TODAY CURRENT AFFAIRS IN TAMIL 23.12.2023:
லீப் எரிக்சன் லூனார் விருது :
சந்திரயான் -3 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய இஸ்ரோவுக்கு, ஐஸ்லாந்து நாட்டின் உயரிய விருதான லீப் எரிக்சன் லூனார் விருது வழங்கப்பட்டு உள்ளது.நிலவின் தென் பகுதியில் ஆய்வு செய்வதில் வல்லரசு நாடுகள் இடையே கடும் போட்டி நிலவியது. ஆனால், சந்திரயான் 3 திட்டம் மூலம் இந்தியா அந்த சாதனையை படைத்தது.
இஸ்ரோவுக்கு ஐஸ்லாந்து நாடு உயரிய பரிசை வழங்கி கவுரவித்துள்ளது. அந்நாட்டின் ஹூசாவிக் நகர ஆய்வு அருங்காட்சியகம், இஸ்ரோவுக்கு 2023 - லீப் எரிக்சன் லூனார் என்ற உயரிய விருதை வழங்கி உள்ளது. இதனை, இஸ்ரோ சார்பில் ஐஸ்லாந்துக்கான இந்திய தூதர் பி.ஷியாம் பெற்றுக்கொண்டார். இந்த விருதை வழங்கியதற்காக, இஸ்ரோ தலைவர் சோம்நாத் நன்றி தெரிவித்து செய்தி அனுப்பி உள்ளார்.இந்த விருதை ஹூசாவிக் நகர அருங்காட்சியகம் கடந்த 2015ம் ஆண்டு முதல் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
புணே சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான படங்கள்
22-வது புணே சர்வதேச திரைப்பட விழா வருகின்ற ஜனவரி 18 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த விழாவில் திரையிட இயக்குநர் வெற்றிமாறனின் ‘விடுதலை’, சீனு ராமசாமியின் ‘இடி முழக்கம்’, ஜெயப்பிரகாஷின் ‘காதல் என்பது பொதுவுடமை’ ஆகிய மூன்று தமிழ்ப் படங்களும் தேர்வாகியுள்ளன. அதேபோல், மலையாள மொழியில் மம்முட்டி, ஜோதிகா நடிப்பில் வெளியான ‘காதல் தி கோர்’, ஜோஜி ஜார்ஜ் நடித்த ‘இரட்டா’ ஆகிய படங்களும் திரையிடப்படவுள்ளன.
ஆதித்யா-எல்1 விண்கலம் ஜனவரி 6-ஆம் தேதி இலக்கை அடையும்:
சூரியனை ஆய்வு செய்வதற்காக 02/09/2023 ஆம் தேதி முற்பகல் 11.50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இஸ்ரோவால் பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் ஆதித்யா-எல்1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. சுமாா் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு புவியின் தாழ்வட்டப்பாதையில் அந்த விண்கலம் நிலைநிறுத்தப்பட்டது.
இந்தநிலையில், சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா-எல்1 விண்கலம் வரும் 2024 ஜனவரி 6-ஆம் தேதி அதன் இலக்கான லெக்ராஞ்சியன் நிலைப்புள்ளியை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
சாஸ்த்ரா-ராமானுஜன் விருது
கும்பகோணத்தில் நடைபெற்ற 19வது சீனிவாச ராமானுஜன் சர்வதேச கணிதவியல் மாநாட்டில் கலிபோர்னியாவின் பெர்க்லி பல்கலைக்கழகப் பேராசியர்களான யுன் கிங்டாங்கிற்கு சாஸ்த்ரா-ராமானுஜன் விருது 2022-யும், ருயிக்சி யாங் ஜாங்கிற்கு சாஸ்த்ரா-ராமானுஜன் விருது 2023-யும் வழங்கப்பட்டுள்ளது.
கணித மேதை ராமானுஜன் பிறந்த நாளான டிசம்பர் 22-ல் கொண்டாடப்பட்டது.
மக்களைத் தேடி மருத்துவம்
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 1.67 கோடி பேர் சிகிச்சை பெற்றுள்ளதாக தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
05.08.2021-ல் அனைவருக்கும் தரமான கல்வி மற்றும் மருத்துவ வசதிகளை வழங்கும் நோக்கத்துடன் மக்களைத் தேடி மருத்துவமானது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடங்கப்பட்டது.
ஓட்டுநர்களுக்கு இலவச தேநீர் வழங்கும் திட்டம்:
சாலைப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை தடுக்கும் விதமாக ஓட்டுநர்களுக்கு இலவச தேநீர் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
வருகின்ற ஜனவரி 1 முதல் 7-ஆம் தேதி வரை சாலைப் பாதுகாப்பு வாரம் அனுசரிக்கப்படுகிறது. இந்த வாரத்தில் சாலைப் பாதுகாப்பு குறித்த பல்வேறு விழிப்புணர்வுகளை போக்குவரத்து துறை மேற்கொள்ளும். அந்த வகையில், ஒடிசாவில் வாகன ஓட்டுநர்களுக்கு இலவசமாக தேநீர் வழங்கப்படும் என்று போக்குவரத்து துறையினர் அறிவித்துள்ளனர்.
ஒடிசாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பேருந்து, லாரி போன்ற வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு இன்றுமுதல் ஜனவரி 7-ஆம் தேதி வரை இலவசமாக தேநீர் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
உலகின் மிக அழகான விமான நிலையம்:
உலகின் மிக அழகான விமான நிலைய பட்டியலுக்கு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் தேர்வாகியுள்ளது.
மேலும் யுனெஸ்கோவின் 2023 பிரிக்ஸ் வெர்சாய்ஸில் சிறப்பு பரிசையும் வென்றுள்ளது.
கர்நாடகாவின் பெங்களூருவில் அமைந்துள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் கர்நாடாகவின் முதல் சூரிய சக்தி விமான நிலையம் ஆகும்.
UNODC-அறிக்கை 2023
UNODC அமைப்பானது 2023 உலகளாவிய கொலை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையாது இந்தியாவில் ஐந்து கொலைகளில் ஒரு கொலை தண்ணீருக்காக நிகழ்த்தப்படுவதாக தெரிவிக்கிறது.
1997ஆம் ஆண்டில் UNODC (United Nations Office on Drugs and Crime) அமைப்பான ஏற்படுத்தப்பட்டது.
குளிர்கால நாடகப் பட்டறை :
6 முதல் 10 முதல் வரையிலான அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நாடக கலை, குறியீட்டு முறை, ரோபாட்டிக்ஸ் போன்றவற்றை பயிற்றுவிக்க தமிழக அரசு குளிர்கால நாடகப் பட்டறை என்னும் திட்டத்தினை தொடங்க உள்ளது.
Paat-Mitro என்னும் மொபைல் செயலி:
மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் Paat-Mitro என்னும் மொபைல் செயலியை உருவாக்கியுள்ளது.
சணல் பற்றி விவரங்களையும், சணலிற்கான அரசு திட்டங்களையும் அறியும் நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
விமான சேவை
இந்தியாவில் 15 விமான நிலையங்களில் 164 விமானங்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா தெரிவித்துள்ளார்.
தில்லி விமான நிலையத்தில் 64 விமானங்களும், பெங்களூருவில் 27 விமானங்களும், மும்பையில் 24 விமானங்களும், சென்னையில் 20 விமானங்களும் அடங்கியுள்ளன.
தமிழகம் இரண்டாம் இடம்
சிறு, குறு, நடுத்தர தொழில் மூலமான வேலைகளுக்கான பட்டியலில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதென மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முதலிடத்தை மகாராஷ்டிராமும், மூன்றாவது இடத்தை புதுச்சேரியும் பிடித்துள்ளது.
இலச்சினை அறிமுகம்
2024 ஜனவரி 19-31 வரை நடைபெற உள்ள 6வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியின் இலச்சினையாக வீரமங்கை வேலுநாச்சியார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மிக நீண்ட இரவு 2023
21.12.23-ன் இரவானது 2023ஆம் ஆண்டின் மிக நீண்ட இரவாக மாறியுள்ளது.
இந்த நிகழ்வானது பூமியின் சாய்ந்த பகுதியில் வெயில்படாதபோது உருவாகுகிறது.
எண்ணெய் கழிவுகள்
இதுவரை எண்ணூரில் 405.7 டன் எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டதாக தமிழ்நாடு மாசுக் கட்டுபாட்டு வாரியம் (TNPCB) தெரிவித்துள்ளது.
TNPCB (Tamil Nadu Pollution Control Board) – 1982
தலைமையகம் – சென்னை
மாநிலங்களுக்கான வரிப் பகிா்வு: கூடுதல் தவணையாக ரூ.72,961 கோடி விடுவிப்பு
மாநிலங்களுக்கான வரிப் பகிா்வில் கூடுதல் தவணையாக ரூ.72,961.21 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில் தமிழகத்துக்கு ரூ.2,976.10 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
இது, மாநிலங்களுக்கு 2024, ஜனவரி 10-ஆம் தேதி செலுத்த வேண்டிய தவணையாகும். ஏற்கெனவே கடந்த டிச.11-ஆம் தேதி ரூ.72,961.21 கோடி தவணை விடுவிக்கப்பட்டது. தற்போது மத்திய அரசால் வசூலிக்கப்படும் வரிகளில் 41 சதவீதம் மாநிலங்களுக்கான பகிா்வாக அளிக்கப்படுகிறது. ஒரு நிதியாண்டில் 14 தவணைகளாக இத்தொகை வழங்கப்படுகிறது.
பி.எம்.ஸ்ரீ பள்ளித் திட்டம்
தமிழகம், பீகார், தில்லி, கேரளம், ஒடிசா மாநிலங்கள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள பி.எம்.ஸ்ரீ பள்ளித் திட்டம் என்னும் இந்தியாவுக்கான பிரதமரின் பள்ளிகள் திட்டத்தில் சேரவில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கண்ட அழகியாக (Continental International title – 2023) :
2023 ஆண்டிற்கான சர்வதேச கண்ட அழகியாக (Continental International title – 2023) ஆஸ்தா ராவல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடவுச்சீட்டு சேவை மையங்கள் :
2014-ல் இந்தியாவில் இருந்துள்ள 77 கடவுச்சீட்டு சேவை மையங்கள் தற்போது 527 இடங்களாக உயர்ந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
2014ஆம் ஆண்டில் 30 கோடியாக இருந்த மேலும் இணையதள பயன்பாடு தற்போது 90 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்திய அளவில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் இடைநிற்றல் விகிதம்
கடந்த 5 ஆண்டுகளில் இந்திய அளவில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியால் இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை 21%மாக குறைந்து உள்ளது.
2018-19 ஆண்டுகளில் 28.4%மாக இருந்த இடைநிற்றல் விகிதம் 2020-21 ஆண்டுகளில் 20.6%மாக குறைந்துள்ளது.
தமிழகத்தில் இடைநிற்றல் 9%மாக இருந்துள்ளது.
முதலிடத்தை அசாமும் (49.9%), இரண்டாமிடத்தை பீகாரும் (42.1%), மூன்றாவது இடத்தை மேகாலயமும் (33.5%) உள்ளது.
இடைநிற்றலே இல்லாத மாநிலமாக மணிப்பூர் மாநிலம் உள்ளது.
ஒருநாள் போட்டிகளில் ஓராண்டில் அதிக வெற்றிகளைப் பதிவு செய்த அணிகள் :
ஓராண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பதிவு செய்துள்ள இரண்டாவது அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் இந்திய அணி 27 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டில் மட்டும் ஆஸ்திரேலிய அணி ஒருநாள் போட்டிகளில் 30 வெற்றிகளைப் பதிவு செய்து இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
ஒருநாள் போட்டிகளில் ஓராண்டில் அதிக வெற்றிகளைப் பதிவு செய்த அணிகள் :
- ஆஸ்திரேலியா - 30 வெற்றிகள் (2003)
- இந்தியா - 27 வெற்றிகள் (2023)
- ஆஸ்திரேலியா - 26 வெற்றிகள் (1999)
- தென்னாப்பிரிக்கா - 25 வெற்றிகள் (1996)
- தென்னாப்பிரிக்கா - 25 வெற்றிகள் (2000)
23 டிசம்பர் - கிசான் திவாஸ்
கிசான் திவாஸ் அல்லது இந்தியாவில் விவசாயிகள் தினம் அல்லது தேசிய விவசாயிகள் தினம் டிசம்பர் 23 அன்று முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்கின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
1979-1980 வரை இந்தியாவின் 5வது இந்திய பிரதமராக பதவி வகித்த சரண்சிங் பிறந்த நாளை முன்னிட்டு தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
2001ஆம் ஆண்டிலிருந்து சரண்சிங் பிறந்த தினம் விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நாளில் விவசாயம் மற்றும் மக்களுக்கு கல்வி மற்றும் அறிவை வழங்குவதன் முக்கியத்துவம் குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், விழாக்கள் மற்றும் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நடப்பு விவகார வினாடிவினா - டிசம்பர், 2023/Current Affairs Quiz - December, 2023
விருதுகள் கௌரவங்கள் 2023 :
LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :
- இந்திய தேசிய தினங்கள் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
- யுனெஸ்கோவில் அனுசரிக்கப்படும் சர்வதேச தினங்கள்
- 2023 ஆம் ஆண்டின் தமிழ் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL: