இந்தியப் பண்பாட்டின் இயல்புகள்-TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL

TNPSC PAYILAGAM
By -
0



CHARACTERISTICS OF INDIAN CULTURE

TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL 

இந்தியப் பண்பாட்டின் இயல்புகள்

உலக நாடுகளுள் ஒன்றான இந்தியா, வளமையும், பெருமையும் மிக்கதாக விளங்குகிறது. அதன் பெருமைக்குச் சிறப்பு சேர்ப்பது இந்தியப் பண்பாடாகும். இப்பண்பாடு தனிச்சிறப்புடையது, பழைமையையும், பண்பாட்டுப் பாரம்பரியத்தையும் கொண்டது. உலகளாவிய பண்பாட்டுக் கூறுகளைத் தன்னிடத்தே கொண்டும், உலகிலுள்ள மற்ற நாடுகள் பின்பற்றத்தக்க வகையிலும் சிறப்புற்று விளங்குவது இந்தியப் பண்பாடாகும். இப்பாடப்பகுதி, பண்பாடு அதன் விளக்கம், வரையறைகள், இந்தியப் பண்பாட்டை அறிய உதவும் தொன்மைச் சான்றுகள், பண்பாட்டின் இயல்புகள், அதன் சிறப்புக் கூறுகள், பண்பாட்டுக் கல்வியினால் நாம் அடையும் பயன்கள் ஆகியவற்றை அறிய உதவும் வாயிலாக அமைகின்றது. 

“பண்படு“ என்னும் தமிழ்ச் சொல்லிலிருந்தே பண்பாடு தோன்றியது. பண்படுத்துதல் என்பதற்கு செம்மைப்படுத்துதல் அல்லது சீர்படுத்துதல் என்பது பொருள். பண்படுத்துதல் என்னும் சொல் வழக்கு, நிலத்தைப் பண்படுத்துவதற்கும், உள்ளத்தைப் பண்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. ‘Cultura‘ என்ற இலத்தீன் சொல்லுக்குச் சூழலுக்கு ஏற்ற வளர்ச்சி (In conditions suitable for growth) என்று பொருள். இச்சொல்லின் திரிபே ‘Culture‘ என ஆங்கிலத்தில் கூறப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், 1937இல் ‘Culture‘ என்னும் சொல்லுக்கு இணையாகப் ‘பண்பாடு‘ என்னும் தமிழ்ச் சொல்லை டி. கே. சிதம்பரநாதனார் பயன்படுத்தியதாகப் பேராசிரியர் எஸ். வையாபுரியார் குறிப்பிடுகிறார். 

பண்பாடு - வரையறைகள் 

பண்பாடு என்பது பண்பட்ட, பக்குவப்பட்ட, சீரான, நேரிய வழியில் செல்லும் ஒழுக்கவியல் கோட்பாடாகும். இன்று நாம் பண்பாடு என்னும் சொல்லால் குறிப்பிடுவதை நம் முன்னோர்கள் பண்பு, பண்புடைமை, சால்பு, சால்புடைமை, சான்றாண்மை போன்ற சொற்களால் குறிப்பிட்டுள்ளனர். இச்சொற்கள் வெவ்வேறு இடங்களில் வேறு சில பண்பாட்டுடன் தொடர்புடைய பொருள்களைக் குறித்தாலும், பல இடங்களில் பண்பாட்டையே குறிக்கிறது. கலித்தொகையில், ‘‘பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்“ என்றும், வள்ளுவத்தில், “பண்புடையார்ப் பட்டுண்டு உலகு“ என்றும் குறிப்பிடப்படுகின்றன. பண்பாடு உடையோரைச் சான்றோர் என்றும், ஒழுக்கமுடையோர் என்றும், மாசற்ற காட்சிகளை உடையோர் என்றும் தமிழிலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. 

பண்பாடு என்பது, ஓர் இனத்தாரின் கொள்கைகள், கோட்பாடுகள், நோக்கங்கள், வாழ்க்கைமுறைகள், பழக்கவழக்கங்கள், சமூகச்சட்டங்கள், சமயங்கள், வழிபாட்டுமுறைகள், களவு, கற்பு, அக, புறத்திணைமரபுகள், இலக்கியமரபுகள், அரசியலமைப்புகள், ஆடை, அணிகலன்கள், திருவிழாக்கள், உணவுமுறை, பொழுதுபோக்குகள், விளையாட்டுகள் ஆகிய எல்லாவற்றையும், தன்னுள்ளடக்கியதே பண்பாடாகும் . 

ஓர் இனத்தாரின் பண்பாட்டை அறிந்துகொள்ள எழுத்திலக்கியங்கள் பயன்படுவதைப் போல, நாட்டுப்புற இலக்கியங்களும் பயன்படும். அதனை நாட்டுப்புறப் பாடல்கள், நாடோடிஇலக்கியங்கள், பழமொழிகள், விடுகதைகள், முதுமொழிகள், இசை, நாடகம், நாட்டியம், செந்தமிழ், கொடுந்தமிழ் அமைப்புகள், வளர்ச்சிகள் ஆகியவற்றிலும் காணலாம். மேலும், ஓவியக்கலை, சிற்பக்கலை, கட்டடக்கலை ஆகியவற்றிலும் அவரவரின் பண்பாடு வெளிப்படும் 

வாழ்வியற்களஞ்சியம்: “மக்கள் தலைமுறை தலைமுறையாகக் குழுவாகச் சேர்ந்து கற்ற நடத்தை முறைகளும், பழக்கங்களும், மரபுகளும் சேர்ந்ததேபண்பாடு“. 

ஆங்கில அகராதி: “பயிற்சி, அனுபவம் ஆகியவற்றின்மூலம் உடல், உள்ளம், உணர்வு ஆகியன அடையும் வளர்ச்சியே பண்பாடு“. 

பண்பாடு என்பது, விழுமியங்களின் தொகுதி. அது கலை, இலக்கியம், சமயம், சமூக நிறுவனங்கள் மற்றும் தனிமனிதச் செயல்பாடுகள் மூலம் வெளிப்படுகிறது. (Culture is a characteristic way of life, inspired by fundamental values, according to which people live.) பண்பாடு என்பது, மனிதனின் அகம். அதை, வெளிப்படுத்தினால் நாகரிகம். (Culture is the state of inner Man. His external expression is Civilisation.) நாகரிகம் மாறுதலுக்கு உள்ளாகும். பண்பாடு, நிலைத்து நிற்கும்

பண்பாடு பற்றிய அறிஞர்களின் வரையறை 

வரையறை

அறிஞர்கள்

பண்பாடு அல்லது கலாச்சாரம் என்பது, சமயம், பாரம்பரியம், பொருளாதாரம் ஆகியவற்றைக்கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது“.

விவேகானந்தர்

பண்படுவது பண்பாடு. பண்படுதல் என்பது சீர்படுதல் அல்லது திருந்துதல். திருந்திய நிலத்தைப் பண்பட்ட அல்லது பண்படுத்தப்பட்ட நிலமென்றும், திருந்திய தமிழைப் பண்பட்ட செந்தமிழ் என்றும், திருந்திய உள்ளத்தைப் பண்பட்ட உள்ளமென்றும் சொல்வது வழக்கம்.“

தேவநேயப் பாவாணர்

பண்பாடு என்பது, பொதுவாக நாகரிகத்தில் அடங்கியதாகும். காலப்போக்கில் மக்கள் தம் வளர்ச்சியின் மனநல ஆக்கமே பண்பாடாகப் பெயர் பெறுகின்றது“.

செ. வைத்தியலிங்கம்

மனிதன் சமுதாயத்தில் ஓர் அங்கத்தினன். இந்நிலையில் அவன் அடைந்துள்ள அறிவு, நம்பிக்கை, கலை ஒழுக்கக் கோட்பாடுகள், சட்டம், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை தன்னுள் அடக்கிய ஒரு முழுமையான தொகுப்பே பண்பாடு“.

. பி. டெய்லர்

மக்களின் சிந்தனையும், செயலும், நடவடிக்கையும் ஒவ்வோர் இனத்தவரிடமிருந்து வேறுபட்டுக் காணப்படுவது பண்பாடாகும்.

ரூத் பெனிடிக்ட்

அவரவர் அன்றாடப் பணிகளை நேர்மையான மனநிலையுடனும், நேர்மையான நோக்குடனும், மகிழ்ச்சியுடனும் செய்வதில்தான் பண்பாடு மிளிர்கிறது“.

வால்டேர்

பண்பாடு என்பது, இயற்கையின்மீதும் தன்மீதும் மனிதன் கொண்டிருக்கும் கட்டுப்பாடு, மனிதனுடைய உடை, ஆயுதங்கள், கருவிகள், மறைவிடம், ஆன்மிகம், மொழி, இலக்கியம் போன்றவற்றை உள்ளடக்கியது“.

எல்வுட் மற்றும் பிரௌன்

மனிதன் தன்னுடைய தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்ள உருவாக்கிய கருவி பண்பாடு“.

சி. சி. நார்தத்

ஒருவர் தம் குணநலன்களை நிரப்புவதிலும், தம்மைச் சூழ்ந்த சமுதாயத்தின் நலன்களைப் பேணுவதிலும், பேரவா கொண்டிருக்கும் நிலை பண்பாடாகும்“.

மேத்யூ ஆர்னால்டு

பண்பாடு என்பது, மக்களால் ஆக்கப்பெற்ற கருவி. இந்த ஊடகத்தைக்கொண்டே மக்கள் அவர்களின் தேவைகளை நிறைவு செய்து கொள்கின்றனர்“.

மாலினோசுக்க

பண்பாடு என்பது மக்கள் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து செயற்படும்போது உண்டாகும் நடத்தை முறைகளின் சேர்மமாகும். இஃது, அந்தந்தச் சமூகத்திற்கு மட்டுமே உரியது; உயிரியல் நிலையில் மரபுரிமையாக வராதது“.

ஆடம்சன் ஓபல்

பண்பாடு என்பது, சீரிய வாழ்வுமுறை. இவ்வாழ்வுமுறை, மக்கள் நம்பிக்கை வைத்துள்ள அடிப்படை மதிப்பீடுகளினால் ஊக்குவிக்கப்படுகிறது“.

கே. எம். முன்ஷ

தனிச் சிறப்புக்கூறுகள் நிறைந்த தனி இனச் சமுதாயத்தினரின் பண்புகளே பண்பாடு எனக் குறிப்பிடத்தக்கனவாகும்“.

அமெரிக்க மானிடவியலாளர்கள்


இந்தியப் பண்பாட்டை அறிய உதவும் தொன்மைச் சான்றுகள்

இலக்கியச் சான்றுகள்

வேதங்கள், இதிகாசங்கள், தரும சாத்திரங்கள் நூல்கள்,பௌத்த சமய இலக்கியங்கள, சமண நூல்கள், தனி இலக்கியங்கள், நாட்டுப்புற இலக்கியங்கள், நாட்டுப்புறப் பாடல்கள்

மனித வாழ்க்கையைப் பிரதிபலித்துக்காட்டும் காலக் கண்ணாடியே இலக்கியம், ஆதலால், காலத்தின் கோலத்தை அந்தந்தக் கால இலக்கியங்களில் காணலாம் – ஜி. ஈ. டெரெவெலியான் (Literature is allusive; each book is rooted in the soil of the time when it was written - G. E. Trevelyan)

1. வேதங்கள்:

  • ரிக்யஜூர்சாமம்அதர்வணம்.இலக்கியச் சான்றுகளில் மிகவும் தொன்மை வாய்ந்தவை வேதங்கள்.அக்காலத்தில் பின்பற்றப்பட்ட சடங்கு, வானநூல், மருத்துவம், மொழிநூல், வேள்விகளின் வகைகள் , இல்லற, துறவறத்தாரின் வாழ்க்கை நெறிமுறைகமுறைகளை விளக்கியுள்ளன.

2. இதிகாசங்கள்

  • இராமாயணம்மகாபாரதம்அக்கால அரசியல், சமுதாயப் போராட்டங்கள், நகர வாழ்க்கை, வரிகள், தண்டனைகள், பல்வேறு மாந்தர்களின் வாழ்க்கை முறைகள் ஆகியவற்றையும் அறியமுடிகிறது.

3. தரும சாத்திரங்கள் நூல்கள்

  1. i)தரும சாத்திர நூல்கள் : மனு , யஜ்ன வால்கியர் , விஷ்ணு, பிரகஸ்பதி, நாரதர் ஆகியோர் எழுதிய நூல்களையே தரும சாத்திர நூல்கள் என்கிறோம்.
  2. ii) பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் :பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பதினொரு நூல்கள் அறக்கருத்துகளை வலியுறுத்துகின்றன.
  3. iii) ‘திருக்குறள்: ‘திருக்குறள், எக்காலத்துக்கும் உகந்த உலக மக்களின் வாழ்வியலுக்கான அறநெறிகளை எடுத்துரைக்கிறது.
  4. iv) ‘நாலடியார்‘ :‘நாலடியார்‘ அறக்கருத்துகளை வெளிப்படுத்துகிறது
  5. v) அறநெறிச்சாரம் : அறநெறிச்சாரம் பண்பாட்டுக் கருத்துகளைப் புலப்படுத்துகிறது.
  6. vi) ஆத்திசூடி: ஆத்திசூடி மக்கள் பின்பற்றத்தக்க பண்பாட்டுக் கூறுகளை எளிய ஓரடிப் பாடலாக வெளிப்படுத்துகிறது.

4) பௌத்த சமய இலக்கியங்கள்

  1. பௌத்த சமய நூல்கள் முப்பிரிவாக உள்ளன
  2. சுத்த பீடகம்விநய பீடகம்அபிதம்ம பீடகம்தமிழ்நாட்டில் பௌத்த சமயம் பரவியிருந்ததை மணிமேகலை காப்பியத்தின் வாயிலாக அறிலாம்.
  3. சுத்த பீடகம், புத்தரின் அறிவுரைகளைக் கூறுகிறது. விநய பீடகம்,பௌத்த துறவிகளுக்கான சட்டதிட்டங்கள், ஞான ஒழுக்க முறைகள் ஆகியவற்றைப்பற்றிக் கூறுகிறது. அபிதம்மபீடகம், புத்தரின் தத்துவங்களை மிகச்சிறந்த முறையில் ஏழு படலங்களில் விரித்துரைக்கிறது. மிலிந்தபான்ஹா, லலிதவிஸ்தரா, வைபுல்ய சூத்திரங்கள், நேத்திபிரகர்ணம், பேதக உபதேசம் போன்றவை இச்சமயத்தின் பிற நூல்களாகும்.

5. சமண நூல்கள்

  1. புத்தரின் அறிவுரைகளையும் கருத்துகளையும் எடுத்துரைப்பவை பெளத்த சமய இலக்கியங்களாகும். 
  2. பாலி, பிராகிருதம் ஆகிய மொழிகளில் இவை எழுதப்பட்டுள்ளன.சமண நூல்கள், ஆகம சித்தாந்தங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம் காப்பியங்கள் சமணத்தின் தத்துவங்களை அறிய உதவுகின்றன.

6. தனி இலக்கியங்கள்

புறநானூற்றின் வாயிலாக வெளிப்படும் மேலும் சில பண்பாட்டுச் செய்திகள் பின்வருமாறு:

  1. 10 வகை ஆடைகள், 28 வகை அணிகலன்கள், 67 வகை உணவுகள் பற்றிய குறிப்புகள்,கடையேழு வள்ளல்களின் கொடைத்திறம், பாணர், விறலியர், கூத்தர் போன்றோரின் கலைத்திறம்
  2. பாரதப்போரின்போது, உதியன் சேரலாதன் என்னும் மன்னன்,வீரர்களுக்கு உணவு கொடுத்தமை
  3. இறந்தவரைத் தாழியில் வைத்துப் புதைத்தல், நடுகல், கணவர் இறப்பிற்குப்பின் மங்கையர் அணிகலன்களைக் களைதல், கைம்மை நோன்பு நோற்றமை, உடன்கட்டை ஏறல்.
  4. தமிழர் திருமண முறை - அகநானூறு
  5. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்‘ - பொதுமை நோக்கம்அன்பின் சிறப்பு - ஐங்குறுநூறு
  6. இல்லற வாழ்வியல் (விருந்தோம்பும் பண்பு, பெரியோரை மதித்தல், வறுமையிலும் செம்மை ) - நற்றிணை
  7. மார்கழி நோன்பு - கலித்தொகை

7. நாட்டுப்புற இலக்கியங்கள்

  1. ஏட்டில் எழுதா இலக்கியங்கள் நாட்டுப்புற இலக்கியங்களாகும்.
  2. ‘இலக்கியங்கள், காலங்காட்டும் கண்ணாடிகளாக விளங்க, நாட்டுப்புற இலக்கியங்கள் சமுதாய வளர்ச்சியைக்காட்டும் காலக் கண்ணாடிகளாக விளங்குகின்றன‘ என்று கூறியவர் - பேராசிரியர் சு.சக்திவேல் (நாட்டுப்புற இயல் ஆய்வு நூல் )
  3. நாட்டுப்புறவியலைக் குறிக்கும் Folklore என்ற சொல்லை, 1846இல் வில்லியம் ஜான் தாமசு என்பவர் உருவாக்கினார்.‘பழங்காலப் பண்பாட்டின் எச்சம் (Cultural Survival) நாட்டுப்புறவியல்‘ என்பது அவரது கருத்தாகும்.

8. நாட்டுப்புறப் பாடல்கள்

  1. மக்களின் வாழ்க்கையில் தாலாட்டுப் பாடல்கள்முதல், ஒப்பாரிப் பாடல்கள்வரை, அனைத்து நிகழ்வுகளும் நாட்டுப்புறப் பாடல்களில் எதிரொலிக்கின்றன. நாட்டுப்புற மக்களது உணர்வுகளையும் பாடல் புனையும் ஆற்றலையும் கற்பனை வளத்தையும் நாம் இப்பாடல்களில் காணலாம்
  2. தொல்காப்பியர் குறிப்பிடும் ‘பண்ணத் தி‘என்பது பாமரர் பாடல்களைக் குறித்தது.பழைமையான பாடல்களிலுள்ள பொருளையே தனக்குப் பாடுபொருளாகக்கொண்டு, பாட்டும் உரையும் போன்று செய்யப்படுவனவற்றைப் பண்ணத்தி என்றனர்.
  3. பண் + நத்தி = பண்ணத்தி (பண்ணை விரும்புவது எனப் பொருள்படும். (பண்= பாடல்))
  4. நாட்டுப்புற மக்கள், இயற்கையைத் தெய்வமாகப் போற்றியுள்ளனர்
  5. சமூக நிகழ்வுகளில், சமுதாயத்தில் உள்ள அனைவரும் கூடிப் பாடும் பாடல்களைக் கொண்டாட்டப் பாடல்கள் என்பர்

9. நாட்டுப்புறக் கதைகள்

  1. ‘பொருள் மரபில்லாப் பொய்ம்மொழி யானும் பொருளொடு புணர்ந்த நகைமொழி யானும்‘ என்னும் தொல்காப்பிய நூற்பா, பழங்காலத்திலேயே கதைகள் வழக்கிலிருந்தன என்பதைச் சுட்டுகின்றது.
  2. பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்ட கதைகள், வளரும் குழந்தைகளுக்கு நன்னெறி ஊட்டுவதற்காக நீதிக்கதைகளாகவும் தோற்றம் பெற்றன. மராட்டிய வீரர் சிவாஜி, இளம்வயதில் தம் தாயிடம் கேட்ட கதைகளே அவர் சிறந்த வீரராக உருவாக உதவின. அண்ணல் காந்தியடிகள், தம் இளம்வயதிலஅரிச்சந்திரன் நாடகக் கதையைப் பார்த்ததால் அவர்தம் வாழ்நாள் முழுதும் வாய்மையைக் கடைப்பிடிக்க உதவியது. 
  3. விக்கிரமாதித்தன் கதைகள், பஞ்ச தந்திரக் கதைகள், மரியாதை ராமன் கதைகள், தெனாலிராமன் கதைகள், இராயர் அப்பாஜி கதைகள், புத்தர் ஜாதகக் கதைகள், அக்பர் பீர்பால் கதைகள், மதன காமராசன் கதைகள், போன்றவை சில நாட்டுப்புறக் கதைகளாக உள்ளன.

நாட்டுப்புறக் கதைப்பாடல்கள்

நூற்பாகாப்பியங்கள் தோன்றுவதற்கு மூலக்காரணமாக இருந்தவை - கதைப்பாடல்கள்

கதைப்பாடலுக்குத் தமிழில் ‘அம்மானை‘ என்றும் பெயருண்டு.

சிலப்பதிகாரத்தில் ‘அம்மானை‘ என்ற சொல் முதன்முதலாகக் கையாளப்பட்டுள்ளது.

கதைப்பாடல்கள் 4 பகுதிகளை கொண்டுள்ளது

  1. காப்பு அல்லது வழிபாடு - இறைவனை வழிபட்டுப் பாடலைத் தொடங்குவது .
  2. குரு வணக்கம் - தனக்குப் பாடம் சொன்ன குருவுக்கு வணக்கம் செய்து பாடுவது.
  3. வரலாறு - நடந்த நிகழ்வைக் கதைப்பாடலாகப் பாடுவது.
  4. வாழி - கதை கேட்போரும், மற்றோரும் கடவுளர் அனைவரின் அருளும் பெற்று வாழ்க என வாழ்த்துவது .

10.பழமொழிகள்

  1. ஒழுக்கம் உயர்வுதரும், ஒழுக்கம் உயர்குலத்தினும் உயர்வு‘ - நல்லொழுக்கம்
  2. பழுத்தமரமும் செழித்தசெல்வமும் பசியாற்றவே‘ - நற்பண்பு
  3. அன்போடு அளிக்கும் கஞ்சி, அறுசுவை உணவை மிஞ்சும் - விருந்தோம்பல்
  4. ‘கெடுவான் கேடு நினைப்பான்‘, ‘தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்‘, ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்‘ - நல்லெண்ணம்.
  5. சிறந்த கருத்தைச் சொல்வது பொன்மொழி.உயர்ந்த பண்பாட்டை வலியுறுத்துவது பழமொழி.

11. புராணங்கள்

  • பண்டைய தொல்கதைகளையே புராணங்கள் என்கிறோம்.ஒவ்வொரு புராணமும் ஏதோ ஓர் உண்மையைக் கூற விழைகிறது - மாக்ஸ்முல்லர்‘புராணக் கதைகள், தங்களை உருவாக்கிய முன்னோர்கள் பற்றியும் பயன்படுத்துவோரைப் பற்றியும் கூறுகிறது‘ - ஈ. பி. டெய்லர்

12. இந்தியப் பண்பாட்டின் இயல்புகள்

பண்பாடு நெகிழ்வுத் தன்மையுடையதாய் விளங்குகிறது. தொன்மையானது. தலைமுறை தலைமுறையாக ஒரு சமுதாயத்தினரிடமிருந்து அடுத்த சமுதாயத்துக்குக் கொண்டு செல்லப்படுவது, பண்பாடேயாகும். பண்பாடு மாற்றத்திற்கு உட்படாது மற்றும் தன் அடையாளத்தை விட்டுச்செல்லும் . நிலைத்தன்மைநெகிழுந் தன்மைநடைமுறை வாழ்விற்குப் பயன்படுதல்முழுவளர்ச்சிக்கு உதவுதல்அனுபவ அறிவு

1. நிலைத்த தன்மை: பண்பாட்டுச் சிறப்புக்குப் பெருமை சேர்ப்பது, அதன் நிலைத்த தன்மையாகும். புற வளர்ச்சி எனக் குறிப்பிடப்படும் நாகரிகம், மாறும் தன்மையுடையது. ஆனால், அக வளர்ச்சியாகிய பண்பாடு என்றும் மாறாதது. தலைமுறை தலைமுறையாக ஒரு சமுதாயத்தினரிடமிருந்து அடுத்த சமுதாயத்துக்குக் கொண்டு செல்லப்படுவது, பண்பாடேயாகும்.

2. நெகிழுந் தன்மை: பண்பாடு நெகிழும்தன்மை கொண்டது. ஏதேனும் ஒன்றை விடாப்பிடியாகப் பற்றிக்கொள்ளாமல், சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் வளைந்துகொடுக்கும் தன்மையுடையது. நாகரிகம் எந்த நிலையிலும், எந்த நேரத்திலும் முழுமையாகத்தன்னை மாற்றிக்கொள்ளும். ஆனால், பண்பாடு மாற்றத்திற்கு உட்பட்டாலும் தன் அடையாளத்தை விட்டுச்செல்லும் என்பதை உணரமுடிகிறது. 

3. நடைமுறை வாழ்விற்குப் பயன்படுதல்: அன்றாட நடைமுறை வாழ்வில் பண்பாடு உறுதுணையாக இருக்கிறது. தனி மனிதனையும் சமுதாயத்தையும், முன்னேற்றுவதற்கு உதவும் குறிக்கோள்களை அடையவும் பண்பாடு வழிசெய்கிறது. 

4. முழுவளர்ச்சிக்கு உதவுதல்: ஒரு மனிதனின் முழுமையான வளர்ச்சி என்பது உடல் மற்றும் உள்ளம் சார்ந்தது. இவ்விரண்டையும் பெறுவதற்குப் பண்பாடு உதவுகிறது. இதன்மூலம், சமுதாயத்தில் உள்ளவரோடு இணக்கமாக வாழும் பண்பினையும் இயற்கையோடு பொருந்தி வாழும் இயல்பினையும் பெற்றுச் சிறந்த குடிமக்களாகத் திகழ, இந்தியப் பண்பாடு உதவுகிறது.

5. அனுபவ அறிவு: ஒரு தலைமுறையினர் தமக்கு முந்தைய தலைமுறையினரிடமிருந்து கற்றுக்கொண்ட வாழ்வியல் திறன்களையும், வாழ்க்கை முறைகளையும் தங்களின் செம்மையான வாழ்வியலுக்குப் பயன்படுத்த அனுபவ அறிவு உதவுகிறது. இதன் வாயிலாக இந்தியப் பண்பாட்டின் இயல்புகளை இன்றைய இளந்தலைமுறையினர் புரிந்துகொள்ள முடிகிறது.

13. ஆன்மிக அடிப்படை

  1. இந்தியப்பண்பாட்டின் ஆணிவேராக ஆன்மிகம் விளங்குகிறது.
  2. நம் நாட்டில் பல சமயங்களைப் பின்பற்றுவோரும் வாழ்கின்றனர். அவர்களின் நம்பிக்கை, பழக்கவழக்கம், வழிபடும் முறை ஆகியவையும் வேறுபடுகின்றன. ஆயினும், அனைத்துச் சமயங்களும் உடல், உள்ளம், ஆன்மா ஆகியவற்றின் தூய்மையை வலியுறுத்துகின்றன. 
  3.  அழிவுக்குக் காரணமாக விளங்கும் ஆசையை விட்டொழித்துத் தூய இறையுணர்வைப் புரிந்துகொள்ளச் செய்கின்றன. தருமம், தருமநெறி, மறுபிறவி, அவதாரக் கோட்பாடு போன்றவற்றைப் புறக்கணிக்காமல் போற்றுகின்றன. ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்‘ திருமூலரின் கூற்றுப்படி ஒற்றுமையுணர்வுடன் வாழச்செய்கின்றன. ஆகவே, சமயமும் பண்பாடும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன. 
  4. “எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே“என்று தாயுமானவர் கூறுவது, ஆன்மநேயத்தின் உயர்சிந்தனையாகும். 
  5. “மேன்மையான சிந்தனைகள் எல்லாப் பகுதிகளிலிருந்தும் நம்மிடம் வரட்டும்“ - ‘ரிக் வேதம்

15. அழிவில்லாத மதிப்பீடுகளின் நிலை

  1. அன்பு : ஒருவர் மீது ஒருவர் செலுத்தும் பாசமே அன்பு எனப்படும்.இது இரக்கம்,பரிவு, கருணை போன்ற பல சொற்களால் அழைக்கப்படுகின்றது.அருளின் அடிப்படையே அன்பாகும்
  2. சத்தியம் : சத்தியம் என்பது உண்மை எனப்படுகிறது.உள்ளத்தில் உண்மை, வாயில் வாய்மை ,உடலால் வருவது மெய்மை. இம்மூன்றையும் உள்ளடக்கிய சொல் சத்தியமாகும்.
  3. தர்மம் : தர்மம் என்பது அறம், ஈகை எனப் பொருள் கொள்ளப்படுகிறது.
  4. அகிம்சை : கொல்லாமை என்பதே அகிம்சையாகும்.
  5. சாந்தம் : மன நிம்மதியே சாந்தமாகும்.
  6. சகோதரத்துவம் : மனித சமூகத்தில் அனைவரும் சகோதரரே.
  7. கருணை : அனைத்து உயிர்களிடத்தும் செலுத்தப்படும் ‘இரக்கமே‘ கருணையாகும்.

16. பண்பாடும் நாகரிகமும்

  1. நாகரிகம் என்ற சொல் நகர் என்னும் சொல்லடியாகப் பிறந்தது.
  2. நகர் + அகம் – நகரம் – நகரிகம் –நாகரிகம்.
  3. நாகரிகம் என்பது புறவளர்ச்சியைக் கூறுகின்றது.
  4. பண்பாடு என்பது அகவளர்ச்சியாகிய ஆன்மிக உயர் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைகிறது.

17.வாழ்வின் உறுதிப்பொருள்

  1. ஆறாம்
  2. பொருள்
  3. இன்பம்வீடு

Post a Comment

0Comments

Post a Comment (0)