சென்னையில் குற்றத்தை குறைக்க 3 செயலிகள்

TNPSC PAYILAGAM
By -
0



சென்னையில் முதியோர்களுக்கு உதவும் ‘பந்தம்’ உட்பட, குற்றங்களைக் குறைக்கும் 3 செயலிகளை டிஜிபி சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். காணாமல் போன வாகனங்களைக் கண்டுபிடிக்கவும், அந்த வாகனங்களை, குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், ரூ.1.81 கோடி செலவில் ஒருங்கிணைந்த வாகன கண்காணிப்பு அமைப்பு ‘ஐவிஎம்எஸ்’ (IVMS - Integrated Vehicle Monitoring System) சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.

பருந்து செயலி – குற்றச் செயல்களை முன்னரே கண்டறிந்து தடுக்கும் வகையிலும், ரவுடிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க தமிழக காவல்துறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.சென்னையில் 24 மணி நேரமும் குற்றவாளிகளைக் கண்காணிக்கும் தளமாக ‘பருந்து’ செயலி செயல்படுகிறது. இந்த திட்டத்தில் குற்றவாளிகள் ஜாமீனில் வெளிவரும்போது அல்லது சிறையில் இருந்து விடுவிக்கும்போது உடனடியாக அந்த விவரங்களை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை செய்தியாக இச்செயலி அனுப்பும். இச்செயலி, சென்னை பெருநகரக் காவலுக்குட்பட்ட எல்லையில் குற்றங்களைத் தடுக்க பெரும் பங்காற்றும்.

பந்தம் செயலிசென்னையில் வசிக்கும் 75 வயதிற்கு மேற்பட்டவர்கள் தனியாக வசிப்பவர்கள் மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்டோருக்கு உதவ தமிழக காவல்துறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இவர்களின் விவரங்கள்சேகரிக்கப்பட்டு, காவல்துறை மூலம் அவர்களைக் கண்காணித்தல், அவசர தேவைக்கு உதவுதல், மருத்துவமனைக்கு அழைத்து செல்லுதல் என பல உதவிகளைச் செய்ய ‘பந்தம்’ செயலி உதவும். அவசரத் தேவைகளுக்கு மூத்தகுடிமக்கள் காவல்துறையின் கட்டணமில்லா உதவி எண். 94999 57575-ஐ அழைக்கலாம்.

நிவாரணம் செயலி – போலீஸ் அதிகாரிகள், இணையதளம் வாயிலாக பொதுமக்கள் அளிக்கும் புகார்களை ஒருங்கிணைத்து அவற்றை கண்காணிக்கவும், விசாரணை முறைகள் நடவடிக்கைகள் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து புகார் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதற்காக நிவராணம் என்னும் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

ஐவிஎம்எஸ்’ (IVMS - Integrated Vehicle Monitoring System)காணாமல் போன வாகனங்களின் பதிவெண் உள்ளிட்ட விவரங்கள் ஐவிஎம்எஸ்-ல் பதிவேற்றம் செய்யப்பட்டு, சென்னை பெருநகரகாவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 25 இடங்களில், 75 கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் நெருக்கடியான இடங்களில், கூடுதலாக 50 நகரும் கேமராக்களும் தேவைக்கேற்ப நிறுவப்பட உள்ளன.இந்த கேமராக்களில் பதிவாகும் வாகனங்கள் மற்றும் சந்தேக வாகனங்களின் பதிவு எண்களை அடிப்படையாக வைத்து திருட்டு வாகனங்கள் போலீஸாரால் அடையாளம் காணப்பட்டு கொள்ளையர்கள் கைது செய்யப்படுவார்கள்.

Post a Comment

0Comments

Post a Comment (0)