TODAY CURRENT AFFAIRS IN TAMIL 27.12.2023

TNPSC PAYILAGAM
By -
0

 


TODAY CURRENT AFFAIRS IN TAMIL 27.12.2023 


பிரதமா் மோடியின் யூ டியூப் சேனல் புதிய சாதனை:

பிரதமா் நரேந்திர மோடியின் யூ டியூப் சேனலை பின்தொடா்வோா் எண்ணிக்கை 2 கோடியைத் தாண்டியுள்ளது. உலகத் தலைவா்கள் வரிசையில் அதிகம் பின்தொடா்வோரை கொண்டவராக பிரதமா் மோடி தொடா்கிறாா்

யூ டியூப்பில் 2 கோடிக்கு மேல் பின் தொடா்வோரைப் பெற்ற முதல் அரசியல் தலைவா் என்ற சாதனையையும் அவா் படைத்துள்ளாா். 

அதிக பின்தொடா்வோரில் மட்டுல்லாது, யூ டியூப்பில் அதிகம் பாா்க்கப்படும் தலைவராகவும் மோடி உள்ளாா். அவரது சேனலில் உள்ள விடியோக்கள் 45 கோடி முறைக்கு மேல் பாா்வையிடப்பட்டுள்ளன. 

இந்தப் பட்டியலில் உக்ரைன் அதிபா் விளாதிமீா் ஸெலன்ஸ்கி இரண்டாவது இடத்தில் உள்ளாா். அவரது விடியோக்கள் 22.4 கோடி முறை பாா்க்கப்பட்டுள்ளன. அமெரிக்க அதிபா் ஜோ பைடனின் யூ டியூப் சேனலை 7.89 லட்சம் பேரும், துருக்கி அதிபா் எா்டோகனின் சேனலை 3.16 லட்சம் பேரும் பின் தொடா்கின்றனா்.

ஹெச்டிஎஃப்சி வங்கி:

ஹெச்டிஎஃப்சி வங்கியின் நிர்வாகம் சாராத தலைவராக அதானு சக்ரவர்த்தியை மூன்றாண்டுகள் நீட்டிப்பதற்கு அதன் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்.டி.எஃப்.சி. தெரிவித்துள்ளது. 

நிர்வாகம் சாராத, பகுதிநேர தலைவராக சக்ரவர்த்தியை மீண்டும் நியமனம் செய்வதற்கு நிர்வாகக் குழு ரிசர்வ் வங்கியிடம் பரிந்துரை செய்துள்ளது. இவரது இரண்டாவது பதவிக்காலம் 2024 மே 5 முதல் 2027 மே 4 வரை உள்ளது.

நிரந்தர வைப்புகளுக்கான வட்டி:

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) ரூ. 2 கோடிக்கும் குறைவான நிரந்தர வைப்புத் தொகைகளுக்கான வட்டியை உயர்த்தியிருக்கிறது.

2023ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, ரூ.2 கோடிக்கும் அதிகமான வைப்புத் தொகைகளுக்கான நிரந்தர வைப்பு விகிதங்களையும் எஸ்பிஐ மாற்றியமைத்துள்ளது. 

ஏழு நாள்கள் முதல் 45 நாள்கள் வரையிலான முதிர்வுகளைக் கொண்ட வைப்புகளுக்கு 50 காசுகள் வட்டி உயர்த்தப்பட்டு,3 சதவீதத்திலிருந்து 3.50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதுபோல 46 நாள்கள் முதல் 179 வரையிலான வைப்புகளுக்கான வட்டி 25 காசுகள் உயர்த்தப்பட்டு,தற்போது 4.75 சதவீதமாக உயர்ந்துள்ளது.

180 நாள்கள் முதல் 120 நாள்கள் வரையிலான வைப்புகளுக்கான வட்டி விகிதம் 5.25 சதவீதத்திலிருந்து 5.75 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

211 நாள்கள் முதல் 1 ஆண்டுக்கும் குறைவான வைப்புகளுக்கு வட்டி விகிதம் 5.75 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மூன்று ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் இருக்கும் வைப்புகளுக்கான வட்டி 6.75 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
வேலை செய்ய உகந்த மாநிலம் 2023:

ஆண்கள், பெண்கள் வேலை செய்ய உகந்த மாநிலம் கேரள மாநிலமானது தேர்வாகியுள்ளது.

இரண்டாவது இடம் மகாராஷ்டிரா, மூன்றாவது இடத்தை ஆந்திரா பிடித்துள்ளது.

ஆண்கள் வேலை செய்ய உகந்த நகரமாக பெங்களூர் உள்ளது.

பெண்கள் வேலை செய்ய உகந்த நகரமாக கொச்சி உள்ளது.
  • இவ்வறிக்கையை ISR வெளியிட்டுள்ளது.

மிஷன் இன்வஸ்டிகேசன் @ 75 டேஸ் (Mission Investigation @ 75 Days)

எப்ஐஆர் (FIR) பதிவு செய்த 75 நாட்களுக்குள் வழக்குகளை முடிப்பதற்காக மிஷன் இன்வஸ்டிகேசன் @ 75 டேஸ் என்ற திட்டதினை பீகார் மாநில அரசு கொண்டு வந்துள்ளது.
  • FIR – First Information Report

செயற்கை நுண்ணறிவு நகரம் :

இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு நகரமானது உத்திரப்பிரதேசத்தின் லக்னோவில் அமைக்கப்பட உள்ளது.

புதிய இலச்சினை

இந்திய வானிலை மையத்தின் புதிய இலச்சினையானது வெளயிடப்பட்டுள்ளது.இந்த இலச்சினையை வானிலை மையத்தின் 150வது ஆண்டு விழாவினை முன்னிட்டு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டுள்ளார்.
  • இந்திய வானிலை மையம் (India Meteorological Department)– 15.01.1875

‘ஐஎன்எஸ் இம்பால்’ பிரமோஸ் ஏவுகணை தாங்கி போா்க்கப்பல் கடற்படையில் இணைப்பு:

உள்நாட்டில் கட்டப்பட்ட ‘ஐஎன்எஸ் இம்பால்’ பிரமோஸ் ஏவுகணை தாங்கி போா்க்கப்பல், இந்திய கடற்படையில்  இணைக்கப்பட்டது. 

பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் மசகான் கப்பல் கட்டும் நிறுவனம் ‘ஐஎன்எஸ் இம்பால்’ பிரமோஸ் ஏவுகணை தாங்கி போா்க்கப்பலை கட்டியுள்ளது. 

இந்தக் கப்பல் 164 மீட்டா் நீளம் கொண்டது. 7,400 டன் பாரத்தை சுமந்துச் செல்லும் திறன்கொண்ட இந்தக் கப்பல், மணிக்கு 56 கி.மீ.க்கும் அதிகமான வேகத்தில் செல்லக் கூடியது. தரையில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணைகள், தரையில் இருந்து வானில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகள், நவீன கண்காணிப்பு ரேடாா்கள் உள்ளிட்டவை கப்பலில் இடம்பெற்றுள்ளன. அணு, உயிரி, ரசாயனம் என 3 வகையான தாக்குதல்களிலும் போரிடக் கூடிய வகையில், கப்பலில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 

வடகிழக்கு மாநிலமான மணிப்பூா் தலைநகா் இம்பால், இந்தக் கப்பலின் பெயராக சூட்டப்பட்டுள்ளது. முதன்முதலாக போா்க்கப்பலுக்கு நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள நகரின் பெயா் சூட்டப்பட்டுள்ளது.

சொந்த வாகனம் இல்லாமலேயே ஓட்டுநா் உரிமம் பெறும் திட்டம் :

சொந்த வாகனம் இல்லாமலேயே வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் வாகனங்களை ஓட்டிக் காட்டி, உரிமம் பெறும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக வாங்கப்பட்ட புதிய வாகனங்களை தலைமைச் செயலகத்தில்  நடந்த நிகழ்ச்சியில், முதல்வா் மு.க.ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

அந்த அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் உள்ள 91 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் 54 பகுதி அலுவலகங்களை உள்ளடக்கிய 145 அலுவலகங்களில் ஓட்டுநா் தோ்வு நடத்தும் வகையில், 145 இலகு ரக வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டன.

கூடங்குளம் அணுமின் நிலையம்: இந்திய-ரஷியா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பம்

மத்திய அமைச்சா் ஜெய்சங்கா் ரஷியாவுக்கு 5 நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளாா். இந்தப் பயணத்தின்போது ரஷிய துணை பிரதமா் டெனிஸ் மான்ட்டுரோவை சந்தித்து, இரு தரப்பு பொருளாதார ஒத்துழைப்பு குறித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, அணுமின் நிலையம், மருந்துகள், மருந்தியல் பொருள்கள், மருத்துவக் கருவிகள் தொடா்பான ஒப்பந்தங்கள் இரு நாடுகளுகளுக்கு இடையே கையொப்பமாகின.

வீடுகளின் விலை உயா்வதில் உலகின் 14-ஆவது இடத்தில் இந்தியா :

வீடுகளின் விலை உயா்வதில் உலகின் 14-ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான நய்ட் ஃப்ராங்க் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த செப்டம்பா் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில், உலகிலேயே துருக்கியில்தான் வீடுகள் விலை அதிக விகிதத்தில் உயா்ந்துள்ளது. அந்த நாட்டில் வீடுகள் விலை 89.2 சதவீதம் அதிகரித்துள்ளது. 

துருக்கிக்கு அடுத்தபடியாக குரேஷியாவில் 13.7 சதவீதமும், கிரீஸில் 11.9 சதவீதமும் வீடுகளின் விலைகள் அதிகரித்துள்ளன. கிரீஸ் மற்றும் கொலம்பியாவில் வீடுகளின் விலைகள் முறையே 11.9 சதவீதம் மற்றும் 11.2 சதவீதம் அதிகரித்துள்ளன. இந்தப் பட்டியலில் இந்தியா 14-ஆவது இடத்தில் உள்ளது. இங்கு வீடுகளின் விலை உயா்வு 5.9 சதவீதமாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விட்டா டானி :

சர்வதேச மேஜை பந்தாட்ட கூட்டமைப்பு (ITTF) அறக்கட்டளையின் நிர்வாக குழு உறுப்பினராக விட்டா டானி நியமிக்கப்பட்டுள்ளார்.

இப்பதவியை வகிக்கும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்
  • ITTF – International Table Tennis Federation – 1926
  • தலைமையகம்லொசேன், சுவிட்சர்லாந்து

பிவி சிந்து

2023ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பெண் வீரர்கள் பட்டியலில் பிவி சிந்து முதலிடம் பிடித்துள்ளார்.

பிபா (FIFA) உலககோப்பை – சவுதி அரேபியா

மான்செஸ்டர் சிட்டி அணியானது 2023ஆம் ஆண்டிற்கான பிபா (FIFA) உலககோப்பையில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

டிசம்பர் 27 - சர்வதேச தொற்றுநோய்க்கான தயார்நிலை நாள்

விழிப்புணர்வு, தகவல் பரிமாற்றம், அறிவியல் அறிவு மற்றும் சிறந்த நடைமுறைகள் மற்றும் தொற்றுநோய்களின் உயிரிழப்பைத் தடுப்பதற்கான தரமான கல்வி ஆகியவற்றின் பெரும் தேவையை நிறைவேற்றுவதற்காக டிசம்பர் 27 அன்று சர்வதேச தொற்றுநோய் தயாரிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.


நடப்பு விவகார வினாடிவினா - டிசம்பர், 2023/Current Affairs Quiz - December, 2023

விருதுகள் கௌரவங்கள் 2023 :

MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2023:

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :

Post a Comment

0Comments

Post a Comment (0)