TODAY CURRENT AFFAIRS IN TAMIL 07.01.24

TNPSC PAYILAGAM
By -
0



  TODAY CURRENT AFFAIRS IN TAMIL 07.01.24


விண்வெளியில் மின்சாரம் உற்பத்தி இஸ்ரோ சோதனை வெற்றி

  • விண்வெளியில் உள்ள கருந்துளைகள் முதலியவற்றை வெளியிடும், 'எக்ஸ்ரே' கதிர்கள் வாயிலாக ஆராய்ச்சி செய்யும், 'எக்போசாட்' செயற்கைக்கோளை விண்வெளியில் நிலைநிறுத்துவதற்காக, பி.எஸ்.எல்.வி., சி58 ராக்கெட்டை கடந்த 1ம் தேதி இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் விண்ணில் ஏவியது.
  • பூமியில் இருந்து 650 கி.மீ., உயரத்தில், இந்த 'எக்போசாட்' செயற்கைகோளை, பி.எஸ்.எல்.வி., சி58 ராக்கெட் நிலைநிறுத்தியது. பின், பி.எஸ்.எல்.வி., சி58 ராக்கெட்டின் மூன்றாவது கட்ட ஏவு ஊர்தி, பூமியில் இருந்து 350 கி.மீ., தாழ்வட்ட பாதைக்கு கொண்டுவரப்பட்டது.
  • இந்த மூன்றாம் கட்ட ஏவு ஊர்தியை ஆய்வுக்கான களமாக பயன்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது. இதன் ஒரு பகுதியாக, விண்வெளியில் எரிபொருள் ஆராய்ச்சிக்கான சோதனையை இஸ்ரோ மேற்கொண்டது.
  • இதற்காக, இஸ்ரோ உருவாக்கிய, 'பாலிமர் எலெக்ட்ரோலைட் மெம்ப்ரேன் செல்' எனப்படும், பாலிமர் எலக்ட்ரோலைட் செல் சவ்வு எடுத்துசெல்லப்பட்டது. 
  • இந்த கலத்தின் ஒரு புறம் ஹைட்ரஜனும், மறுபுறம் ஆக்சிஜன் வாயுவும் நிரப்பப்பட்டு, இதன் நடுவில் ஒரு சவ்வு இருக்கும். விண்வெளியில் ஆக்சிஜன் வாயுவையும் சவ்வு வழியாக இணைக்கும்போது, அதிலிருந்து கழிவாக சுத்தமான நீர் உருவாகும்.
  • ஹைட்ரஜன் வாயுவையும் மேலும், இந்த சவ்வு வழியாக ஹைட்ரஜன் செல்லும் போது மின்சுற்று உருவாகி, அதிலிருந்து மின்சாரம் உருவாகும். எனவே, ஹைட்ரஜன் - ஆக்சிஜனை கொண்டு தண்ணீரையும், வெப்பத்தையும் சுலபமாக விண்வெளியில் நாம் பெற முடியும் என, இஸ்ரோ நடத்திய சோதனையில் தரவுகளை பதிவு செய்துள்ளது. 
  • இந்த மின்கலம் விண்வெளியில் எப்படி வேலை செய்யும் என்பதை இந்த ஆய்வு வாயிலாக இஸ்ரோ வெற்றிகரமாக சோதனை செய்து முடிவுகளை கண்டறிந்துள்ளது.இந்த சோதனையில் 180 வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதாக இஸ்ரோ தகவல் வெளியிட்டு உள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் நிறுவனத்தில் நடைபெற்ற பொதுக் கொள்கை உரையாடல்கள் நிகழ்ச்சியின் போது ஸ்வாமித்வா திட்டம் விருது வென்றது 2024
  • பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் புத்தாக்க தனித்துவ செயல்விளக்க (சாண்ட்பாக்ஸ்) நிகழ்வில் பங்கேற்றது. நில நிர்வாக அமைப்புகளை வெளிப்படையாகவும் திறமையாகவும் டிஜிட்டல் மயமாக்கும் செயல்முறைகளை "ஸ்வாமித்வா திட்டம்" நடைமுறைப்படுத்துகிறது. இதன் மூலம் நில நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. 
  • 2024ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை ஹைதராபாத்தில் நடைபெற்ற வருடாந்திர மூன்று நாள் "பொதுக் கொள்கை உரையாடல்கள்" மாநாட்டில் "ஸ்வாமித்வா திட்டத்தின் மூலம் நில நிர்வாகத்தில் டிஜிட்டல் மாற்ற முன்முயற்சிகள்" என்ற செயல்விளக்கத்திற்காக பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்திற்கு மதிப்புமிக்க முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது . 
  • ஸ்வமித்வா திட்டத்தை செயல்படுத்துவதில் செயல்திறன் மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்துவதற்காக தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் புதுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
  • 2023 அக்டோபரில் மத்திய பிரதேசத்தின் இந்தூரில் பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் நிர்வாக சீர்திருத்தங்கள் துறை (டி.ஏ.ஆர்.பி.ஜி) ஏற்பாடு செய்த "மக்களை மையமாகக் கொண்ட சேவைகளை வழங்க வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்" என்ற பிரிவில் ஸ்வமித்வா திட்டம் 2023 ஆம் ஆண்டிற்கான மின் ஆளுமைக்கான தேசிய விருதுகளில்மதிப்புமிக்க தங்கப் பதக்கத்தை வென்றது. 
  • ஆகஸ்ட் 2023-ல் கோவாவில் ஏற்பாடு செய்யப்பட்ட டிஜிடெக் மாநாடு 2023-ல் "டிஜிட்டல் மாற்றத்திற்கான மின் ஆளுமையில் தொழில்நுட்பத்தின் புதுமையான பயன்பாடு" என்ற பிரிவில் தங்கப் பதக்கத்தையும் ஸ்வாமித்வா திட்டம் பெற்றது.

ஜனவரி 7 - மகாயான புத்தாண்டு

உலகம் முழுவதும் உள்ள பௌத்தர்கள் இந்த ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி மகாயான புத்தாண்டைக் கொண்டாடுவார்கள். பல்வேறு பௌத்த தத்துவங்கள் மற்றும் சித்தாந்தங்கள் மகாயானம் என்று குறிப்பிடப்படுகின்றன. 

பௌத்தத்தின் இரண்டு முக்கிய கிளைகளில் ஒன்றான மகாயானம் முதன்மையாக வடகிழக்கு ஆசியாவில் நடைமுறையில் உள்ளது. திபெத், தைவான், மங்கோலியா, சீனா, ஜப்பான், கொரியா மற்றும் தைவான். மகாயான பௌத்தம் ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் தனித்துவமான பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளின் படி நடைமுறைப்படுத்தப்படுகிறது.


TODAY CURRENT AFFAIRS IN TAMIL 2023


TODAY CURRENT AFFAIRS 2023 IN TAMIL

TNPSC CURRENT AFFAIRS JANUARY 2023

TNPSC CURRENT AFFAIRS FEBRUARY 2023

TNPSC CURRENT AFFAIRS MARCH 2023

TNPSC CURRENT AFFAIRS APRIL 2023

TNPSC CURRENT AFFAIRS MAY 2023

TNPSC CURRENT AFFAIRS JUNE 2023

TNPSC CURRENT AFFAIRS JULY 2023

TNPSC CURRENT AFFAIRS AUGUST 2023

TNPSC CURRENT AFFAIRS SEPTEMBER 2023

TNPSC CURRENT AFFAIRS OCTOBER 2023

TNPSC CURRENT AFFAIRS NOVEMBER 2023

TNPSC CURRENT AFFAIRS DECEMBER 2023


விருதுகள் கௌரவங்கள் 2023 :

MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2023:

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :

Post a Comment

0Comments

Post a Comment (0)