இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு, சமூக நல்லிணக்கம்- வினா விடைகள் (6th to 12th புதிய சமச்சீர் புத்தகம்) GUIDE

TNPSC PAYILAGAM
By -
0

 



TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL

INDIA AS A SECULAR STATE, SOCIAL HARMONY

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு, சமூக நல்லிணக்கம்

 வினா விடைகள் (6th to 12th புதிய சமச்சீர் புத்தகம்) GUIDE


19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

1. 1828 - பிரம்ம சமாஜத்தை நிறுவியவர் ராஜா ராம்மோகன் ராய் (1772-1833)
2. ராஜாராம் மோகன்ராய் புலமை பெற்றிருந்த மொழிகள் வங்காளம் (தாய்மொழி),சமஸ்கிருதம், அரபி, பாரசீகம், ஆங்கிலம்.
3. ராஜா ராம்மோகன் ராய் கல்கத்தாவில் கோவிலை நிறுவிய ஆண்டு 1828 ஆகஸ்டு 20. திருவுருவச் சிலைகள் வைக்கப்படவில்லை.
4. 1829-இல் தலைமை ஆளுநர் வில்லியம் பெண்டிங் சதி எனும் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழித்துகட்ட இயற்றிய சட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர் ராஜாராம் மோகன்ராய்.
5. இந்துக்களின் மறை நூல்கள் அனைத்தும் ஒரே கடவுள் கோட்பாட்டை அல்லது ஒரே கடவுளை வணங்குவதை உபதேசிப்பதாக கூறியவர் ராஜாராம் மோகன்ராய்
6. ராஜாராம் மோகன்ராய் மறைவுக்குப் பின்னர் அவர் விட்டுச் சென்ற பணிகளை தொடர்ந்தவர். மகரிஷி தேவேந்திரநாத் தாகூர்.
7. ரவீந்திரநாத் தாகூரின் தந்தை மகரிஷி தேவேந்திரநாத் தாகூர். 1817-1905.
8. மகரிஷி தேவேந்திரநாத் தாகூர் நம்பிக்கை பற்றிய எத்தனை கொள்கைகளை முன்வைத்தார்-4.
9. கேசவ் சந்திர சென் பிரம்ம சமாஜத்தில் இனைந்த ஆண்டு-1857.
10. பிரம்ம சமாஜம் உறுப்பினர்கள் இடையே பிளவு ஏற்பட்ட ஆண்டு-1885.
11. ஆதிபிரம்ம சமாஜம் - தேவேந்திரநாத் தாகூர்.
12. இந்திய பிரம்ம சமாஜ் - கேசவ் சந்திர சென்.
13. குழந்தைத் திருமணத்தை எதிர்த்தோர் இந்தியாவின் பிரம்ம சமாஜத்திலிருந்து விலகி நிறுவிய அமைப்பு சாதாரண சமாஜ்
14. நவீன வங்காள உரைநடையின் முன்னோடி - ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் (1820-1891).
15. 1856-இல் யாருடைய முயற்சியால் விதவை மறுமண சட்டம் இயற்றப்பட்டது ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்.
16. 1860 -இயற்றப்பட்ட திருமண வயதுச்சட்டம் திருமண வயது-10.
17. 1891 - இயற்றப்பட்ட திருமண வயதுச்சட்டம் திருமண வயது 12.
18. 1925-இயற்றப்பட்ட திருமண வயதுச்சட்டம் திருமண வயது 13.
19. பிரம்ம சமாஜத்தின் கிளை அமைப்பு பிரார்த்தனை சமாஜம்
20. 1867 - பம்பாய் இல் பிரார்த்தனை சமாஜத்தை தொங்கியவர் ஆத்மராம் பாண்டுரங்ட
21. பிரார்த்தனை சமாஜத்தில் இரண்டு மேன்மை மிக்க உறுப்பினர்கள்R.C.பண்டர்கர், M.G.ரானடே

22. மகாதேவ் கோவிந்த் ரானடே (1842-1901) தொடங்கிய அமைப்புகள்:
1. விதவை மறுமணச் சங்கம் 1861.
2. புனே பர்வஜனிக் சபா 1870
3. தக்கான கல்வி கழகம் 1884.
23. குலாம்கிரி (அடிமைத்தனம்) என்ற நூலின் ஆசிரியர் ஜோதிபா பூலே.
24. 1875ஆண்டு ஆரிய சமாஜத்தை நிறுவியவர் சுவாமி தயானந்த சரசுவதி.
25. சுவாமி தயானந்த சரஸ்வதி எழுதிய நூல்கள்-சத்யார்த்த பிரகாஷ்.
26. வேதங்களுக்கு திரும்புவோம் என்பது யாருடைய முழக்கம் சுவாமி தயானந்த சரஸ்வதி (1824-
1883).
27. இஸ்லாமுக்கும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய இந்துக்களை மீண்டும் இந்துக்களாக மாற்ற தொடங்கிய இயக்கம் சுத்தி இயக்கம்.
26. சுத்தி இயக்கத்தை தொடங்கியவர் சுவாமி தயானந்த சரஸ்வதி.
29. ஆரிய சமாஜம் தூய்மைக் கோட்பாடு குறித்தக் கருத்து முரண்பாட்டால் இரண்டாக பிரிந்த शुआंग -1893.
30. தயானந்த சரஸ்வதிக்கு பின்னர் ஆரிய சமாஜத்தின் பொறுப்பை ஏற்றவர். ஸ்ரத்தானந்தா.
31. ராமகிருஷ்ண பரமஹம்சர் காலம் 1836 1886.
32. கல்கத்தாவுக்கு அருகேயிருந்த தட்சிணேஸ்வரம் என்னும் ஊரைச் சார்ந்த எளிய அரசசகராக பணிபுரிந்தவர்-ராமகிருஷ்ண பரமஹம்சர்.
33. கடவுள் காளியின் தீவிர பக்தர்-ராமகிருஷ்ண பரமஹம்சர்.
34. ஜீவன் என்பதே சிவன் எனவும் கூறியவர் ராமகிருஷ்ண பரமஹம்சர்.
35. மனிதர்களுக்கு செய்யப்படும் சேவையே கடவுளுக்கு செய்யப்படும் சேவையாகும் என்றவர்- ராமகிருஷ்ண பரமஹம்சர்.
36. ராமகிருஷ்ண பரமஹம்சருடைய முதன்மைச் சீடர் சுவாமி விவேகானந்தர்.
37. சுவாமி விவேகானந்தர் இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா.
38. 1893-ல் உலக சமய மாநாடு எங்கு நடைபெற்றது.சிகாகோ
39. உலக சமய மாநாட்டில் இந்து சமயம், பக்தி மார்க்கத் தத்துவம் குறித்து சொற்பொழிவு ஆற்றியவர்-சுவாமி விவேகானந்தர்.
40. 1875 பிரம்மஞான இயக்கத்தை அமெரிக்காவில் தோற்றுவித்தவர்கள் - H.P.பிளாவட்ஸ்கி, கரனல் H.S.ஆல்கட்.
41. 1886 - ஆண்டு இந்தியாவில் பிரம்மஞான இயக்கம் சென்னை அடையாறில் தோற்றுவித்தவர்
அன்னிபெசன்ட்

42. இந்தியாவில் பௌத்த சமயம் புத்துயிர் பெறுவதில் முக்கிய பங்கு வகித்த அமைப்பு. பிரம்ம ஞான சபை.
43. அன்னிபெசன்ட் பிரம்மஞான கருத்துக்களை பரப்ப தொடங்கியசெய்திதாள் நியு இந்தியா, காமன்வில்.
44. ஜோதிபா பூலே 1827 மகாராஷ்டிராவில் பிறந்தார்.
45. 1852-ஆண்டு ஒடுக்கப்பட்டோருக்கான முதல் பள்ளியை புனேயில் துவங்கியவர்- ஜோதிபா பூலே.
46. சத்யசோதக் சமாஜ் (உண்மையை நாடுவோர் சங்கம்) எனும் அமைப்பை தொடங்கியவர் ஜோதிபா பூலே.
47. ஜோதிபா பூலேயின் மனைவி - சாவித்திரி பாய்.
46. பெற்றோரில்லா குழந்தைகளுக்கென்று விடுதிகளையும், விதவைகளுக்கு காப்பகங்களை உருவாக்கியவர். ஜோதிபா பூலே.
49. ஜோதிபா பூலே தீவிர கருத்துக்களை சுருக்கி கூறும் நூல் குலாம்கிரி (அடிமைத்தனம்).
50. ஒடுக்கப்பட்ட மக்கள் மேம்பாட்டிற்காக தர்ம பரிபாலன யோகம் எனும் அமைப்பை தொடங்கியவர்-நாராயண குரு.
51. அருவிபுரம் எனும் ஊரில் ஒரு பெரிய கோவிலை கட்டி அதை அனைவருக்கும் அர்பணித்தவர்- நாராயண குரு.
52. நாராயண குருவால் ஊக்கம்பெற்றவர் அய்யன்காளி
53. அய்யன்காளி 1863 ஆண்டு திருவனந்தபுரத்தில் உள்ள வெங்கநூரில் பிறந்தார்.
54. 1907 -சாது ஜன பரிபாலன (ஏழை மக்கள் பாதுகாப்புச் சங்கம்) எனும் அமைப்பை நிறுவியவர்- அய்யன் காளி
55. 1875 - ஆண்டு அலிகார் முகமதிய ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரியை அலிகாரில் நிறுவியவர் சர் சையது அகமதுகான்.
56. அலிகார் முகமதிய ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரி பல்கலைகழகமாக தரம் உயர்த்த பட்ட नंग 1920.
57. தியோபந்த் இயக்கம் ஒரு மீட்பியக்கம்.
58. 1851-இல் என்பார் ரஹ்னுமாய் மஜ்தயாஸ்னன் சபா (பார்சிகளின் சீர்திருத்தச் சங்கம்) எனும் அமைப்பை நிறுவியவர் பாதுன்ஜி நௌரோஜி.
59. நிரங்கரி (உருவமற்ற) இயக்கத்தை நிறுவியவர் பாபா தயாள்தாஸ்.
60. நாம்தாரி இயக்கத்தை நிறுவியவர் பாபாராம் சிங்.
61. சிங்சபா நிறுவப்பட்ட இடம் அமிர்தசரஸ்.
62. சிங்சபா நோக்கம் சீக்கிய மதத்தின் புனிதத்தை மீட்டெடுப்பது.
63. இராமலிங்க அடிகளார் காலம் 1823-1874.

64. இராமலிங்க சுவாமிகள் (அ) இராமலிங்க அடிகளார் வள்ளலார்.
65. துயரப்படும் உயிரினங்களை கண்டு இரக்கம் கொள்ளாதவர்கள்கல் நெஞ்சக்காரர்கள் ஆவார்கள் மற்றும் அவர்களது ஞானம் மேகங்களால் மூடப்பட்டு இருக்கும் என கூறியவர்.
வள்ளலார்.
66. 1856 ஆண்டு சமரச வேத சன்மார்க்க சங்கம் எனும் அமைப்பை நிறுவியவர் வள்ளலார்.
67. 1867-வடலூரில் சாதி எல்லைகளை தாண்டி அனைத்து மக்களுக்கும் இலவச உணவகத்தை நிறுவியவர்-வள்ளலார்.
68. வள்ளலார் பாடல்கள் திருவருட்பா என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டது. சைவர்களை புண்படுத்தியதால் அவரது பாடல்கள் "மருட்பா" எனக் கண்டனம் செய்தனர்.
69. வைகுண்ட சுவாமிகள் எங்கு பிறந்தார் கன்னியாகுமரிக்கு அருகில் சாமித்தோப்பு சாஸ்தாகோவில்விளை கிராமம்.
70. வைகுண்ட சுவாமி இயற்பெயர் முடிசூடும் பெருமாள்.
71. சமத்துவ சமாஜ் - அமைப்பை நிறுவியவர் வைகுண்ட சுவாமிகள்.
72. வைகுண்ட சுவாமிகள் சமயவழிபாட்டு முறை அய்யாவழி.
73. வைகுண்ட சுவாமிகள் அறிவுரை கருத்துகள் அனைத்தும் தொகுக்கப்பட்ட நூல் அகிலத்திரட்டு,
74. ஒடுக்கப்பட்டோரின் கோவில்நுழைவுக்கு ஆதரவாக குரல் எழுப்புவதற்காக அத்வைதானந்தா சபா எனும் அமைப்பை உருவாக்கியவர் - பண்டிதர் அயோத்திதாசர்.
75. 1882 ம் ஆண்டு திராவிட கழகம் எனும் அமைப்பை நிறுவியவர்கள் -அயோத்திதாசர், ஜான் திரவியம்.
76. திராவிட பாண்டியன் எனும் இதழை தொடங்கியவர் அயோத்திதாசர்.
77. அயோத்திதாசர் 1891 ஆண்டு திராவிட மகாஜனசபை என்ற அமைப்பை நிறுவி முதல் மாநாடு எங்கு நடைபெற்றது-நீலகிரி.
78. 1907 -ஒரு பைசா தமிழன் என்ற பெயரில் ஒரு வாராந்திர பத்திரிகை தொடங்கியவர்- அயோத்திதாசர்.
79. 1896 - சாக்கிய பௌத்த சங்கம் எனும் அமைப்பை சென்னையில் நிறுவியவர் அயோத்திதாசர்.
80. சத்யார்த்தபிரகாஷ் எனும் நூலின் ஆசிரியர் தயானந்த சரஸ்வதி
81. விதவை மறுமணச் சங்கத்தை ஏற்படுத்தியவர் -M.G. ரானடே
82. ராஸ்ட் கோப்தார் யாருடைய முழக்கம் பார்சி இயக்கம்

பக்தி இயக்கம்

1. இந்துசமய நெறிகளுள் மிக சிறப்பானது-பக்திநெறி கருமநெறி ஞானநெறி யோக நெறி.
2. மிக எளிமையான நெறி- பக்திநெறி
3. பக்தி எனும் சொல் எந்த சொல்லில் இருந்து தோன்றியது. பஜ்
4. இறைவனிடத்தில் நாம் செலுத்தும் ஆழ்ந்த அன்பு-பக்தி
5. பஜ் என்பதன் பொருள்-வழிபாடு:
G. பக்தியின் வகைகள்-பரபக்தி, அபரபக்தி
7. பக்தன் தெளிவில்லாமல் குறுகிய சிந்தனையுடன் ஒரு கடவுளை மட்டும் வழிபாடு செய்தல்- அபரபக்தி
6. உலகம் தழுவிய அன்பு நெறி- பரபக்தி.
9. பக்தி இயக்கம் வெளிகாட்டியது. கடவுள் ஒருவரே.
10. நாயன்மார்கள் எத்தனை பேர்-63-சிவனடியார்.
11. சமயசாரிகள் அல்லது சைவ சமய குரவர் யாவர்- அப்பர் சம்பந்தர்,சுந்தரர், மாணிக்கவாசகர்
12. நாயன்மார்கள் பாடலை தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி.
13. 63-நாயன்மர்களின் வாழ்க்கை வரலாற்றை தொகுத்து அருளியவர் சேக்கிழார்.
14. பெரிய புராணத்தின் வேறுப்பெயர். திருத்தொண்டர் புராணம்.
15. 1,2,3 திருமுறைகளை அருளியவர் (திருகடைகாப்பு)- திருஞானசம்பந்தர்.
16. 4,5,6 திருமுறைகளை அருளியவர்- அப்பர்.
17. 7-வது திருமுறையை அருளியவர். சுந்தரர்.
18. 8-வது திருமுறையை அருளியவர்- மாணிக்கவாசகர்
19. 9-வது திருமுறையில் வருவது. திருவிசைப்பா மற்றும் திருப்பல்லாண்டு.
20. 10-வது திருமுறை- திருமந்திரம். (திருமூலர்).
21. 11-வது திருமுறை- தோத்திர பாடல்.
22. 12-வது திருமுறை- பெரிய புராணம்
23. சோழ நாட்டில் சீர்காழியில் சிவபாத இருதயருக்கு மகனாக பிறந்தவர் திருஞானசம்பந்தர்
24. இறைவி உமாதேவியால் 3 வயதில் ஞானப்பால் ஊட்டப்பட்டவர் சம்பந்தர்
25. சமணர்களை வென்று சைவ சமயத்தை நிலைநாட்டியவர் திருஞானசம்பந்தர்
26. மயிலாப்பூரில் இறந்த பெண்ணின் எலும்பை எடுத்து பெண்ணுருவாக்கியவர் திருஞானசம்பந்தர்
27. திருமறைக்காடு சிவலாயத்தில்கதவுகள் திறக்க பதிகம் படியவர்- திருஞானசம்பந்தர்
28. சம்பந்தர் ஆண்பனையை பெண் பனை ஆக்கிய இடம் திருவோத்தூர் (செய்யாறு).
29. சம்பந்தர் பதிகத்தை பாடி ஓடத்தை ஓட செய்த இடம் திருகொள்ளம்புதூர்.
30. சம்பந்தர் எந்த நதியினை எதிர்த்து ஒடும் படி செய்தார் வைகை
31. சமணர்கள் அனல் மற்றும் புனல் வாதத்தில் வென்றவர் சம்பந்தர்.
32. எந்த இடத்தில் பௌத்தர்களை வாதத்தால் சம்பந்தர் வென்றார். மதுரையில் உள்ள
போதுமங்கையில்
33. சம்பந்தர் எந்த அரசனை சமணத்தில் இருந்து சைவத்திற்கு மாற்றினார மாறவர்மன் அரிகேசரி
34, சம்பந்தரின் மார்க்கம் ஞான மார்க்கம்
35. தினுநாவுக்கரசரின் இயற்பெயர் மருள்நீக்கியார்.
36. திருமுனை நாட்டில் உள்ள திருவாரூரில் புகழனார் மற்றும் மாதினியாருக்கு மகனாக பிறந்தவர். அப்பர்.
37. சமண சமயத்தை பின்பற்றிய போது அப்பரின் பெயர்-தருமசேனர்.
38. யாரால் அப்பர் என திருநாவுக்கரசர் அழைக்கப்பட்டார் திருஞானசம்பந்தர்.
39. சூலை நோய் நீங்க தன் தமக்கை திலகவதியின் வழிகாட்டுதலால் சைவ மதத்திற்கு மாறியவர்
அப்பர்.
40. அப்பர் எந்த அரசனை சைவ சமயத்திற்கு மாற்றினார். முதலாம் மகேந்திர வர்மன்.
41. எங்கே அடைக்கப்பட்டு இருந்த சிவாலய கதவுகளை அப்பர் பதிகம் பாடி திறந்தார்- திருமறைக்காடு
42. எங்கு அப்பர் தனது தோளில் ரிஷப சூல முத்திரைகளை பொறித்தார் திருத்தூங்கானை மாடம்.
43. யாரின் மகனை பாம்பு தீண்ட அப்பர் விஷத்தை நீக்கியருளினார் அப்பூதியடிகள்,
44. எங்கு அப்பர் சிவபெருமானின் கைலாய காட்சியை கண்டு களித்தார். திருவையாறு
45. அப்பரின் பக்தி நெறி- தொண்டு நெறி
46. சிவாலயங்களை துய்மைப்படுத்த உழவார படையை அமைத்தவர் அப்பர்.
47. என் கடன் பணி செய்து கிடப்பதே என்று சொன்னவர் அப்பர்.
48. அப்பர் சைவ மடத்தை நிறுவிய இடம் திருப்பூந்துருத்தி தஞ்சாவூர்
49. வடம் எனும் சொல்லின் பொருள் ஆலமரத்தடி
50. கோயிலின் ஆலமரத்தடியில் ஓம் பிரணவ மந்திரத்துடன் நடைபெறும் பூசை வடதளிபூசை என்று கூறியவர் உவே.சா
51. தாண்டக வேந்தர் அப்பர்
52. மகாகவிபாரதியை அச்சமில்லை அச்சமில்லை என பாட வைத்த பாடல் வரிகள் நாமார்க்கும் குடியெல்லாம் எற தொடங்கும் அப்பரின் பாடல்
53. பதிகங்களில் எத்தனை வகை பண்களை அப்பர் பாடியுள்ளார்-10.
54. மாசில் வீணையும் விங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நிழலே என பாடியவர்-அப்பர்
55. சடையனார் மற்றும் இசைஞானியாரின் மகன்- சுந்தரர்.
56. சுந்தரரின் பக்தி மார்க்கம் சக மார்க்கம்
57. தம்பிரான் தோழர் சுந்தரர்.
58. சுந்தரர் எழுதிய நூல் திருத்தொண்டர் தொகை (00- தனிஅடியார் மற்றும் 9 தொகையடியார்
59. சுந்தரர் இறைவனின் திருவடியால் சூட்டப்பட்ட இடம் சித்தவமடம்
50. சுந்தரர் நெல்மலை பெற்ற இடம் திருகுண்டையூர் (நாகப்பட்டினம்.
61. சுந்தரர் எங்கு செங்கல்லை பொன்னாக்கியவர் திருப்புகலூர்
62. திருமுதுகுன்றத்தில் இறைவன் அளித்த பொன்னை ஆற்றில் போட்டு சுந்தரர் எங்கு எடுத்தார்.
திருவாரூர் கமலாய குளம்.
63. சுந்தரர் திருவொற்றியூரில் மணந்தவர். சங்கிலி
சுந்தரர் திருவாருரில் மணந்தவர் நாச்சியார்.
64. எங்கு வெள்ளத்தை தடுத்து வழிவிட சுந்தரர் பதிகம் பாடினார்- திருவையாறு
65. முதலை வாய் பிள்ளையை சுந்தரர் எங்கு சுந்தரர் மீட்டருளினார்- அவிநாசி
66. பித்தாபிறைகசூடி பெருமானே என பாடியவர் சுந்தரர்.
67. திருமறைக்காட்டில் பிறந்து வரகுண பாண்டியனிடம் அமைச்சராக இருந்தவர்.
மாணிக்கவாசகர்
68. மாணிக்கவாசகர் எழுதிய நூல்கள்-திருவாசகம் மற்றும் திருக்கோவையார்.

69. மாணிக்கவாசகரை இறவன் ஆட்கொண்ட இடம் திருப்பெருந்துறை.
70. வானாகி மண்ணாகி வளியாகி, ஒளியாகி, என இறைவனை வாழ்த்தி பாடியவர் மாணிக்கவாசகர்
71. தில்லையில் பௌத்தர்களை வாதத்தில் வென்றவர் மாணிக்கவாசகர்
72. ஊமைப்பெண்ணை பேசுமாறு செய்தவர். மாணிக்கவாசகர்
73. நரிகளை பரிகளாக்கியவர் மாணிக்கவாசகர்
74. வைகை நதியை பெருக்கெடுத்து ஓட செய்தவர்- மாணிக்கவாசகர்
73. பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படிபட்டவர் மாணிக்கவாசகர்
76. திருநீலகண்டர் எங்கு வாழ்ந்தார். தில்லை.
77. தீண்டுவராயின் எம்மை திருநீலகண்டமென்றவர் திருநீலகண்டர்
78. திருவாசகத்தில் உள்ள பதிகம் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை 51,856658
79. திருவாசகத்தின் 4-பெரும் பகுதிகள் சிவபுராணம் போற்றி திரு அகவல், கீர்த்தி திருஅகவல் திருவண்ட பகுதி
80. பல்வகை உயிரிகளின் பரிணாம வளர்ச்சி பற்றி கூறும் திருவாசக வரிகள்-புல்லாகி பூடாகி
81. கருவியல் அறிவை நன்கு தெரிவிக்கும் திருவாசக வரிகள் மானுட பிறப்பினுள் மாதா உதிரத்து
ஈரமில் கிருமி செறிவினில் பிழைத்தும்.
82. வெல்லுமா மிக வல்ல மெய்பொருளுக்கு அடியேன் என திருத்தொண்ட தொகை குறிப்பிடுவது. மெய்பொருள் நாயனாரை
63. அதிபத்தர் என்பதன் பொருள்- சிறந்த பக்தர்
84. அதிபத்த நாயனார் பிறந்த ஊர்- திருநாகை காரோகணம்.
85. அதிபத்தர் இறைவனுக்கு தங்க மீனை அர்ப்பணிக்கும் விழா நடைபெறும் பகுதி- காயாரோகண சுவாமி கோயில் ஆவணி மாதத்தில்,
86. கண்ணப்ப நாயனாரின் இயற்பெயர் திண்ணன்.
87. திண்ணன்யாருடன் வேட்டையாட சென்றவர் நாணன்காடன்
88. புனிதவதி எனும் இயற்பெயரை கொண்டவர் காரைக்கால் அம்மையார்.
89. புனிதவதியின் கணவர் பரமதத்தன்
90. தமிழுக்கு அந்தாதி எனும் இலக்கிய முறையை அறிமுகம் செய்தவர் காரைக்கால் அம்மையார்
91. காரைக்காலம்மையார் எழுதிய நூல்கள் அற்புத திருவந்தாதி திருவாலங்காட்டு முத்த
திருப்பதிகம் திருவிரட்டை மணிமாலை.
92. மாங்கனி திருவிழா நடைபெறும் இடம் காரைக்கால்
93. சம்பந்தரை வேதாரண்யத்தில் இருந்து பாண்டிய அரசவைக்கு அழைத்ததில் முக்கிய பங்கு
வகித்த பெண் நாயன்மார் மங்கையர்க்கரசியார்
94. மங்கையர்கரசியின் கணவர் மாறவர்மன் அரிகேசரி
95. சுந்தரத்தின் தாயார்- இசை ஞானியார்.
96. சந்தானசாரியர்கள் மெய்கண்டார் அருணந்தி சிவாச்சாரியார் உமாபதி சிவம்
மறைஞானசம்பந்தர்
97. சந்தனம் என்பதன் பொருள் வம்சாவளி / பரம்பரை. 98. சந்தானத்தின் வகைகள் சந்தானம் புற சந்தானம்.
99. அக சந்தானக்காரர்கள் எங்கு வாழ்ந்தனர். கயிலைமலை.
100. ஸ்ரீகண்ட பரமசிவனிடம் சிவெஞான உபதேசம் பெற்றவர்கள் அக சந்தானக்காரர்கள்.
101. அக சந்தான பிரிவை சார்ந்தவர்கள் நந்திதேவர். சனற்குமாரர் பரஞ்சோதியார்.
102. ஆன்மீக அறிவு- பரஞ்சோதியார் மெய்கண்டதேவர் அருணந்திசிவம், மறைஞானசம்பந்தர்
103. மெய்கண்ட தேவர் எழுதிய நூல் சிவஞான போதம்
104. அருணந்தி சிவாசாரியர் எழுதிய நூல்கள். சிவஞான சித்தியார் மற்றும் இருபா இருபது.
185. சிந்தாந்த அஸ்டகம் எழுதியவர் உமாபதி சிவம்.
106. நாயன்மார்களின் சிவ வழிபாட்டை பின்பற்றி கர்நாடகாவில் தோன்றிய சமய பிரிவு- லிங்காயத்
107. ஆழ்வார்கள் எதை அருளியதால் திராவிடாச்சயர்கள் என அழைக்கப்பட்டனர் நாலாயிர திவ்விய பிரபந்தம்
108. ஆழ்வார்கள் அவதரித்த கால அடிப்படையின் நிலைகள்-3-
1. முற்கால ஆழ்வார்கள்-பொய்கையாழ்வார் பூதத்தாழ்வார், பேயாழ்வார்.
2. இடைக்கால ஆழ்வார்கள்-நம்மாழ்வார். மதுரகவியாழ்வார் குலசேகர ஆழ்வார் ஆண்டாள் பெரியாழ்வார்
3. பிற்கால ஆழ்வார்கள் தொண்டரடி பொடியாழ்வார்,திருமழிசை யாழ்வார் திருப்பாணாழ்வார்
109. பொய்கையாழ்வார் பிறந்த இடம்-திருவெஃகா யதோத்தகாள பொற்றாமரை குளம்
110. பொய்கையாழ்வாரின் அவதாரம் பஞ்சசன்யம்திருசங்கு
111. முதல் திருவந்தாதி யை பாடியவர். பொய்கையாழ்வார் (100 பாடல்கள்)
112. வைணவ திருத்தலங்களில் பக்தி பாடல்களை இயற்றி அங்கேயே இறைவன் முன் அரங்கேற்றுவது மங்களாசாசனம்.
113. தமிழகத்தில் மங்களாசனம் செய்தவர்களில் முதன்மையானவர் பொய்கையாழ்வார்
114. பன்னிரு ஆழ்வார்களில் முதன்மையானவர் பொய்கையாழ்வார்
118. மாமல்லபுரம் குருகத்தி மலரில் தோன்றிய ஆழ்வார்- பூதத்தாழ்வார்.
116. தமிழை ஞானத்தமிழ் என கூறியவர் பூதத்தாழ்வார
117. இரண்டாம் திருவந்தாதியை பாடியவர். பூதத்தாழ்வார்.
118. பூதத்தாழ்வார் எதன் அம்சம் கௌமோதகி (கையில் உள்ள ஆயுதம்
119. அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக என பாடியவர்- பூதத்தாழ்வார்.
120. சென்னை மயிலாப்பூரில் பிறந்த ஆழ்வார்- பேயாழ்வார்.
121. பேயாழ்வாரின் அம்சம் நாந்தகம் (திருமாலின் ஆயுதங்களில் ஒன்று.
122. மூன்றாம் திருவந்தாதியை பாடியவர் பேயாழ்வார்.
123. எல்லாவற்றிற்கும் சரியானது எது எனும் தீர்வு யாரிடம் உள்ளதாக பேயாழ்வார் கூறகனார். துளசிமாலை அணிந்த திருமால்.
124. திருமாலின் சுதர்சன சக்கர அம்சமாக பிறந்தவர். திருமழிசையாழ்வார்
125. திருமழிசையாழ்வாரின் சீடர் கணிகண்ணன்.
126. திருமழிசையாழ்வார் திருமாலை தரிசித்த இடம் திருவெஃகா,இரண்டாவது கும்பகோணம்
127. திருமழிசையாழ்வார் சிறப்பு பெயர்கள்- பக்தி சாரார்.திருமழிசை பிரான், குடமுக்கிற்புலவர்.
128. திருமழிசை அருளிய நூல்கள்- நான்முகன்திருவந்தாதி திருசந்த விருத்தம்.
129. நம்மாழ்வார் பிறந்த ஊர்-ஆழ்வார் திருநகரி
130. தமிழ் செய்த மாறன்- நம்மாழ்வார்.
131. நம்மாழ்வார் இயற்றிய நூல்கள்-திருவாசிரியம் பெரிய திருவந்தாதி. திருவாய்மொழி
132. நம்மாழ்வார் இயற்பெயர் சடகோபன் குடிபெயர் மாறன்.
133. நம்மாழ்வார் சிறப்பு பெயர்கள் பாராங்குசன், வழுதி வளநாடன் வகுளாபரணன், குருகூர்நம்பி காரிமாறன்
134. மதுரகவியாழ்வார் பிறந்த ஊர்- திருக்கோளூர்.
135. இவர் எல்லாமறிந்த ஞானி என யார் யாரை கூறினார். நம்மாழ்வாரை மதுரகவியாழ்வார்
136. நம்மாழ்வாரை இறைவாக கொண்டு மதுரகவி பாடிய பாசுரம் கண்ணிநுண்சிறுதாம்பு
137. திருவஞ்சைக்களத்தில் பிறந்த ஆழ்வார் குலசேகர ஆழ்வார்.
136. நம்மாழ்வார் ஒரு நாட்டிற்கோ ஒரு சமயத்திற்கோ ஒரு இனத்திற்கோ உரியவர் அல்லர் என கூறியவர் திரு. வி. சு.
139. ஆனித செல்பந்து அரம்பையர்கள் தற்குழ ..மீனாய் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே என பாடியவர்- குலசேகர ஆழ்வார்.
140. நாடாளும் மன்னனாக இருப்பதை காட்டிலும் திருவேங்கடசுனையில் மீனாக இருத்தலே மேல் என திருவேங்கடபெருமாள் மீது இருந்த ஈடுபாட்டை வெளிப்படுத்தியவர் குலசேகர ஆழ்வார்.
141. திருமால் கோயில்களில் உள்ள கருவறை படியின் பெயர் குலசேகர படி
142. குலசேகர ஆழ்வார் இயற்றிய பாசுரங்கள் பெருமாள் திருமொழி
143. பெரியாழ்வார் பிறந்த ஊர்- திருவில்லிப்புதூர்.
144. பெரியாழ்வாரின் வேறுபயர்கள் விஷ்ணு சித்தன் பட்டர்பிரான்.
145. பிள்ளைத்தமிழ் இலக்கிய முன்னோடி பெரியாழ்வார்.
146. கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும் என திருமாலை குழந்தையாக பாவித்து பாடியவர். பெரியாழ்வார்.
147. பெரிமாழ்வார் பாடிய பாசுரங்கள் திருபல்லாண்டு பெரியாழ்வார் திருமொழி.
148. பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள்- ஆண்டாள்
149. ஆண்டாளுக்கு பெரியாழ்வார் இட்ட பெயர் கோதை நாச்சியார்.
150. ஆண்டாளின் சிறப்பு பெயர் சூடி கொடுத்த சுடர்கொடி
151. ஆண்டாள் படைத்த பாசுரங்கள்- திருப்பாவை, நாச்சியார் திருமொழி
1:52. பாவை நோன்பை அடிப்படையாக கொண்டு ஆண்டாள் படைத்த பாசுரம்- திருப்பாவை.
153. யாருடைய பாடல்கள் நாயக நாயகி பாவத்தை உணர்த்துகின்றன. ஆண்டாள்.
. ஆழிமழை கண்ணா என திருமாலை அழைத்தவர்- ஆண்டாள்.
154 155. தொண்டரடிபொடியாழ்வார் பிறந்த ஊர்-திருமண்டங்குடி
156, தொண்டரடி பொடியாழ்வாரின் இயற்பெயர் விப்ர நாரயணர்
157. தொண்டரடி பொடியாழ்வார் எங்கு நந்தவனம் அமைத்து பெருமாளுக்கு தொண்டு புரிந்தார். திருவரங்கம்
158. தொண்டரடி பொடியாழ்வாரின் நீதி கருத்துக்களை கூறும் பாசுரம்- திருமலை பாசுரம்.
159. தொண்டரடி பொடியாழ்வார் இயற்றிய பாசுரங்கள் திருபள்ளியெழுச்சிதிருமாலை.
160. ஆருளர் களைகண் அம்மா அரங்கமா நகர் உளான் என பாடியவர் தொண்டரடி பொடியாழ்வார்.
151. திருபாணாழ்வார் இயற்றிய பாசுரம்- அமலனாதிபிரான்
162. திருப்பாணாழ்வார் பிறந்த இடம் உறையூர்
163. கொண்டல் வண்ணனை கோவலனாய் வெண்ணய் என பாடியவர்- திருப்பாணாழ்வார்.
164. திருவாலி திருநகரியில் பிறந்த ஆழ்வார். திருமங்கையாழ்வார்
155. எதிரிகளுக்கு எமன் எனும் சிறப்புப்பெயர் பெற்றவர். திருமங்கையாழ்வார்
155. திருமங்கையாழ்வார் இயற்றிய நூல்கள்
1. பெரிய திருமொழி
2. திருகுறுந்தாண்டகம்
3. திருநெடுந்தாண்டகம்
4. திருவெழுக்கூற்றிருக்கை
5. சிறிய திருமடல்
6. பெரிய திருமடல்
157. ஆலய பணியே சமூக பணிக்கு அடிப்படை என்பதை ஏற்படுத்தியவர்கள் ஆழ்வார்கள்.
158. வைணவ நடைமுறை மற்றும் தத்துவம் தோன்ற காரணமானவர்கள் ஆச்சாரியர்கள்.
159. ஆச்சாரியர்கள் புலமை பெற்று இருந்த மொழிகள்-வடமொழி மற்றும் தமிழ்
170. தமிழ் சொற்களும் வடமொழி சொற்களும் கலந்து எழுதப்பட்ட உரைநடை மணிபிரவாள நடை
1. மணி என்பது. முத்துமணி
2. பிரவாளம் என்பது பவளமணி
171. நாதமுனிகள் பிறந்த இடம் காட்டு மன்னார் கோயில்
172. நாலாயிர திவ்விய பிரபந்த பாசுரங்களை தொகுத்தவர் நாதமுனி
173. நாதமுனி இயற்றிய நூல்கள்-நியாய தத்துவம் யோக இரகசியம்.
174. திருவில்லிபுதுரில் பிறந்தவர் மற்றும் ஆளவந்தாரின் மாணவர் இராமனுஜர்
175. எதற்கு இராமனுஜர் உரை எழுதினார். பிரம்ம சூத்திரம்.
176. யாரை கொண்டு இராமனுஜர் திருவாய்மொழிக்கு ஆராயிரபடி உரை எழுதினார்-
திருக்குருகைபிரான் பிள்ளை. 177. யாரிடம் இராமனுஜர் திருவெட்டெழுத்தை கற்றார்- யமுனாச்சாரியார் திருகோட்டியூர் நம்பிகள்
178. விசிஷ்டாத்வைத தத்துவத்தை உருவாக்கியவர் இராமனுஜர்
179. இராமனுஜர் எழுதிய நூல்கள்:
1. வேதாந்த சங்கிரகம்
2. கீதாபாஸ்யம்
3. கத்யதிரயம்
4. சரணாகதி கத்தியம்
5. திருவரங்க சுத்தியம்
6. ஸ்ரீபாஷ்யம்
7. வைகுண்ட கத்தியம்
180. யாருடைய காலத்திற்கு பின் வைணவம் வடகலை மற்றும் தென்கலை என பிரிந்தது.
இராமனுஜர்.
181. இலய நூழைவு போராட்டத்தின் முன்னோடி இராமனுஜர்.
182. ஆன்மாவே பரம்பொருளின் சாரம் என கூறியவர் இராமனுஜர்.
183. அறிவாக உள்ள ஆன்மா மாற்றமடைவது இல்லை என கூறியவர். இராமனுஜர்
184. இராமனுஜர் இறுதிவரை எங்கு இறைப்பணி செய்தார்- ஸ்ரீரங்கம்.
185. நிம்பார்க்கரின் கொள்கை வேதாவேதம்.
186. மகாவிஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணன் மற்றும் இராதை ஆகியோரே பரம்பொருள் என
கூறியவர் நிம்பார்க்கர்
187. நிம்பார்க்கரின் இராதாகிருஷ்ணன் வழிபாட்டை பின்பற்றியோர் அதிகம் காணப்பட்ட பகுதி- உத்திர பிரதேசம்
188. மத்துவர் பிறந்த இடம் கர்நாடகா உடுப்பி கல்யாண்பூர்
189. மகாவிஷ்ணு லட்சுமி அவதாரத்தை தம் பக்தி கோட்பாட்டின் ஆதாரமாக கொண்டவர் மத்துவர்
190. மத்துவர் ஏற படுத்திய பக்தி கோட்பாடு- துவைதம் (இருமைக்கொள்கை.
191. மத்துவரின் கோட்பாடு எந்த தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன. சரவமூலம்
192. மத்துவரின் சீடர்- ஜெய தீர்த்தர்.
193. ஜெய தீர்த்தர் எழுதிய நூல்கள் எவை தெற்கு பாஷ்யம் விளக்க உரை, வேதாந்த
சூத்திரங்களுக்கு உரை.
194. அத்வைதத்தை உருவாக்கிய ஆதிசங்கரரருக்கு முக்கியமானவர் வசஸ்பதி மிஸ்ரா
195. வதவாலி எனும் நூலை எழுதியவர் ஜெய தீர்த்தர்.
196. மத்துவரின் எத்தனை நூதுக்கு விளக்கவுரை உள்ளது-18.
197. நியாய சுதாவை எழுதியவர் ஜெய தீர்த்தர்.
198. நியாய சுதாவிற்கு விளக்கவுரை எழுதியவர் இராகவேந்திரர் புவனகிரி
199, தென்னிந்தியாவையும் வட இந்தியாவையும் பக்தி நெறியில் மூலம் பாலமாக திகழ்ந்தவர் இராமனந்தர்
200. இராமனந்தர் பிறந்த இடம்-அலகாபாத்
201. இராமானந்தரின் குரு- இராமானுஜர்
202. இராமர் சீதை வழிபாட்டை பரப்பியவர் இராமனந்தர்
203. தமது பக்தி கோட்பாடுகளை இந்தியில் பரப்பியவர். இராமனந்தர்
204. இராமனந்தரின் சீடர்கள்
1. முஸ்லிம் நெசவாளி கபீர்.
2. செருப்பு தைக்கும் தொழிலாளி ராய்தாசரா.
3. முடிதிருத்தும் தொழிலாளி சேனா
4. மாமிசம் வெட்டுவோர். சாதனா
5. ஜாட் இன குடியானவர் தன்னா
5. பொற்கொல்லர்-நரஹரி
7. இராஜபுத்திர இளவரசர் ஃபியர்
8. ஆனந்தனந்தர்
9. சுரசுரானந்தர்
10. சுர் ஆனந்தர்
11. சர்கரி
12. பத்யாவதி
205. புருஷபக்ஷா எனும் நீதி போதனை கதைகளை எழுதியவர் வித்யாபதி
206, வித்யாபதி எந்த மொழியில் கோரக்சா விஜயம் எனும் நாடக நூலை எந்த மொழியில் எழுதினார். மைதிலி மொழி
207. யாருடைய கோட்பாடுகள் மகாராஷ்டிர தர்மம் என அழைக்கப்படுகிறது. ஞானேஷ்வர்.
208. ஞானேஷ்வரி என்பது எதன் விளக்கவுரை பகவத்கீதை
209. அத்வைத சித்தாந்தத்தை விளக்கும் அம்ருதானுபவ எனும் நூலை எழுதியவர் ஞானேஷ்வர்
210. பசவர் தோன்றிய இடம் கர்நாடகா. யாரிடம் அமைச்சராக பணிபுரிந்தார் சாளுக்கிய மன்னன்.
211. பசவரை பின்பற்றியோர் விரசைவர அல்லது லிங்காத்து
212. நதியின் சங்கமதலைவன் என யாரை பசவர் போற்றுகிறார். சிவபெருமான்
213. பசவர் எந்த மொழியில் தனது போதனைகளை பரப்பினார். கன்னடம்
214. விதோபா பக்த கோட்பாட்டை பின்பற்றியவர் நாமதேவர்.
215. நாமதேவர் எங்கு பிறந்தார். மகாராஷ்டிரா பண்டரிபுரம்.
216. யாருடைய கருத்துக்கள் மகாராஷ்டிர தங்கம் என அழைக்கப்பட்டன நாமதேவர்.
217. இந்து முஸ்லிம் ஒன்றுமையை வளர்த்த இராமனந்தாரின் புகழ்பெற்ற சீடர் சுபீர்.
218. கபிர் மக்களுக்கு போதித்தவை இராமனும் இரஹூமும் ஒன்றே
கிருஷ்ணனும் கரீமும் ஒன்றே
அல்லாவும் ஈஸ்வரனும் ஒன்றே
219. இந்துக்களும் முஸ்லிம்களும் ஒரே களிமண்ணால் செய்யப்பட்ட இருவேறு பானைகள் என
கூறியவர். கபீர்.
220. கபீரின் பாடல் தொகுப்பு தோஹாக்கள்
221. குருநானக் எங்கு எப்போது பிறந்தார்-1485 தால்வண்டி
222. குருநானக் யாருடைய சீடர். கபீர்.
223. குருநானக் எந்த உணவுகூடத்தில் சமபந்தி உணவருந்தும் முறையை தொடங்கி வைத்தார். லங்கர்.
224. சீக்கிய புனித நூல் ஆதிகிரந்தம்.
225. சிக்கிய மதத்தின் முதல் குரு குருநானக்
226. வல்லபசாரியார் எங்கு பிறந்தார். காசி
227. யாருடைய அரசவைக்கு சென்று கிருஷ்ண வழிபாட்டை வலியறுத்தினார். கிருஷ்ண தேவராயர்.
228. வல்லபசாரியார் உருவாக்கிய பக்தி மார்க்கம் புஷ்டி மார்க்கம்
229. சுத்த அத்வைதத்தை தோற்றுவித்தவர் வல்லபசாரியார்
230. வல்லபசாரியார் தனது நூல்களை எழுதிய மொழி வடமொழி மற்றும் பரிஜ் மொழி
231. வல்லபசாரியார் எழுதிய நூல்கள் கபோதினி சிந்தாந்த இரகசியா
232. வல்லபசாரியார் பாடல்கள் இன்றும் எங்கு ஒலிக்கிறது. இராஜஸ்தான், குஜராத்
233. சைத்தன்யர் எங்கு பிறந்தார்- வங்காளம்
234, எப்போது துறவியானார்.25 வயதில்
235. சைத்தன்யர் தத்துவம் அசிந்திய பேதாபேதம்
236. இராமயணத்தை இந்தியில் இராமசரித மானஸ் என எழுதியவர் துளசிதாசர்.
237. வட இந்தியாவில் இராமர் வழிபாட்டு முறையை கொண்டு வந்தவர் துளசிதாசர்.
238. துளசிதாசர் எழுதிய நூல்கள்
1. வினயபத்திரிக்கா
2. கீதாவளி
3. தோகாவளி
4. பார்வதி மங்களம்
5. ஜானகிமங்களம்
239. ஆக்ராவின் பார்வையற்ற கவிஞர் சூர்தாசர்.
243. சூர்தாசர் இயற்றிய நூல்கள் சூரசாகர் சாகித்ய இரத்னா.
241. அக்பர்அவையில் கிருஷ்ண பக்தி பாடலை பாடியவர்- சூர்தாசர்.
242, சூர்தாசர் தோற்றுவித்த பக்தி பிரிவு- இராதாவல்லபி
243. மீராபாய் எந்த அரச குடும்பத்தை சேர்ந்தவர் இராஜபுத்திரர்
244, மீராபாய் தமது கருத்துக்களை பரப்பிய மொழி- பிரிஜ்
245. சத்ரபதி சிவாஜியின் ஆன்மீக குரு- குருராமதாசர்.
246. குரூராமதாசர் எழுதிய நூல் தசபோதா
247. குரூராமதாசரின் குரு பகவான்ராம்
248. சஜ்ஜன்காட் என்பதன் பொருள். துறவிகளின் கோட்டை
249. சஜ்ஜன்காட்டை உருவாக்கியவர் சத்ரபதி சிவாஜி.
250. துக்காராம் யாருடைய சமகாலத்தவர் ஏக்நாத் மற்றும் சிவாஜி.
251. விஷ்ணுவை விட்டலா எனும் பெயரில் வழிப்பட்டவர் துக்காராம்.
252. துக்காராம் மராத்திய மொழியில் பாடிய பாடல் அபங்கம்
253. இந்தியாவில் பன்முக பண்பாடு பரவ அடித்தளம் சூபி இயக்கம்
254, இந்துஸ்தான் பறவை அமிர்குஸ்ரு.
255. குவாலியர் இசை முறையை அறிமுகபடுத்தியவர் அமிர்குஸ்ரு
256. அமிர்குளஸ்ரு வால் கண்டறியப்பட்ட இசைக்கருவி சிதார்.
257. இறைவனை வழிபடும் போது பாடி ஆனமா மனம் உடல் ஆகிய மூன்றையும் ஒன்றாக
இணக்கும் செயல் நாத யோகா

Post a Comment

0Comments

Post a Comment (0)