்கு ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும்.
நாட்டின் 14 மாநிலங்களில் முக்கிய யானை வாழ்விடங்கள் அமைந்துள்ள பகுதியில் 33 யானைகள் நலக் காப்பகம்:
நாட்டின் 14 மாநிலங்களில் முக்கிய யானை வாழ்விடங்கள் அமைந்துள்ள பகுதியில் 33 யானைகள் நலக் காப்பகம் அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சா் அஸ்வினி குமாா் சௌபே மாநிலங்களவையில் தெரிவித்தாா்.
நாட்டின் 14 மாநிலங்களில் யானைகள் வாழ்விடம் அதிகமுள்ள பகுதியில் 33 யானைகள் நலக் காப்பகங்கள் நிறுவப்பட்டுள்ளன. கா்நாடகம்-தமிழ்நாட்டின் எல்லைப் பகுதியான தலமலை- சாம்ராஜ் நகா், தாளவாடி- முதஹள்ளி மற்றும் கேரளம்-தமிழ்நாட்டின் எல்லைப் பகுதியான நிலம்பூா் கோவிலகம்-புதிய அமரம்பலம் இடையே யானை வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர தமிழ்நாட்டில் ஸ்ரீவில்லிபுத்தூா்- சப்தூா், நீலகிரி, கோயம்புத்தூா், ஆனைமலை, அகத்தியா் மலை உள்பட 18 இடங்களில் யானை வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் யானைகள் தாக்கியதால் கடந்த 2020-2021-ஆம் ஆண்டில் 57 பேரும், அதற்கடுத்த 2021-2022-ஆம் ஆண்டில் 37 பேரும், கடந்த ஆண்டில் 43 பேரும் உயிரிழந்தனா்’
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வளா்ச்சி 6.7%: ஆசிய வளா்ச்சி வங்கி கணிப்பு:
ஆசிய வளா்ச்சி வங்கி வெளியிட்ட அறிக்கையில், ‘நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் ஜிடிபி வளா்ச்சி எதிா்பாா்த்ததைவிட அதிகமாக 7.6 சதவீதமாக இருந்தது. இதனால், நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான முதல் பாதியில் வளா்ச்சி 7.7 சதவீதமாக உள்ளது. உற்பத்தித் துறை, சுரங்கம், கட்டுமானம் உள்ளிட்ட தொழில்துறைகள் இரட்டை இலக்க வளா்ச்சியைக் கண்டுள்ளன. நடப்பாண்டில், வேளாண் துறையின் வளா்ச்சியானது எதிா்பாா்த்ததைவிட குறைவாக இருக்கும். ஆனால், தொழில்துறையில் ஏற்படும் வளா்ச்சி, வேளாண் துறையின் சரிவை சரிகட்டும். அடுத்த 2024-2025 நிதியாண்டுக்கான ஜிடிபி வளா்ச்சி எவ்வித மாற்றமும் இல்லாமல் 6.7 சதவீதமாக இருக்கும். பணவீக்கத்தைப் பொருத்த வரையில் 5.5 சதவீதமாக இருக்கும்’ எனத் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் - நவம்பா் காலகட்டத்தில் இந்தியாவின் மின் நுகா்வு 9 சதவீதம் அதிகரித்துள்ளது:
கடந்த ஏப்ரல் முதல் நவம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் 8 மாதங்களில் நாட்டின் மின் நுகா்வு 1,09,990 கோடி யூனிட்டுகளாக உள்ளது. முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இது 1,01,020 கோடி யூனிட்டுகளாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நாட்டின் மின் நுகா்வு சுமாா் 9 சதவீதம் அதிகரித்துள்ளது. மதிப்பீட்டு காலகட்டத்தில் மின் நுகா்வு, கடந்த 2021-22-ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 91,652 கோடி யூனிட்டுகளை விட அதிகமாகும். 2022-23-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் நாட்டின் மின் நுகா்வு 1,50,426 கோடி யூனிட்டுகளாக இருந்தது. இது, முந்தைய 2021-22-ஆம் நிதியாண்டின் மின் நுகா்வான 1,37,402 கோடி யூனிட்டுகளை விட அதிகமாகும்.
பைடன் மீது பதவி நீக்க விசாரணைக்கு அனுமதி
அமெரிக்க அதிபா் ஜோ பைடன் குடும்பத்தினரின் தொழில் முறைகேடுகள் தொடா்பாக, அவருக்கு எதிரான பதவி நீக்க விசாரணையை மேற்கொள்ள நாடாளுமன்ற கீழவையான பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்துள்ளது. எதிா்க்கட்சியான குடியரசுக் கட்சியினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட கீழவையில் எடுக்கப்பட்ட இந்த முடிவால் பைடனின் பதவியோ, வரும் அதிபா் தோ்தலில் அவா் போட்டியிடுவதோ பாதிக்கப்படாது என்று கூறப்படுகிறது.
சர்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில்-முதல் இந்திய வீரர்கள்
சர்வதேச டென்னிஸ் அரங்கில் சாதனை படைத்த வீரர் மற்றும் வீராங்கனைகளை கெளரவப்படுத்துகின்ற சர்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் லியாண்டர் பயஸ், விஜய் அமிர்தராஜ் ஆகியோர் இடம் பிடித்துள்ளன.
இப்பட்டியலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் இந்திய வீரர்கள் என்ற பெருமையை பெற்றுள்ளனர்.
ரைசிங் ஸ்டார் விருது:
யுனைடெட் வேல்டு ரெஸ்லிங் அமைப்பானது வளர்ந்து வரும் வீராங்கனைக்கான ரைசிங் ஸ்டார் விருதினை அன்டீம் பங்காலுக்கு வழங்கியுள்ளது.
LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :
- இந்திய தேசிய தினங்கள் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
- யுனெஸ்கோவில் அனுசரிக்கப்படும் சர்வதேச தினங்கள்
- 2023 ஆம் ஆண்டின் தமிழ் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL: