TODAY CURRENT AFFAIRS IN TAMIL 11.01.24

TNPSC PAYILAGAM
By -
0



  TODAY CURRENT AFFAIRS IN TAMIL 11.01.24


உலகின் மிக நீளமான கடல் பாலம் :

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் டிரான்ஸ் ஹார்பர் இணைப்பு, தற்போது அடல் பிஹாரி வாஜ்பாய் சேவாரி - நவா ஷேவா அடல் சேது என்று பெயரிடப்பட்டுள்ளது. 

இது இந்தியாவில் கட்டப்பட்ட மிக நீளமான கடல் பாலமாகும். 2016 டிசம்பரில் பிரதமர் மோடியால் பாலத்தின் அடிக்கல் நாட்டப்பட்டது. கடல் பாலம் மொத்தம் ரூ.17,840 கோடி செலவில் அடல் சேது கட்டப்பட்டுள்ளதாகவும், இந்த பாலத்தின் மொத்த நீளம் 22 கி.மீ. இதில் கடலுக்கு நடுவே 16.5 கி.மீ தொலைவிற்கு பாலம் அடைந்துள்ளது. 

உலகின் மிக நீளமான கடல் பாலமாகவும், இந்தியாவின் மிக நீளமான பாலமாகவும் இது கருதப்படுகிறது

இது மும்பை சர்வதேச விமான நிலையம், நவி மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு விரைவான இணைப்பை வழங்கும். மும்பையிலிருந்து புணே, கோவா மற்றும் தென்னிந்தியாவிற்குப் பயண நேரத்தைக் குறைக்கும். மேலும், மும்பை துறைமுகத்திற்கும் ஜவஹர்லால் நேரு துறைமுகத்திற்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்தும்.

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக நியமனம்:

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரான ஆர்.சண்முகசுந்தரம் ராஜினாமா தொடர்ந்து பி.எஸ்.ராமன் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மாநில அரசின் தலைமை வழக்கறிஞரை (அட்வகேட் ஜெனரல்) நியமிக்கும் விதி:

மாநில அரசின் தலைமை வழக்கறிஞர் 165 விதியின் கீழ் நியமனம் செய்யப்படுகிறார்

தலைமை வழக்குரைஞர் ஆளுநரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

தலைமை வழக்குரைஞர் மாநில அரசிற்கு ஆதரவாக வாதாடவும், சட்ட ஆலோசனை வழங்கவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் 76 விதியின் கீழ் நியமனம் செய்யப்படுகிறார்

எம்.எஸ்.சுவாமிநாதன் 2024 விருது

எம்.எஸ்.சுவாமிநாதன் 2024 விருதானது பேராசிரியர் பி.ஆர்.கம்போஜ் வழங்கப்பட்டுள்ளது

பேராசிரியர் பி.ஆர்.கம்போஜ் – ஹரியானா வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர்

அதிக மகசூல் தரும் அரிசி, கோதுமை வகைகளை அறிமுகப்படுத்தி விவசாய புரட்சிக்கு வித்திட்ட இந்திய பசுமைபுரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் (98) காலமானார்.

அரிசி தட்டுப்பாட்டை நீக்க நவீன வேளாண்முறைகளை கண்டறிந்துள்ளார்.

ராமன் மகசேசே விருது, பத்மவிபூஷன், எஸ்.எஸ்.பட்நாகர் உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார்.

1963-ல் ஜப்பானின் குட்டை ரக கோதுமை பயிரை அறிமுகம் செய்ததினால் 200% கிடைக்கச் செய்தார். 1968-ல் கோதுமை புரட்சியானது இந்தியாவில் ஏற்பட்டது.

மேலும் சீனாவின் குட்டை ரக நெற்பயிரான ஐ.ஆர்.8-ஐ அறிமுகம் செய்து நெல் புரட்சியை உருவாக்கினார்.

கிருஷ்ணா-கோதாவரி படுகையில் கச்சா எண்ணெய் உற்பத்தி:

வங்கக் கடலின் கிருஷ்ணா-கோதாவரி படுகையில் கச்சா எண்ணெய் உற்பத்தியைத் தொடங்கியிருப்பதாக பொதுத் துறை எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான ஓஎன்ஜிசி தெரிவித்துள்ளது. 

இது தொடா்பாக ஓஎன்ஜிசி வெளியிட்ட அறிக்கையில், 

‘வங்கக் கடலில் உள்ள ஆழ்கடல் பகுதியிலிருந்து கேஜி-டி5 தொகுப்பிலிருந்து கச்சா எண்ணெய் எடுக்கும் பணி கடந்த ஜன.7-ஆம் தேதி தொடங்கியது. 

இந்தத் திட்டம் மூலம் ஓஎன்ஜிசியின் மொத்த எண்ணெய் உற்பத்தி 11 சதவீதமும் இயற்கை எரிவாயு உற்பத்தி 15 சதவீதமும் அதிகரிக்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆந்திரக் கடலோரத்திலிருந்து 35 கி.மீ. தொலைவில் வங்கக் கடலில் 300 முதல் 3,200 மீட்டா் ஆழத்தில் கண்டறியப்பட்ட இந்த எண்ணெய் மற்றும் எரிவாயு தொகுப்பு, பகுதி 1, 2, 3 என பிரிக்கப்பட்டுள்ளன. 

அவற்றில் பகுதி 2-இல் தற்போது எண்ணெய் உற்பத்தி தொடங்கியுள்ளது.

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட துப்பாக்கி, 'உக்ரம்':

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) ஒரு பிரிவான ஆயுத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (ஏஆர்டிஇ) சமீபத்தில் ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட தனியார் நிறுவனத்துடன் இணைந்து வடிவமைத்து உருவாக்கியுள்ள தாக்குதல் துப்பாக்கியை வெளியிட்டது. 

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட துப்பாக்கி, 'உக்ரம்' (சமஸ்கிருதத்தில் மூர்க்கமானவர்) என்று பெயரிடப்பட்டது.

இது ARDE, புனே மற்றும் டிவிபா ஆர்மர் இந்தியா பிரைவேட் லிமிடெட் (டிஏஐபிஎல்) ஆகியவற்றின் ஒத்துழைப்பின் விளைவாக உருவாக்கப்பட்டது

பிரதமரின் விஸ்கர்மா யோஜனா

ஜம்மு காஷ்மீர் இத் திட்டத்தினை செயல்படுத்திய முதல் யூனியன் பிரதேசமாக மாறியுள்ளது.

2023 செப்டம்பர் 17-ல் பிரத மந்திரி விஸ்கர்மா யோஜனா திட்டமானது துவங்கப்பட்டது.

பூடான் பொதுத் தோ்தல்:

பூடான் பொதுத் தோ்தலில் முன்னாள் பிரதமா் ஷெரிங் டாக்பே தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) வெற்றியடைந்ததாக தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வமாக அறிவித்தது. 

பூடான் நாடாளுமன்றத்துக்கு கடந்த 30.11.2023 தேதி முதல்கட்டமாகவும், 09.01.2024 இறுதிகட்டமாகவும் நடைபெற்ற தோ்தலில் பிடிபி கட்சி வெற்றி பெற்ாக ஏற்கெனவே தகவல் வெளியானது. இதன் மூலம், நாட்டின் அடுத்த பிரதமராக மீண்டும் ஷெரிங் டாக்பே பதவியேற்பது உறுதியானது.

பாகிஸ்தானின் மறைந்த முன்னாள் ராணுவ ஆட்சியாளா் முஷாரஃபுக்கு தேசத்துரோக வழக்கில் விதிக்கப்பட்ட மரண தண்டனையை அந்த நாட்டு உச்சநீதிமன்றம் உறுதி செய்தது:

பாகிஸ்தானில் கடந்த 2007-ஆம் ஆண்டு நெருக்கடி நிலையை முஷாரஃப் அறிவித்தாா். அதற்காக அரசமைப்புச் சட்ட அமலாக்கத்தை அவா் நிறுத்திவைத்தாா். 

இது தொடா்பாக நடைபெற்று வந்த தேசத் துரோக வழக்கில் முஷாரஃபுக்கு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்தது

இருந்தாலும், சிறப்பு நீதிமன்றத்தின் இந்தத் தீா்ப்பு அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று லாகூா் உயா்நீதிமன்றம் 2022-இல் தீா்ப்பளித்தது. 

இது தொடா்பான மனுவை விசாரித்து வந்த 5 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமா்வு, 2020-இல் லாகூா் உயா்நீதிமன்றம் அளித்த உத்தரவு செல்லாது என்று அறிவித்தது. அதையடுத்து, முஷாரஃபுக்கு எதிரான மரண தண்டனையை உச்சநீதிமன்றம் தற்போது உறுதிசெய்துள்ளது. 

துபையில் நாடு கடந்து வசித்து வந்த முஷாரஃப், நீண்டகால உடல்நலக் குறைவு காரணமாக தனது 79-ஆவது வயதில் 2023 பிப்ரவரி 5-இல் மரணமடைந்து நினைவுகூரத்தக்கது.

ஆசியான் கூட்டமைப்பில் புதிதாக இணைய உள்ள நாடு:

கிழக்கு தைமூர் நாடானது ஆசியான் கூட்டமைப்பிலும் சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பிலும் இணைய உள்ளது.

ஆசியான் கூட்டமைப்பில் ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், கனடா, சீனக் குடியரசு, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, ஜப்பான், வட கொரியா, தென் கொரியா, மொங்கோலியா, நியூசிலாந்து, பாக்கிஸ்தான், பப்புவா நியூகினியா, ரஷ்யா, கிழக்குத் திமோர், ஐக்கிய அமெரிக்கா, இலங்கை போன்ற நாடுகள் உறுப்பினராக உள்ளன

KEY POINTS : ASSOCIATION OF SOUTHEAST ASIAN NATIONS (ASEAN) தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு 

ஜனவரி 11 - லால் பகதூர் சாஸ்திரியின் நினைவு நாள்

லால் பகதூர் சாஸ்திரி (அக்டோபர் 2, 1904 - சனவரி 11, 1966) இந்திய குடியரசின் இரண்டாவது பிரதமர் ஆவார். இவர் ஒரு முக்கியமான விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு 1964 ஆம் ஆண்டு மே மாதம் காலமானதைத் தொடர்ந்து லால்பகதூர் சாஸ்திரி பதவிக்கு வந்தார். இவர் முறையாகத் தெரிவு செய்யப்படும் வரை குல்சாரிலால் நந்தா 14 நாட்கள் இடைக்காலப் பிரதமராக இருந்தார். இவர் பதவியேற்று 2 ஆண்டுகளுக்கு உள்ளாகவே, சோவியத் ஒன்றியத்திலுள்ள தாஷ்கண்டில் கூட்டப்பட்ட உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட போது காலமானார்.

'ஜெய் ஜவான் ஜெய் கிசான்' என்ற முழக்கத்தை பிரபலப்படுத்திய அவர் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றார். 

மாரடைப்பு காரணமாக, அவர் ஜனவரி 11, 1966 அன்று இறந்தார். மேலும் அவர் உலகளவில் 'அமைதியின் நாயகன்' என்றும் அழைக்கப்பட்டார்.


TODAY CURRENT AFFAIRS IN TAMIL 2023


TODAY CURRENT AFFAIRS 2023 IN TAMIL

TNPSC CURRENT AFFAIRS JANUARY 2023

TNPSC CURRENT AFFAIRS FEBRUARY 2023

TNPSC CURRENT AFFAIRS MARCH 2023

TNPSC CURRENT AFFAIRS APRIL 2023

TNPSC CURRENT AFFAIRS MAY 2023

TNPSC CURRENT AFFAIRS JUNE 2023

TNPSC CURRENT AFFAIRS JULY 2023

TNPSC CURRENT AFFAIRS AUGUST 2023

TNPSC CURRENT AFFAIRS SEPTEMBER 2023

TNPSC CURRENT AFFAIRS OCTOBER 2023

TNPSC CURRENT AFFAIRS NOVEMBER 2023

TNPSC CURRENT AFFAIRS DECEMBER 2023


விருதுகள் கௌரவங்கள் 2023 :

MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2023:

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :

Post a Comment

0Comments

Post a Comment (0)