TODAY CURRENT AFFAIRS IN TAMIL 10.01.24

TNPSC PAYILAGAM
By -
0


 TODAY CURRENT AFFAIRS IN TAMIL 10.01.24


அகில இந்திய மகளிர் காங்கிரஸின் புதிய தலைவராக தேர்வு:
  • அகில இந்திய மகளிர் காங்கிரஸின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட அல்கா லம்பா காங்கிரஸ் தலைமையகத்தில் பொறுப்பேற்றார். 
  • அல்கா லம்பா இன்று 10.01.2024 புதுதில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அகில இந்திய மகளிர் காங்கிரஸின் தலைவராக முறைப்படி பொறுப்பேற்றார்.

அமெரிக்காவின் உணவுத் திட்டம்
  • கோடைக்காலத்தில் அமெரிக்க குழந்தைகள் எதிர்கொள்ளும் உணவு பற்றாக்குறையைச் சமாளிக்க குழந்தைகள் உள்ள அமெரிக்க குடும்பங்களுக்கு மாதந்தோறும், அமெரிக்க அரசு மின்னணு முறையில் தொகை வழங்கும். 
  • அமெரிக்கர்கள் அந்த அட்டையை உபயோகித்து கடைகளில் உணவுப்பொருள்களை வாங்கிக் கொள்ள இயலும். இந்தத் திட்டம் டிச.2022-ல் அறிவிக்கப்பட்டது. 
  • தற்போது சோதனைக்குப் பிறகு 2024 முதல் நிரந்தரமாக தொடங்கப்பட்டுள்ளது. 35 மாகாணங்கள் மற்றும் 4 பழங்குடி சமூகம் இதில் இணைந்துள்ளன. கோடைக்காலத்தில் மூன்று மாதங்கள் மாதமொன்று 40 டாலர்கள் வீதம் குடும்பங்களுக்கு இபிடி அட்டையில் மொத்தமாக 120 அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும். 

இந்தியாவில் அதிகம் மாசுள்ள நகரங்களின் பட்டியல்:2023-2024
  • மேகாலயா மாநிலத்தின் பைரனிஹட், இந்தியாவில் அதிகம் மாசுள்ள நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 
  • அதனைத் தொடர்ந்து பிகாரின் பெகுசராய் மற்றும் உத்தர பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. 
  • தில்லியில் மாசு, குளிர்காலத்தில் ஏற்படுத்திய பாதிப்புகள் அதிகம். ஆற்றல் மற்றும் தூய காற்று ஆய்வு நிறுவனம் (சிஆர்இஏ) நடத்திய இந்த ஆய்வில் 8-வது இடத்தில் தில்லி இடம்பெற்றுள்ளது. 
  • சுனில் தஹியா, தென்கிழக்கு ஆசியாவின் சிஆர்இஏவின் ஆய்வாளர், 2023-ல் 227 நகரங்களில் 75 சதவீதமான நாள்களில் நிலவிய மாசுபாட்டின் தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாதனை:
  • இந்திய மெட்ரோ ரயில் கட்டுமானத்தில் முதன்முதலாக புதுமையான புல்லர் ஆக்சில் முறையை பயன்படுத்தி சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாதனை படைத்துள்ளது. 
  • சென்னை மெட்ரோ நிறுவனத்தின் எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது: 
  • சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 3-ல் நேரு நகர் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான உயர்மட்ட வழித்தடத்தில், இந்திய மெட்ரோ திட்டங்களில், முதன்முறையாக மேம்பட்ட கிரேன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 20 மீ உயரத்திற்கு 30 மீ யு(U) கர்டரைக் கொண்டு செல்வதற்கும், அமைப்பதற்கும் மேம்பட்ட புல்லர் ஆக்சில் அமைப்பை அறிமுகப்படுத்தி, சென்னை மெட்ரோ ரயில் மைல்கல்லில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை எட்டியுள்ளது. 
  • இத்திட்டத்திற்கான ஒப்பந்தம் லார்சன் & டூப்ரோ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மற்ற மெட்ரோ ரயில்களில் ஒப்பிடும் போது இதுவே மிக நீளமான 'U' கர்டர் ஸ்பான் ஆகும்

ஒடிஸா மாநிலத்தின் சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது:
  • ஒடிஸா மாநிலத்தில் வசிக்கும் பழங்குடியினர் விரும்பி உண்ணும் உணவாக சிவப்பு எறும்பு சட்னி உள்ளது. இந்த சட்னி நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சுறுசுறுப்பை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. 
  • சிவப்பு எறும்புகளை பயன்படுத்துவதற்கு முன்பு சுத்தம் செய்யப்பட்டு உப்பு, இஞ்சி, பூண்டு, மிளகாய் கலவையை சேர்த்து அரைத்து சட்னியாக தயாரிக்கப்படுகிறது. 
  • ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் போன்ற பிற கிழக்கு மாநிலங்களிலும் இந்த சட்னியை சாப்பிடுகிறார்கள். சிவப்பு எறும்பு சட்னியில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதில் புரதம், விட்டமின் பி12, மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துகள் அதிகமாக உள்ளது.

குஜராத் உலக வா்த்தக மாநாடு’ :
  • குஜராத் மாநிலம், காந்திநகரில் 10-ஆவது ‘துடிப்புமிகு குஜராத் உலக வா்த்தக மாநாடு’ நடைபெறுகிறது. 
  • இதில் பங்கேற்பதற்காக கிழக்கு தைமூா் அதிபா் ஜோஸ் ரமோஸ் ஹோா்தா உள்பட பல்வேறு நாட்டு தலைவா்கள் குஜராத் வந்துள்ளனா். 

பிரான்ஸின் மிக இளைய வயது பிரதமா்:
  • பிரான்ஸின் கல்வித் துறை அமைச்சராக இருந்து வந்த கேப்ரியல் அட்டலை அந்த நாட்டின் பிரதமராக அதிபா் இமானுவல் மேக்ரான் நியமித்தாா்.
  • 34 வயதாகும் அட்டல், பிரான்ஸின் மிக இளைய வயது பிரதமா் என்பது குறிப்பிடத்தக்கது.

2023-பூமியின் வெப்பமான ஆண்டு: ஐரோப்பிய யூனியன் காலநிலை அமைப்பு:

  • பூமியில் இதுவரை பதிவான வெப்பநிலை தரவின்படி, கடந்த ஆண்டில் அதிகபட்ச வெப்பநிலை பதிவானது.
  • இது தொழிற்புரட்சி காலத்தில் பதிவான வெப்பநிலையை விட, 1.48 டிகிரி செல்சியஸ் அதிகம் என ஐரோப்பிய யூனியன் காலநிலை அமைப்பான கோபா்நிகஸ் தெரிவித்தது. 
  • கடந்த ஆண்டில் பூமியின் சராசரி வெப்பநிலை 14.98 டிகிரி செல்சியஸ் என கோபா்நிகஸ் கணக்கிட்டுள்ளது. இது முந்தைய மிகவும் வெப்பமான ஆண்டான 2016-இல் பதிவான வெப்பநிலையை விட 0.17 டிகிரி செல்சியஸ் அதிகமாகும்.
  • பூமியின் சராசரி வெப்பநிலை அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் கட்டுப்படுத்த 2015 பாரீஸ் பருவநிலை பாதுகாப்பு மாநாட்டில் இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. 
  • இந்நிலையில், 2023-இல் பதிவான சராசரி வெப்பநிலை உயா்வு, 1.5 டிகிரி செல்சியஸை விட சற்றுதான் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழா்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்ததேசிய ஒற்றுமை அலுவலக மசோதா: இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்:

  • கடந்த 1983 முதல் 2009-ஆம் ஆண்டு வரை இலங்கையில் உள்நாட்டுப் போா் நடைபெற்றது. இந்தப் போரைத் தொடா்ந்து அந்நாட்டில் சிறுபான்மையினராக உள்ள தமிழா்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் அமைக்கும் மசோதாவை, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இலங்கை அரசு தாக்கல் செய்தது. 
  • இந்த மசோதா மீதான விவாதம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் 09.01.2024 நடைபெற்றது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 48 எம்.பி.க்களும், 7 எம்.பி.க்கள் எதிராகவும் வாக்களித்தனா். இதையடுத்து பெரும்பான்மை அடிப்படையில், மசோதா நிறைவேற்றப்பட்டது.
  • இந்த மசோதாவின்படி, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலக விவகாரங்களை நிா்வகிக்க செயலகம் அமைக்கப்படும். 
  • அதன் தலைமை நிா்வாக அதிகாரியாக தலைமை இயக்குநா் ஒருவா் பதவி வகிப்பாா். அலுவலகத்தில் 11 உறுப்பினா்கள் இருப்பா். 
  • அவா்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகள். அலுவலகத்தின் தலைவரை இலங்கை அதிபா் நியமிப்பாா். தேசிய ஒற்றுமையை பாதிக்கும் விவகாரங்கள், வெவ்வேறு சமூகத்தினா் இடையிலான மோதல் உள்ளிட்டவற்றுக்கான தீா்வுகளை அரசுக்கு அந்த அலுவலகம் பரிந்துரைக்கும். உள்நாட்டில் இடம்பெயா்ந்தவா்களின் மறுகுடியேற்றம், முன்னாள் போராளிகளின் மறுவாழ்வு மற்றும் மறுஒருங்கிணைப்பு போன்ற போருக்குப் பிந்தைய பிரச்னைகளுக்கும் அந்த அலுவலகம் தீா்வு காணும்.

ஜனவரி 10 - உலக ஹிந்தி தினம்

விஸ்வ ஹிந்தி திவாஸ் என்பது ஆண்டுதோறும் ஜனவரி 10 அன்று அனுசரிக்கப்படும் ஒரு நிகழ்வாகும். 1949 ஆம் ஆண்டு UNGA இல் இந்தி முதன்முதலில் பேசப்பட்ட நிகழ்வைக் குறிக்கும் வகையில் உலக இந்தி தினம் உருவாக்கப்பட்டது. 

உலகளவில் கிட்டத்தட்ட 600 மில்லியன் மக்கள் பேசும் மொழியாக, உலகில் அதிகம் பேசப்படும் மூன்றாவது மொழியாக இந்தி உள்ளது. மாண்டரின் சீன மற்றும் ஆங்கிலத்திற்குப் பிறகு.


TODAY CURRENT AFFAIRS IN TAMIL 2023


TODAY CURRENT AFFAIRS 2023 IN TAMIL

TNPSC CURRENT AFFAIRS JANUARY 2023

TNPSC CURRENT AFFAIRS FEBRUARY 2023

TNPSC CURRENT AFFAIRS MARCH 2023

TNPSC CURRENT AFFAIRS APRIL 2023

TNPSC CURRENT AFFAIRS MAY 2023

TNPSC CURRENT AFFAIRS JUNE 2023

TNPSC CURRENT AFFAIRS JULY 2023

TNPSC CURRENT AFFAIRS AUGUST 2023

TNPSC CURRENT AFFAIRS SEPTEMBER 2023

TNPSC CURRENT AFFAIRS OCTOBER 2023

TNPSC CURRENT AFFAIRS NOVEMBER 2023

TNPSC CURRENT AFFAIRS DECEMBER 2023


விருதுகள் கௌரவங்கள் 2023 :

MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2023:

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :

Post a Comment

0Comments

Post a Comment (0)