புதுக் கவிதை-தருமு சிவராமு

TNPSC PAYILAGAM
By -
0



புதுக் கவிதை:தொடர்பான செய்திகள் மேற்கோள்கள் , சிறப்புப் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்:
தருமு சிவராமு
THARUMU SIVARAMU-TNPSC TAMIL NOTES PDF

ழுத்துலகப் பிரவேசத்தின் ஆரம்பத்தில் தருமு சிவராம் என்றும், பின்னாளில் பிரமிள் என்றும் அறியப்பட்ட இவர், காலம் நமக்கு அருளிய பெரும் கொடை. சிறுபத்திரிகை என்ற கருத்தாக்கத்தின் செம்மையான வடிவமாக, காந்தியுக அர்ப்பணிப்பு உணர்வுடன் சி.சு.செல்லப்பா நடத்திய ‘எழுத்து’ (1959-70) இதழின் மூலம் இளம் வயதிலேயே ஒரு பேராற்றல்மிக்க படைப்பு சக்தியாகவும் விமர்சன சக்தியாகவும் வெளிப்பட்டவர். 

அறிவியல், மெய்ஞான தத்துவங்களின் மீதான ‘அறிவின் விசார மயமான பிரமிப்புகள்’ அவருடைய படைப்புலகம் என்றால், இலக்கியக் கோட்பாடுகள் சார்ந்த அறிவின் விசாரமயமான அணுகுமுறையே அவருடைய விமர்சன நெறி. தன்னுடைய 20-வது வயதில் ஓர் அபூர்வ ஞானச் சுடராக, ஈழத்தின் திருகோணமலையிலிருந்து எழுத்துப் பிரவேசம் நிகழ்த்தியவர்.

1939, ஏப்ரல் 20-ல் பிறந்த இவரின் முதல் கவிதை, 1960 ஜனவரி ‘எழுத்து’ இதழில் பிரசுரமானது

  • ஊர் = இலங்கையில் உள்ள திரிகோண மலை
  • இயற்பெயர் = சிவராமலிங்கம்
  • புனைப்பெயர்கள்=பிரமிள்,பானுசந்திரன்,அரூப்சிவராம்
  • சிறப்பு பெயர்கள் =படிமக் கவிஞர்,ஆன்மீகக் கவிஞர்

கவிதை நூல்கள்

  • கண்ணாடி உள்ளிருந்து
  • கைப்பிடியளவு கடல்
  • மேல்நோக்கிய பயணம்
  • பிரமிள் கவிதைகள்
  • சூரியன் தகித்த நிறம்
  • காவியம் (புகழ்பெற்ற நூல்)
  • விடிவு

சிறுகதை

  • லங்காபுரிராஜா
  • பிரமிள் படைப்புகள்
  • காடன் கண்டது
  • பாறை
  • நீலம்
  • கோடரி
  • கருடனூர் ரிப்போர்ட்
  • சந்திப்பு
  • அசரீரி
  • சாமுண்டி
  • அங்குலிமாலா
  • கிசுகிசு

நாவல்

  • ஆயி
  • பிரசன்னம்

உரைநடை
  • மார்க்சும் மார்க்சீயமும்
  • வானமற்றவெளி: கவிதை பற்றிய கட்டுரைகள்
  • பாதையில்லாப் பயணம்: ஆன்மீக-மறைமுகஞானப் படைப்புகள்
  • விடுதலையும் கலாச்சாரமும்: மொழிபெயர்ப்புப் படைப்புகள்
  • ஸ்ரீலங்காவின் தேசியத் தற்கொலை
  • காலவெளிக் கதை: அறிவியல் கட்டுரைகள்
  • வெயிலும் நிழலும்: இலக்கிய விமர்சனக் கட்டுரைகள்
நாடகம்
  • நட்சத்திரவாசி

தருமு சிவராமு சிறப்புகள்

  • “பிரமிள்” என்ற பெயரில் எழுதிய “தருமு சிவராம்” இலங்கையில் பிறந்தவர்
  • இவரது காலம் 20.04.1939 – 06.01.1997
  • தமிழகத்து எழுத்தாளர்.
  • பாரதி, புதுமைபித்தனுக்கு பிறகு தோன்றிய ஒரு இலக்கியமேதை.
  • தமிழின் முதன்மையான கவிஞர், விமர்சகர், சிறுகதையாளர், புதுக்கவிதை முன்னோடிகளுள் முக்கியமான ஒருவராக கருதப்படுகிறார்.
  • இவர் “பானுசந்திரன், அரூப்சீவராம், பிரமிள்” போன்ற புனைப்பெயர்களில் எழுதினார்.
  • அடிக்கடி தன் பெயரை மாற்றிப் புதுபித்துக் கொண்டே இருந்தார். ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர்.
  • இவர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் “திருகோணமலையைச்” சேர்ந்தவர்.
  • எழுபதுகளின் ஆரம்பத்திலேயே தமிழ்நாடு வந்துவிட்டார். பிறகு தம் பெரும்பாலான வாழ்நாளைச் சென்னையிலேயே கழித்தார்.
  • எழுத்துலகில் சி.சு.செல்லப்பாவின் “கழுத்து” பத்திரிக்கையில் தமது இருபதாவது வயதில் எழுதத் துவங்கிய பிரமிள், நவீன தமிழ்க் கவிதையுலகில் தனி அடையாளம் கொண்டவர்.
  • ஓவியம், சிற்பம், நாடகம், மொழியாக்கம், விமர்சனக் கட்டுரைகள் என விரித்த தளங்களில் இயங்கிய பிரமிள் “நவீன தமிழ் இலக்கியம் குறித்து கூர்மையான விமர்சனமும் அவதானிப்பும்” கொண்டவர்.
  • “ராமகிருஷ்ணமடம்” நடத்திய இரவுப் பாடச்சாலையில் ஆரம்பக் கல்வி மட்டும் கிடைத்தது.
  • புதுக்கவிதை முன்னோடிகளுள் முக்கியமான ஒருவராக இவர் கருதப்படுகிறார்.
  • ‘படிமக் கவிஞர்’ என்றும் ‘ஆன்மீகக் கவிஞர்’ என்றும் சிறப்பிக்கப்பட்ட இவரது கவித்துவம், இரண்டாயிரமாண்டுத் தமிழ்க் கவிதை வரலாற்றில் தனித்துயர்ந்து நிற்பதாகும்.
  • தி.ஜானகிராமன் இவரை “தமிழின் மாமேதை”, “நவீன தமிழ் இலக்கியத்தின் மாமேதை” என்றும் சிறப்பித்துள்ளார்.
  • “உரைநடையின் அதிகபட்ச சாத்தியத்தை நிறைவேற்றியவர்” என்று சி.சு.செல்லப்பா இவரை பாராட்டியுள்ளார்.
  • “பிரமிள் விசித்திரமான படிமவாதி” என்று சி.சு.செல்லப்பா கூறியுள்ளார்.
  • இளம் வயதிலேயே மௌனியின் கதைத் தொகுப்புக்கு முன்னுரை எழுதிய பெருமை இவருக்குண்டு.
  • “கவிதைக் கோட்பாடுகளும் பாரதி கலையும்” என்ற தலைப்பில் பாரதியை மதிப்பீடு செய்து மிகச் சிறந்த கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
  • ‘காவியம்’ என்ற கவிதை பிரமிளின் மிகப்புகழ்பெற்ற தமிழின் முக்கியமான கவிதைகளுள் ஒன்று.
  • “பிரமிள் தமிழ்க் கவிதையின் தனிப்பெரும் ஆளுமை” என எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் தனது கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.
  • “புதுக் கவிதை தொடர்பான அதிகபட்ச பிரக்ஞையும் , மரபின் செழுமையும், சமத்காரப் பண்பும், தனித்துவமான படிம வெளியீட்டு முறையையும் பெற்றவர் பிரமிள்” என விமர்சகர் சங்கர ராம சுப்ரமணியன் பதிவு செய்துள்ளார்.
  • “இன்றைய தமிழ் இலக்கிய நிலையைப் பற்றி விமர்சன ரீதியாக நிர்ணயிக்கும் முதல் கட்டுரை மௌனியின் கதைக்கு பிரமிள் எழுதிய முன்னுரை, ‘எழுத்து’ சஞ்சிகை மூலம் நமக்குக் கிடைத்த விமர்சகர். அவரது நடை சிந்தனைத்துடிப்பு மிக்கது. நுணுக்கமும், ஆழமும், உடையது . அவர் எழுத்து மேல்நாட்டு இலக்கிப் பரிச்சயத்தால் வளம் பெற்றது” எனக் கவிஞர் நகுலன் குறிப்பிட்டுள்ளார்.
  • நியூயார்க் விளக்கு அமைப்பு “புதுமைப்பித்தன்” விருதை இவருக்கு அளித்தது. கும்பகோணம் சிலிக்குயில் “புதுமைப்பித்தன் வீறு” வழங்கியது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)