இந்தியப் பண்பாட்டின் இயல்புகள்-வினா விடைகள் (6th to 12th புதிய சமச்சீர் புத்தகம்) GUIDE

TNPSC PAYILAGAM
By -
0


 

TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL

CHARACTERISTICS OF INDIAN CULTURE

இந்தியப் பண்பாட்டின் இயல்புகள்-வினா விடைகள் (6th to 12th புதிய சமச்சீர் புத்தகம்) GUIDE


1.     பண்பாடு என்பதன் பொருள்-பண்படு.

2.     பண்படு என்பதன் பொருள் - சீர்படுத்துதல் (அ) செம்மைப்படுத்துதல்.

3.     Cultura எனும் இலத்தீன் சொல்லின் பொருள் - சூழலுக்கு ஏற்ற வளர்ச்சி.

4.     Culrura எனும் சொல்லின் திரிபே ஆங்கிலச்சொல் – Culture.

5. 1937 ல் culture எனும் செல்லுக்கு இணையாக பண்பாடு எனும் சொல்லை பயன்படுத்தியவர் - டி.கே.சி.

6. டி.கே.சி என்பவர் பண்பாடு எனும் சொல்லை 1937 ல் பயன்படுத்தியதாக கூறியவர்- எஸ் வையாபுரியார்.

7.   விழுமியங்களின் தொகுதி – பண்பாடு.

8. பண்பாடு என்பது யாரின் அகம், அதை வெளிப்படுத்தினால் நாகரிகம் - மனிதனின் அகம்.

9.முன்னோர்களின் பண்பாடு என்பதை எந்தெந்த சொற்களில் குறிப்பிட்டு உள்ளனர்- பண்பு, பண்புடைமை ,சால்பு ,சால்புடைமை ,சான்றாண்மை.

10.பண்பெனபடுவது பாடறிந்து ஒழுகுதல் எனும் பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்- கலித்தொகை.

11.   பண்புடையார் பட்டுண்டு உலகு என கூறியவர்-திருவள்ளுவர்.

12.  பண்பாடு உடையவர்களை தமிழ் இலக்கியங்கள் எவ்வாறு குறிப்பிடுகிறது-  சான்றோர் ஒழுக்கமுடையோர் மாசற்ற காட்சிகளை உடையோர்.

13.ஒரு இனத்தாரின் பண்பாட்டை அறிந்து கொள்ள எழுத்திலக்கியங்கள் பயன்படுவது போல பயன்படுவது - நாட்டுபுற இலக்கியம்.

14.மக்கள் தலைமுறை தலைமுறையாக குழுவாக சேர்ந்து கற்ற நடத்தை முறைகளும் பழக்கங்களும் மரபுகளும் சேர்ந்தே பண்பாடு என கூறுவது- வாழ்வியல் களஞ்சியம்.

15. பயிற்சி அனுபவம் ஆகியவற்றின் மூலம் உடல் உள்ளம் உணர்வு ஆகியன அடையும் வளர்ச்சியே பண்பாடு என கூறுவது - ஆங்கில அகராதி.

16.பண்பாடு அல்லது கலாச்சாரம் என்பது சமயம், பாரம்பரியம் ,பொருளாதாரம் ஆகியவற்றை கொண்டு நிர்ணயிக்க படுகிறது என கூறியவர் - சுவாமி விவேகானந்தர்.

17. திருந்திய தமிழை பண்பட்ட செந்தமிழ் என்றும் திருந்திய உள்ளத்தை பண்பட்ட உள்ளம் என கூறியவர் - தேவநேய பாவாணர்.

18.பண்பாடு என்பது பொதுவாக நாகரீகத்தில் அடங்கியதாகும். காலப்போக்கில் தம்வளர்ச்சியின் மனநல ஆக்கமே பண்பாடாக  பெயர் பெறுகிறது என கூறியவர் – வைத்தியலிங்கம்.

19.   மனிதன் சமூகத்தில் ஒரு அங்கத்தினன் இந்நிலையில் அவன் அடைந்துள்ள அறிவு நம்பிக்கை கலை ஒழுக்க கோட்பாடு சட்டம் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை தன்னுள் அடக்கிய ஒரு முழுமையான தொகுப்பு என கூறியவர் - ஈ.பி டெய்லர்.

20.மக்களின் சிந்தனையும் ,செயலும் ,நடவடிக்கையும், ஒவ்வொரு இனத்தவரிடம், இருந்து வேறுபட்டு காணப்படுவது பண்பாடு என கூறியவர்- ரூத் பெனிடிக்ட்.

21.அவரவர் அன்றாட பணிகளை நேர்மையான மனநிலையுடனும், நேர்மையான நோக்குடனும் மகிழ்ச்சியுடனும், செய்வதில் தான் பண்பாடு மிளிர்கிறது என கூறியவர்- வால்ட்டேர்.

22. பண்பாடு என்பது இயற்கையின் மீதும் தன் மீதும் மனிதன் கொண்டு இருக்கும் கட்டுபாடு மனிதனுடைய உடை ,ஆயுதங்கள், கருவிகள், மனநாட்டம் ,ஆன்மீகம் ,மொழி, இலக்கியம் போன்றவற்றை அடக்கியது என கூறியவர்- எல்வுட், பிரவுன்.

23.மனிதன் தன்னுடைய விருப்பங்களையும் , தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்ள உருவாக்கிய கருவி பண்பாடு என கூறியவர் - C.C, நார்த.

24. ஒருவன் தன் குணநலன்களை நிரப்புவதிலும் தம்மை சூழ்ந்த சமுதாயத்தின் நலன்களை பேணுவதிலும் பேரவா கொண்டு இருக்கும் நிலை தான் பண்பாடு எனகூறியவர் - மேத்யூ ஆர்னால்டு.

25.  பண்பாடு என்பது மக்களால் ஆக்கபெற்ற கருவி இந்த ஊடகத்தை கொண்ட மக்கள் அவர்களின் தேவைகளை நிறைவு செய்து கொள்கின்றனர் என கூறியவர் – மாலினோசுக்கி.

26. பண்பாடு என்பது மக்களனைவரும் கூட்டாக சேர்ந்து செயல்படும் போது உண்டாகும் நடத்தை முறைகளின் சேர்மம் என கூறியவர் - ஆடம்சன் ஒபல்.

27. பண்பாடு என்பது சீரிய வாழ்வு முறை மக்கள் நம்பிக்கை வைத்துள்ள அடிப்படை மதிப்பீடுகளால் ஊக்குவிக்கபடுகிறது என கூறியவர் - K .M முன்ஷி.

28. தனி சிறப்பு கூறுகள் நிறைந்த தனி இன சமுதாயத்தினரின்பண்புகளே பண்பாடு என கூறியவர் - அமெரிக்க மானிடவியலாளர்.

29.   காலக்கண்ணாடிகள் எனப்படுபவை - இலக்கிய சான்றுகள்.

30.   நம் பண்பாட்டு கூறுகளின் சிறந்த வாயில்கள்- இலக்கியங்கள்.

31.   மனித வாழ்க்கை பிரதிபலித்துக்காட்டும் காலகண்ணாடியே இலக்கியம் என கூறியவர் - ஜி. இ. டெரெவெலியான்.

32.   இலக்கிய சான்றுகளை எத்தனை வகையாக பிரிக்கலாம்- 8.

33.   இலக்கிய சான்றுகளில் மிகவும் தொன்மை வாய்ந்தவை – வேதங்கள்.

34.   நான்கு வேதங்கள் - ரிக் ,யசூர் ,சாம, அதர்வணம்.

35.   இந்தியாவின் இருபெரும் இதிகாசங்கள் - இராமயணம் ,மகாபாரதம்.

36.   பின்வேத காலத்தில் தோன்றிய வருண முறை – 4 வருண முறை

37.   வரலாற்று சான்றுகளாகவும் பண்பாட்டு சான்றுகளாகவும் விளங்குபவை – தருமசாத்திரங்கள்.

38.   யார் யார் எழுதியவற்றை தரும சாஸ்திரங்கள் என்கிறோம்- மனு, யஜ்னவால் கியர் , விஷ்ணு, பிரகஸ்பதி ,நாரதர்.

39.   பதிணென்கீழ்கணக்கு நூல்களுள் அறக்கருத்துகளை கூறும் நூல்களின் எண்ணிக்கை- 11.

40.   உலகபொதுமறை என அழைக்கபடுவது – திருக்குறள்.

41.   நாலடியாரை எழுதியவர்.  சமண முனிவர்கள்.

42.   அறநெறிசாரம் எனும் நூல் எதை புலப்படுத்துகிறது - பண்பாட்டு கருத்துக்களை.

43.   ஒளவையாரின் நீதி நூல்களில் சிறந்தது – ஆத்திசூடி.

44.   பண்பாட்டு கூறுகளை எளிய ஒரடி பாடலாக வெளிப்படுத்துவது  - ஆத்திசூடி.

45.   பெளத்த சமய இலக்கியங்கள் எழுதப்பட்டுள்ள மொழிகள்  - பாலி , பிராகிருதம்.

46.   பௌளத்த சமய நூல்களின் 3 பிரிவுகள் -சுத்த பீடகம் ,வினய பீடகம் ,அபிதம்ம பீடகம்.

47.   புத்தரின் அறிவுரைகளை கூறுவது - சுத்த பீடகம்.

48.   பெளத்த துறவிகளுக்கான சட்டத்திட்டம் ஞான ஒழுக்கமுறை பற்றி கூறுவது- விநய பீடகம்.

49.   புத்தரின் தத்துவங்களை மிகச்சிறந்த முறையில் 7 படலங்களில் விவரிப்பது - அபிதம்ம பீடகம்.

50.   புத்த சமய நூல் சிலவற்றை கூறுக:

           1.     மிலிந்தபான்ஹா.

           2.     லலிதவிஸ்தரா.

           3.     வைபுல்ய சூத்திரங்கள்.

           4.     பேதக உபதேசம்.

           5.     நேத்தி பிரகணம்.

51.   தமிழகத்தில் பெளத்த சமயம் பரவி இருந்ததை கூறும் காப்பியம் – மணிமேகலை.

52.   சமண நூல்கள் - ஆகம சித்தாந்தங்கள் எனவும் அழைக்கபடுகின்றன

53.   சமண சமய பிரிவுகள் - திகம்பரர் , சுவேதம்பரர்.

54.   சமய தத்துவங்களை அறிய உதவும் சமண காப்பியங்கள் - சிவக சிந்தாமணி , சிலப்பதிகாரம்.

55.   தமிழர் பண்பாட்டு சிறப்பை வெளிப்படுத்தும் சங்க கால இலக்கியங்கள் - எட்டுத்தொகை , பத்துப்பாட்டு.

56.   10 - வகை ஆடை 28-வகை அணிகலம் 67- வகை உணவு பற்றி கூறுவது- புறநானூறு.

57.   கடையெழு வள்ளல்களின் கொடைத்திறம் பற்றி பாணர் விறலியர்கூத்தர் போன்றோரின் கலைத்திறம் பற்றி கூறுவது – புறநானூறு.

58.   பாரத போரின் போது உதியன் சேரலாதன் வீரர்களுக்கு உணவு கொடுத்த செய்தி காணப்படும் நூல் – புறநானூறு.

59.   தமிழர்திருமண முறை பற்றி கூறும் எட்டுத்தொகை நூல் – அகநானூறு.

60.   யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் பாடல்வரி காணப்படும் நூல் – புறநானூறு.

61.   அன்பின் சிறப்பை உணர்த்துவது – ஐங்குறுநூறு.

62.   விருந்தோம்பல் பெரியோரை மதித்தல் வறுமையிலும் செம்மை என கூறும் நூல்- நற்றிணை.

63.   மார்கழி நோன்பு பற்றி கூறும் எட்டுத்தொகை நூல் – கலித்தொகை.

64.   இலக்கியங்கள் காட்டும் கால கண்ணாடிகளாக விளங்க நாட்டுப்புற இலக்கியங்கள் சமுதாய வளர்ச்சி காட்டும் கண்ணாடிகளாக விளங்குகின்றன எனக்கூறியவர்-சு. சக்திவேல்.

65.   நாட்டுப்புற இயல் ஆய்வை எழுதியவர் - சு.சக்திவேல்.

66.   நாட்டுபுற இயலை குறிக்கும் FOLKLORE எனும் சொல்லை 1846 ல் உருவாக்கியவர்- ஜான் தாமசு.

67.   பழங்கால பண்பாட்டின் எச்சம் நாட்டுபுற பாடல் என கூறியவர்- ஜான் தாமசு.

68.   தொல்காப்பியர் பண்ணத்தி என குறிப்பிடுவது - பாமரர் பாடல்களை.

69.   பழைமையான பாடல்களில் உள்ள பொருளையே தனக்கு பாடு பொருளாக கொண்டு பாட்டும் உரையும் போன்று செய்யப்படுவனவற்றை  - பண்ணத்தி என அழைப்பர்.

70.   பண்ணத்தி பிரித்தெழுதுக - பண் + நத்தி.

71.   பண்+நத்தி என்பதன் பொருள் - பண்ணை விரும்புவது.

72.   பொருள் மரபில்லா பொய்ம் மொழி யானும் பொருளோடு புணர்ந்த நகைமொழி யானும் எனும் பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல் - தொல்காப்பிய நூற்பா.

73.   மராட்டிய வீரர் சிவாஜி இளவயதில் யாரிடப் கேட்ட கதைகளே அவர் சிறந்த வீரராக உருவாக காரணம் - அவரது தாய்.

74.   எந்த கதையை கேட்டதன் மூலமாக காந்தியடிகள் வாழ்நாள் முழுதும் வாய்மையை கடைப்பிடித்தார் – அரிசந்திரன்.

75.   நாட்டுப்புற கதைகளுக்கு எ.கா:

           1.     விக்கிரமாதித்தன் கதைகள்

           2.     பஞ்ச தந்திர கதைகள்

           3.     மரியாதை இராமன் கதைகள்

           4.     தெனாலி ராமன் கதைகள்

           5.     ராயர் அப்பாஜி

           6.     புத்தர் ஜாதக கதைகள்

           7.     அக்பர் பீர்பால் கதைகள்

           8.     மதன காமராசன் கதைகள்

           9.     தமிழக நாட்டுப்புற கதைகள்

76.   காப்பியங்கள் தோன்றுவதற்கு மூல காரணம் – கதைப்பாடல்.

77.   கதைப்பாடலுக்கு எ.கா :

           1.     இதிகாச துணுக்குகள்

           2.     கிராம தேவதை கதைகள்

           3.     சமூக கதைகள்

           4.     வரலாற்று கதைகள்

78.   கதைப்பாடல் தமிழில் எவ்வாறு அழைக்கப்படுகிறது – அம்மானை.

79.   அம்மானை எனும் சொல் முதலில் கையாளப்பட்ட நூல்- சிலப்பதிகாரம்.

80.   கதைபாடலின் பகுதிகள்:

           1.     காப்பு அல்லது வழிபாடு

           2.     குருவணக்கம்

           3.     வரலாறு

           4.     வாழி

81.   வரலாற்று கதை பாடலுக்கு எ. கா:

           1.     சுடலைமாடன் கதை

           2.     வில்லுப்பாட்டு

           3.     கான்சாகிபு சண்டை

           4.     பஞ்ச பாண்டவர்கள் வன வாசம்

           5.     முத்துப்பாட்டன்

           6.     நல்லதங்காள்

           7.     காத்தவராயன் கதைபாடல்கள்

           8.     வீரபாண்டிய கட்டபொம்மூ பாடல்

82.   உலக மொழிகள் அனைத்திலும் காணப்படுவது – பழமொழி.

83.   மக்களின் பண்பாட்டு உயர்வை கணக்கிட்டு காட்டும் அளவுகோல்- பழமொழி.

84.   மக்களை நன்னெறியில் வாழ வைக்க அடிப்படையாக அமைந்தவை – பழமொழிகள்.

85.   சிறந்த கருத்தை சொல்வது – பொன்மொழிகள்.

86.   உயர்ந்த பண்பாட்டை வலியுறுத்துவது – பழமொழிகள்.

87.   நாட்டின் பண்பாட்டையும் நாகரிகத்தையும் வரலாற்றையும் உள்ளடங்கிய கருத்து கருவூலம் – பழமொழி.

88.   பண்டைய தொல்கதைகள் – புராணங்கள்.

89.   புராணங்களுக்கு எ.கா:

           1.     வாயு புராணம்

           2.     மச்ச புராணம்

           3.     பவிஷிய புராணம்

           4.     பிரம்ம புராணம்

90.   புராணக்கதை தங்களை உருவாக்கிய மக்களை பற்றியும் பயன்படுத்துவோர் பற்றியும் கூறுவதாக கூறியவர் – ஈ.பி டெய்லர்.

91.   ஒவ்வொரு புராணமும் ஏதோ ஓர் உண்மையை சொல்ல விழைகிறது –மாக்ஸ்முல்லர்.

92.   வாழ்வியல் அனுபவ அடிப்படையில்:

           1.     பூமி - பெண்

           2.     வானம் - ஆண்

           3.     முழுநிலவு - வாழ்வின் குறியீடு

           4.     மதிமறைவு - இறப்பின் குறியீடு

93.   கடவுளின் மந்திரக்கோல்- வானவில் .(தோன்றினால் மழை நின்றுவிடும்)

94.   புராண கதைகளுக்கு எ.கா:

           1.     மகாபுராணம்

           2.     கந்த புராணம்

           3.     விநாயகர் புராணம்

           4.     பாகவத புராணம்

95.   இந்திய பண்பாட்டின் ஆணிவேர் – ஆன்மீகம்.

96.   ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது யாருடைய வாக்கு – திருமூலர்.

97.   எல்லாரும் இன்புற்றிருப்பது அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே என பாடியவர் – தாயுமானவர்.

98.   உலகின் சிறந்த பண்பாட்டு கூறுகளை கொண்டவை:

           1.     கிரேக்கம்

           2.     ரோம்

           3.     பாபிலோன்

           4.     எகிப்து

           5.     பாரசீகம்

99.   பண்டைய காலத்தில் பிரமிடுகள் காணப்பட்ட இடம் – எகிப்து.

100.  மனித பண்பாட்டின் சிறப்புகளை வெளிப்படுத்துபவை:

           1.     வேதங்கள்

           2.     உபநிடதங்கள்

           3.     காவியங்கள்

101.  மேன்மையான சிந்தனைகள் எல்லாம் நம்மிடம் வரட்டும் என கூறும் பழமையான வேதம் – ரிக் வேதம்.

102.  ஒருவர் மீது ஒருவர் செலுத்தும் பாசம் – அன்பு.

103.  அன்பின் வேறு பெயர்கள்:

           1.     இரக்கம்

           2.     பரிவு

           3.     கருணை

104.  அருளின் அடிப்படை – அன்பு.

105.  சத்யம் என்பது – உண்மை.

106.  உள்ளத்தில் இருந்து வருவது – உண்மை.

107.  வாயில் இருந்து வருவது- வாய்மை.

108.  உடலால் வருவது – மெய்மை.

109.  உண்மை வாய்மை மற்றும் மெய்மையை உள்ளடக்கிய சொல்- சத்தியம்.

110.  எதன் அடிப்படையில் பிரபஞ்சம் இயங்கி கொண்டு இருக்கிறது – தருமம்.

111.  பிறருக்கு (வறியவருக்கு) உதவுதல் - அறம் அல்லது ஈகை.

112.  கொல்லாமை என்பது – அகிம்சை.

113.  மன நிம்மதியே – சாந்தம்.

114.  மன அமைதிக்கு வழிவகுப்பது – மனநிம்மதி.

115.  யாதும் ஊரே யாவரும் கேளிர்  என பாடியவர் - கணியன் பூங்குன்றனார்.

116.  அனைத்து உயிர்களிடத்தும் செலுத்தப்படும் இரக்கம் – கருணை.

117.  கரடுமுரடான கற்களை கருவிகளாக பயன்படுத்திய காலம்- பழைய கற்காலம்.

118.  கூர்மையும் வழுவழுப்பும் உடைய கற்களை கருவிகளாக பயன்படுத்திய காலம்- புதிய கற்காலம்.

119.  நாகரிகம் எனும் சொல் எந்த சொல்லின் அடியாக பிறந்தது- நகர். (நகர் அகம் = நகரம் - நகரிகம் நாகரிகம்)

120.  நகரும் தன்மை உடையது – நாகரிகம்.

121.  புறவளர்ச்சியை கூறுவது  - நாகரிகம். (உடல்).

122.  அகவளர்ச்சியை கூறுவது – பண்பாடு. (உயிர்).

123.  நாகரிக வளர்ச்சி – வேகமானது.

124.  பண்பாட்டு வளர்ச்சி – சீரானது.

125.  மிகுந்த முயற்சியின் அடிப்படையில் மனம் ஒன்றியவர்கள் ஒருமித்த கருத்துடையவர்கள் மட்டும் பின்பற்றகூடியது – பண்பாடு.

126.  நாகரிகம் - இல்லையெனில் சிறந்த பண்பாட்டை காண இயலாது.

127.  வாழ்வின் உறுதி பொருள்கள் - அறம் ,பொருள் ,இன்பம் வீடு.

128.  வாழ்வியல் உண்மைகளை அறிய பயன்படுவது - பண்பாட்டு கல்வி.

129.  பண்பட்ட வாழ்க்கையை வாழ உதவுவது-வாழ்வியல் நெறிமுறைகள்.

 


Post a Comment

0Comments

Post a Comment (0)