எக்ஸ்போசாட்’ (எக்ஸ்-ரே போலாரிமீட்டா் சாட்டிலைட்) / ExpoSat Satellite

TNPSC PAYILAGAM
By -
0

எக்ஸ்போசாட்’ (எக்ஸ்-ரே போலாரிமீட்டா் சாட்டிலைட்)

  1. 2024ம் ஆண்டின் முதல் செயற்கைக்கோளான எக்ஸ்போ சாட் செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி 58 ராக்கெட் மூலம்ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து 01.01.24 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது
  2. விண்வெளியில் உள்ள கருந்துளைநியூட்ரான் நட்சத்திரங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ சாா்பில் எக்ஸ்போசாட்’ (எக்ஸ்-ரே போலாரிமீட்டா் சாட்டிலைட்) எனும் அதிநவீன செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. 
  3. அந்தச் செயற்கைக்கோள் மொத்தம் 469 கிலோ எடை கொண்டது. ஐந்து ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட எக்ஸ்போசாட்பூமியில் இருந்து சுமாா் 650 கி.மீ. தொலைவில் நிலைநிறுத்தப்பட்டு ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளது. 
  4. இதற்காக ‘எக்ஸ்பெக்ட்’ (எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோகிராபி), ‘போலிக்ஸ்’ (எக்ஸ்ரே போலாரிமீட்டா்) ஆகிய சாதனங்கள் அதில் பொருத்தப்பட்டுள்ளன. 
  5. இவை விண்வெளியில் வியாபித்துள்ள ஊடுகதிா்களின் (எக்ஸ்-ரே) துருவ அளவு மற்றும் கோணத்தை அளவிடுதல்நியூட்ரான் நட்சத்திரத்தில் இருந்து வெளிப்படும் கதிரியக்கம்கருந்துளை வாயுக்களின் திரள் (நெபுலாஉள்பட பல்வேறு அம்சங்களை ஆராயும். 
  6. இதைத் தவிரபிஎஸ்எல்வி ராக்கெட்டின் நான்காம் நிலையான பிஎஸ் பகுதியில் 10 ஆய்வுக் கருவிகள் இணைத்து அனுப்பப்பட உள்ளன. இவை செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்ட பின்பு புவி தாழ்வட்டப் பாதைக்கு வந்து ஆய்வுகளை மேற்கொள்ளும். ஏற்கெனவே விண்வெளியில் நட்சத்திரங்களின் செயல்பாட்டை ஆராய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய அஸ்ட்ரோசாட் செயற்கைக்கோளின் தொடா்ச்சியாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)