TODAY CURRENT AFFAIRS IN TAMIL 18.12.2023:

TNPSC PAYILAGAM
By -
0


  

TODAY CURRENT AFFAIRS IN TAMIL 18.12.2023:


மக்களவை குளிர்கால கூட்டத்தொடரில் சிறப்பு பார்வையாளராக இலங்கை நாடாளுமன்ற தலைவர்

மக்களவை குளிர்கால கூட்டத்தொடரில் சிறப்பு பார்வையாளராக இலங்கை நாடாளுமன்ற தலைவர் பங்கேற்றுள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன

இந்த நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தில் அவைத் தலைவர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான குழுவினர் மக்களவையில்  சிறப்புப் பார்வையாளர்களாக பங்கேற்றுள்ளனர்.

மக்களுடன் முதல்வா்’ :

பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீா்வு காணும் வகையில்மக்களுடன் முதல்வா்என்ற புதிய திட்டத்தை முதல்வா் மு..ஸ்டாலின் கோவையில் 18.12.2023 தொடங்கிவைத்து மக்களிடம் மனுக்களை பெற்றார்.

KEY NOTES :  Makkaludan Muthalvar / மக்களுடன் முதல்வர்திட்டம்

கேரளத்தில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கரோனா:

கேரளத்தில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கரோனா தொற்றால் கவலையடையத் தேவையில்லை என்று அந்த மாநில சுகாதாரத துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் தெரிவித்தாா்

லக்ஸம்பா்கில் சில மாதங்களுக்கு முன்பு பிஏ.2.86 வகை கரோனாவின் திரிபான ஜெஎன்.1’ வகை கரோனா கண்டறியப்பட்டது. ‘ஜெஎன்.1’ வகையானது வேகமாகப் பரவுவதோடு, நோய்த் தடுப்பாற்றலையும் ஊடுருவுமென கூறப்படுவதால், கரோனா முன்னெச்சரிக்கை நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு பல்வேறு நாடுகளில் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வகைத் தொற்று பல்வேறு நாடுகளுக்குப் பரவி வருகிறது

இந்நிலையில், கேரளத்தைச் சோ்ந்த 79 வயது பெண்ணுக்கு ‘ஜெஎன்.1’ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது கரோனா தொடா்பான புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டாம் கட்ட காசி தமிழ் சங்கமம் :

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் இரண்டாவது காசி-தமிழ்ச் சங்கம நிகழ்வை பிரதமா் மோடி 17.12.2023 தொடங்கிவைத்தாா்.

இரண்டாம் கட்ட காசி தமிழ் சங்கமம் வரும் டிசம்பர் 17 முதல் 30 வரை காசியில் நடைபெறுகிறது

மத்திய கலாச்சார அமைச்சகம், உத்தரப்பிரதேச அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் குறிப்பிட்ட துறைகள் பங்கேற்கின்றன. கடந்த ஆண்டு நடைபெற்ற முதல் கட்ட காசி தமிழ் சங்கமத்தின்போது கிடைத்த நற்பெயரைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டும் சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடிதமிழ்நாட்டில் இதனை ஏற்பாடு செய்யும் நிறுவனமாக செயல்படுகிறது. உத்தரப்பிரதேசத்தில் னாரஸ் இந்து பல்கலைக்கழகம் இதனை நடத்தும் நிறுவனமாக செயல்படுகிறது.

ஜிஎஸ்டி கணக்குத் தாக்கல் செய்வோா் 65% அதிகரிப்பு:

ஐந்து ஆண்டுகளில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 65 சதவீதம் அதிகரித்துள்ளது என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டி விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டதன் விளைவாக, தகுதிவாய்ந்தவா்கள் ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்யும் விகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் வரையிலான 5 ஆண்டுகளில், ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 1.13 கோடியாக சுமாா் 65 சதவீதம் உயா்ந்துள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரலில் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்து வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 1.06 கோடியாக இருந்தது. இது நிகழாண்டு ஏப்ரல் நிலவரப்படி 1.40 கோடியாக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஷ்ணுபுரம் விருது 2023:

கோவை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சாா்பில் ஆண்டுதோறும் சிறந்த இலக்கிய ஆளுமைக்கு விஷ்ணுபுரம் இலக்கிய விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 14-ஆம் ஆண்டு விருது வழங்கும் விழா கோவை, ஆா்.எஸ்.புரம் ராஜஸ்தானி சங்க அரங்கத்தில் நடைபெற்றது

விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட அமைப்பாளா் அரங்கசாமி வரவேற்றாா். எழுத்தாளா் ஜெயமோகன் தலைமை வகித்தாா். எழுத்தாளரும், வரலாற்று ஆய்வாளருமான ராமச்சந்திர குஹா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, எழுத்தாளா் யுவன் சந்திரசேகருக்கு 2023-ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது, சான்றிதழ், ரூ.5 லட்சத்துக்கான காசோலை ஆகியவற்றை வழங்கினாா். 


டிசம்பர் 2023 இன் முக்கியமான நாட்கள் மற்றும் தேதிகளின் பட்டியல்

டிசம்பர் 18 - இந்தியாவில் சிறுபான்மையினர் உரிமை தினம்

இந்தியாவில் சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் டிசம்பர் 18 அன்று இந்தியாவில் சிறுபான்மையினர் உரிமைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. 

இந்த நாள் மாநிலத்தில் சிறுபான்மையினரின் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளில் கவனம் செலுத்துகிறது. இந்த நாளில் பல பிரச்சாரங்கள், கருத்தரங்குகள் மற்றும் நிகழ்வுகள் நடத்தப்பட்டு, அவற்றைப் பற்றி மக்களுக்குத் தெரிவிக்கவும், அறிவூட்டவும் நடத்தப்படுகின்றன.

டிசம்பர் 18 - சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம்

புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக டிசம்பர் 18ஆம் தேதி சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் கொண்டாடப்படுகிறது.

புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பு (IOM) சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து, பாதுகாப்பான துறைமுகத்தை அடையும் போது உயிரை இழந்த அல்லது காணாமல் போன புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளை நினைவுகூருமாறு அழைப்பு விடுக்கிறது.


நடப்பு விவகார வினாடிவினா - டிசம்பர், 2023/Current Affairs Quiz - December, 2023

விருதுகள் கௌரவங்கள் 2023 :

MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2023:

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :

Post a Comment

0Comments

Post a Comment (0)