TODAY CURRENT AFFAIRS IN TAMIL 21.12.2023:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அட்டவணை 2024- வெளியிட்டுள்ளது.
தமிழக அரசுத் துறைகளுக்கு 2024ஆம் ஆண்டில் 18 வகையான பணிகளுக்கு சுமார் 3,772 பேர் போட்டித் தேர்வுகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2024-ஆம் ஆண்டில் நடத்தவுள்ள போட்டித்தேர்வுகளின் அட்டவணையை வெளியிட்டுள்ளது. மொத்தம் 18 வகையான பணிகளுக்கு போட்டித் தேர்வுகளை அறிவித்துள்ள ஆணையம், அவற்றில் 15 வகை பணிகளுக்கு 3439 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று அறிவித்துள்ளது. மீதமுள்ள 4 போட்டித் தேர்வுகளில் நான்காம் தொகுதி பணிகளுக்கானத் தேர்வு கடந்த நவம்பர் மாதமே அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட தேர்வாணையம் தவறி விட்ட நிலையில், அத்தேர்வுக்கான அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியிட்டு, ஜூன் மாதம் போட்டித்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
ஜிபிஎஸ் மூலம் சுங்கக்கட்டணம் வசூல்: மாா்ச் முதல் அமல்:
தேசிய நெஞ்சாலைகளில் தற்போதுள்ள சுங்கச்சாவடிகளுக்கு மாற்றாக புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய ஜிபிஎஸ் மூலம் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறையை அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் முதல் மத்திய அரசு அமல்படுத்தவுள்ளதாக மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி புதன்கிழமை தெரிவித்தாா். இதன்மூலம் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படுவதுடன், வாகனங்கள் பயணித்த தொலைவுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்க முடியும் எனவும் தெரிவித்தாா்.
இசைப் பேரறிஞர் பட்டம்
பாடகர் டி.கே.எஸ்.கலைவாணனுக்கு இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கபடுகிறது.
ஐனவரி 1-12 வரை நடைபெறவுள்ள இசைச் சங்கத்தின் 81ஆவது ஆண்டு விழாவில் போது வழங்கப்படுகிறது..
தானியங்கி இயந்திரங்கள் நடத்தும் உலகின் முதல் உணவகம் :
முழுக்க முழுக்க தானியங்கி இயந்திரங்களை மட்டுமே கொண்டு செயல்படும் உணவகம் கலிஃபோர்னியாவில் திறக்கப்பட்டுள்ளது. முழுவதும் தானியங்கி இயந்திரங்கள் நடத்தும் உலகின் முதல் உணவகம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது இந்த உ ணவகம்.
தேசிய விளையாட்டு விருதுகள் 2023:
2023-ஆம் ஆண்டிற்கான மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது உள்ளிட்ட விருதுகளைப் பெறும் விளையாட்டு வீரர்களின் விவரங்கள் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது.
"ப்ளூ கிறிஸ்மஸ்" என்று அழைக்கப்படும் மேற்கத்திய கிறிஸ்தவ நடைமுறையானது ஆண்டின் மிக நீண்ட இரவில் அல்லது அதற்கு அருகில் நடைபெறுகிறது, இது பொதுவாக டிசம்பர் 21 (குளிர்கால சங்கிராந்தி) ஆகும்.
விடுமுறைக் காலத்தில் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தேடுவதில் சிரமப்படும் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களுக்கு ஆறுதல் அளிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
டிசம்பர் 21 - உலக சேலை தினம்உலக புடவை தினத்தன்று இந்த பாரம்பரிய ஆடைகளின் நேர்த்தியை அங்கீகரித்து கொண்டாடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 21 அன்று அனுசரிக்கப்படுகிறது. புடவைகள் இந்திய கைவினைஞர்களால் செய்யப்பட்ட மிக நேர்த்தியான, அழகான மற்றும் அழகான பரிசுகளில் ஒன்றாகும்.
நடப்பு விவகார வினாடிவினா - டிசம்பர், 2023/Current Affairs Quiz - December, 2023
விருதுகள் கௌரவங்கள் 2023 :
LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :
- இந்திய தேசிய தினங்கள் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
- யுனெஸ்கோவில் அனுசரிக்கப்படும் சர்வதேச தினங்கள்
- 2023 ஆம் ஆண்டின் தமிழ் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL: