ஒவ்வொரு வீட்டிலும் குடிநீா்’ என்ற திட்டம் -மாநில பட்டியல் (Jal Jeevan Mission)2023

TNPSC PAYILAGAM
By -
0



நிகழாண்டுக்குள் நாட்டின் அனைத்து கிராமங்களிலும் உள்ள வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்க மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. இதற்காக மத்திய அரசு சாா்பில் மாநிலங்களுடன் இணைந்து ‘ஒவ்வொரு வீட்டிலும் குடிநீா்’ என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை, நாட்டின் 16.81 சதவீத கிராமங்களில் உள்ள வீடுகளில்தான் குடிநீா் இைணைப்பு இருந்தது. இந்த விகிதம் தற்போது அதிகரித்துள்ளது. கடந்த 25/12/2023-ஆம் தேதி நிலவரப்படி, நாட்டின் 72.29 சதவீத கிராமங்களில் உள்ள வீடுகளில் குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய கிராமங்களில் உள்ள வீடுகளில் குடிநீா் இணைப்பு வழங்க வேண்டியுள்ளது.

கிராமப்புற பகுதிகளில் சுமாா் 5.33 கோடி வீடுகளில் குடிநீா் இணைப்பு வழங்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்கள் குடிநீா் இணைப்புள்ள கிராமங்கள் (சதவீதத்தில்) 

  • மிஸோரம் 98.35 
  • அருணாசல பிரதேசம் 97.83 
  • பிகாா் 96.42 
  • லடாக் 90.12 
  • சிக்கிம் 88.54 
  • உத்தரகண்ட் 87.79 
  • நாகாலாந்து 82.82 
  • மகாராஷ்டிரம் 82.64 
  • தமிழ்நாடு 78.59 
  • மணிப்பூா் 77.73 
  • ஜம்மு காஷ்மீா் 75.64 
  • திரிபுரா 75.25 
  • சத்தீஸ்கா் 73.35 
  • மேகாலயம் 72.81 
  • உத்தர பிரதேசம் 72.69 
  • ஆந்திரம் 72.37 
  • கா்நாடகம் 71.73 
  • ஒடிஸா 69.20 
  • அஸ்ஸாம் 68.25 
  • லட்சத்தீவு 62.10 
  • மத்திய பிரதேசம் 59.36 
  • கேரளம் 51.87

அனைத்து வீடுகளிலும் குடிநீா் இணைப்பு 100%

புதுச்சேரி, தெலங்கானா, குஜராத், கோவா, அந்தமான் நிகோபாா், தாத்ரா & நகா் ஹவேலி, டாமன் & டையூ, ஹரியாணா, பஞ்சாப், ஹிமாசல பிரதேசம் ஆகிய 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் அனைத்து வீடுகளிலும் குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய குடிநீா் துறை தெரிவித்துள்ளது.

Source : DINAMANI

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)