விக்கிரம சோழன் உலா-TNPSC TAMIL ILLAKKIYAM NOTES

TNPSC PAYILAGAM
By -
0



SITRU ILAKKIYAMGAL -TNPSC TAMIL ILLAKKIYAM NOTES:

பகுதி – (ஆ) – இலக்கியம்

சிற்றிலக்கியங்கள்:


விக்கிரம சோழன் உலா:

விக்கிரம சோழன் உலா, உலா என்னும் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்த ஒரு நூலாகும். மூன்று சோழ மன்னர்களின் அவையில் அவைக்களப் புலவராக இருந்த ஒட்டக்கூத்தர் என்பார் இந்நூலை இயற்றினார். இவர் விக்கிரம சோழன் உலாவுடன், குலோத்துங்க சோழன் உலா, இராசராச சோழன் உலா என்பவற்றையும் சேர்த்து மூவருலா எனப்படும் மூன்று உலா நூல்களை இயற்றியிருப்பினும், விக்கிரம சோழன் உலாவே அவற்றுள் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகின்றது. இந்நூல் 12 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது.

ஆசிரியர் குறிப்பு:
  • இயற்பெயர் = ஒட்டக்கூத்தர்
  • சிறப்புப்பெயர் = கவிச்சக்ரவர்த்தி
  • சிறப்பு = விக்கிரமச்சோழன், இரண்டாம் குலோத்துங்கசோழன், இரண்டாம் இராசராசன் ஆகிய மூன்று மன்னர்களின் அவையிலும் செல்வாக்கோடு விளங்கியவர்.
  • இயற்றிய நூல்கள் = மூவருலா, தக்கயாகப்பரணி, குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்
  • காலம் = பனிரெண்டாம் நூற்றாண்டு

நூற்குறிப்பு
  • ஒட்டக்கூத்தர் எழுதிய மூவர் உலாவில் ஒன்று.
  • முதற்குலோத்துங்கனின் நான்காவது மகன் விக்கிரம சோழன். இவன் தாய் மதுராந்தகி ஆவார்.
  • காலம் 12ஆம் நூற்றாண்டு
  • விக்கிரம சோழனின் முன்னோர்களைப் பட்டியலிட்டுக் கூறும் வரலாற்று ஆவண நூல்.
  • குடகுமலையை ஊடறுத்துக் காவிரியாற்றைக் கொணர்ந்தவன் காவேரன்
  • மேரு மலையின் உச்சயில் புலிக்கொடி நாட்டியவன் கரிகாலன்
  • காவரியின் கரைகளை உயர்த்திக் கட்டியவன் கரிகாலன்
  • பொய்கையாரின் களவழி நாற்பதிற்காகச் சேரமான் கணைக்கால் இரும்பொறையை விடுதலை செய்தவன் செங்காணன்
  • போரில் 96 விழுப்புண்களைப் பெற்றவன் விஜயபாலயன்
  • தில்லை நடராசன் கோயிலுக்குப் பொன் வேய்ந்தவன் முதல் பராந்தகன்
  • 18 சிற்றூர்களைக் கைப்பற்றி மலைநாட்டை வென்றவன் முதலாம் ராஜராஜன்
  • கங்கை கொண்ட சோழன் ராஜேந்திரன்
  • கடாரம் கொண்ட சோழன் ராஜேந்திரன்
  • சேரரின் கடற்படை முழுவதையும் அழித்தவன் ராஜேந்திரன்
  • நூல் – தக்கயாக்க பரணி, மூவருலா, குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ்
  • சாளுக்கியரின் தலைநகரான கல்யாணபுரத்தின் மீது மும்முறை போரிட்டு வென்றவன் ராஜாதிராஜன்
  • கொப்பத்துப் போரில் ஆயிரம் யானைகளை வென்றவன் இரண்டாம் ராஜேந்திரன்
  • திருவரங்கத்துப் பெருமாளுக்கு மணிகளால் பாம்பணை அமைத்தவன் ராசமகேந்திரன்
  • தியாக சமுத்திரம், அகளங்கன் என்ற பட்டப் பெயர்கள் கொண்டவன் விக்கரமாதித்தன்
  • தியாக சமுத்திரம், அகளங்கன் என்ற பட்டப் பெயர்கள் கொண்டவன் விக்கிரமாதித்தன்.
  • சிதம்பரம் கோயில் புறமதிற்சுவருக்கு விக்கிரமசோழன் திருமாளிகை என்று பெயர் வழங்கியது.
  • விக்கிரமன் திருவரங்கத்து அரங்கநாதன் கோயிலின் ஐந்தாம் திருச்சுற்றைக் காட்டினான்.
  • சூரைநாயகன் என்ற மாதவராயன், செங்கேணில் பரம்பரையினரான சம்புவராயர்கள், யாதவராயிரின் முன்னோர்கள் ஆகியோர் விக்கிரம சோழனுக்கு திறை செலுத்தியவர்கள் என்ற இவ் உலா கூறுகிறது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)