TODAY CURRENT AFFAIRS IN TAMIL 17.12.2023:
பட்டதாரி ஆசிரியா்களுக்கு 5 ஆண்டுகளுக்கு பணியிட மாறுதல் கிடையாது
தமிழகத்தில் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தருமபுரி மாவட்டங்களில் புதிதாக நியமிக்கப்படவுள்ள பட்டதாரி ஆசிரியா்களுக்கு 5 ஆண்டுகளுக்கு பணியிட மாறுதல் கிடையாது என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தின் வட மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளில் கடந்த பல ஆண்டுகளாக பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள் அதிக அளவு காலியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
அயலக தமிழர் தினம் 2024 / Neighboring Tamil Day
2024 ஜனவரியில் இலக்கியம், கல்வி உள்ளிட்ட 8 பிரிவுகளில் சிறப்பாக செயல்படும் அயலக தமிழர்களுக்கு விருதானது வழங்கப்பட உள்ளது.
இவ்விருதானது ஜனவரி 11, 12-ல் நடைபெறும் மூன்றாம் அயலக தமிழர் தினம் 2024 விழாவில் வழங்கப்பட உள்ளது.
இவ்விழா தமிழ் வெல்லும் என்ற கருப்பொருளில் நடத்தப்பட உள்ளது.
உற்பத்தி துறை முதலீட்டிற்ககான சாதகமான இந்திய மாநிலங்களின் தரவரிசை பட்டியல் 2023:
தமிழகமானது உற்பத்தி துறை முதலீட்டிற்ககான சாதகமான இந்திய மாநிலங்களின் தரவரிசை பட்டியலில் மூன்றாம் இடத்தினை பிடித்துள்ளது.
இப்பட்டியலில் முதல் இடத்தினை குஜாரத்தும், இரண்டாம் இடத்தினை மகாராஷ்டிராவும் பிடித்துள்ளன
கேரிங்க்ஸ் (CARINGS) :
குழந்தைகளை தத்தெடுக்கும் நடைமுறைகளை எளிதாக்க கேரிங்க்ஸ் (CARINGS) என்ற இணையதத்தினை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
முகம்மது பின் அப்துல்லா மசூதி:
உத்திபிரதேசம், தனிப்பூர் கிராமத்தில் கட்டப்படும் புதிய மசூதிக்கு புனித மெக்காவின் இமாம் அடிக்கல் நாட்டினார்.
இம் மசூதியானது பாபர் மசூதிக்கு மாற்றாக கட்டப்படுகிறது.
இம்மசூதிக்கு முகம்மது பின் அப்துல்லா மசூதி என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
Voice
Message-க்கு கட்டுப்பாடு
பயனர்களின் தனியுரிமை மற்றும் செய்திகளின் பாதுகாப்பை மேம்படுத்த வாட்ஸ்அப்-ல் Voice Message-க்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில் View Once அம்சம் View Note-களுக்கு அறிமுகம் செய்யப்படுகிறது.
ஏற்கனவே வாட்ஸ்அப்-ல் பகிரப்படும் புகைப்படங்களுக்கு இந்த அம்சம் உள்ளது.
View Once அம்சத்தினால் பயனர்கள் அனுப்பும் குரல் செய்திகள் ஒருமுறை கேட்க முடியும்.
இப்பதிவுகளை ஷேர் செய்யவோ, பதிவு செய்யவோ முடியாது
உலகின் மிகப்பெரிய வைர வர்த்தக மையம் (Surat Diamond Bourse) :
குஜராத்தின் சூரத்தில் பென்டகன் கட்டத்தை விட பெரிய அளவில் ரூ.3,200 கோடி மதிப்பில் உலகின் மிகப்பெரிய வைர வர்த்தக மையம் (Surat Diamond Bourse) தொடங்கப்பட்டுள்ளது.
32 ஏக்கர் பரப்பளவில் 15 மாடிகளுடன் 9 செவ்வக வடிக கட்டங்களாக கட்டப்பட்டுள்ளது.
எலக்ட்ரானிக் மூல தரவு பரிமாற்ற முறை (EODES):
விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தின் கீழ் சரக்குகளை விரைவாக அகற்ற இந்தியாவும், கொரியாவும் இணைந்து எலக்ட்ரானிக் மூல தரவு பரிமாற்ற முறைமை (EODES)-யை தொடங்க உள்ளன.
EODES – Electronic
Origin Data Exchange System
செங்கடல் பயணங்களை நிறுத்திவைத்த கப்பல் நிறுவனங்கள்:
டென்மாா்க்கில் தலமையகத்தைக் கொண்டு செயல்பட்டு வரும் முன்னணி கப்பல் போக்குவரத்து நிறுவனமான மேயா்ஸ்க் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் தொடா்ந்து ஏவுகணைத் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றன. எனவே, அந்தக் கடல் பாதை வழியாக நிறுவனத்தின் கப்பல்கள் இயக்கப்படுவதை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, ஜொ்மனியைய் சோ்ந்த ஹபாக்-லாயிட் உள்ளிட்ட முன்னணி கடல்வழி சரக்குப் போக்குவரத்து நிறுவனங்கள் இதே முடிவை எடுத்துள்ளன.ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி இன கிளா்ச்சிப் படையினா் யேமனின் கணிசமான பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனா்.இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போா் தொடங்கியதிலிருந்து, தங்கள் நாட்டையொட்டி செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது அவா்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகின்றனா்.
500
விக்கெட்டுகளை எடுத்த சுழற்பந்துவீச்சாளர்:
ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 14-இல் தொடங்கியது.
இந்த டெஸ்ட் தொடரில் புதிய சாதனையை ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளரான நாதன் லயன் நிகழ்த்தியுள்ளார்.
4-ஆம் நாள் ஆட்டத்தில் லயன் 27.1 வது ஓவரில் பஹீம் அஸ்ரஃப் விக்கெட்டினை எடுத்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை எடுத்த சுழற்பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
ஜூனியர் ஆடவர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி 2023:
கோலாம்பூரில் நடைபெறும் ஜூனியர் ஆடவர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் ஸ்பெயின் அணி 3வது இடத்தையும், இந்திய அணி 4வது இடத்தையும் பிடித்துள்ளன.
விஜய் ஹசாரே கோப்பை
சாம்பியன் பட்டம் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் ராஜஸ்தான்- அரியானா அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நடைபெற்றது
முதலில் பேட்டிங் செய்த அரியானா அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் குவித்தது.
ராஜஸ்தான் அணி 48 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 257 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் விஜய் ஹசாரே கோப்பை இறுதிப்போட்டியில் அரியானா அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது
நடப்பு விவகார வினாடிவினா - டிசம்பர், 2023/Current Affairs Quiz - December, 2023
விருதுகள் கௌரவங்கள் 2023 :
MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2023:
LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :
SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL: