TODAY CURRENT AFFAIRS IN TAMIL 09.01.24

TNPSC PAYILAGAM
By -
0



  TODAY CURRENT AFFAIRS IN TAMIL 09.01.24


இந்தியாவில் பிசிசிஐ நடத்தும் போட்டிகளுக்கு புதிய ஸ்பான்சர்கள்:

  • நடப்பாண்டு முதல் 2026 வரை இந்தியாவின் நடைபெறும் சர்வதேச மற்றும் உள்நாட்டு போட்டிகளுக்கு ஸ்பான்சர்களாக ரிலையன்ஸ் குழுமத்தின் கேம்பா நிறுவனம் (CAMPA) மற்றும் ஆட்டம்பெர்க் (ATOMBERG) நிறுவனம் ஒப்பந்தமாகியுள்ளன.

ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை 12.8 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது:

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், 

  • 2023 - 24ன் நடப்பு நிதியாண்டில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், டிசம்பர் மாதம் வரை பயணித்த பயணிகள் விகிதம் 12.8 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 
  • கடந்த டிசம்பர் வரை 52.8 கோடி மக்கள் ரயிலில் பயணித்துள்ளனர். 2023 - 24 நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் ரூ.5,254 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 12.1 சதவிகிதம் அதிகமாகும். 
  • இதேபோன்று சரக்கு போக்குவரத்திலும் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில், அதாவது கடந்த டிசம்பவர் வரை 29.351 மில்லியன் டன் சரக்குகள் ரயில் மூலம் கொண்டுசெல்லப்பட்டுள்ளன. இதன்மூலம் அரசுக்கு ரூ. 2,651 வருவாய் கிடைத்துள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

50 ஆண்டுகள் கழித்து நிலவுக்கு ஆய்வுக் கலம்

  • நிலவில் தரையிறங்கி ஆய்வுகள் மேற்கொள்வதற்கான ஆய்வுக் கலத்தை சுமாா் 50 ஆண்டுகள் கழித்து முதல்முறையாக அமெரிக்கா அனுப்பியுள்ளது. 
  • அமெரிக்காவின் தனியாா் விண்வெளி ஆய்வு நிறுவனமான அஸ்ட்ரோபாடிக் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பெரக்ரின் லூனாா் லேண்டா் 1, அந்த நாட்டின் ஃபுளோரிடா மாகாணம், கேப் கனாவெரல் ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. 
  • யூனைட்டட் லாஞ்ச் அலையன்ஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய வல்கன் ராக்கெட் மூலம் அந்த ஆய்வுக் கலம் செலுத்தப்பட்டது. வரும் பிப்ரவரி மாதம் 23-ஆம் தேதி அந்த ஆய்வுக் கலம் நிலவில் தரையிறங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. 
  • அது வெற்றிகரமாகத் தரையிறங்கினால் நிலவில் ஆய்வுக் கலத்தைத் தரையிறக்கிய முதல் தனியாா் நிறுவனம் என்ற பெருமையை அஸ்ட்ரோபாடிக் டெக்னாலஜிஸ் பெறும். 
  • இதற்கு முன்னா் கடந்த 1972-ஆம் ஆண்டில்தான் நிலவுக்கு அமெரிக்கா தரையிறங்கும் ஆய்வுக் கலத்தை அனுப்பியது.

ஜனவரி 9 - என்ஆர்ஐ (குடியுரிமை இல்லாத இந்தியர்) தினம் அல்லது பிரவாசி பாரதிய திவாஸ்

என்ஆர்ஐ அல்லது பிரவாசி பாரதிய திவாஸ் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9 அன்று, இந்தியாவின் வளர்ச்சிக்கு வெளிநாட்டு இந்திய சமூகத்தின் பங்களிப்பைக் குறிக்கும் வகையில் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் 1915 ஜனவரி 9 அன்று தென்னாப்பிரிக்காவிலிருந்து மும்பைக்கு மகாத்மா காந்தி திரும்பியதையும் நினைவுகூருகிறது.


TODAY CURRENT AFFAIRS IN TAMIL 2023


TODAY CURRENT AFFAIRS 2023 IN TAMIL

TNPSC CURRENT AFFAIRS JANUARY 2023

TNPSC CURRENT AFFAIRS FEBRUARY 2023

TNPSC CURRENT AFFAIRS MARCH 2023

TNPSC CURRENT AFFAIRS APRIL 2023

TNPSC CURRENT AFFAIRS MAY 2023

TNPSC CURRENT AFFAIRS JUNE 2023

TNPSC CURRENT AFFAIRS JULY 2023

TNPSC CURRENT AFFAIRS AUGUST 2023

TNPSC CURRENT AFFAIRS SEPTEMBER 2023

TNPSC CURRENT AFFAIRS OCTOBER 2023

TNPSC CURRENT AFFAIRS NOVEMBER 2023

TNPSC CURRENT AFFAIRS DECEMBER 2023


விருதுகள் கௌரவங்கள் 2023 :

MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2023:

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :

Post a Comment

0Comments

Post a Comment (0)