புதுக் கவிதை-சி.சு.செல்லப்பா

TNPSC PAYILAGAM
By -
0



புதுக் கவிதை:தொடர்பான செய்திகள் மேற்கோள்கள் , சிறப்புப் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்:

சி.சு.செல்லப்பா 

SI.SU.CHELLAPPA - TNPSC TAMIL NOTES PDF

சி.சு.செல்லப்பா (செப்டம்பர் 29, 1912 - டிசம்பர் 18, 1998) ஒரு எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். "எழுத்து" என்ற பத்திரிக்கையினை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் செல்லப்பா.

பல நல்ல எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் தன் எழுத்து பத்திரிக்கையின் மூலம் ஊக்குவித்தவர் செல்லப்பா. சிறந்த விமர்சகர்களாகவும், எழுத்தாளர்களாகவும் கருதப்படும் வெங்கட் சாமிநாதன், பிரமீள், ந.முத்துசாமி மற்றும் பல எழுத்தாளர்கள் சி.சு.செல்லப்பாவினால் ஊக்குவிக்கப்பட்டவர்கள். தமிழின் சிறந்த நாவல்களாக கருதப்படும் "வாடிவாசல்", "சுதந்திர தாகம்" போன்றவற்றை எழுதியவர் செல்லப்பா. காந்தியக் கொள்கைகளில் மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர்.

வாழ்க்கை

  • பிறந்த ஊர் = சின்னமனூர்
  • வத்தலகுண்டில் வளர்ந்தவர்
  • சின்னமனூர் சுப்பிரமணியம் செல்லப்பா என்பதன் சுருக்கம் சி.சு.செல்லப்பா
  • “எழுத்து” என்ற இதழை தொடங்கினார்
  • தமிழ் சிறுபத்திரிக்கைகளின் முன்னோடி = எழுத்து இதழ்
  • இவர் பிச்சமூர்த்தியின் “புதுக்குரல்கள்” என்ற கவிதை தொகுதியைத் பதிப்பித்து வெளியிட்டார்
  • சிறப்பு பெயர் - புதுக்கவிதைப் புரவலர்

தேனி மாவட்டம் சின்னமனூரில் 1912ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி பிறந்த சி.சு.செல்லப்பா, தன் தாய் மாமாவின் ஊரான வத்தலக்குண்டில் வளர்ந்தார்.

மதுரைக் கல்லூரியில் பி.ஏ.படித்தார். அப்போதே மகாத்மா காந்தியின் கொள்கையில் ஏற்பட்ட ஈடுபாட்டால் விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

"சுதந்திரச் சங்கு" இதழில் எழுதத் தொடங்கிய செல்லப்பாவுக்கு "மணிக்கொடி" இதழ் கை கொடுத்தது. "சரசாவின் பொம்மை" என்னும் சிறுகதை சிறந்த எழுத்தாளர் என்ற தகுதியை அளித்தது.

1937ஆம் ஆண்டு சென்னைக்கு வந்துவிட்டார் சி.சு.செல்லப்பா. மீனாட்சி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

1947ஆம் ஆண்டு முதல் 1953 வரை தினமணி கதிரில் பிரபல எழுத்தாளர் துமிலனுக்கு உறுதுணையாகப் பணியாற்றினார். புதிய எழுத்தாளர்களை சி.சு.செ. அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

விமர்சக எழுத்தாளராக

சிறுகதை எழுத்தாளராக இருந்த சி.சு.செல்லப்பா விமர்சனக் கலையில் ஈடுபடலானார். விமர்சனத்துக்காகத் தனி இதழ் தொடங்க எண்ணினார். பத்திரிகைகளில் பணிபுரிந்த அனுபவத்தால் தன் கொள்கைகளை வலியுறுத்த "எழுத்து" என்ற இதழைத் தொடங்கினார். பலவித இன்னல்களுக்கிடையே 1970 ஆம் ஆண்டு வரை மொத்தம் 119 இதழ்களை அவர் வெளியிட்டார். ஆனால், 112 இதழ்களை மிகச் சிரமப்பட்டு வெளிக்கொண்டு வந்த "எழுத்து" காலாண்டு இதழாக மாற்றப்பட்டது. 119 இதழுடன்எழுத்து நிறுத்தப்பட்டது.

நூல்கள்:

சிறுகதை

  • சரசாவின் பொம்மை (முதல் தொகுதி)
  • மணல் வீடு
  • பந்தயம்
  • ஒரு பழம்
  • எல்லாம் தெரியும்
  • குறித்த நேரத்தில்
  • அறுபது
  • சத்யாக்ரகி
  • வெள்ளை
  • மலைமேடு
  • நீர்க்குமிழி
  • பழக்க வாசனை
  • கைதியின் கர்வம்
  • மார்கழி மலர் (முதல் சிறுகதை)

புதுக்கவிதை

  • மாற்று இதயம்

விமர்சனம்

  • தமிழ் இலக்கிய விமர்சனம்
  • தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது
  • குறுங்காவியம்
  • இன்று நீ இருந்தால் (மகாத்மா காந்தி பற்றியது)

நாவல்

  • சி.சு.செல்லப்பா
  • சுதந்திர தாகம் (சாகித்ய அகாடமி விருது)
  • வாடிவாசல்
  • ஜீவனாம்சம்

சிறப்புகள்

  • காந்தியக் கொள்கைகளில் மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர்
  • இலக்கியத்துக்காகவே தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணம் செய்தவர்.
  • இவருடைய முதல் சிறுகதை ‘மார்கழி மலர்’
  • சி.சு. செல்லப்பாவின் புகழ்பெற்ற நாவல் வாடிவாசல்
  • 1959 முதல் 1970 வரை மொத்தம் 119 இதழ்களை சி.சு.செல்லப்பா வெளியிட்டார். 1968-ல் 112-வது இதழ் வரை எழுத்து மாத இதழாக வெளிவந்தது. பின்னர் காலாண்டு இதழாக மாற்றப்பட்டது. 119-வது இதழுடன் எழுத்து நிறுத்தப்பட்டது.
  • 1974-ல் செல்லப்பா பார்வை என்னும் சிற்றிதழை துவக்கினார்
  • 1983-ல் சுவை என்னும் சிற்றிதழை தொடங்கினார்
  • தமிழிலக்கிய மரபில் நவீன் இலக்கிய முன்னோடி என்னும் இடம் சி.சு. செல்லப்பாவுக்கு அளிக்கப்படுகிறது.
  • சுதந்திர தாகம் நாவலுக்கு 2001-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது.
  • இலக்கிய விமர்சகராக தமிழில் பிரதிநுண்ணோக்கு விமர்சனத்தை உருவாக்கியவர் சி.சு. செல்லப்பா. அலசல் விமர்சனம் என அவர் அதை அழைத்தார்.


Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)