சேரர்கள் -SOUTH INDIAN HISTORY-TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL

TNPSC PAYILAGAM
By -
0

சேரர்கள் -SOUTH INDIAN HISTORY



TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL

தென்னிந்திய அரசுகள்:

சேரர்கள்

  1. அசோகரின் கல்வெட்டுக்களில் கேரள புத்திரர்கள் என்'று குறிக்கப்படுபவர்கள் சேரர்கள்.
  2. தற்கால கேரளத்தையும், தமிழ்நாட்டு மேற்கு பகுதியையும் ஆட்சி புரிந்தனர்.
  3. தலைநகரம் வஞ்சி.
  4. துறைமுகப்பட்டினம் - முசிறி, தொண்டி
  5. தமிழ்நாட்டில் தற்போதுள்ள கரூர் மாவட்டம்தான் வஞ்சி என்று குறிப்பிடப்படுகிறது.
  6. சங்க இலக்கியமான பதிற்றுப்பத்து, சேர அரசர்கள் குறித்தும், அவர்களுடைய நாட்டின் எல்லைகளைக் குறித்தும் பேசுகிறது.
  7. கரூரை அடுத்த புகழுரில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள், மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள், சேரமன்னர்களின் மூன்று தலைமுறைகளை குறிப்பிடுகிறது.
  8. சேரர்கள் பனம்பூ மாலை அணிந்திருந்தனர்.
  9. வில்லும், அம்பும் சேரர்களின் இலச்சினை ஆகும்.

எல்லைகள்:

  1. சங்க காலச் சேரர்தம் எல்லைகள் கொங்கத்தின் எல்லைகளேயாகும். ஆனால் பிற்காலத்தில் உருவாகிய கொல்லம் கேரள வர்மாக்கள் சமசுகிருதத்திற்குக் கேரளாவில் முக்கியத்துவம் அளித்ததால், அங்கு தமிழ் அழிந்தது. 
  2. ஆகையால் அப்பகுதிகள் தனியாட்சி பெற்றன. சங்க, பக்தி காலச் சேரர்கள் (சேரமான் பெருமாள், குலசேகரர் ஆகியோர்) கரூரினின்றே ஆட்சி புரிந்தனர். ஆனால் இவர்கள் ஆட்சி முடிந்தவுடன், கேரள வர்மாக்கள் கிளர்ச்சி மூலம் கொல்லத்தைத் தலைமையிடமாகக் கொண்டு கேரளத்தில் தனியாட்சி நிறுவினர்

சங்ககாலச் சேரர்கள்:


சேர வேந்தனின் பெயர்

தந்தை பெயர்

தலைநகரம்

சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன்

வஞ்சி(திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூர்)

சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்

சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன்

பல்யானைச் செல்கெழு குட்டுவன்

சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன்

களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்

சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்

சேரன் செங்குட்டுவன்

சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்

வஞ்சி(திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூர்)

சேரமான் பெருஞ்சேரலாதன்

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்

சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்

நறவூர்

சோழிய ஏனாதி திருக்குட்டுவன்

சேரமான் கணைக்கால் இரும்பொறை

சேரமான் கோக்கோதை மார்பன்

குட்டுவன் கோதை

சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை

கருவூர்

செல்வக் கடுங்கோ வாழியாதன்

சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை

கருவூர்

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை

செல்வக் கடுங்கோ வாழியாதன்

இளஞ்சேரல் இரும்பொறை

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை

கருவூர்

சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை

சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை

கருவூர்மாந்தை

சேரமான் மாரிவெண்கோ

சேரமான் குடக்கோச்சேரல் இரும்பொறை

கருவூர்

சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை

கருவூர்

சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதன்

கருவூர்(பொருநை நதி பாயும் வஞ்சி)

சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை

கோதை மார்பன்

மருதம் பாடிய இளங்கடுங்கோ

பாலை பாடிய பெருங்கடுங்கோ

சேரமான் வஞ்சன்

முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்

பிற்காலச் சேரர்கள்

  • சேரமான் மாக்கோதையார் (பொ.ஊ. 598-629)
  • சேரமான் பெருமாள் நாயனார் (பொ.ஊ. 724-756)
  • சேரமான் ஐயனாரிதனார் (பொ.ஊ. 756-800)
  • குலசேகார வர்மன் (பொ.ஊ. 800-820)
  • இராசசேகர வர்மன் (பொ.ஊ. 820-844)
  • சாந்தனு ரவி வர்மன் (பொ.ஊ. 844-885)
  • இராம வர்மா குலசேகர (பொ.ஊ. 885-917)
  • கோதை ரவி வர்மா (பொ.ஊ. 917-944)
  • இந்து கோதை வர்மா (பொ.ஊ. 944-962)
  • பாசுகரா ரவி வர்மன் I (பொ.ஊ. 962-1019)
  • பாசுகரா ரவி வர்மன் II (பொ.ஊ. 1019-1021)
  • வீர கேரளா (பொ.ஊ. 1021-1028)
  • இராசசிம்மா (பொ.ஊ. 1028-1043)
  • பாசுகரா ரவி வர்மன் III (பொ.ஊ. 1043-1082)
  • ரவி ராம வர்மா (பொ.ஊ. 1082-1090)
  • ராம வர்மா குலசேகர (பொ.ஊ. 1090-1102)

8 நாடு (மகா சாமந்தம்) பிரிவுகள்:

சேர மன்னர்களில் சேரமான் பெருமாள்கள் திருவஞ்சைக் களத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட காலத்தில் சேர நாட்டை 8 (சாமந்தம் = கப்பம் செலுத்தும் நாடு) பிரிவுகளாக பிரித்து 8 மகா சாமந்த மன்னர்கள் ஆண்டுவந்தனர். அவர்கள் மகா சாமந்தர்கள் என அறியப்பட்டனர். அவை

- சாமந்தம் பெயர் தலைநகர் பெயர்
1 ஏரநாடு கோழிக்கோடு
2 வேணாடு பத்மநாபபுரம்
3 ஓனாடு காயங்குளம்
4 கோனாடு --
5 கொடுக்குன்னி நாடு --
6 கோலத்து நாடு வழப்பட்டிணம்
7 போல நாடு --
8 வேம்பொலி நாடு (தெக்கன் கூறு, வடக்கன் கூறு) செங்கனச்சேரி

12 (சுதந்திர நாடு) பிரிவுகள்:

சேர மன்னர்களில் இறுதி மன்னன் மாகோதையார் என்ற சேரமான் பெருமாள் திருவஞ்சைக் களத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட காலத்தில் சேர நாட்டை 12 (சுவரூபம் + விடுதலை நாடுகள்) பிரிவுகளாக பிரித்து 12 மன்னர்களிடம் (குருநில மன்னர்கள்) பிரித்து வழங்கப்பட்டது. அவை:

- விடுதலை நாடுகள் தற்போதைய பகுதி
1 நெடியிருப்பு கோழிக்கோடு
2 ஆரங்கோடு வள்ளுவநாடு
3 பெரும்படப்பு கொச்சி
4 திருப்பாப்பூர் திருவிதாங்கூர்
5 குறும்பியாதிரி குறும்ப நாடு
6 புறநாட்டுக்கரை கோட்டையம்
7 கோளத்திரி சிரக்கல்
8 போர்ளாத்திரி கடத்த நாடு
9 தரூர் பாலக்காடு
10 பாப்புக்கோயில் பெய்ப்பூர்
11 பரப்புக்கோயில் பரப்ப நாடு
12 ஒன்றில் பரப்ப நாட்டின் ஒருபகுதி


SOUTH INDIAN HISTORY-TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL NOTES-வினா விடைகள் (6th to 12th புதிய சமச்சீர் புத்தகம்) GUIDE:

1.காஞ்சிபுரத்தை தலைநகராக கொண்டு ஆண்டவர்கள் - பல்லவர்கள்.

2.காஞ்சிபுரத்தை அறிந்திருந்த வணிகர்கள்  - சீனா , ரோமாபுரி வணிகர்கள்.

3.     பல்லவர்கள் கல்வெட்டு சான்றுகள்:

           1.     மண்டகப்பட்டு குகை கல்வெட்டு

           2.     இரண்டாம் புலிகேசியின் அய்கோல் கல்வெட்டு.

4.     செப்பெடுகள்  - காசக்குடி செப்பெடுகள்.

5.     பல்லவர் கால இலக்கிய சான்றுகள்: மத்தவிலாச பிரகசனம், அவந்தி சுந்தரி கதை , கலிங்கத்துபரணி ,  பெரியபுரானம் ,  நந்தி கலம்பகம்.

6.     பல்லவர் கால அயலயர் குறிப்பு - யுவான் சுவாங்.

7.     பல்லவர்கள் எந்த அரசர்கள் கீழ் சிற்றரசாக இருந்தனர் - சாதவாகனர்கள்.

8.     இரண்டாம் சிம்மவர்மனின் மகன் - சிம்ம விஷ்ணு.

9.     கலப்பிரர்களை அழித்து பல்லவ அரசை உருவாக்கியவர் - சிம்ம விஷ்ணு .

10.   சிம்ம விஷ்ணுவின் மகன் - முதலாம் மகேந்திரவர்மன்.

11.   முதலாம் மகேந்திரவர்மன் மகன்  - முதலாம் நரசிம்மன்.

12.   இரண்டாம் நாசிம்மவர்மன்  - ராஜசிம்மன்.

13.   கடைசி பல்லவ அரசர் - அபராஜிதன்.

14.   முதலாம் நரசிம்மவர்மனின் படைத்தளபதி - பரஞ்சோதி.

15.   வாதாபி படையெடுப்பில் பல்லவபடைகளுக்கு தலைமை ஏற்றவர்- பரஞ்சோதி.

16.   பரஞ்சோதி வாதாபி வெற்றிக்கு பின்னர்  - சிவபக்தராக மாறினார்.

17.   மகேந்திர வர்மன் ஆட்சி காலம் - கி. பி. - 600 - 630.

18.   சமன சமயத்தை பின்பற்றிய மகேந்திர வர்மன் யாரால் சைவத்திற்கு மாறினார்- திருநாவுக்கரசர்  - அப்பர்.

19.   மத்தவிலாச பிரகாசனம் -குடிகாரர்களின் மகிழ்ச்சி - நாடக நூலை எழுதியவர் சமஸ்கிருத மொழி - மகேந்திரவர்மன்.

20.   மகேந்திரவர்மனை தோற்கடித்து வெங்கியை கைப்பற்றியவர் - இரண்டாம் புலிகேசி.

21.   சாளுக்கியர்களின் தலைநகரம் - வாதாபி.

22.   வாதாபியை தலைநராக கொண்டு ஆட்சி செய்த மேலை சாளுக்கியர் - இரண்டாம் புலிகேசி.

23.   முதலாம் நரசிம்மன் காலம் -  கி. பி. 630 - 668.

24.   வாதாபியை கைப்பற்றி இரண்டாம் புலிகேசியை கொண்றவர் - முதலாம் நரசிம்மவர்ன்.

25.   இரண்டாம் நரசிம்மவர்மன் காலம் - கி. பி. பொ. ஆ  - 695 - 722.

26.   சீன நாட்டிற்கு தூதுக்குழுவை அனுப்பியவர் - இரண்டாம் நரசிம்மவர்மன்  - ராஜசிம்மன்.

27.   காஞ்சி கைலாசநாதர் கோவிலை கட்டடியவர் - இரண்டாம் நரசிம்மவர்மன்.

28.   சிம்ம விஷ்ணு -  அவனிசிம்மர்.

29.   முதலாம் மகேந்திரவர்மன்: பட்டங்கள்: சங்கிரணஜதி , மத்தவிலாசன் , குணபாரன், சித்திகாரப் புலி , விசித்திரசித்தன்.

30.   முதலாம் நரசிம்மவர்மன்: பட்டங்கள்: மாமல்லன் , வாதாபிகொண்டான்.

31.   யுனெஸ்கோவின் உலக பாரம்பரியச் சின்னங்கள் அட்டவனையில் மாமல்லபுரம் சேர்க்கப்பட்ட ஆண்டு  - 1984.

32.   பாறை குடைவரை கோவில்கள் - மகேந்திரவர்மன் பாணி.

33.   ஒற்றைக்கள் ரதம் , சிற்பமண்டபங்கள் - மாமல்லன் பாணி.

34.   கட்டுமானக்கோவில்கள் - ராஜசிம்மன் பாணி , நந்திவர்மன் பாணி.

35.   மகேந்திர வர்மன் பாணி உள்ள இடங்கள்: மண்டகப்பட்டு , மகேந்திரவாடி  , மாமண்டூர் , களவானூர் , திருச்சிராப்பள்ளி , வல்லம் , திருக்கழுக்குன்றம், சியாமங்கலம் குகை கோவில்கள்.

36.   மாமல்லன் பாணி  உள்ள இடங்கள்:

                 1.     மாமல்லபுரம் - பஞ்சபாண்டவர் ரதம் . ஒற்றைகல் ரதம்.

                 2.     மகிஷாசுரமர்த்தினி மண்டபம்.

                 3.     திருமூர்த்தி மண்டபம்.

                 4.     வராகர் மண்டபம்.

                 5.     மகாபலிபுரம் திறந்தவெளி கலையரங்கம்.

37.   உலகில் செதுக்கப்பட்ட திறந்தவெளி சிற்பங்களில் மிகப்பெரியது - மகாபலிபுரம் திறந்தவெளி கலையரங்கம்.

38.   இராஜசிம்ம பாணி - காஞ்சி கைலாசநாதர் கோவில்.

39.   எந்த கோவில் ராஜசிம்மேஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது - காஞ்சி கைலாசநாதர் கோவில்.

40.   நந்திவர்ம பாணி - காஞ்சிபுரம் வைகுண்டபெருமாள் கோவில்.

41.   சைவர் - அப்பர் , மாணிக்கவிசகர் - ஆழ்வார்கள்.

42.   வைணவர்- நம்மாழ்வார் ஆண்டாள் - நாயன்மார்கள்.

43.   காஞ்சி கடிகை - கல்வி மையம் , மடாலயம்.

44.   நியாய பாஷ்யா நூலை எழுதியவர் - வாத்ஸ்யாயர். காஞ்சி கடிகையின் ஆசிரியர் .

45.   தட்சண சித்திரம் யாருடைய ஆட்சிக்காலத்தில் தொகுக்கப்பட்டது - முதலாம் மகேந்திர வர்மன்.

46.   தசகுமார சரிதம் என்ற நூலை எழுதியவர் - தண்டின்.

47.   முதலாம் நரசிம்மவர்மன் அவையை அலங்கரித்தவர் - தண்டின்.

48.   கிராதார்ஜீனியம் என்ற வடமொழி காப்பியத்தை எழுதியவர் - பாரவி.

49.   பல்லவர் காலத்தில் எழுதப்பட்ட சமய இலக்கியம்:

                 1.     நாயன்மார் இயற்றிய - தேவாரம் .

                 2.     ஆழ்வார்கள் இயற்றிய - நாலாயிரதிவ்விய பிரபந்தம்.

50.   பெருந்தேவனாரை ஆதரித்தவர் - இரண்டாம் நந்திவர்மன்.

51.   மகாபாரதத்தை பாரதவெண்பா பெயரில் தமிழில் மொழிபெயர்த்தவர் - பெருந்தேவனார்.

52.   முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் வாழ்ந்த இசைக் கலைஞர் - ருத்ராச்சாரியர்.

53.   வெங்கி - கீழைச்சாளுக்கியர்கள்

54.   கல்யாணி - மேலைச்சாளுக்கியர்கள்.

55.   சாளுக்கியர்கள் - கல்வெட்டு சான்றுகள்:

                 1.     வாதாபி குகைகல்வெட்டு - மங்களேசன்.

                 2.     காஞ்சி கைலாசநாதர் கல்வெட்டு.

                 3.     இரண்டாம் புலிகேசியின்  - அய்கோல் கல்வெட்டு.

                 4.     பட்டக்கல் , விருப்பாஷா கோவில் கல்வெட்டு.

56.   சாளுக்கியர் பற்றி அயலர் குறிப்பு - யுவான் சுவாங் குறிப்புகள்.

57.   பீஜப்பூர் மாவட்டம் பட்டடக்கல்லில் குறு நில மன்னராக இருந்தவர் - முதலாம் புலிகேசி.

58.   முதலாம் புலிகசியின் மகன் - முதலாம் கீர்த்திவர்மன் - கி. பி 566 - 597.

59.   இரண்டாம் புலிகேசி -  கி. பி. - 610 - 642.

60.   பாரசீக அரசர் இரண்டாம் குஸ்ரு யாருடைய அவைக்கு தூது குழு அனுப்பிவைத்தார் - இரண்டாம் புலிகேசி.

61.   வெங்கியை கைப்பற்றிய இரண்டாம் புலிகேசி தனது சகோதரர் - விஷ்ணு வர்த்தனருக்கு வழங்கினார்.

62.   காஞ்சிபுரத்தை கைப்பற்றிய சாளுக்கியர்கள்- முதலாம் விக்ரமாதித்தன். இரண்டாம் விக்ரமாதித்யன்.

63.   ராஷ்டிரகூட அரசவம்சத்தை நிறுவியவர் - தந்திதுர்க்கர்.

64.   சாளுக்கிய அரசர் இரண்டாம் கீர்த்திவரமனை போரில் தோற்கடித்தவர்  - தந்திதுர்க்கர்.

65.   ராஷ்டிரகூடர்களின் சிற்றரசராக பீஜப்பூர் பகுதியை ஆண்டு வந்தவர் - இரண்டாம் தைலப்பா.

66.   கி. பி- 973 - ல் மாளவ அரசர் பரமாரைத் தோற்கடித்து கல்யாணியைக் கைப்பற்றியவர் - இரண்டாம் தைலாப்பா.

67.   தலைநகரை மன்யகோட்டாவிலிருந்து கல்யாணிக மாற்றியவர் - முதலாம் சோமேஸ்வரர்.

68.   சாளுக்கியர்- வெசாரா பாணியிலான கோவில் விமானங்களை கட்டும் முறை வளர்ச்சி பெற்றது - தென்இந்தியா , வடஇந்தியா கலப்பு , வெசாரா.

69.   சாளுக்கியர்கள் கட்டுமான கோவில்கள் உள்ள இடம் - அய்கோல் , வாதாபி.

70.   வாதாபியில் உள்ள விஷ்னு கோவிலை கட்டிய சாளுக்கிய அரசர் - மங்களேசன்.

71.   சாளுக்கியர்கள் குகைக்கோவில் உள்ள இடம் - அஜந்தா , எல்லோரா , நாசிக்.

72.   கல்யாணிமேலை சாளுக்கியர்கள்  கட்டிடக்கலை:

           1.     காசி விஸ்வேஸ்வரர் கோவில் - லக்கண்டி

           2.     மல்லிகார்ஜூனா கோவில் - குருவட்டி.

           3.     கள்ளேஸ்வரர் கோவில் - பகலி.

           4.     மகாதேவர் கோவில் - இட்டகி.

73.   ஓவியங்களில் சாளுக்கியர் பின்பற்றிய பாணி - வாகடகர்.

74.   பட்டடக்கல் - யுனெஸ்கோ உலகப்பாரம்பரியச் சின்னம்.

75.   பட்டடக்கல் - உள்ள இடம் - கர்நாடகா.

76.   திராவிட பாணி - விருப்பாக்ஷா கோவில் , சங்கமேஸ்வரா கோவில்.

77.   நகராபாணி - பாப்பநாதர் கோவில்

78.   விருபாக்ஷா கோவில் போல் கட்டப்பட்டுள்ள கோவில் - காஞ்சி கைலாசநாதர் கோவில்.

79.   ராஷ்டிரகூட வம்சத்தை நிறுவியவர் - தந்திதுர்கர்.

80.   எல்லோராவில் கைலாசநாதர் கோவிலை கட்டியவர் - முதலாம் கிருஷ்ணன்.

81.   ராஷ்டிர கூடர்களின் மிக சிறந்த அரசர் - அமோகவர்ஷர்.

82.   மான்யக்கோட்டாவில் புதிய தலைநகரை உருவாக்கியவர் - அமோகவர்ஷர்.

83.   ராஷ்டிர கூடர்கள் பிறப்பால் கன்னடர்கள் - மொழி - கன்னடம்

84.   ராஷ்டிர கூட அரசர்களின் திறமையான கடைசி அரசர் - மூன்றாம் கிருஷ்ணர்.

85.   சோழர்களை தக்கோலம் போர்களத்தில் தோற்கடித்து தஞ்சாவூரை கைப்பற்றியவர் - மூன்றாம் கிருஷ்னர்.

86.   இராமேஸ்வரத்தில் கிருஷ்ணேஸ்வரர் கோவிலை கட்டியவர்- மூன்றாம் கோவிந்தன்.

87.   கன்னட மொழியில் இயற்றிய முதல் நூல் கவிராஜமார்க்கம் இயற்றியவர் - அமோகவர்ஷர்.

88.   கன்னட மொழியின் முன்று ரத்தினங்கள் : ஆதிகவி பம்பா , ஸ்ரீ பொன்னா, ரன்னா.

89.   கைலாசநாதர் கோவில் - எல்லோரா - 60000 சதுர அடி.

90.   மகாராஷ்டிரா ஒளரங்காபாத். விமானஉயரம் - 90 அடி.

91.   எலிபெண்டா தீவின் இயற்பெயர் - ஸ்ரீ புரி - மும்பைக்கு அருகில் உள்ளது.

92.   எலிபெண்டா என்னும் பெயர் சூட்டியவர்கள்- போர்ச்சுகீசியர்கள்.

93.   சமண நாராயணர் கோவில் , காசி , விஸ்வேஸ்வரர் கோவில் - ராஷ்டிரகூடர்களால் கட்டப்பட்டது.



Post a Comment

0Comments

Post a Comment (0)