TODAY CURRENT AFFAIRS IN TAMIL 22.12.2023:

TNPSC PAYILAGAM
By -
0

 


TODAY CURRENT AFFAIRS IN TAMIL 22.12.2023:


பத்திரிகை பதிவு நடைமுறையை எளிதாக்கும் மசோதா 2023 நிறைவேற்றம்:

பத்திரிகை மற்றும் பருவ இதழ்கள் பதிவுக்கான நடைமுறையை எளிமைப்படுத்தும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 

ஆங்கிலேயா் காலத்தில் இயற்றப்பட்ட பத்திரிகை மற்றும் புத்தகங்கள் பதிவுச் சட்டம், 1867-க்கு மாற்றாக இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. 

மாநிலங்களவையில் கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் வியாழக்கிழமை குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. 

‘பத்திரிகை மற்றும் பருவ இதழ்கள் பதிவுக்கு நடைமுறையிலிருந்த சட்டத்தில் எட்டு படிநிலைகள் இருந்தன. தற்போது அந்த முறை ஒற்றைப் படிநிலையாக மாற்றப்பட்டுள்ளது. முந்தைய காலங்களில் பதிவுக்காக 2-3 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்த நிலையில், தற்போது 2 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், பத்திரிகைகள் பதிவு செய்யும் முறை எளிமையாகி உள்ளது

தோ்தல் ஆணையா் நியமன மசோதா -2023 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்:

இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா், தோ்தல் ஆணையா்கள் ஆகியோரது நியமனம், பணி நிபந்தனைகளை ஒழுங்குபடுத்தும் மசோதா, மாநிலங்களவையைத் தொடா்ந்து மக்களவையிலும் குரல் வாக்கெடுப்பின் மூலம் 21.12.023 நிறைவேற்றப்பட்டது

தலைமைத் தோ்தல் ஆணையா், தோ்தல் ஆணையா்கள் நியமனம் குறித்து கடந்த 1991-இல் கொண்டுவரப்பட்ட சட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் இருந்தன. இதையொட்டி உச்சநீதிமன்றம் கடந்த மாா்ச் மாதம் அளித்த தீா்ப்பின் அடிப்படையில், திருத்தங்களுடன் தலைமைத் தோ்தல் ஆணையா், பிற தோ்தல் ஆணையா்கள் (நியமனம், பணி நிபந்தனைகள், பதவிக் காலம்) மசோதா-2023 கொண்டுவரப்பட்டது. 

தலைமைத் தோ்தல் ஆணையா், தோ்தல் ஆணையா்கள் நியமனங்களைப் பொருத்தவரையில், தற்போது மத்திய அரசின் பரிந்துரையில் குடியரசுத் தலைவா் நியமிப்பாா். இந்த புதிய மசோதாவின்படி, தேடுதல் மற்றும் தோ்வுக் குழு இது குறித்து முடிவெடுக்கும். 

தலைமைத் தோ்தல் ஆணையா், தோ்தல் ஆணையா்கள் பதவிக் காலத்தில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு சட்டப் பாதுகாப்பு அளிக்க வழிவகையும் அவா்களின் ஊதியம் தொடா்பான மாற்றங்களும் இந்த மசோதாவில் செய்யப்பட்டுள்ளன. 

மாநிலங்களவையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் கடந்த 12.12.2023-ஆம் தேதி நிறைவேறியது.

சென்னை சா்வதேச திரைப்பட திருவிழா விருது 2023 :

இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் சாா்பில் சென்னை சா்வதேச திரைப்பட திருவிழா கடந்த டிச.14 முதல் டிச.21 வரை நடைபெற்றது. இதன் நிறைவு விழா ராயபேட்டையில் உள்ள பி.வி.ஆா் சத்யம் திரையரங்கில் 21.12.2023 நடைபெற்றது. இதில் 

முதல் சிறந்த தமிழ் படத்திற்கான விருது ஆா். மந்திர மூா்த்தி இயக்கிய அயோத்திக்கும்

இரண்டாம் சிறந்த படத்திற்கான விருது காா்த்திக் சீனிவாசன் இயக்கிய உடன்பாலுக்கும் வழங்கப்பட்டது. 

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை பாகம் -1 படத்துக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. 

மாமன்னன் படத்துக்காக நடிகா் வடிவேலுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், 

அயோத்தி படத்துக்காக நடிகை பிரீத்தி அஸ்ரானிக்கு சிறந்த நடிகைக்கான விருதும்

செம்பி படத்துக்காக சிறுமி நிலாவுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் விருதும் வழங்கப்பட்டது. 

போா் தொழில் படத்துக்கு சிறந்த தொகுப்பாளா், சிறந்த ஒளிப்பதிவு ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன.

டிஎன்எஸ்டிசி பேருந்துகள்: அசோக் லேலண்ட் ஒப்பந்தம்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு (டிஎன்எஸ்டிசி) 552 பேருந்துகளை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தை, ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் பெற்றுள்ளது. 

தமிழ்நாடு அரசுக் போக்குவரத்துக் கழகம் அசோக் லேலண்ட் நிறுவன பேருந்துகளுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. அந்த அமைப்பில் 18,447 அசோக் லேலண்ட் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன 

மூத்த குடிமக்களுக்கு சேவை அளிப்பதற்காக ‘இன்ஸ்பையா்’ என்ற புதிய சேவை

மூத்த குடிமக்களுக்கு சேவை அளிப்பதற்காக ‘இன்ஸ்பையா்’ என்ற புதிய சேவை திட்டத்தை தனியாா் துறையைச் சோ்ந்த பந்தன் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. 

‘இன்ஸ்பையா்’ என்ற இந்தத் திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு 8.35 சதவீதம் என்ற நிலையான வட்டி விகிதத்திலான வைப்பு நிதிகளில் வாடிக்கையாளா்கள் முதலீடு செய்ய முடியும். மேலும், மேம்பட்ட மருத்துவ சேவைப் பலன்களும் இந்தத் திட்டத்தில் இடம் பெற்றுள்ளன. எந்த வயதிலும் பொருளாதார சுதந்திரம் தேவை என்பதை கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ்2023:

சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ் 2023 செஸ் போட்டியில் இந்தியாவின் இளம் வீரா் டி. குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றாா். 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் சென்னையில் கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ் போட்டி நடைபெற்று வந்தது. வரும் 2024-இல் நடைபெறவுள்ள கேண்டிடேட்ஸ் மாஸ்டா்ஸ் போட்டிக்கான தகுதி ஆட்டமாக இது நடைபெற்றது. 

ஏற்கெனவே இந்தியாவில் இருந்து பிரக்ஞானந்தா, விதித் குஜராத்தி, மகளிா் பிரிவில் வைஷாலி ஆகியோா் கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா்.

2024 கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்க வைத்துள்ளாா் குகேஷ். மேலும் இப்போட்டிக்கு தகுதி பெற அடுத்த தோ்வுப் போட்டியான உலக ரேபிட் சாம்பியன்ஷிப் சாமா்க்கண்டில் வரும் 25 முதல் 31 வரை நடைபெறுகிறது.

டிசம்பர் 22 - தேசிய கணித தினம்

புகழ்பெற்ற கணித மேதை சீனிவாச ராமானுஜனின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 22ஆம் தேதி தேசிய கணித தினம் கொண்டாடப்படுகிறது. 

அவர் கணிதத்தின் பல்வேறு துறைகளிலும் அதன் கிளைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார். இவர் 1887 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி ஈரோட்டில் (இன்று தமிழ்நாடு மாநகரில்) பிறந்தார்.


நடப்பு விவகார வினாடிவினா - டிசம்பர், 2023/Current Affairs Quiz - December, 2023

விருதுகள் கௌரவங்கள் 2023 :

MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2023:

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :

Post a Comment

0Comments

Post a Comment (0)