Tamil Nadu Global Investors Meet 2024 / உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024

TNPSC PAYILAGAM
By -
0



உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024


உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.6, 64,180 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (08/01/2024) தெரிவித்துள்ளது. 

தமிழ்நாட்டில் 2 நாள்கள் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு நிறைவு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 

பல தொழிற்சாலைகளை திறந்துவைத்து, பல தொழிற்சாலைகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் இரண்டாம் நாள் அமர்வு இன்று (08/01/2024) தொடங்கியது.

அதானி குழுமத்தின் 4 நிறுவனங்கள் ரூ. 42,768 கோடிக்கு முதலீடு செய்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன்மூலம் 10,300 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவுள்ளது. அதானி பசுமை ஆற்றல் நிறுவனம் ரூ. 24,500 கோடி(4,000 வேலைவாய்ப்புகள்), அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவன ரூ. 3,500 கோடி(5,000 வேலைவாய்ப்புகள்), அதானி கனெக்ஸ் ரூ. 13,200 கோடி(1,000 வேலைவாய்ப்புகள்) மற்றும் அதானி பசுமை எரிசக்தி நிறுவனம் ரூ. 1,568 கோடிக்கு(300 வேலைவாய்ப்புகள்) புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு கிடைத்துள்ள முதலீடுகள் மூலம், நேரடி வேலைவாய்ப்பு என்ற வகையில், 14 லட்சத்து 54 ஆயிரத்து 712 நபர்களுக்கும், மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில், 12 லட்சத்து 35 ஆயிரத்து 945 நபர்களுக்கும் என மொத்தம் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். 

பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை அமைக்க காவிரி மருத்துவமனை ரூ.1200 கோடியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 

ஹிட்டாச்சி நிறுவனத்துடன் ரூ.100 கோடியில் புரிந்துணர்வுஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன்மூலம் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படும். 

பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி ஆலை மூலம் 1,511 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும். தூத்துக்குடியில் ரூ.36,238 கோடியில் ஹைட்ரஜன் உற்பத்தி ஆலை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. பெறப்பட்ட புதிய முதலீடுகள் மூலம் 14 லட்சத்து 54 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை செயல்படுத்த அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் பல்வேறு அதிகாரிகள் இடம்பெறுவார்கள் எனவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல் பத்து முதலீடு நிறுவனங்கள் விவரம்:

1.வின்பாஸ்ட்:

முதலீடு: ரூ.16,000 கோடி வேலை வாய்ப்பு: 40,500 பேர்

இடம்: தூத்துக்குடி

2.டாடா எலெக்ட்ரானிக்ஸ்:

முதலீடு: ரூ.12,082 கோடி வேலை வாய்ப்பு: 40,500 பேர் 

இடம்: கிருஷ்ணகிரி

3.ஜேஎஸ்டபுள்யு முதலீடு: 

ரூ.12000 கோடி வேலை வாய்ப்பு: 6,600 பேர் 

இடம்: தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி

4.ஹுண்டாய்

முதலீடு: ரூ.6,180 கோடி 

இடம்: காஞ்சிபுரம்

5.சோலார்

முதலீடு: ரூ.5600 கோடி 

வேலை வாய்ப்பு: 1,100 பேர் இடம்: காஞ்சிபுரம்

6.டிவிஎஸ் குழுமம் 

முதலீடு ரூ.5,000 கோடி 

வேலை வாய்ப்பு: 500 பேர்

7.பெகட்ரான்

முதலீடு: ரூ.1000 கோடி வேலை வாய்ப்பு: 8000 பேர்

இடம்: செங்கல்பட்டு

8.கோத்ரேஜ்

முதலீடு: ரூ.515 கோடி

இடம்: செங்கல்பட்டு

9.மிட்சுபிஷி

முதலீடு: ரூ.200 கோடி 

வேலை வாய்ப்பு: 50 பேர்

இடம்: திருவள்ளூர்

10.குவால்காம்

முதலீடு: ரூ.177 கோடி

வேலைவாய்ப்பு: 1600 பேர்

இடம்: சென்னை


 SOURCE : DINAMANI , HINDUTAMIL



TNPSC GK குறிப்புகள் தமிழ் ஜனவரி– 2024 :

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)